XIII.EXCLUSION.
The soul selects her own society,
Then shuts the door;
On her divine majority
Obtrude no more.
Unmoved, she notes the chariot's pausing
At her low gate;
Unmoved, an emperor is kneeling
Upon her mat.
I've known her from an ample nation
Choose one;
Then close the valves of her attention
Like stone.
வாசிப்பவரின் பார்வைக்கு தகுந்த மாதிரி நட்பையோ காதலையோ உணர்த்தும் இது. இது சரியான / நேரிடை மொழி பெயர்ப்பு அல்ல, நான் புரிந்த விதத்தில் சமைத்துள்ளேன். உங்கள் விமர்சனங்களை மீறி, இன்னும் கிண்டப்படும்.
தவி(ர்)த்தல்
விழியோரம் பசித்திருக்கும் ஒரு துளி ஆன்மா
மூடியே திறந்திருக்கும் இமைகள்
அரூப சிறகின் நிழல் மீறி
இனி இடமில்லை இதழ்களுக்கு
தங்க மின்னல்கள் தெளிக்கும்
திறக்காத வாசலில்,
நிழல் மழையில் கரைகின்ற
சில அழகான கோலங்கள்
நீண்டுகொண்டே போன சுருங்கிய பாதைகள்
தெரிவது இரண்டா? ஒன்றா?
இருள் நீக்கிய நிழலின் வைர ஒளி பரவும்
கிரிச்டலைஸ்டு இதயம்.
குறிப்பு:
இதை ஏற்கனவே அந்தரவெளிகள்- யாஹூ குழுவில் பகிர்ந்துள்ளேன்.
இந்த கிரிச்டலைஸ்டு-க்கு பதில் வேறு வார்த்தை தெரியாமல் தவித்த பொது அய்யனார் "ஸ்படிகம்" என்றார். இந்த மொழிபெயர்ப்பில் திருப்தி இல்லாமல் தவிக்கிறேன். உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன்.
.
14 comments:
நட்பு, காதலை மட்டும் உணர்த்துவது அல்ல. மொழி பெயர்ப்பும் ரசித்தேன்.
இந்த கவிதையில் சொல்லப்படும் விசயம் அளப்பற்கரியது.
ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என நினைத்துக் கொள்ளலாம்.
keep going
நன்றி வெ.இரா.கி. - அட சேர்த்து படித்தால் வைராகி- அப்படீன்னு வருதே!! நீங்க ஒரு மாற்று முயற்சி செய்யலாமே!
டாக்டர் ருத்ரன். உங்க வருகைக்கு நன்றி. உங்கள் keep going பாராட்டா திட்டா, ஆலோசனையான்னு ஒண்ணுமே புரிலங்க.. :(
--வித்யா
ஒதுக்குதல்
தனக்கென ஒரு சமுதாயம் அவள் சமைப்பாள்
அச்சமுதாயத்தினுள்ளே ஆட்கள் நுழைப்பாள்
கதவைச் சாத்திடுவாள் பின் எவரையும்
அனுமதியாள்
கதவின் ஓரத்தில் காத்துக்கிடப்போர் பலர், அசைந்திடமாட்டாள்
ஆண்டியாகினும், அரசனாகினும் ஓங்கி
சத்தமிடினும், அசைந்திடமாட்டாள்
அந்நாட்டினை நான் அறிவேன்
ஒரு சமூகத்தை மட்டுமே உள்ளே விடுவாள்
பிற சமூகத்தை ஒதுக்கியேத்
தள்ளுவாள்.
----------------
வைராகி - அப்படினு பெயரை மாத்தினால் நன்றாகத்தான் இருக்கும். மிக்க நன்றி வித்யா.
//உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன்.//
நான் தூரத்தில் நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்!
//மூடியே திறந்திருக்கும் இமைகள்
அரூப சிறகின் நிழல் மீறி//
:)
தமிழாக்கம் நல்லாயிருக்குது
ரசித்தேன்.
/*
மொழிபெயர்ப்பில் திருப்தி இல்லாமல் தவிக்கிறேன். உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன்.
*/
Full திருப்தி.. half புரிந்தாலும்
Fantastic translation vidhoosh
a translation which does not need another translation ..!
:)
உயிர்கள் தான் இந்த தாய்மண்ணின்
சமூகத்தை தீர்மானிக்கிறது - பின்
அதன் எல்லைக் கதவையும் மூடுகிறது ;
அவள் மீது உள்ள ஆத்மார்த்தமான பற்றினாலேயே - அவ்வுயிர்கள்
மேலும் வேறு உயிர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .
சில போர் ரதங்கள் சென்ற பாதைகளை - அவள்
அந்த சிறு வாயில்களில் பார்த்திருக்கிறாள் ; உயிர்கள் மாறவில்லை .
ஒரு அரசன் அவள் நிலம் எனும் இந்த
தாய் மண்பாயினில் மண்டியிட்டு நின்றான் ; உயிர்கள் மாறவில்லை .
அனைத்து உயிர்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு
தாராளமான ( சுதந்திர ) தேசத்திலே
நான் இந்த புவித்தாயை அறிந்து கொண்டேன்
அந்த மண்ணில் வாழும் உயிர்கள் - தங்களுக்கென்று
ஒரு சமூகத்தை உருவாக்கிக்கொண்டு
அவள் கவனத்தை மறைக்கும் கற்களை
அவள் மனது குழாய்களில் போட்டு மூடுகின்றனர் என்று .
பொருள் விளங்க வேண்டும் என்பதினால் நான் கவிதை நடையில் எழுதவில்லை . இது என் பார்வை .
நல்ல முயற்சி வித்யா கல்லூரியில் படித்ததாய் ஞாபகம்....
//வாசிப்பவரின் பார்வைக்கு தகுந்த மாதிரி நட்பையோ காதலையோ உணர்த்தும் இது. இது சரியான / நேரிடை மொழி பெயர்ப்பு அல்ல, நான் புரிந்த விதத்தில் சமைத்துள்ளேன். உங்கள் விமர்சனங்களை மீறி, இன்னும் கிண்டப்படும்.//
படிக்கும் அனைவருக்குமான ஒரு அருமையான முன்னோட்டம் இது... நன்று..
//இருள் நீக்கிய நிழலின் வைர ஒளி பரவும்
கிரிச்டலைஸ்டு இதயம்.//
ஸ்படிக / பளிங்கு போன்ற இப்படி ஏதாவது வருமா விதூஷ்..??
ரொம்ப கஷ்டம்னாலும், இந்த மொழிபெயர்ப்பு நல்லா இருக்கு வித்யா...
பள்ளிக்காலங்களில் ஆங்கில பாடபுத்தகத்தில் இந்த பெயரை பார்த்ததாக நினைவு.
அழகான மொழிபெயர்ப்பு வித்யா !!! நல்ல முயற்சி !!!
கிரிச்டலைஸ்டு இதயம் எனில் "கண்கூடான இதயமோ"?
மொழிபெயர்ப்பில் கையாண்டிருக்கும் வார்த்தைகளனைத்தும் அருமை.
Post a Comment