அவன் அவன் அவள்

என்ன பாக்குதா இப்பதி?
நினைச்சான் அவன்,
அவனா இருக்குமோ?
நினைச்சென்னுங்க நானு

"எலே. நீயு அவேந்தான"
அப்படீன்னு கேக்குதா மனுசி

"அவெந்தேன், ஆனாலும் நாந்தேன்,
அவேந்தேன் நானில்லை"ன்னு சொல்லுதான்

"ஏலே... அப்ப நிச்சயம் நீந்தாவே அவனு"

வழக்கு மாத்த மாட்டேங்குதாரு
சாதகம் பண்ணுதாரு மனுசப்பய

கீழா பாக்குது மேலா பாக்குது
ரோசனை பண்ணுறதெல்லாம்
பாக்க சொல்ல அந்த பயலுதானுங்க

அட! எழுத்துக்கொரு மொகற
ஆளுக்கொரு மொகரயா?
எழுதின கவுஜெல்லாம் தெரியுற மண்டையில
மாசு மவுறு ஒன்னையும் கானோம்மினு

"லேய் நீ அவனேத்தேனிருக்குமினு
நினைசெனுங்கோ, லெய்சா
சிலிப்பு ஆவிருச்சு"ன்னு

சொல்லிபோட்டு இவ நகரயில அவனு,
"எம் மூஞ்சியிலே அருள் இருக்கும்"
அப்படீன்னு சொல்லிட்டாவ

"அடப்பாவி! நீ தானா அவென்,
ரோதன உன்ன்னைய ..."
அப்படீன்னு நெனப்பிருக்கு
மனசுக்குல, அடக்கிக்கிட்டு

"வாறன்"ன்னு சொல்லி
பொத்துபோன சிரிப்படக்கி

"எங்கேலே அவன்?"ன்னு கேட்டுகிட்டே
அந்தபக்கட்டு நகந்தேனுங்க...

ஒத்த மனுசனுக்கே இவனுவளை
அந்தக்கதி வைக்கியாமே
மெப்புக்கு கற்பனையே!! அனு அனுவா
மிதிபட்டுட்டுல்லா கிடக்கியளாம்டே!!



.

16 comments:

சென்ஷி said...

:)

கிருஷ்ண மூர்த்தி S said...

"பட்டறையோட எபெக்டு
பட்டயக் கெளப்புதாம்லே!"
சொல்லிப்புட்டுப் பாத்தாக்க
துண்டைக்காணோம் துணியும் காணோம்னு
ஓடிககிட்டிருந்தான் அவன்!

அட! அவன் போனாப்போகட்டும்வே!
சிக்கினது நீருமில்லே! என்றாளாம் அவள்!

Ashok D said...

எழுதியிருக்கும் slangukku நம்ம புத்தி ஒட்டமுடியாதனலா...

ஒன்னுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது ....

Anbu said...

:-)

anujanya said...

அட்டகாசம். அவ்வளவு சீக்கிரம் மாட்ட மாட்டோம்ல :)))

அனுஜன்யா

நந்தாகுமாரன் said...

அபாரமான slang மொழி நடை ... என்னை ரெண்டாம் முறை படிக்க வைத்த உங்களின் முதல் கவிதை இது ... எனக்கு பிடிச்சிருக்கு வித்யா

நேசமித்ரன் said...

ஆஹா !
ஒன்னியும் பிரிய மாட்டேன்னு க்குதேந் அப்பூவே நென்ச்சேன்
இத்தான் விஷ்யமா. ஆவட்டும் வுடு

வால்பையன் said...

ஏன் இந்த கொலைவெறி!

கிருஷ்ண மூர்த்தி S said...

/Blogger வால்பையன் said...

ஏன் இந்த கொலைவெறி!/

விதூஷ் இன்னொரு வாலாக கஷ்டப்பட்டு முயற்சித்துக்கொண்டிருப்பதைப்போய்....:-))

R.Gopi said...

அட...

நம்ம விதூஷா இது.... இன்னாமா பட்டைய கெளப்புதுப்பா.... எல்லாம் அந்த பட்டறையோட எஃபெக்டா ???

என்னமோ... போங்க... பட்டைய கெளப்புதீக....

thiyaa said...

நல்லாயிருக்கிறது

இது எந்த பிரதேசத்துக்குரிய மொழிநடை?

Vidhoosh said...

உங்கள் கருத்துக்கு நன்றி.

இந்தக் கவிதை முற்றிலும் ஏதோ என் சொந்த இரசனை-க்காகவும், என் கற்பனையை (என்னையே) கிண்டல் செய்யவும், நானே பல்பு ஆனதையும் பற்றியது மட்டுமே எழுதப்பட்டது.

இதில் உள்ள மொழி நடை, ஒரு கோயம்புத்தூரு நண்பர் பேசும் மொழி. என் சக பணியாளர். நல்ல நண்பர். எங்க கும்பெனி்யில் team building என்ற பெயரில் HR "மட்டை பார்டி" நடத்தும் போது வகைதொகை இல்லாமல், அதிகம் குடித்து விடும் போது, தாய்மொழி போல சரளமாய் பேசுவாரு. பேச்சு மொழி ரொம்ப ரசிப்பாய் இருக்கும். (நிறையா local கெட்ட வார்த்தைகள் கற்றது அவரிடம்தான். அந்த வகையில் அவரும் ஒரு தமிழ் வாத்தி)
===========================
நேரில் சந்தித்து இல்லை என்றாலும், இதில் இருக்கும் இரண்டு பதிவர்கள் சகஜமாயிட்டதனால கவலையில்லை.

மூன்றாவதான பதிவரை பழக்கமில்லை, எப்படி எடுத்துக்குவாருன்னு தெரில. அதனால அரசியலாயிடுமோ-ங்கற பயத்துல, பெயர்கள் சொல்லப்படல.

ஒரு படைப்பாக மட்டுமே பார்க்கும் படி கோரிக்கை வைத்துக் கொண்டே, (பதிவர்கள் அல்லாத) எனது சில நண்பர்கள் தொடர்ந்து தொ(ல்)லைபேசியதால் மட்டும் , உண்மையை சொல்லி விடுகிறேன்.

உரையாடல் பட்டறைக்கு போகும் முன், ஞாயிறு காலையில், ஒரு பதிவரின் வலைபக்கத்தில், விமர்சனம் பற்றிய பதிவில் பதிவர்களின் போட்டோ பார்த்தேன். கவிஞரின் கவிதைகளைப் படித்து, ஓரளவுக்கு கவிஞரின் தோற்றம் பற்றிய கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.

(இந்த எழுத்து கொடுக்கும் தோற்றக் கற்பனை ஒரு அற்புதமான கதையாக கூட எழுதலாம். சித்த சிந்திக்கொனும்க)

உரையாடல் பட்டறை நடக்கும் கூடத்துக்குள் போனதும் ஒளி-கூச்சம் கண் மறைக்க, ஒரு வேளை கவிஞர்-தானோ அதுன்னு, "--- - -----"ன்னு கூப்பிட்டேன், கடைசில அது வேற ஒருத்தர்....:))

அதனால் உண்டான கற்பனை இந்தக் கவிதை (கவுஜ?? ன்னு சொல்லணுமோ)

கவிஞரின் கவிதைகளால் தாக்கப்பட்ட இன்னொரு பல்பு-

-வித்யா

கிருஷ்ண மூர்த்தி S said...

ஹைய்யோ ஹைய்யோ!
/"பட்டறையோட எபெக்டு
பட்டயக் கெளப்புதாம்லே!"
சொல்லிப்புட்டுப் பாத்தாக்க
துண்டைக்காணோம் துணியும் காணோம்னு
ஓடிககிட்டிருந்தான் அவன்!

அட! அவன் போனாப்போகட்டும்வே!
சிக்கினது நீருமில்லே! என்றாளாம் அவள்!/

இப்படி எழுதினப்புறம்தான் உறைச்சது:

துண்டைக் காணும்னு ஓடிக்கிட்டிருந்தது வால்பையன்,முதலாவது அவன்
சிக்கிக்கிட்டது எழுதின இவன் இன்னொரு அவன்

விதூஷ் தான் அந்த அவள்னு நான்தான் நெனச்சுப்பயந்துட்டேனா?

தெரியாமப்போச்சே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Radhakrishnan said...

சிறு குழந்தைகள் பேசியது போன்று தொடங்கிய கவிதையாய் தெரிந்தது முதலில்.

மிகவும் லாவகமாக வார்த்தைகளைக் கோர்த்து இருக்கிறீர்கள். மிகவும் சிறப்பாக இருந்தது.

அருமை.

யாத்ரா said...

:)

"உழவன்" "Uzhavan" said...

கவுஜ, வரும் ஆனா வராதுங்ற மாதிரி இருக்கு :-)

Post a Comment