இந்த ரயிலுக்கு டிக்கட் கொடுத்தவர் - எல்லாம் இருக்கும் வரை வைராகி :)
=============================================================
A – Available/Single?
திருமதி
It's terribly hard to be married; harder than anything else. I think you have to be an angel. ~ AUGUST STRINDBERG, A Dream Play
=============================================================
B – Best friend?
யாரைன்னு சொல்ல? ஒவ்வொரு நிலையிலும் ஒரு அருமையான நண்பர்/நண்பி இருந்திருக்கிறார்.
“Everyone has a "best friend" during each stage of life-only a precious few have the same one.”
=============================================================
C – Cake or Pie?:
சோன்பப்டி தான் பிடிக்கும்.
(இது நம்மூர் கொஸ்டீன் பேப்பர்தான??)
Queen’s Cake and Bride’s Pie
=============================================================
D – Drink of choice? :
சுத்தமான குளிர்ந்த தண்ணீர்
"If you're sick, you should drink plenty of fluids. And if you ever find a way to drink something that isn't a fluid, be sure and let me know." ~ Anthony Myers.
=============================================================
E – Essential item you use every day?
பிராண வாயு - மூச்சு விட.
In the end, it's not going to matter how many breaths you took, but how many moments took your breath away ~ Author Unknown
=============================================================
F – Favorite color? :
நீலம் (எல்லா shadeகளும்)
I am a feather on the bright sky
I am the blue horse that runs in the plain
I am the fish that rolls, shining, in the water ~N. Scott Momaday
=============================================================
G – Gummy Bears Or Worms?
சூட மிட்டாய் அதும் நூலில் இப்படீ இப்படீ சுத்துவோமே - அது ! சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிச்சா!!!
"There's nothing better than a good friend, except a good friend with chocolate."
=============================================================
H – Hometown
திருக்காட்டுப்பள்ளி (ஒன்பத்துவேலி), தஞ்சாவூர் மாவட்டம்
“When you finally go back to your old hometown, you find it wasn't the old home you missed but your childhood” Sam Ewing
=============================================================
I – Indulgence
நானேதான்
“All autobiography is self-indulgent.” ~ Daphne Du Maurier
=============================================================
J – January or February
என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு...
“October. This is one of the peculiarly dangerous months to speculate in stocks in. The others are July, January, September, April, November, May, March, June, December, August, and February.” ~ Mark Twain
=============================================================
K – Kids & their names?
தர்ஷிணி
Daughter am I in my mother's house, but mistress in my own. ~Rudyard Kipling
=============================================================
L – Life is incomplete without
நான்...??? Because Bhaskar is my life.
(இங்கே அடுத்த வரியில் இருக்கும் quotation-னுக்கும் என் பதிலுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்ன நம்பவாபோறீங்க??)
A man in love is incomplete until he has married. Then he's finished.~Zsa Zsa Gabor
=============================================================
M – Marriage date
ஜூன் 7
“How sad it is! I shall grow old, and horrid, and dreadful. But this picture will remain always young. It will never be older than this particular day of June. . . . If it was only the other way! If it was I who were to be always young, and the picture that were to grow old! For this--for this--I would give everything! Yes, there is nothing in the whole world I would not give!” ~ Oscar Wilde
=============================================================
N – Number of siblings
இரண்டு அக்கா, நான், ஒரு தம்பி
We know one another's faults, virtues, catastrophes, mortifications, triumphs, rivalries, desires, and how long we can each hang by our hands to a bar. We have been banded together under pack codes and tribal laws. ~Rose Macaulay
=============================================================
O – Oranges or Apples
ஜூஸாக ஆரஞ்சு பிடிக்கும். குழந்தை பேறுக்குப் பின் ஆப்பிள் ஏனோ அறவே பிடிக்காமல் போய் விட்டது
“They had nothing to do with each other. It's like comparing apples and oranges.”~Adam Sohn
=============================================================
P – Phobias/Fears
உயரம் - மாடிப் படியிலேருந்து கூட எட்டி பாக்க மாட்டேன்.
He's the only man able to walk under a bed without hitting his head. ~Walter Winchell
=============================================================
Q – Quote for today
N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடல் எல்லா வரிகளும்
"I always knew looking back on the tears would make me laugh, but I never knew looking back on the laughs would make me cry." ~ Author Unknown
=============================================================
R – Reason to smile
என்னங்க கேள்வி! எனக்கு சிங்கப்பல்லோட சேத்தா 34-பல்லு இருக்கறதே அதுக்குத்தான
When life gives you a hundred reasons to cry, show life that you have a thousand reasons to smile.~ Author Unknown
=============================================================
S – Season
மழை
“Anyone who says sunshine brings happiness has never danced in the rain" ~ Author Unknown
=============================================================
T – Tag 4 People
நசரேயன், மணிப்பயல் இவங்க ரெண்டு பெரும் சிரிப்பு வராமாதிரி பதில் சொல்வாங்க. அதுக்காக!
அனுஜன்யா அஹ்...அஹ்... உங்களுக்கேதெரியும்... ரொம்ப அழுகை வராமாதிரி பதில் சொல்வாங்க.
நர்சிம் - இவர ஏன் யாருமே tag -செய்வதில்லை?? அதுனால நானே!
இன்னும் லிஸ்ட்ல நந்தா, அகநாழிகை வாசு, வெங்கிராஜா, யாத்ரா நேசமித்ரன், இன்னும் இன்னும் என்று நீண்டு கொண்டே போகும். கும்பெனி குடை சாஞ்சுரும்
You must train your intuition -- you must trust the small voice inside you which tells you exactly what to say, what to decide. ~ Ingrid Bergman
=============================================================
U – Unknown fact about me
ஹா ஹா ஹா... சிப்பு சிப்பா வருதுங்....
"The secret is the answer to all that has been, all that is, and all that will be." - Ralph Waldo Emerson
=============================================================
V – Vegetable you don't like
வெங்காயம்
"An onion can make people cry, but there has never been a vegetable invented to make them laugh." ~ Will Rogers
=============================================================
W – Worst habit
தேள் கொடுக்கு நாக்கு :(
“There is no evidence that the tongue is connected to the brain” ~ Frank Tyger
=============================================================
X – X-rays you've had
பல்லு - ரொம்ப சிரிக்கிறேனாம்.
"as sexy as a missing tooth on her smile.”~Paul Carvel
=============================================================
Y – Your favorite food
1. மருதாணி அரைச்சு கையில் இட்டு மறுநாள் காலையில் அலம்பிய கையால் பிசைந்த தயிர் சாதம்
2. தொட்டுக்க சுண்டைக்காய் வத்தக் குழம்பு
3. சாப்பிட்டப்புறம் நெய்யொழுகும் சர்க்கரை பொங்கல்
There is no love sincerer than the love of food ~George Bernard Shaw
=============================================================
Z – Zodiac sign
தேள் (Scorpio)
“Have you ever seen a scorpion up close? ... They're really sinister-looking beasts. They were everywhere.”~Carl Gable
=============================================================
அன்புக்குரியவர்கள்:
1. 99.99% தர்ஷிணி
3. பாக்கி இருக்கிறதெல்லாம், மொத்தமும், அனைத்தும், அத்தனையும், எல்லா அன்பும், என் பெயர் தெரிந்த எல்லோருக்கும்
“In nine cases out of ten, a woman had better show more affection than she feels.”~ Jane Austen
=============================================================
ஆசைக்குரியவர்:
பாஸ்கர்
I stayed in submission to my husband, and he allowed me to do anything I wanted to. I felt like I was lucky to have that kind of romance.~June Carter Cash
=============================================================
இலவசமாய் கிடைப்பது:
அப்படி கிடைப்பது எதுவுமே பயனில்லை. I meant Worthless.
“He'd offer you an egg if you promised not to break the shell.” ~Irish Proverb
=============================================================
ஈதலில் சிறந்தது:
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே; மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே; எள் துணையானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது. [16- இனியவை நாற்பது ~ பூதஞ் சேந்தனார்]
A bone to the dog is not charity. Charity is the bone shared with the dog, when you are just as hungry as the dog.~Jack London
=============================================================
உலகத்தில் பயப்படுவது:
மனசாட்சி
“Conscience is what hurts when everything else feels so good” ~Anonymous
=============================================================
ஊமை கண்ட கனவு:
MBBS-டாக்டர் ஆதல்
(இப்ப கூட மதுர (நுழை) வாயில்ல ஜி.எம்.ஆர். இன்டர்நேஷனல் யுனிவெர்சிடீல, ஒரே ஒரு காத்தாடியாவது வாங்கிக்கங்கன்னு கெஞ்சுனாங்க. நான்தான்,தம்பி சின்னப்புள்ளன்னு, அவருக்கே கொடுக்கச் சொல்லிட்டேன்)
"ஊமை கண்ட கனவு, அதுவும் பழுதாய் கழிந்தன, ஒழிந்தன நாட்கள்" திருமங்கை ஆழ்வார்
Lost in the silent dream, Of a lonely broken love I’ll believe, in what the wind brings to me In pure love and great emotion, I will believe ~ Rhapsody Of Fire (Silent Dream)
=============================================================
எப்போதும் உடனிருப்பது:
மனசாட்சி
Conscience is a mother-in-law whose visit never ends. ~ H. L. Mencken
=============================================================
ஏன் இந்த பதிவு:
வைராகி அழைத்ததால் - எல்லாம் இருக்கும் வரை :)
=============================================================
ஐஸ்வர்யத்தில் சிறந்தது:
மழலை செல்வம்
Before you were conceived I wanted you Before you were born I loved you Before you were here an hour I would die for you This is the miracle of life.~Maureen Hawkins
=============================================================
ஒரு ரகசியம்:
ஹா ஹா ஹா... சிப்பு சிப்பா வருதுங்....
"The secret is the answer to all that has been, all that is, and all that will be." - Ralph Waldo Emerson
=============================================================
ஓசையில் பிடித்தது:
ரிதம் சினிமாவில், தீம் தனனா என்று ஒரு பாட்டு வருமே... அதில் ஒருபெண்ணின் Giggling வருமே.. அது ரொம்ப பிடிக்கும்.
"He deserves Paradise who makes his companions laugh."~Koran
=============================================================
ஔவை மொழி ஒன்று:
சித்திரமும் கைப்பழக்கஞ் செந்தமிழு நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையு நடைப்பழக்க நட்புந் தகையும்
கொடையும் பிறவிக்குணம்
=============================================================
(அ)ஃறிணையில் பிடித்தது
மனக்குரங்கு
"We should look to the mind, and not to the outward appearance."~ Aesop
=============================================================
என் ஸ்டேஷன் வந்து விட்டது, இறங்கிக்கிறேங்க. ஒரு வழியா ஜோதியில் ஐக்கியம் ஆகி தொடர்பதிவர் ஆனேன். ஷோ முடிந்து விட்டது. ஸ்டாப் மியூசிக்.
தொடர்ந்து நசரேயன், மணிப்பயல், நர்சிம், அனுஜன்யா Could I request you to come to the dais please? (நெசந்தான், அடுத்தவன இம்சையில் மாட்டிவிடுதலில் ஒரு மகிழ்ச்சி இருக்குங்க...)
ஒரு வேண்டுகோள்: இதில் கொஸ்டீன் ரொம்ப கம்மியா இருக்கு, அடுத்த முறை, அம்பதுக்கு குறையாம பாத்துகோங்க. யாரும் வேற எந்த எழவையும் பாக்கக் கூடாது.
=============================================================
.
ஆல்பபெட்டும் அகர வரிசையும் - தொடர் பதிவு
Posted by
Vidhoosh
on Thursday, September 17, 2009
Labels:
தொடர் பதிவு
10 comments:
nalla irukkungo
இப்படித்தான் அடிச்சு ஆடணும்! அடுத்த தடவை யாரும் கேட்க மாட்டாங்க:-))
//என்னங்க கேள்வி! எனக்கு சிங்கப்பல்லோட சேத்தா 34-பல்லு இருக்கறதே அதுக்குத்தான//
நாங்கெல்லாம் அதை காளிப்பல்னு சொல்லுவோம் :)
அந்தப்பல் இருக்கறவங்களை செல்லமா பத்ர காளின்னு கூப்பிடுவோம் :)
இதப் படிச்சு நெறைய இங்கிலீபீஸு அறிஞர்ஸ் பேரையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.!
மிகவும் அருமையான பதில்களும், அதனுடன் குறிப்பிட்டிருந்த விசயமும் மனதை கவர்ந்தன.
ஒரு விசயத்துடன் பல விசயங்களையும் அறியச் செய்வது என்பது தனிக்கலை தான். மிகவும் அருமை.
ஆங்காங்கே நகைச்சுவை உணர்வையும் ரசித்தேன்.
அழைப்பை ஏற்று சிரமம் பாராது பதில் தந்தமைக்கு எனது வணக்கங்கள் வித்யா. மிக்க நன்றி.
தங்களின் அருமையான பதில் கண்டு இனிமேல் வாரம் ஒரு கேள்வி என உங்களுக்குக் கேட்கலாம் என இருக்கிறேன்.
நன்றி பாலா
நன்றி கி.மூ. - அப்படியெல்லாம் நம்பிடவேண்டாம். :))
சின்ன அம்மிணி: வாங்க. :)) பத்ரகாளியை ரசித்தேன். நன்றிங்க.
ராஜு: கொடேஷன்களை தேடி, அறிஞர்ஸ் பேரோடு கொடுத்த கூகிளாண்டவருக்கு நன்றி.
வெ.இரா.கி. : ரொம்ப நன்றிங்க. நீங்க அழைத்து நான் மறுக்க முடியுமா? சிரமம் எல்லாம் இல்லைங்க. தயாரிக்க கால் மணிநேரம் ஆனது. காபி-பேஸ்ட் செய்யும் போது கொஞ்சம் html படுத்தியது. அவ்ளோதான்.
--வித்யா
நல்லாய் இருக்கு பாராட்டுகள்
//W – Worst habit
தேள் கொடுக்கு நாக்கு//
நீங்களுமா சோ சேட்
மற்ற பதில்கள் அழகா சொல்லியிருக்கீங்க....
அந்த மருதாணி தயிர் சாதம்
ரொம்ப பிடிச்சிருக்குங்க
ரிதம் மாட்டேரும் தான்
தர்ஷினிய கேட்டதா சொல்லுங்க பாஸ்கர் சாரையும்
ரொம்ப நன்றி என்னை மாட்டி விடாததுக்கு :)
இப்படித்தான் நின்னு ஆடனும் உள்ள யாரையும் வரவிடாமல். கலக்கல் வித்யா
Post a Comment