நான் ரசித்த சில பழைய தொலைகாட்சி நிகழ்ச்சிகள்.
நான் முதன்முதலாக பார்த்த ஜெயகாந்தனின் அக்ரஹாரத்தில் பூனை என்ற செவ்வாய்கிழமை நாடகம். இன்று வரை என்னால் மறக்கவே முடியவில்லை.
பின்பு பார்த்த ரயில் சிநேகம், மால்குடி டேஸ், மகாபாரதம், சாணக்யா, இராமாயணம்.
- "ஏக் சிடியா அனேக் சிடியா" என்ற ஒரு அனிமேஷன் பாட்டு - எங்கிருந்தாலும் ஓடிவந்து பார்ப்போம்.
- "பூரப் சே சூர்ய உகா",
- அமுல் சாக்லேட் விளம்பரம்,
- Pulsar வந்து market sweep செய்யும் முன்னேயே சக்கை போடு போட்ட "ஹமாராபஜாஜ்",
- பீம்சந்த் ஜோஷி, பாலமுரளிகிருஷ்ணா என்று எல்லோரும் சேர்ந்துபாடும் "மிலே சுர் மேரா தும்ஹாரா"
ஓர் புதன் கிழமை அன்று வழக்கம் போல சேனல் மாற்றிமாற்றி பார்த்து, ஒரு வழியா தூர்தர்ஷன் சானலில் சென்னை ஒளிபரப்பில் (பொதிகை) ஒரு thriller (???) சீரியலாம். பார்த்தேன். சீரியல் பெயர் "ஆக்ஷன் ..... (என்னவோ??)" ஒரு பர்த்டே பார்டியில் துப்பாக்கி சூடு நடத்துகிறார்களாம் சில ரவுடிகள். இதான் ஒன் லைன் கதை.
அரை மணிநேரம். முடிலங்க, இருந்தாலும், ஐம்பது வருஷம் கொண்டாடும்போதாவது மாறியிருக்கலாம் என்ற நம்பிக்கையோடு பார்த்தோம். தூர்தர்ஷன் நீண்ட காலம் பயணித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் இலக்கே இல்லாமல் பயணிக்கிறதோ என்ற உணர்வும் மறுக்கவே முடியவில்லை.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"
==============================================
கொசுறு: ஒரு நாள் சிக்னலில் நின்றிருந்த போது, ஒரு lancer கார் அருகில் வந்து நின்னுச்சு.
அந்த வண்டியப் பாத்ததும் மனசுக்குள்ள ஆயிரம் அழகிகள் வெள்ளையுடையில், ''உனக்கும் கீழே உள்ளவர் கோடி' என்று பாடி, கை கொட்டி சிரிச்ச உணர்வுங்க.. அவனுக்கு நான் எவ்வளவோ தேவலாம். சென்னையில் உள்ள காக்கா எல்லாம் இவர் கார் மேலதான் கக்கா..
"hey..its a lancer" என்று கூறி புன்னகைத்தான் என்னைப் பார்த்து.
நானும் ரொம்ப கூலா "நீங்கதான் ரொம்ப நாளா ஊர்ல இல்ல போலருக்கு" அப்படின்னு சொன்னேன் புன்னகைத்துக் கொண்டே.
என் வண்டியப் பார்த்து பெருமை பட்டவன் எவ்ளோ பேரோ..
"அவருக்கு இவர் எழுந்திருந்து உண்பார்"
=======================================
வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வயர்லெஸ் டெக்னாலஜிசான்றிதழ் படிப்பை பி.எஸ்.என்.எல். நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துநடப்படும் இந்த புதிய படிப்பு டிசம்பர்-2009 தொடங்கப்படவுள்ளது.
இந்த படிப்பில், செல்போன் ஜி.எஸ்.எம். டெக்னாலஜி, சி.டி.எம்.ஏ, வைபி, வைமாக்ஸ் உள்பட வயர்லெஸ் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட அனைத்து பாடங்களும், செல்போன் தொழில்நுட்பங்கள் குறித்தும் சொல்லித்தரப்படும்.
இதற்கான theory மற்றும் செய்முறை பயிற்சி வகுப்புகள் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்திலும் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் நடைபெறும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அண்ணாபல்கலைக்கழகமும், பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து சான்றிதழ் வழங்கும்.
இதுபற்றிய அறிவிப்பை முன்னணி நாளிதழிகளில் வெளியாகும். மேலும், இதுபற்றிய அறிவிப்புகள் பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட இணையத் தளமான http://tamilnadu.bsnl.co.inல் வெளியிடப்படும்.
"வௌவால் பட்சி ஆகுமா?" (ஆகலாம்... நம்பலாம்)
======================
கிருஷ்ண பிரபு என்ற பதிவர் சிற்றிதழ்கள் பற்றிய கவனிப்பை விழைகிறார்.
நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்
கதைகள் மற்றும் கட்டுரைகள்
என்ற பதிவுகளில் பகிர்ந்து வருகிறார். நல்ல பதிவுகள் கிருஷ்ணபிரபு. வாழ்த்துக்கள்.
அவர் சொல்வது:
"சிலர் சிற்றிதழை நடத்துகிறார்கள். ஆனால் நிறைய வாசகர்களை சென்றடைவதில்லை. சில நல்ல இதழ்கள் கூட அறிமுகமாகாமல் இருக்கிறது. அவர்களுடைய உழைப்பு ஒரு வகையில் வெளியில் தெரிவதில்லை.
"ஆ.வி, காலச்சுவடு, உயிர்மை, குமுதம்" போன்ற இதழ்கள் இணையத்தில் கிடைப்பதால் பலரையும் சென்றடைகிறது. இதர இதழ்கள் அப்படி இல்லை. பல திறமைசாலிகள் வெளியில் தெரிய வருவார்கள். அதுமட்டுமின்றி பல ஜீவன்கள் இந்த இதழ்களை நம்பி இருக்கிறார்கள்.
http://sitrithazh.blogspot.com - இந்தப் பதிவில் சில இதழ்களைப் பற்றி இருக்கிறது. நீங்கள் எங்கேனும் இந்த இதழ்களைப் பார்க்க நேர்ந்தால் அவற்றை வாங்கிப் படித்துவிட்டு உங்களுடைய பதிவில் எழுதுங்களேன். நிறைய பேரை சென்றடையும்." என்றும் கேட்கிறார்.
நல்ல சிந்தனை. வெற்றி பெறவேண்டிய ஒரு சீரிய முயற்சி. எதாச்சும் செய்யலாமே பாஸ்!
இதோடு சின்னதாக ஒரு பெரிய தகவல்.
தமிழ் சிற்றிதழ்களை மையப்படுத்தி தகவல் செறிவுடனும், அழகியவடிமைப்புடனும், காலந் தவறாது இன்றைப்படுத்தப்படும் இணைய இதழ் தமிழம் www.thamizham.net) ஆகும். இந்த இதழ் தமிழ் உணர்வாளரும், புலமையாளரும், சிற்றிதழ் சேகரிப்பாளருமான பொள்ளாச்சி நாசன் அவர்களால்வெளியிடப்படுகின்றது.
இருபது ஆண்டுகளுக்கு மேலான தமிழ் இதழ்கள் சேகரிப்பாளரான பொள்ளாச்சிநசனின் நூலகத்தில் இருந்து தெரிந்த பழம் இதழ்கள் பற்றிய குறிப்புக்கள், தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் சிற்றிதழ்கள், அவற்றின் ஆக்கர்கள்பற்றிய தகவல்கள், அவற்றில் இருந்து தெரியப்பட்ட சுவையான பகுதிகள், கல்விஆராய்ச்சிகள், தமிழ்ப் புலவர்கள் ஆர்வலர்கள் பற்றிய குறிப்புகள் என முற்றிலும்மாறுபட்ட ஒரு படைப்பாக தமிழம் வெளிவருகின்றது.
பொள்ளாச்சி நாசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம்என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்றுபிறந்தார்.
- இவர் சிற்றிதழ்ச் செய்தி என்னும் இருமாதத்திற்கு ஒருமுறை வரும்இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
- 2003 ஆகஸ்டில் தமிழம் வலை ( www.thamizham.net) தொடங்கினார்
- 1999க்குப் பிறகு தாய்த்தமிழ் பள்ளிகளை பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியில்தொடங்கி நடத்தி வருகிறார்.
- இந்த பக்கத்தில் மற்ற தொகுப்பு முயற்சிகளையும் தந்துள்ளார்.
.
20 comments:
நல்ல பகிர்வு
நன்றி
நல்ல பகிர்வு
மால்குடி டேஸ், மிலே சுர் மேரா தும்ஹாரா - தூர்தர்ஷனில் நானும் ரசித்து பார்த்திருக்கிறேன் ... வயலும் வாழ்வும் விட்டுவிட்டீர்களே அது தமிழ் சேனல் என்பதாலா :)
சிற்றிதழ்கள் ... hmmm ... உண்மைதான்
ஔவையாரின் ‘நெல்லுக்கு ... புல்லுக்கும் ... எல்லார்க்கும் பெய்யும் மழை’ - நினைவுபடுத்தியதற்கு நன்றி
நவராத்திரின்னு சொல்லி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து அசத்திட்டீங்க விதூஷ்... கொலு எல்லாம் வச்சு அசத்தியாச்சா?? என்னென்ன சுண்டல் பண்ணினீங்க... எது எது நல்ல டேஸ்டா இருந்ததுன்னும் சொல்லலாமே??!!
எனக்கும் இப்போ தூர்தர்ஷன் ஞாபகம் வந்து விட்டது... வெள்ளி இரவு 8 மணி, ஞாயிறு சாயங்காலம் 5.30/6.30 மணி அளவில் ரோட்டில் அப்போது ஈ, காக்கா கூட இருக்காது...
ம்ம்ம்...அதெல்லாம் பழைய காலம்... இப்போ இருக்கற சேனல்ல இருந்து ஒவ்வொரு சீன் பார்த்தால் கூட, ஒரு நாளின் 24 மணி நேரத்தில் அனைத்து சேனலையும் பார்த்து முடிக்க முடியாது...
சிற்றிதழ் செய்தியும் அருமை...
வாழ்த்துக்கள் விதூஷ்...
Hi ssrividhyaiyer,
Congrats!
Your story titled 'ஊஞ்சல், பக்கோடா, தேநீர், மழை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th September 2009 11:48:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/118097
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
THANK YOU TAMILISH
Vasanth, TVR, Gopi: Thanks
Nundhaa--I didnot watch Vayalum Valvum :(
நல்ல பதிவு.தூரதர்ஷன் உருவாக்கிய
“ஜுனூன் தமிழ்” அப்போ ரொம்ப பிரபலம்.
நல்ல பகிர்வு வித்யா
எனக்கு பிடிச்சது வயலும்...வாழ்வும்தான்
தூர்தர்ஷன் - மலரும் நினைவுகள்.
சிற்றிதழ்கள் - நல்ல பகிர்வு
சிற்றிதழ் படிக்க ஆசைதான்!
நன்றி வித்யா... நல்ல பதிவு.
பதிவில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் படங்கள் ரசிக்கும் படியாக இருக்கின்றன.
விதூஷ்
மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டீர்கள் .எங்க ஊர்ல முதல்ல தெரிஞ்சது சித்ரகார்தான்
நல்ல பகிர்வு
நன்றி
ஹிந்தி நகி மாலும்...
வயலும் வாழ்வு, ஒளியும் ஒலியும் பட்டியல்ல காணும்..
மற்ற படி எல்லாமே நல்ல தகவல்
//நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.//
ஆமா, அதான் எங்க ஊரிலே நல்லா மழை பெய்யுது, நான் இருக்கேன் என்கிறதர்க்காக அல்ல
நல்ல பகிர்வு
பகிர்வுக்கு நன்றிகள்
நேசமித்ரன் said - மலரும் நினைவுகள், Chitrahar - yeah :)
நல்ல இடுகை.
நானும் இன்று தூர்தர்ஷனைப் பற்றிய கொசுவத்தி ஒன்றைக் கொளுத்தியிருக்கேன்.இங்கே நீங்களும்.
//# Pulsar வந்து market sweep செய்யும் முன்னேயே சக்கை போடு போட்ட "ஹமாராபஜாஜ்",
# பீம்சந்த் ஜோஷி, பாலமுரளிகிருஷ்ணா என்று எல்லோரும் சேர்ந்துபாடும் "மிலே சுர் மேரா தும்ஹாரா" //
இது இரண்டுமே எனக்கும் பிடிக்கும்!
தமிழகம் வலைதளத்திற்கு நன்றி!
Post a Comment