உரையாடல் கதைப் பட்டறை

உச்சிவெய்யில். டூ வீலர்ல, சிந்தெடிக் டிரஸ், அதுவும் புடவை கட்டி, டிரைவ் பண்ணிக் கொண்டு போகும்போது எக்கச்சக்கமா மவுண்ட் ரோடு ஸ்பென்செர் சிக்னல்ல 90 செகண்ட், 89, 88, 87-அப்படீன்னு கவுண்ட் டவுன் விழுந்து, நொந்து கொண்டே நம்பர எண்ணிட்டு இருக்கும் போது, திடீர்னு 85-லையே கிரீன் லைட் வந்தா எப்படி இருக்கும்?

அந்தமாதிரியே, ஒரு தினசரி வழக்கத்தில் சிக்கி சுத்திசுத்தி, ஒரு மாறுதல் தேடியும், தெரிந்ததைப் பகிரவும், பதிவுகள் என்ற எழுத்து-வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கையில், திடீர்னு நம்ம எழுத்தில ஏதோ குறையுதேன்னு மண்டை காயும்போது, வந்த கிரீன் சிக்னல் இந்தப் பட்டறை. அப்படியே, எதிர்பாராத சிக்னல் கிடைத்து 65-70 கி.மீ. வேகத்தில் சிலு-சிலுவென டிரைவ் செய்யும் அனுபவம் போல இருந்தது இந்த வொர்க் ஷாப்.

இதே போன்ற ஆர்வத்துடன், வந்திருந்த பதிவுலக நண்பர்கள் - மொத்தம் எண்ணிக்கையில் எண்பதை (80) நெருங்கிய ஆர்வலர்கள், என்னையும் சேர்த்தால் 82 :))

இதை ஏற்பாடு செய்த சிவராமன் மற்றும் ஜ்யோவ் மற்றும் நர்சிம்மின் உழைப்புக்கள் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

இங்கு என் அனுபவத்தை மட்டும் பகிர்கிறேன். இன்னும் விபரமாக எழுதாததற்கு நான் எதையும் விட்டு விடுவேனோ என்ற அச்சம் மட்டுமே காரணம். விபரங்கள் அனைத்தையும் பத்ரி-யின் பதிவிலும், சிவராமன் (சிதைவுகள்) அவர்களின் பதிவிலும் விரிவாகப் பாருங்கள்.

வாசலிலேயே நின்று திருமண வீட்டுக்காரர் மாதிரி "வாங்க" என்று வரவேற்ற சிவராமன், hats off to you Sivaraman. மீண்டும் ஒரு முறை அசந்து விட்டேன் உங்களைப் பார்த்து. :)

முதலில் பேசிய பாஸ்கர் சக்தி, தான் கதை எழுதிய அனுபவங்களைப் பற்றிய தெளிவாக விவரித்தார். கலந்துரையாடலும், சுவாரசியமான பதில்களும் இரசிக்கும்படியாக இருந்தன. ஆரம்பகாலத்தில் இந்திய டுடேவில் தன் கதை பரிசு வென்றது, அழகர்சாமி குறித்த அவர் பகிர்தல்கள், எல்லா கேள்விகளுக்கும் புன்னகையுடன் பதில் சொல்லி, கேட்டது அற்புதமான அனுபவம்.

பின் யுவன்சந்திரசேகர் - கலகலப்பான ஆசாமி. சுவாரசிய பேச்சாளர். "எங்க விட்டேன்” என்று கேட்டு கேட்டு, தூக்கம் வராமலும் பார்த்துக் கொண்டார் :) இவர் எழுத்துக்களை, ஒன்றிரண்டை தவிர அதிகம் வாசித்ததில்லை நான். மொத்தத்தில் அவர் கதையிலிருந்தே ஒரு சின்ன வார்த்தை அவரைப் பற்றி, "தூரத்தில் ஒரு கர்ஜனை…கர்ர் க்ர்ர் க்ர்ர். கூட்டம் அமைதியாகிவிட்டது” என்றது போலும். மொத்தத்தில் இந்தப் பேச்சுக்கு கண்ணனின் குழலுக்கு மயங்கிய நிலையிலேயே இருந்தோம். நீண்ட நாள் நண்பரிடம் பேசிய உணர்வு. அவர் வார்த்தையிலேயே சொல்லனும்னா "சொக்கிட்டோம்ங்க" :))

சாப்பாடு முடிந்த பின், தேவதாஸ் அவர்களின் உலகச் சிறுகதைகள் பற்றிய வலிமையான, ஆனால் மெல்லியப் பேச்சை எவ்வளவு பேர் தூங்காமல் கேட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர் பேசியவை அனைத்துமே ரொம்ப முக்கியமானதாக இருந்தன. எங்க அம்மாக்கு அப்புறம், இவரிடம் நிறையா கதைகள் சொல்லி கேட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. உலக கதைகள் மீதும், மொழிகள் மீதும் தீராத காதல் இவர் கண்களில் கண்டேன். பொதுவாகவே, எனக்கு மொழிகள் மீது obsession இருப்பதால், இவர் பேச்சு எனக்கு உற்சாகமாய் இருந்தது.

பா. ரா. அவர்கள் பத்திரிக்கைக்குக் கதை எழுத வேண்டியது பற்றியும், வெகுஜனப் பத்திரிகைகள் பற்றிய பொதுப்படையான எதிர்மறைக் கருத்துக்களையும் மிக அழகாக விவரித்தார். கதைகளை படித்து, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் sub-editor-கள் பாவ ஜீவிகள் என்ற அவரது விளக்கம், சிரிப்பை வரவழைத்தாலும், கருத்தில் விவேகம். தரமணியிலிருந்து படையெடுத்த எழுத்தாளர் ஆயிரம்-கஜினிக்கு tough கொடுப்பார் போலருக்கு. பா.ரா. வுக்கு எத்தனை அனுபவங்களைக் கொடுத்தார் என்று சொல்லியபோது சிரிப்பு வந்தாலும், அவர் முகத்தில் புன்னகை கூட இல்லைங்க. எனக்கென்னவோ அவரே சொன்னது போல, "ஐயோ, இந்தாளு கதையை ஒன்னு கூட பிரசுரிக்க முடியலையே" என்ற வருத்தம் மட்டுமே தெரிந்தது. இரசனை பேச்சாளர். பேச்சுகள் பாடங்கள்.

வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை பத்ரி அவர்கள் முழுதுமாக வெளியிடுவார் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருவரும் கண்டிப்பாய் பாருங்கள். நாம் ஒரு எழுத்தாளராக போக வேண்டிய தூரம், ஒன்றிரண்டு முக்காதம் :)

===================

வழக்கமாக weekend-களில் நாங்கள் இருவரும் எங்கும் போவதில்லை என்றே முடிவெடுத்திருந்தோம். போறாக் குறைக்கு உடல்நிலை வேறு சிறிது ஒத்துழைக்காமல் இருந்தது. "நாளைக்கு வொர்க் ஷாப் போகனும்னு சொல்லிண்டிருந்தையே" என்று நேரத்துக்கு மருந்து-மாத்திரை கொடுத்து, என்னை கவனித்துக் கொண்ட, என்னை இதில் பங்கேற்கும் படி செய்த, பாஸ்கருக்கு (என் கணவர்) ஒரு பெரிய நன்றி. :)


.

27 comments:

சென்ஷி said...

:-)

பாலா said...

வரலாறு முக்கியம்ங்க


ஆமாங்க ரொம்ப முக்கியம் : (((

கிருஷ்ண மூர்த்தி S said...

பாசக்காரரான உங்க ஊட்டுக்காரர் பாஸ்கருக்குக் கண்டிப்பா ஒரு தேங்க்ஸ் என் சார்பிலும்!

சுடச் சுட பகோடாவுக்காக விதூஷுக்கும்!

சமத்தா இருந்த தர்ஷனிக்கு சொல்லாமப்போனா எப்படி!

Ashok D said...

இன்னும் வீடு திரும்பாமல் உழைத்துக் கொண்டிருக்கும் எனனை போன்றோர்க்கு ஆறுதல் உஙகள் பதிவு.

ப்ரியமுடன் வசந்த் said...

அப்பறமென்ன அடுத்த இடுகை சிறுகதையா?

சந்தனமுல்லை said...

:-) பகிர்வுக்கு நன்றி!

Raju said...

அய், விதூஷ் அக்கா சிறுகதை எழுத்தாளர் ஆயிட்டாங்க..!

குடந்தை அன்புமணி said...

சிறுகதைப் பட்டறை பற்றிஅறிந்து கொள்ள இடுகைகளை எதிர்பார்த்தேன். சுட சுட கொடுத்த உங்களுக்கு நன்றி. மற்றவர்களின் இடுகைகளையும் எதிர்நோக்குகிறேன்...
தங்களின் பகிர்வுக்கு நன்றி...உங்க கணவருக்கும் நன்றி...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பட்டறையில் உங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலு(ம்) இருந்தது. குடும்ப சூழலால் வர இயலவில்லை.

அழகாக பகிர்ந்திருக்கிறீகள்

நன்றி வித்யா.

அன்பேசிவம் said...

வித்யா மேடம், வணக்கம்.
என்னை நியாபகம் இருக்குமென்று நம்புகிறேன். பட்டறை தொடர்பாக நான் படித்த முதல் பதிவு உங்களுடையதுதான். என்னா ஸ்பீடு?
உங்க மற்ற பதிவுகளை படித்துவிட்டு பிறகு வருகிறேன்.

R.Gopi said...

அங்கேயும் போய், கலக்கிட்டு வந்தாச்சா... பேஷ்... பேஷ்...

நீங்கதான் உண்மையான ஆல்ரவுண்டர்...

வாழ்த்துக்கள் வித்யா...

மண்குதிரை said...

thanks for sharing

கார்க்கிபவா said...

:)))

நானும் ரவுடிதாங்க...

நாமளும் ரவுடிதாங்க

"உழவன்" "Uzhavan" said...

//எதிர்பாராத சிக்னல் கிடைத்து 65-70 கி.மீ. வேகத்தில் சிலு-சிலுவென டிரைவ் செய்யும் அனுபவம் போல இருந்தது இந்த வொர்க் ஷாப்.//

உண்மை. சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியவிதம் நன்று.
தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மேடம் :-)

அன்புடன்
உழவன்

anujanya said...

வெற்றிகரமாக கலந்து கொண்டதற்கு வாழ்த்துகள் - உங்கள் கணவருக்கும் :)

எங்க சரியா கவனிச்சீங்களான்னு பாப்போம் - உடனே ஒரு சிறுகதை எழுதுங்க.

அனுஜன்யா

Unknown said...

இன்று தான் உங்க பதிவு முதன்முறை படிக்கிறேன்னு நினைக்கிறேன். நல்லா எழுதி இருக்கிங்க. ஆரம்பம் அசத்தலா இருக்கு.

//திடீர்னு நம்ம எழுத்தில ஏதோ குறையுதேன்னு மண்டை காயும்போது, வந்த கிரீன் சிக்னல் இந்தப் பட்டறை. அப்படியே, எதிர்பாராத சிக்னல் கிடைத்து 65-70 கி.மீ. வேகத்தில் சிலு-சிலுவென டிரைவ் செய்யும் அனுபவம் போல இருந்தது இந்த வொர்க் ஷாப்.//

அது ஏன் ஒரே பத்தியிலே ஒரு முறை “பட்டறை” மறுமுறை “வொர்க்‌ஷாப்”?

நேசமித்ரன் said...

ஆல் ரவுண்டர் வித்யாவின் அடுத்த சிறுகதை எப்போ?

:)

Vidhoosh said...

சென்ஷி: நன்றி

பாலா: "ரொம்ப முக்யம்" அப்படி சொல்றீங்களா இல்ல..

கி.மூ.: ஏதோ ஒன்னு உங்களுக்கு கிடச்சுடுத்து.

அஷோக்: :) இளமையில் உழைக்க!

வசந்த்: அதெப்படி, இன்னும் அந்த தாக்கத்திலிருந்தே வெளி வரவில்லை. ஒன்னு ரெண்டு நாளாகும்...:) அங்கு சந்தித்த ஒருவரை, வேறோருவர்னு நினைச்சேன், கவுஜ தோணிடுச்சு, எழுத்திட்டேன். :))

ராஜு: நாங்களும் றவுடிதான், தெரிம்ள

அன்புமணி: நன்றி

அ.அம்மா. - நன்றி. பரவால்லை. சென்னைதானே, நாமே பார்த்துக்கலாம்.

முரளிகுமார் பத்மநாபன்: நன்றிங்க. ஞாபகம் இருக்கு.

R.கோபி: நன்றிங்க. allrounder? ஊர் சுத்திகிட்டே இருக்கேன்னு சொல்ல வரீங்களா? :))

மண்குதிரை: நன்றிங்க

கார்க்கி: றவுடிதான்.... றவுடிதான்....உங்கள பார்தேனா? ஐயோ. ஏழுக்கு நான் ஏழரைங்க, அஹ் அஹ் பரம ரசிகைங்க..

உழவன் : நன்றிங்க

அனுஜன்யா: டெஸ்ட்??? கொச்டீனை ஆப்ஷனில் விடுகிறேன் :)) (உங்களுக்காக ஒரு கவிதை இன்று எழுதிருக்கேன் பாத்தீங்களா?)

ராஜா | KVR : ஐயா... முடிலீங்க. இன்னும் தெளியல, பட்டறை தூக்கம்... ஐயோ, தாக்கம்.. சும்மாதான், தமிழிஷ் பலகினதாகி விட்டது. பேசறமாதிரியே எழுதுகிறோமா, :(

நேசமித்ரன்: allrounder? ஊர் சுத்திகிட்டே இருக்கேன்னு சொல்ல வரீங்களா? :))

கிருஷ்ண மூர்த்தி S said...

விதூஷ் சொன்னது:
/கி.மூ.: ஏதோ ஒன்னு உங்களுக்கு கிடச்சுடுத்து./

கூட்டத்துல அருள்வாக்குச் சொன்னமாதிரி...........
அந்த ஏதோ ஒண்ணு எதுன்னு தான் தெரியலை:-))

வால்பையன் said...

நல்ல ஒரு அனுபவம், கூடவே உங்களை சந்தித்ததிலும் மகிழ்ச்சி!

யாத்ரா said...

நிகழ்வை ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

சிக்னல்,சிலுசிலு டிரைவிங்.... ஆரம்பம் அருமை.

Unknown said...

/-- "நாளைக்கு வொர்க் ஷாப் போகனும்னு சொல்லிண்டிருந்தையே" என்று நேரத்துக்கு மருந்து-மாத்திரை கொடுத்து, என்னை கவனித்துக் கொண்ட, என்னை இதில் பங்கேற்கும் படி செய்த, பாஸ்கருக்கு (என் கணவர்) ஒரு பெரிய நன்றி. :) --/

இந்த மாதிரியான அனுசரணைகள் தான் வாழ்வை ருசியாக்குகின்றன. நல்ல பதிவு.

Radhakrishnan said...

கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி வித்யா.

நல்லதொரு நண்பர்களின் அறிமுகமும், நல்லதொரு அனுபவமும் கிடைத்ததை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

தற்போது புத்துணர்வுடனே இருப்பீர்கள் என நம்புகிறேன்.

மணிஜி said...

கதை எழுத ஆரம்பிச்சாச்சா?

Vidhoosh said...

வால்பையன், யாத்ரா: உங்களைச் சந்தித்ததிலும் பெருமகிழ்ச்சிதான் :)

துபாய் ராஜா:நன்றிங்க

Krishna Prabhu : ஆமாம். நன்றிங்க

வெ.இராதாகிருஷ்ணன்: நன்றிங்க

தண்டோரா://கதை எழுத ஆரம்பிச்சாச்சா?// ஆரம்பிச்சிருக்கேன் இன்னும் ஒரு வாரம் ஆகும் முடிக்க. :)

Deepa said...

நல்ல பகிர்வு வித்யா!
:-)

Post a Comment