ஆசிரியரே-உங்களுக்கு வணக்கம்



 
அ ஆ இ ஈ ஞானம் தந்த ஆசிரியரே!
மொழி, நோக்கு, புதினம், புதுமை,
படைப்பு, எண்ணிக்கை, அறிவியலாயிரம்
விஞ்ஞானம், இதிகாசம், எல்லாம் அறிய
அறியாமை இருளை அகற்றிய
ஆசிரியரே! உங்களுக்கு வணக்கம்!

கல்லூரி பாடம் கற்று, கணினி பாடம் கற்று
தட்டச்சு, சுருக்கெழுத்து, பணம்,
மனம், குணம், உலகம் எல்லாந்தெரியும்படி
நல்லது-கெட்டது எதெதென்ற நாலும் தெரிய வைத்த
ஆசிரியரே! உங்களுக்கு வணக்கம்!

மாவு, சொட்டை, காளி, சட்டி, சுருட்டை, சுப்பன்
என்றெல்லாம் பெயர் வைத்து,
தினம் தினம் உங்கள் சைக்கிள் பங்க்ச்சராக
தேங்காய் உடைத்து, நீங்கள் பள்ளிக்கு வராத
நாட்களெல்லாம், எங்களுக்கு மகிழ்ச்சி
எங்கள் அறிவை வளர்த்து, "படிச்ச புள்ள"
மதிப்பை எனக்கு கொடுத்த
ஆசிரியரே! உங்களுக்கு வணக்கம்!

நான் முதன் முதலாக "தாதா" "ம்மா" என்றெல்லாம்
தத்துபித்திய போது "எங்க சொல்லு, சொல்லு" என்றும்,
சுவரெல்லாம் கிறுக்கி, பாழாக்கினாலும்
"அழகாக இருக்கு உன்னெழுத்து" என்று,
அகமகிழ்ந்து என் முதல் ஆசிரியர்களான,
அப்பா-அம்மாவே, உங்களுக்கு வணக்கம்!

தமிழ் வளர்த்து, மொழி கொடுத்து,
என் எழுத்து கண்டு அகமகிழ்ந்த
கிருஷ்ணமூர்த்தி ஆசானே!
தமிழை விட உசத்தியில்லை என்பீரே?
உங்கள் உயிர் பறித்த கயிற்றுக்கும்,
காதலுக்கும் என் வணக்கமில்லை.

.

21 comments:

பாலா said...

உங்கள் உயிர் பறித்த கயிற்றுக்கும்,
காதலுக்கும் என் வணக்கமில்லை.


ungal nermaiyai mathikiren sagothari

பா.ராஜாராம் said...

//எங்கள் உயிர் பறித்த
கயிற்றுக்கும் காதலுக்கும்
வணக்கமில்லை//
அப்பா...என்னங்க வித்யா
சர,சரன்னு கூட்டிட்டு போய்
குழிக்குள் தள்ளி,செம்மிட்டிங்க?
பொழைச்சு போறோம் விடுங்க..
கடைசி ரெண்டு வரியில் நல்ல takeoff!

Ashok D said...

//கடைசி ரெண்டு வரியில் நல்ல takeoff!//

வழிமொழிகிறேன்.

Vidhoosh said...

பாலா : நன்றிங்க பாலா

ராஜாராம்: நீங்க அப்படியா எங்கள பொழச்சு போக விடுறீங்க? உங்க அப்பா கவிதையைச் சொல்றேன்.

அசோக் - நன்றி. உங்களை ரொம்ப நாலா டாக்டர்-னே நினைச்சேன். அப்புறம் உங்க profile பார்த்துதான் தெரி(ளி)ஞ்சேன்.

--வித்யா

பிரவின்ஸ்கா said...

கவிதை நல்லாருக்கு
- ப்ரியமுடன் ,
பிரவின்ஸ்கா

Joe said...

Super!

Radhakrishnan said...

அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. தாய் தந்தையர் என அனைவரையும் குறிப்பிட்டு ஒரு நல்ல ஆசானை இழந்த சோகத்தையும் நினைவு கூறிய விதம் சிறப்பு.

மிக்க நன்றி வித்யா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆரம்பம் அமர்க்களம், முடிவு ரணம்
:(

S.A. நவாஸுதீன் said...

அழகாய் நான்கும் அதிரடியாய் கடைசியிலும் அசத்திவிட்டீர்கள்.

சந்தனமுல்லை said...

சூப்பர்! மிக அழகான கவிதை! ஆனால், மனசை பஞ்சராக்கிட்டீங்களே!! :-)

குடந்தை அன்புமணி said...

ஆசிரியர்க்கு வணக்கம்- வித்தியாசமாக பதிந்திருக்கிறீர்கள். முடிவில் அந்த வரிகளை எதிர்பார்க்கவில்லை.அதைப் படிக்கையில் அதற்கு ஒரு தனி இடுகை போடுவீங்க போலிருக்கு... எதிர்பார்க்கிறோம்.

Vidhoosh said...

பிரவின்ஸ்கா, ஜோ, இராதாகிருஷ்ணன், அமித்து அம்மா, நவாஸ், சந்தனமுல்லை, அன்புமணி - எல்லோருக்கும் நன்றிங்க.
:)



---வித்யா

கார்ல்ஸ்பெர்க் said...

//மாவு, சொட்டை, காளி, சட்டி, சுருட்டை, சுப்பன்
என்றெல்லாம் பெயர் வைத்து,
தினம் தினம் உங்கள் சைக்கிள் பங்க்ச்சராக
தேங்காய் உடைத்து,//

--பேரெல்லாம் புதுசா இருக்கே :)

நேசமித்ரன் said...

வித்யா கலக்குறீங்க போல
நடக்கட்டும் .. நடக்கட்டும்

கடைசி ரெண்டு வரி
!
!

:)

க.பாலாசி said...

//தமிழ் வளர்த்து, மொழி கொடுத்து,
என் எழுத்து கண்டு அகமகிழ்ந்த
கிருஷ்ணமூர்த்தி ஆசானே!
தமிழை விட உசத்தியில்லை என்பீரே?
உங்கள் உயிர் பறித்த கயிற்றுக்கும்,
காதலுக்கும் என் வணக்கமில்லை.//

நல்ல முடிவு...இதையெழுத (இந்த தமிழை) கற்றுக்கொடுத்தவரும் அவர்தானே...

ப்ரியமுடன் வசந்த் said...

//தினம் தினம் உங்கள் சைக்கிள் பங்க்ச்சராக
தேங்காய் உடைத்து,//

சேம் பிளட்

கவிதை நல்லா வந்துருக்கு....

Vidhoosh said...

கார்ல்ஸ்பெர்க், நேசமித்ரன், பாலாஜி, வசந்த் - எல்லோருக்கும் நன்றி.

-வித்யா

இது நம்ம ஆளு said...

தமிழ் வளர்த்து, மொழி கொடுத்து,
என் எழுத்து கண்டு அகமகிழ்ந்த
கிருஷ்ணமூர்த்தி ஆசானே!
தமிழை விட உசத்தியில்லை என்பீரே?
உங்கள் உயிர் பறித்த கயிற்றுக்கும்,
காதலுக்கும் என் வணக்கமில்லை.

:)

கிருஷ்ண மூர்த்தி S said...

வித்யாவுக்குத் தமிழ் கத்துக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி ஆசான் நானில்லே! நான் அவனில்லே!

மத்தப்படிக்கு, நாங்களும் வாத்திகளை ஏகத்துக்கும் லந்தடிச்சிருக்கோம்! அவங்க கஷ்டங்களைக் கொஞ்சம் சுமந்திருக்கோம், மரியாதைய மனசுல நெறைய தேக்கி வச்சிருக்கோம்!

கயறு வேணாம்! பக்கோடா ஒண்ணே போதும்!

Admin said...

உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

Vidhoosh said...

இது நம்ம ஆளு : நன்றிங்க

////// கிருஷ்ணமூர்த்தி said...
வித்யாவுக்குத் தமிழ் கத்துக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி ஆசான் நானில்லே! நான் அவனில்லே!
மத்தப்படிக்கு, நாங்களும் வாத்திகளை ஏகத்துக்கும் லந்தடிச்சிருக்கோம்! அவங்க கஷ்டங்களைக் கொஞ்சம் சுமந்திருக்கோம், மரியாதைய மனசுல நெறைய தேக்கி வச்சிருக்கோம்!
கயறு வேணாம்! பக்கோடா ஒண்ணே போதும்! //// அய்யா கிருஷ்ணமூர்த்தி சார் - ஏதும் பிரச்சனைனா பேசி தீத்துக்கலாம். அதுக்காக இப்படியா.. பக்கோடா அவ்ளோ மோசமாவா இருக்குங்க.. :))

சந்ரு : நன்றிங்க.

Post a Comment