நூறு புதிர்

இந்த புதிருக்கு பதில் சொல்லுங்க!!

1 2 3 4 5 6 7 8 9 0 = 100

இந்த formula-வை mathematical symbols பயன்படுத்தி கரெக்டா 100 வரும்படிசொல்லுங்க.


==============================

அதாவது என்ன சொல்ல வரேன்னா, இது என்னோட நூறாவது பதிவுங்க.



சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் "பைத்தியக்காரன்" சிவராமன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இன்றும் ஒரு முறை "நன்றி சார்".

ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒருமுறை, எட்டி நின்றுகொண்டே எட்டி எட்டி பார்த்துக் கொண்டு இருந்த என்னை உரையாடல் சிறுகதைப் போட்டியே மீண்டும் எழுத வைத்தது. உண்மையில் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. என் எழுத்துக்களுக்கு ஒரு அறிமுகம் தேடியே வந்தேன். (ஆனாலும் முடிவுகள் வந்த அன்று வயிற்றில் பட்டாம்பூச்சிகள் என்னவோ உண்மைதான்!!)

பதிவுலக நட்புக்கள் எல்லாமே போற்றத்தகுந்தவை. இது எனக்கு கொடுத்த முகமறியா நட்புக்களும், நான் நேரில் சந்தித்த ஒரே ஒரு பதிவரும், மிகவும் அற்புதமான மனிதர்கள். எவ்வளவு விஷயங்கள், கவிதைகள், எத்தனை விதமான சிந்தனைகள், எத்தனை நிறங்கள்?

எத்தனை கருத்துக்கள் உள்ளதோ, அத்துணைக்கும் வாசலாக இருக்கிறது blogging. இதுவரை அற்புதமான பயணம். அழகான நட்புக்கள். 2002-விலிரிந்து பதிவுலகை தொடர்ந்து படித்து வருகிறேன். எது என்னை blog-கிற்கு முதன் முதலில் இழுத்தது என்றெல்லாம் மறந்து விட்டது. ஆனால் ஏதோ ஒரு கூகிள் தேடலில்தான், வந்து சேர்ந்தேன் என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு சுபயோக சுபதினத்தில், தேடித் தேடித் படித்த என் பல வருட புத்தக படிப்பு தந்த, கையொடிய குறிப்பெடுத்த பல அருமையான புத்தக குறிப்புக்கள் அனைத்தும் நிஜமாகவே "பக்கோடா பேப்பர்கள்" ஆகிவிட, ஆரம்பத்தில், நான் கொஞ்சம் நினைவிலும் சேமித்து வைத்த புத்தகக் குறிப்புக்களை எங்கும் பத்திரமாக வைக்க வேண்டும் என்றே பதிவிட ஆரம்பித்தேன். என்ன, சிலவற்றை மீண்டும் ஒருமுறை மறுவாசித்தல் செய்து சரி பார்த்துக் கொள்ளவேண்டியதாய் இருக்கிறது.

சென்ற பிப்ரவரியில்தான் என்ட்ரி. ஆங்கிலமா தமிழா ஹிந்தியா சமஸ்கிருதமா என்று யோசித்துக் கொண்டே, தமிழை தேர்ந்தெடுத்தேன், என் எண்ணங்களும் உணர்வுகளும், தாய்மொழியில், எந்தவித சாயமும், உதட்டுப் பூச்சும் இல்லாமல் அப்படியே வந்து விழும் என்பதால்.

நான் எழுதுவதை படித்து, என்னுடன் கருத்துக்களை பகிரும், லைப்ரரியில் படிக்கிறா மாதிரி சத்தம் போடாமல் படித்துவிட்டு மட்டும் போகும், அனைவருக்கும் மிகவும் நன்றி. :)

ஒரு நல்ல மழை நாளில், ஊஞ்சலில் ஆடியபடி, நா. பார்த்தசாரதியின் "சமுதாய வீதி" புத்தகத்தோடு, அருமையான டீயுடன், பக்கோடா சாப்பிடுவது போல ஒரு மகிழ்ச்சி இங்கு வரும் போதெல்லாம்.

அப்படியே மறக்காம, அந்த புதிரையும் முயற்சி செய்யுங்க. :)

யாருமே அழைக்காமல், இந்த கல்யாண வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் வாங்க வாங்கன்னு, கை பிடிச்சு கூட்டிட்டுப் போயி, ஆதரவு விருந்து கொடுத்து, என்னை நூறாவது பதிவு வரை நகர்த்திக் கொண்டு வந்த உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றிங்க.

உங்கள் தோழி: விதூஷ் :)



===============
அப்படியே இதையும் படிச்சு இரசியுங்க...
The Fray's Hundred
(The Fray is a Grammy Award-nominated four-piece piano rock band.)

The how I cant recall
But I'm staring at
What once was the wall
Separating east and west
Now they meet amidst
The broad daylight

So this is where you are
And this is where I am
Somewhere between
Unsure and a hundred

Its hard I must confess
I'm banking on the rest to clear away
Cause we have spoken everything
Everything short of I love you

You right where you are
From right where I am
Somewhere between
Unsure and a hundred

And who's to say its wrong
And who's to say that its not right
Where we should be for now

So this is where you are
And this is where I am
So this is where you are
And this is where I've been
Somewhere between
Unsure and a hundred

==============================





.

30 comments:

ஆயில்யன் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !


/இந்த புதிருக்கு பதில் சொல்லுங்க!! :)

1 2 3 4 5 6 7 8 9 0 = 100

இந்த formula-வை mathematical symbols பயன்படுத்தி கரெக்டா 100 வரும்படிசொல்லுங்க.//

இப்புடியெல்லாம் எங்களை கணக்கு போடச்சொல்லி ராகிங்க் செய்யகூடாது! பார்முலா மேத்மேடிக்கு அப்படின்னாலே பீதியாகுது !

S.A. நவாஸுதீன் said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழியே...

9 x 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1 = 100

9 + 8 + 7 + 6 - 5 x 4 - 3 + 2 + 1 = 100

கூட்டிக்கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்...சின்னப்புள்ளதனமா இல்ல இருக்கு... நாங்கள்லாம் கணக்குல டைகர்...

R.Gopi said...

அதிரடி செஞ்சுரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் விதூஷ்....

10 + 20 + 30 + 40 = 100

கணக்கு சரியா... சரின்னா, கேல்குலேட்டருக்கு நன்றி,.... தப்புன்னா....

நாங்க எல்லாம் கணக்குல வீக்... இத மாதிரி எவ்ளோ கணக்கு போட்டு இருக்கோம்...

நாங்க எல்லாம் கணக்குல "லயன்"... நமக்கு புலி ஆகாது... சீயக்காய் கூட "மீரா ஹெர்பல்" தான்...

மேலும் பல பல செஞ்சுரிகள் அடிக்க வாழ்த்துக்கள்....

நட்புடன் ஜமால் said...

100க்கு வாழ்த்துகள்.

100 வந்திடிச்சி பாருங்க.

கிருஷ்ண மூர்த்தி S said...

சூர்ய வம்சம் படத்துல மணிவண்ணன் டயலாக் தான் இப்போ கைகொடுக்குது:

"சின்ராசு, தன்னோடமுட்டை மார்க்கைத் திருத்தி அப்பன்கூட அவங்க அப்பா கிட்ட மாட்டிக்குவான்!"

தேவயானி ஆர்வமா மூஞ்சிய வச்சுக் கிட்டு கேப்பாங்க.

"நூத்துக்கு எத்தனை சைபர்னு கூடத் தெரியலேன்னா.. மாட்டிக்குவான்" என்பார் மணிவண்ணன்.

எங்க கிட்டப் போயி, ஒன்னு, ரெண்டு மூணு நாலுன்னு சைபர் வரைக்கும் போட்டு.... அதெல்லாம் உதவாது!

நூறுக்கு எப்படி வாழ்த்துச் சொல்றதுன்னு கூடத் தெரியலே, இருங்க, எங்க வால்பையன் வந்ததும், காப்பியடிச்சுச் சொல்றேன்:-))

சந்தனமுல்லை said...

வாவ்....100-க்கு வாழ்த்துகள்!! தொடர்ந்து எழுதுங்கள்!! சுவாரசியமாக இருக்கிறது 'பக்கோடா பேப்பர்கள்'! :-)

அகநாழிகை said...

அன்பான வாழ்த்துகள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Radhakrishnan said...

அழகிய புதிருடன், துணையாய் ஆங்கிலக் கவிதையுடன் கூடிய நூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள். நட்புதனை நினைவு கூர்ந்த விதம் அழகு.

பல வருடங்களாக வாசிப்பாளாராக இருந்த அனுபவம் சிறப்பு. பக்கோடா பேப்பர்கள் எனும் தலைப்பு ஏன் வந்தது என்பதற்கான விளக்கமும் அழகு. இனி இந்த எழுத்துக்களை நீங்கள் மட்டுமல்லாது பலரும் தங்கள் எண்ணங்களில் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்.

நூறு, இலட்சம் கோடியாகப் பெருகிட மீண்டும் வாழ்த்துகள்.

(1+2+3+4)x5 =50
(6x7)+8 =50
9x0 = 0
100

மிக்க நன்றி வித்யா.

Vidhoosh said...

முதல்ல விடை சொல்லிடறேன்.
1 2 3 4 5 6 7 8 9 0 ≠ 100 இது பின்நவீனத்துவம்.

இது உரையாடல்.
1x(2+3)x4x5+(6x7x8x9x0) = 100
1x(2+3)x4x5+6x7x8x9x0 = 100
1+2+3+4+5+6+7+8x9+0 = 100


மாத்தி யோசிக்கும் புரியாத கவிதை தலைவர்களான கவுஜர்கள் (நம்மை கவிழ்த்து விடுவதால்) இப்படித்தான் பதில் சொல்வார்கள்.
1x(2+3)x4x5+6789x0 = 100
1x2x3x4+5+6-7+8x9+0 = 100
123+45-67+8-9+0=100


--வித்யா

Vidhoosh said...

ஆயில்யன், நவாஸுதீன், பாலாஜி, கோபி, ஜமால், கிருஷ்ணமூர்த்தி, சந்தனமுல்லை, வாசு - எல்லோருக்கும் நன்றிங்க.

:)

வித்யா

Vidhoosh said...

ராதாகிருஷ்ணன் சார். ரொம்ப நன்றி உங்கள் வாழ்த்துக்கு :) சந்தோஷமாய் இருக்கிறது.

-வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

சதத்திற்கு வாழ்த்துக்கள் வித்யா.

வலைப்பூவின் பெயரைப் போலவே உங்கள் எழுத்திலும் கொஞ்சம் வித்தியாசம் கலந்த சுவாரஸ்யம்

தொடருங்கள்

Vidhoosh said...

நன்றிங்க அமித்து அம்மா. :)

வித்யா

Joe said...

//
நான் எழுதுவதை படித்து, என்னுடன் கருத்துக்களை பகிரும், லைப்ரரியில் படிக்கிறா மாதிரி சத்தம் போடாமல் படித்துவிட்டு மட்டும் போகும், அனைவருக்கும் மிகவும் நன்றி. :)
//
Nice satire!

Congrats on the century, keep rocking, mate!
(sorry transliteration not working)

Vidhoosh said...

mohamedFeros, syednavas, balasee, rkrishnanv, Joe, amalraaj, chuttiyaar, ashok92, suthir1974, ganpath
--நன்றி. தமிழிசில் பாபுலர் ஆகியதற்கு நன்றிங்க.

-வித்யா

கார்ல்ஸ்பெர்க் said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்!!!

செஞ்சுரி எல்லாம் சும்மா ஸ்டார்டிங் தான்.. இன்னும் மேல மேல போகணும், நம்ம அண்ணன் மாதிரி :)

பக்கோடா என்ற வார்த்தையைப் பார்த்ததும், 'இது ஒரு சமையல் சம்பந்தப்பட்ட Blog'ன்னு' நெனச்சு இதுவரைக்கும் Add பண்ணாமலேயே விட்டுட்டேன்.. இப்ப பண்ணிட்டேன் :)

நாகராஜன் said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் வித்யா...

Vidhoosh said...

கார்ல்ஸ்பெர்க்: ரொம்ப நன்றிங்க. யாருங்க அது அண்ணன்?? :(

ராசுக்குட்டி: நன்றிங்க.

--வித்யா

வால்பையன் said...

//நூறுக்கு எப்படி வாழ்த்துச் சொல்றதுன்னு கூடத் தெரியலே, இருங்க, எங்க வால்பையன் வந்ததும், காப்பியடிச்சுச் சொல்றேன்:-))//

என்ன வச்சு காமெடி கீமிடி பண்ணலையே!


சதமடித்து சத்தமில்லாமல் நிற்கும்
தோழிக்கு வாழ்த்துக்கள்!
மேன்மேலும் சிகரங்கள் உங்களை
தொடும் பாருங்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் வித்யா சதமடித்ததுக்கு...

kamalabhoopathy said...

Hi,
congrats for your 100th post. Wishing you more mile stones like this.

பாலா said...

seekkirame 1000 mavathu pathivu ezhutha vaazhththukkal

யாத்ரா said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது, 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

கார்ல்ஸ்பெர்க் said...

என்னங்க இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க?? நம்ம இளையதளபதி விஜய்'ங்க..

Raju said...

வாழ்த்துக்கள் வித்யா.

Vidhoosh said...

ஜோ - நன்றிங்க.satire இல்ல. அது உண்மை மட்டுமே. :)

வால்பையன்: அண்ணாஆஆஆ, உங்கள வெச்சு காமெடியா... அபச்சாரம் அபச்சாரம்... அன்பு மட்டுமே.. :)) (நன்றிங்க கவிதை போல் வாழ்த்தியதற்கு.

பிரியமுடன்...வசந்த் : ரொம்ப நன்றிங்க.

kamalabhoopathy: கல்யாண வேலைல வர மாட்டீங்கன்னே நினைச்சேன். நன்றி :)

பாலா: ஆயிரம் கொலை பண்ணாதான் அரை வைத்தியன்னு மனசுக்குள் நீங்க பேசியது கேட்டுவிட்டது பாலா, கொஞ்ச நாளா நீங்க ஏன் எழுதுவதே இல்லை :(

யாத்ரா: நன்றிங்க.

கார்ல்ஸ்பெர்க்: அப்படியா. ரொம்ப நன்றிங்க. விஜய் எங்களுக்கு தம்பிதாங்க. எங்களுக்கெல்லாம் ஒரே அண்ணன், வருங்கால அமெரிக்க அதிபர் ஜே.கே.ரித்தீஷ் மட்டும்தாங்க. ஹி ஹி....

ராஜு: நன்றிங்க.


--வித்யா

குடந்தை அன்புமணி said...

பிடியுங்கள் பூங்கொத்து!
நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.


எனக்கு கணக்கு வேப்பங்காய். வர்ட்டா...

அப்பால பார்ப்போம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

Vidhoosh said...

குடந்தை அன்புமணி: பூங்கொத்துக்கு நன்றி அன்பு.
T.V.ராதாகிருஷ்ணன்: வாழ்த்துக்கு நன்றிங்க.

-வித்யா

Post a Comment