சொல்லாதது ஒரு சொல்


உன் விழிகளில் உயிர்
விடத்தான் நினைத்தேன்
ஏனோ இன்றெல்லாம் உன்
நிழல் கூட அச்சம் தருகிறது
அன்று போலவே உன் முகம் திருப்பி
அந்நியன் போல செல்வதற்கு
என் முன் எதிர் பட்டு விடாதே நீ-
அன்றெரித்த இதயம் சுமந்துதான்
நீ இருக்கும் வீடு வழி
ஒளிந்தொளிந்து நடக்கிறேன்
யாரேனும் சொல்லுங்கள் அவனிடம்
வராதே என் நினைவில் என்று!

விழிகளின் வார்த்தை சொல்லி
இதயம் கவர்ந்தாய் நீ,
உன் பெயர் சொல்லும் ஆனந்தம்
கொண்டாட முடிவதில்லை.
உன் நினைவு தரும் துன்பங்களை
மறைக்கவே முடியவில்லை.
வெற்றி பெற்றேன் என்று சொல்ல
உன் காதலை வென்று விட்டேன்
உன்னையே வென்றுவிட தினம்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
மேகங்கள் போல எண்ணமெல்லாம் இடிக்கையிலே
எல்லாம் சொல்லிவிட்டு, சொல்லாதது எல்லாம்
சொல்லாமலே சொல்லிவிட்ட எல்லாமும்
சொல்லி நின்று விட்ட என் மௌன விழி திறந்து
உன் தோள்களில் பொழிந்து விடத்தான் ஆவல்.


.

13 comments:

வெ.இராதாகிருஷ்ணன் said...

//வெற்றி பெற்றேன் என்று சொல்ல
உன் காதலை வென்று விட்டேன்
உன்னையே வென்றுவிட தினம்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்//

வலியுணர்த்தும் வரிகள்.

நினைவில் வராதே என சொல்ல வழியின்றித் தவிக்கும் சொல். அருமையான கவிதை.

நட்புடன் ஜமால் said...

விழிகளின் வார்த்தை சொல்லி
இதயம் கவர்ந்தாய் நீ,
உன் பெயர் சொல்லும் ஆனந்தம்
கொண்டாட முடிவதில்லை.
உன் நினைவு தரும் துன்பங்களை
மறைக்கவே முடியவில்லை.]]


எனை இழந்தேன் இவ்வரிகளில் ...

gayathri said...

உன் நினைவு தரும் துன்பங்களை
மறைக்கவே முடியவில்லை

kadhalin vali

azakaka sollli irukenga

வால்பையன் said...

//யாரேனும் சொல்லுங்கள் அவனிடம்
வராதே என் நினைவில் என்று!//

நேர்ல போய் எல்லாம் சொல்ல முடியாது!
வேணும்னா கலைஞர் பாணியில தந்தி அடிக்கிறேன்!

தியாவின் பேனா said...

நல்ல கவிதை நல்ல வரிகள்
கவிதை நல்லதாக இருக்கிறது வாழ்த்துகள்

யாத்ரா said...

கவிதை நல்லா இருக்குங்க.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க.

பிரியமுடன்...வசந்த் said...

//உன்னையே வென்றுவிட தினம்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்///

அட...

நசரேயன் said...

//
உன் நினைவு தரும் துன்பங்களை
மறைக்கவே முடியவில்லை.
//

மருந்து இருக்கு டாஸ்மாக்ல

D.R.Ashok said...

Yes sir

Vidhoosh/விதூஷ் said...

from Tamilish Support
reply-to support@tamilish.com
to ssrividhyaiyer@gmail.com
date Wed, Sep 16, 2009 at 10:30 PM
subject Made Popular : சொல்லாதது ஒரு சொல்
mailed-by u15347499.onlinehome-server.com

hide details 10:30 PM (16 hours ago)


Hi ssrividhyaiyer,

Congrats!

Your story titled 'சொல்லாதது ஒரு சொல்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th September 2009 05:00:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/113644

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஷ்

--வித்யா

Vidhoosh/விதூஷ் said...

நன்றி வெ.ரா.கி.

நன்றி ஜமால்.

நன்றி காயத்ரி

நன்றி வாலு: போன் தான் இப்போல்லாம்.

நன்றி தியா

நன்றி யாத்ரா

நன்றி நேசமித்ரன்

நன்றி வசந்த்

வாங்க நசரேயன் : கச்சேரிய ஆரமிச்சுடீங்களா? நீங்க வந்தாதான் ப்லோகே களை கட்டுது. மணிப்பயலும் ப்லோக் பக்கம் காணோம்.. :(

--வித்யா

Vidhoosh/விதூஷ் said...

vanniinfo
rthanush
vinochn
rkrishnanv
ktmjamal
vasanth1717
bhavaan
hihi12
boopathee
kuppanyahoo
yesuvadian
kavikkilavan

வோட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி.

--வித்யா

Post a Comment