தென்கச்சி கோ.சுவாமிநாதன்

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் உதவி இயக்குனரும், பிரபல எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் இன்று (16.9.2009) மதியம் 12.40 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67.

உழவர் உலகம், வீடும் வயலும், இன்று ஒரு தகவல், ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகள், போன்றவற்றை வழங்கி தனது குரலாலும், நகைச்சுவையாலும் ஈர்த்தவர்.

முகத்த ஏன் இப்படி சோகமா வைத்திருக்காரு? ஏன் கொஞ்சம் பளிச்சுன்னு பேசக்கூடாதா? என்று இவர் நிகழ்ச்சிகளை பார்க்கும் போதெல்லாம் நினைத்திருக்கிறேன். சர்வ சாதரணமான குரலில் அவருக்கே உரிய முறையில் பெரிய பெரிய விஷயங்களை, எந்த ஒரு பாவமும் இல்லாமல் பேசிவிட்டு போய்விடுவார்.

அவருக்கு என் நமஸ்காரங்கள்.

=============================================================
அவருடைய தொகுப்பு ஒன்று வலையில் கிடைத்தது.


எதை விட்டுக் கொடுப்பது?
- தென்கச்சி கோ. சுவாமிநாதன்

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர் மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர். பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது. அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப் போனார்கள்.


இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர். இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே! என்றார் கடவுளின் தூதர். "வேறு வழி இல்லையா? என்று குரலில் சோகம் ததும்பக் கேட்டனர் சீடர்கள். ஒரே ஒரு வழிதான் உள்ளது! என்றார் தூதர். என்ன வழி? தயவு செய்து சொல்லுங்கள்! ஆர்வத்துடன் கேட்டனர் சீடர்கள்.

அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும்! என்றார் தூதர். உடனே பெரியவருக்காக எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்! என்றனர் சீடர்கள். இதைக் கேட்ட தூதர், உயிர் வேண்டாம்,. உங்கள் வாழ்நாளில் ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால்... அதை இவரது ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்! என்றார்.

முதலில் ஒருவன் வந்தான். என் ஆயுளில் இரண்டு வருடத்தைத் தருகிறேன்! என்றான். இன்னொருவன், ஒரு வருடம் தருகிறேன்! என்றான். மூன்றாவதாக ஒருவன், ஒரு மாதம்! என்றான். எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒருவன் எனது ஆயுளில் ஒரு நிமிட நேரத்தை இவருக்காகத் தருகிறேன்! என்றான்.

கடைசியாக வந்த ஒருவன் சொன்னான். இருபது வருடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! இதைக் கேட்ட கடவுளின் தூதருக்கு ஆச்சர்யம். இது ரொம்ப அதிகம் இல்லையா? என்று கேட்டார். உடனே அந்த ஆசாமி சொன்னான். ""நான் சொன்ன இருபது வருடங்கள் என் மனைவியின் வயதிலிருந்து!''

நண்பர்களே! உலகில் எதுவுமே உங்களுடையது இல்லை என்பதை உணருங்கள். அப்படி உணரும் போதுதான் நீங்கள் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். "இது என்னுடையது' என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை. "எதுவும் என்னுடையது அல்ல!' என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!.


.


.

6 comments:

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

தென்கச்சி கோ.சுவாமிநாதன் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கதை மிக அருமை. அதைப் படிக்கும் போது அவர் நிகழ்ச்சிகளை சன் டி.வி.யில் பார்க்கும் நியாபகம் தான் வந்தது.

பாலா said...

சின்ன வயசிலேர்ந்தே அவரோட இன்று ஒரு தகவல கேட்ருகேங்க
அவர் குரல் மேலதான் எனக்கு என்ன வோ ஒரு ஈர்ப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள்

குடந்தை அன்புமணி said...

தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல் வானொலியிலேயே விரும்பி கேட்டிருக்கிறேன். பிறகு சன் தொலைக்காட்சியிலும்.

கொள்ளிடக்கரை அருகே உள்ள அவரது ஊரான தென்காஞ்சிபுரம் என்ற ஊரில் (அதுதான் மருவி தென்கச்சி என்றானதாம்) ஊராட்சி மன்ற தலைவராகவும் அவர் ஏழு ஆண்டுகள் இருந்திருக்கிறாராம்.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவ்ரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

மண்குதிரை said...

enakkup pitiththa kathai solli

-:(

pudugaithendral said...

:(((((( இந்தத் தகவல் இப்பதான் தெரியும் வித்யா.

ஆழ்ந்த அனுதாபங்களை பதிகிறேன்.

ஊர்சுற்றி said...

எனக்கு பாதிப்பை ஏற்படுத்திய மரணம்.

Post a Comment