ஆயிரங்காலத்து அழுகல் பயிர் - பாகம் 4=========================================================================

பகுதி 7.சரணடைதல்


=========================================================================

சரணடைதல் என்ற தத்துவம் எனக்கு என் மகள் கற்றுக் கொடுத்த மிகப் பெரிய வாழ்க்கைப்பாடம். ஒரு குழந்தை எந்தளவுக்கு தாயிடம் சரணடைந்திருக்கிறது பாருங்கள். அக்குழந்தையை தாயும் எப்படி, அக்கறையோடும், அதுவே உலகமென்றும் கருதி கவனித்துக்கொள்கிறாள்.

எப்படி ஒரு குழந்தை தன் தாயிடம் சரணடைந்திருக்கிறதோ, அப்படியே பெண்களும் தம்கணவனிடம் சரணடைந்து இருந்து பாருங்கள். அவன் எப்படிப்பட்ட கொடூரனாக இருந்தாலும், சீக்கிரமே தன் பொறுப்புக்களை உணர்ந்து நல்வழிப்படுவான். ஏற்கனவே நல்லவனாகஇருந்தால் அவன் நிச்சயம் மலை போல் உயர்வான். மனசாட்சி என்பது எல்லோருக்கும்ஒன்றுதானே. அன்பால் ஆளப்படும்போது, தலை நிமிர்ந்து, உயர்ந்து நிற்கிறது. உதாசீனப்படுத்தப்படும்போது தலை தாழ்கிறது.

நீங்கள் கணவனோ/மனைவியோ, ஒருவர் மற்றவரிடம் சரணடைந்து பாருங்கள். உங்கள்மனம், பயம் மற்றும் கவலைகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறும். உண்மையானமகிழ்ச்சிக்கு சரணடைவது மட்டுமே ஒரே வழி. நீங்கள் கேட்பதெல்லாம், விரும்பியதெல்லாம் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு இதை நடைமுறைப்படுத்துவதில் சந்தேகமோ, பயமோ இருந்தால், ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு, அப்படியொரு சூழலை நினைத்துப் பாருங்கள். உங்களையும் அறியாமல் உங்கள் instinct மகிழ்வுறும். அப்படியொரு உணர்வு ஏற்பட்டால், நீங்கள் நிச்சயம் நம்பிக்கையுடன்சரணடையலாம். ஈகோவை விட்டொழியுங்கள்.

உதாரண புருஷியாக, காலஞ்சென்ற, மரியாதைக்குரிய சங்கீத உலகின் இராணி திருமதி.எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள். திரு.சதாசிவம் அவர்கள், அவர் வாழ்க்கையை எவ்வளவு உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றார் என்பதை அவர் ஆட்டோபயாகிரபியை படித்தால் நாம் அறிவோம். எம்.எஸ்ஸிடம் இல்லாத பணமா, புகழா? அவர்களுக்குக் குழந்தைகள் கூட இல்லை. அறுபது ஆண்டுகாலம் ஒரு புகழ் பெற்ற பாடகியின் கணவனாகவும், தம் மனைவியின் திறமையை மேன்மேலும் மெருகூட்டி, அவள் பெருமைகளை தம் பெருமையாக நினைத்து மகிழ்ந்த அவரை, ஒரு மனைவியாக இவர் எவ்வளவு சரணடைந்திருந்தால், அவர் மறைவுக்குப் பிறகு பாடுவதையே நிறுத்தியிருப்பார்?

அன்பால் ஆளப்படுவது சரணடைதல். உதாசீனம் செய்வது அடிமைப்படுதல். நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே பெறுகிறோம். நாம் எதை விரும்புகிறோம் என்பதை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.

பெண்களிடம் இருக்கும் மிகப் பெரிய ஆயுதங்கள் அன்பு மற்றும் கண்ணீர். ஒரு பெண் மற்றவரிடம் மரியாதைக்குரிய தொலைவிலிருந்து அன்பாக இருந்தால், தம் சுயமரியாதையையும் காப்பாற்றிக் கொண்டு, பதிலுக்கு அதைவிடப் பன்மடங்கு அன்பைப் பெறுகிறாள். எதிராளி எப்படிப்பட்டவனாக இருந்தாலும், பெண்ணின் அன்புக்கும் கண்ணீருக்கும் முன் அவன் காலி.

வெளியில் நம் காரியம் நடக்க வேண்டும் என்றால், அல்லது வேறு சில சூழ்நிலைக் காரணங்களுக்காகவோ அல்லது நாகரீகம் கருதியோ, "that's okay" என்று விட்டுக் கொடுக்கும் நாம், நம் வீட்டில் நமக்காகவே வாழும் கணவன் / மனைவி நம் எதிர்பார்ப்புக்களை மீறும் போது கோவப் படுவதேன்?

===========================================================================

பகுதி 8. பெண்களுக்கு!

===========================================================================

சாணக்கிய நீதியில் மனைவிகளை மாடுகள் கட்டும் அறைக்கு முன்னுள்ள அறையிலும் திருமணமாகாத கன்னிப் பெண்களை மாடுகள் கட்டும் அறைக்கு பின்னுள்ள அறையிலும் தங்கச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை விவாதிக்க சாணக்கிய நீதியை ஒரு முறையேனும் முழுதும் படிக்க வேண்டும். தமிழ் மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது. முடிந்தால் படித்துப்பாருங்கள். முன்பு பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை, கல்வி மறுக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டார்கள், உடலுறவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள் என்றெல்லாம் கோணல்மாணலாக சிந்திக்க வேண்டாம். விதுர நீதி மற்றும் சாணக்கிய நீதி பற்றி எழுத வேண்டும் என்ற பேராவலுடன் இருக்கிறேன். அதற்கு அதிக நேரம் தேவையாக இருப்பதால், இதை சற்று தள்ளிக் கொண்டே இருக்கிறேன்.

ஆயக்கலைகள் அறுபத்திநாலையும் கரைத்து குடித்து, தேர்ந்த கைகாரிகளாக அக்காலத்துப் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் பெரிய பெரிய சாதனைகள் புரிந்து விட்டதாகக் கூறிக்கொள்ளும் நாம், வாழ்வில்அடிப்படையாக கற்க வேண்டிய, இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் (ஆயக் கலைகள் அறுபத்துநான்கு) எத்துணை கலைகளை நாம் கற்று வைத்திருக்கிறோம்?

1. எழுத்திலக்கணம் / அட்சரங்கள் / பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்) / யாப்பறிவு;
3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் / சாமுத்ரிகா லட்சணம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு (காவியம்);
18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
20. நாடகம் / கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
21. பாட்டு (கீதம்);
22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
24. யாழ் (வீணை); குழல் / புல்லாங்குழல் வாசிப்பு;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் / இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
27. விற்பயிற்சி / ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் / தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சை/ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல் / மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி / போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு / பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
39. காமம் (காம சாஸ்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம் / ஆகரஷனம்);
42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
44. பிறவுயிர் மொழியறிகை / மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
45. மகிழுறுத்தம் / துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி / நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
47. கலுழம் / விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
48. இழப்பறிகை / களவு (நட்டம்);
49. மறைத்ததையறிதல் / மறைத்துரைத்தல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு / விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
51. உடற் (தேகப்) பயிற்சி;
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்/ அரூபமாதல்);
54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
63. வாட்கட்டு / வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) / சூதாட்டம் / சொக்கட்டான் / கைவிரைவு / ஹஸ்தலாவகம்);

சரித்திரங்களில் பெண்களின் வளைகரங்கள் எவ்வளவு சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கியும், வேரறுத்தும் இருக்கின்றன என்றெல்லாம் நான் கூறித்தானா தெரிய வேண்டும்?

கூறித்தானாக வேண்டுமென்றால், ராணி லக்ஷ்மிபாய் - அவருக்கு தகுந்த போர்பயிற்சிகளோ, கல்வியின் தன்னம்பிக்கையோ மறுக்கப்பட்டிருந்தால் அவர் ஒரு உதாரணப் பெண்மணியாகஆகியிருக்க முடியுமா?

இந்தியப் பெண்களின் ஆற்றல்களை, அவர்கள் தம் குடும்பத்து ஆண்களுக்கு பெரிய பலமாக இருக்கும் திறன்களைக் கண்டு, நம் இந்திய பெண்களை அடிமைகளாக்கி, குடும்பமுறைகளை சீர்குலைத்து, ஆண்களை திசைத்திருப்பிய நிகழ்வெல்லாம் 18-ம்நூற்றாண்டுக்கு பிறகே (ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆளான பின்) அதிகம் நிகழ்ந்துள்ளது.

மீண்டும் கூறுகிறேன், இங்கு நாம் பொதுவாக இருக்கும் 90 சதவீத, தன்மையான நல்ல குணமுடைய ஆண்கள் மற்றும் பெண்களை பற்றி மட்டும் பேசுகிறோம். 10 சதவீத எக்ஸப்ஷன்ஸ் பற்றி பேசவில்லை. அவர்களை கண்டு கொள்ள வேண்டாம்.

ஆகையால், வாழும் நோக்கத்தைக் கொடுக்கும், வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தைஉண்டாக்கும் திருமணத்தைப் போற்றுவோம். திருமணம் (அட! ஒரேயொருமுறை மட்டும்தாங்க) செய்து கொண்டு வாழ்க்கைத் துணையை மதிப்போம், அன்பை மட்டுமேகொடுத்து அன்பைப் பெற்று, அவர்களிடம் சரணடைந்திருப்போம். இன்னும் அதிக திருமணசத்திரங்கள் கட்டப்பட்டாலும், advance booking-கில் மண்டபங்கள் நிறைந்து வழிந்து, நிறையதிருமணங்கள் நடைபெற்று, எல்லோரையும் வாழ வைக்கட்டும்.

சில லாரி / பஸ் டிரைவர்கள் "வூட்ல சொல்டு வன்டியா" என்று திட்டுவதும் கூட, அடப்பாவி! உன்னை நம்பி உன் மனைவி / கணவன் மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள், நீ வாழவேண்டும் என்பதைக் கூறத்தானே. மனைவியோ, கணவனோ வீட்டில் இல்லையென்றால், வீட்டிற்குள் இருக்கப் பிடிக்குமா?

இதெல்லாம் சரி, கல்யாணம் பண்ணிய பிறகு, கட்டிய கணவர் ஆபீஸ் கதி என்றிருந்தா... வீட்டிலிருக்கும் மனைவி என்ன செய்வது? பேசாமல் காத்திருக்க வேண்டியதுதான், பூவாவுக்கு வழி.... ஏசி முதல் ப்லாக் எழுத இன்டர்நெட் வரை பில் கட்ட வேண்டாமா?

குறைந்த பட்சம் இரவு உணவையாவது இருவரும் சேர்ந்து சாப்பிடுவது என்று வைத்துக்கொண்டால், "நீ சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியதுதானே கழுதை" என்ற கணவனின் அன்புத்திட்டுக்களைக் கேட்டுக் கொண்டே,
அன்பைத் தொலைத்துவிடாமல், பதிலுக்குத் திட்டாமல், சிரித்துக் கொண்டே, அவர் தலையில் ஒரு "செல்லக்" குட்டு வைத்து "சாப்பிடும் போது பேசக்கூடாது" என்று சொல்லலாம். (இருவருக்கும் சேர்த்து அவரே சாப்பிட்டுவிடாமல்பார்த்துக் கொள்ளுங்கள்).

வேண்டுமானால் காத்திருப்பவர்கள், நிறைய படிக்கலாம். blog எழுதலாம் - என்னை மாதிரி. :)

நமக்காக ஒருவர் காத்திருப்பார்கள், நாம் இல்லையென்றால் அவர்கள் மனம் வருந்துவார்கள் என்ற எண்ணமே இன்றும் நம்மை வாழவைக்கிறது.

===========
அடுத்து வியாழனன்று வரும்...
===========


.

11 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

/பெண்களிடம் இருக்கும் மிகப் பெரிய ஆயுதங்கள் அன்பு மற்றும் கண்ணீர்./

அப்புறம் blog ல எழுதறது, அதை வுட்டுட்டீங்களே! எம் எஸ் அம்மா- சதாசிவம் பத்தப் பேசுகிற சந்தடி சாக்குல தர்ஷனி அப்பாவுக்கு ஏதோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது!

அகல் விளக்கு said...

பயனுள்ள பதிவு...//அறுபது ஆண்டுகாலம் ஒரு புகழ் பெற்ற பாடகியின் கணவனாகவும், தம் மனைவியின் திறமையை மேன்மேலும் மெருகூட்டி, அவள் பெருமைகளை தம் பெருமையாக நினைத்து மகிழ்ந்த அவரை, ஒரு மனைவியாக இவர் எவ்வளவு சரணடைந்திருந்தால், அவர் மறைவுக்குப் பிறகு பாடுவதையே நிறுத்தியிருப்பார்?//

மனம் கனக்கிறது

வெ.இராதாகிருஷ்ணன் said...

சரணடைதல், அடிமைப்படுதலுக்கு உள்ள வித்தியாசம் மிகவும் சிறப்பு.

'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா' எனும் பாரதியின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது.

தம்பதிகள் எப்படி வாழ வேண்டும் என உதாரணம் காட்டிய விதம் சிறப்பு. பெண்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் அன்பு சரி, அது என்ன கண்ணீர்? கண்ணீர் நிறைந்த கண்கள் மங்கலான பார்வையையேத் தரும்.

பெண்களுக்கு எனும் பகுதி ஆண்களுக்கும் தான் என்பதைப் படித்தபிறகு அறிந்து கொண்டேன். சாணக்கிய நீதி, விதுர நீதி போன்றவற்றை எழுதிட ஒரு நாள் ஒதுக்கிவிடுங்கள். பயனுள்ளதாக அமையும்.

அறுபத்தி நான்கு கலைகள் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஒரு எண்ணில் ஒன்றுக்கு மீறிய கலைகள் எழுதப்பட்டு இருக்கிறதே. ஆனால் இப்போது அதை மீறிய கலைகள் எல்லாம் வந்து விட்டது, எனவே அந்த கலைகளில் பல அவசியமே இல்லாமல் போய்விட்டது. இன்றைய பெண்கள் சாதனை பெண்மணிகளே. அந்த அந்த கால கட்டத்தில் என்ன என்ன தேவையோ அதைக் கற்றுக்கொண்டு வாழ்வதுதான் வாழ்விற்கான வெற்றி.

வீரம் நிறைந்த பெண்மணிகள் பாரினில் என்றுமே உண்டு.

காத்திருப்பது குறித்தும், அந்த நேரத்தை எப்படி பயன்படும்படியாகச் செய்வது குறித்தும் எழுதிய விதம் அருமை. அன்பு செலுத்துவது பற்றி சொன்னவிதம் மிகவும் அருமை.

ஏதோ ஒன்றில் இருக்கும் கோபத்தை கணவனோ, மனைவியோ வாங்கிக் கட்டிக்கொள்கிற நிலையில் தான் திருமண வாழ்க்கை பல காலமாக இருந்து வருகிறது.

பல விசயங்கள் படித்துப் பயனடைகிறேன். மிக்க நன்றி வித்யா.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Vidhoosh/விதூஷ் said...

கிருஷ்ணமூர்த்தி சார்: தர்ஷிணி அப்பா கிட்ட நான் சந்தடி சாக்குல பேசவே முடியாது, அவருக்கு நேரிடையாய் சொன்னால் மட்டும் தான் பிடிக்கும். :) நானும் அப்படியே..

அகல் விளக்கு - ரொம்ப நன்றிங்க. அப்படியே அவங்க autobiography-யையும் கண்டிப்பா படியுங்க.

இராதாகிருஷ்ணன் சார்: என்ன இருந்தாலும், மன மகிழ்ச்சி மற்றும் செய்யும் வேலையினால் (குடும்பத்திற்காக) கிடைக்கும் மன நிறைவு ஏனோ எங்களுக்கெல்லாம் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. குடும்பத்திற்காகவே இருவரும் உழைக்கிறார்கள். இருவருமே மனநிறைவு பெறவில்லை... ஏன்னே புரிலீங்க..
மேலும், அந்தக் கலைகளின் அடிப்படையில் மேம்படுத்தப் பட்ட version-கள் தான் இன்றும் நிறைய உள்ளன... ம்ம்ம்..

நன்றி உலவு..


--வித்யா.

S.A. நவாஸுதீன் said...

தமிழனாய் இருந்தும் தண்டமாய் இருந்திருக்கிறேன். உங்களிடம் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ரொம்ப நன்றி

D.R.Ashok said...

:)

வால்பையன் said...

//எப்படி ஒரு குழந்தை தன் தாயிடம் சரணடைந்திருக்கிறதோ, அப்படியே பெண்களும் தம்கணவனிடம் சரணடைந்து இருந்து பாருங்கள். அவன் எப்படிப்பட்ட கொடூரனாக இருந்தாலும், சீக்கிரமே தன் பொறுப்புக்களை உணர்ந்து நல்வழிப்படுவான். //

இதெல்லாம் ஓவரு!
அநியாயத்துக்கு ஆணியம் பேசுறிங்க!
உங்களுக்காக பாடுபட்ட பெரிவங்களை மறந்துறாதிங்க!
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை, அதே நேரம் அனைவரும் நல்லவர்களும் இல்லை!
நீங்கள் சொல்வது போல் இருந்தால் இது தான் வசதின்னு பையன் செம ஆட்டம் போடுவான்!

நேசமித்ரன் said...

:)

Your vision and approach the way u present what you like to
is simply admirable

:)

Vidhoosh/விதூஷ் said...

S.A. நவாஸுதீன் : நன்றிங்க. எல்லோருமே சிறப்புடையவர்தான்.

நேசமித்ரன் : நன்றிங்க.

வால் : அப்படியே முன்னால் எழுதிய பதிவிலுள்ள டிஸ்கி-யை படியுங்கள்.

ஆணியம் பேசலைங்க. முடிந்தால் இவை உண்மையா இல்லையா என்று உங்கள் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுங்கள்.


--வித்யா

வால்பையன் said...

//ஆணியம் பேசலைங்க. முடிந்தால் இவை உண்மையா இல்லையா என்று உங்கள் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுங்கள். //


முடிந்தால் இந்த பதிவை முழுதாக படிக்கவும்!
நான் மற்றவர்கள் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை, அது யாராக இருந்தாலும்

Post a Comment