இது ஒரு தொடர்(ந்து) கதை எழுதும் வித்தியாசத் தொடர் பதிவு. அதிரடி பதிவர் விசாவின் யோசனைப்படி முகிலன் இதை துவக்கினார். மொத்த கதையையும் வரிசையாக நீங்கள் இங்கே படிக்கலாம்.
முகிலன் (பாகம் - 01), பலாபட்டறை (பாகம் - 02 ), பிரபாகர் (பாகம் - 03), ஹாலிவுட் பாலா (பாகம் - 04), வினோத் கௌதம் (பாகம் - 05), கிஷோர் (பாகம் - 06), சுபதமிழினியன் (பாகம் - 07), விசா (பாகம் - 08), அ.மு.செய்யது (பாகம்-09)
இவர்களைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் என்பதால் ஜீப்பில் தொங்கிக் கொண்டே, "எழுதறேன்" என்றதும், பேனாகத்தியை கொடுத்து விசா "இதுக்கு மேல் தாங்காது, கதைய முடிச்சுருங்க" . அப்டீண்டாருங்க. கதைய முடிச்சுட்டேன் பாஸ்.
************************************************************************************
RULES:
1. "கதை முடிந்து விட்டது. யாரும் தொடர வேண்டாம்." (ஹிஹி)
************************************************************************************
"அவன் நிச்சயம் பைத்தியமாத்தான் இருக்கணும். நல்ல ஆத்மான்னு ஒண்ணு உலகத்தில் இருந்தா அது அவ மட்டும்தான். அவளைப் போயி..." என்றார் இன்ஸ்பெக்டர். "ராஜேஷ். உண்மையச் சொல்லிரு. வெயில்ல ஓடியிருக்க இல்ல..அதான் உளர்ற."
"நீங்களும் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டீங்க சார்... அதான் நம்மளோட வீக்னஸ்" என்று உரத்து சிரித்தான் ராஜேஷ்.
ராஜேஷின் மூக்கில் குத்தினார் இன்ஸ்பெக்டர். ரத்தம் வரவில்லை. ஆனால் தலை விண்-விண்ணென்று தெறித்தது. "அம்மா..ஆ "என்றலறினான் ராஜேஷ். "அவங்கப்பா எவ்ளோ பெரிய டாக்டர் தெரியுமாடா... பொளந்துருவேன் உன்ன" இப்போது ராஜேஷின் உதடு லேசாய் புடைக்க ஆரம்பித்திருந்தது. வலியில் அழவேண்டும் போல இருந்தாலும் அடக்கிக் கொண்டு "ஸ்வாதிய நம்பாதீங்க. அவள பிடிச்சு விசாரிக்கறத விட்டு என்னையப் போயி... லூசு சார் நீங்க. சார் பொம்பள முதலைய பார்த்ததில்லேல்ல ... உங்க பேரு என்ன அர்ஜுனா" என்றபடியே சட்டையில் இருந்த பெயரைப் பார்த்து "அடுத்து நீங்கதான் சார்" கெக்கலித்து சிரித்தான்
==============================
மருத்துவமனையில் ஸ்வாதி குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை நர்சுகள் வரும்போதெல்லாம் "எப்டி இருக்காரு" என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
இன்ஸ்பெக்டர் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார். அசப்பில் தீபிகா படுகோனேவை நினைவூட்டினாள் அவள். "இவளைப் போயி... ச்சே. எப்படிப் பட்ட கிரிமினல் அந்த ராஜேஷ். தான் தப்பிக்க எப்படியெல்லாம் பேசறான் பாரு" என்று நினைத்த படியே, "என்ன மேடம். டாக்டர் ஏதும் சொன்னாரா" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
"அர்ஜுன்...தேங்க் காட்.. வந்துட்டீங்க. நான் பயந்துட்டே இருந்தேன். கடத்தினவங்க மூலமா ஏதும் ஆபத்து வந்திருமோன்னு." என்றவாறே இன்ஸ்பெக்டரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
=========================
ஐசியூ அறைக்குள்ளே "சீக்கிரம் அந்த ஆல்டர்நேட் இஞ்சக்ஷனை ஐ.வி.ல செலுத்துங்க. இல்லன்னா சப்ஜக்டின் பாடி வெடிச்சிரும். ஓடி வேறத் தொலைச்சிருக்கான். வேர்வையால பாதி மருந்து செயலிழந்து விட்டது. கமான் குவிக்... " என்றவாறே பாஸ்கரின் இடது புறங்கையை அழுத்திப் பிடித்துக் கொண்டார் டாக்டர். மருந்து நிரம்பிய சிரிஞ்சை புடைத்த நரம்புக்குள் செலுத்தினாள் நர்ஸ்.
"இன்ஸ்பெக்டர். நீங்க மட்டும் உள்ள வாங்க சார்" என்று அழைத்தார் டாக்டர். "ஒ மை காட்... பயங்கரமானவங்க சார் அவங்க. மெடிக்கல் கிரிமினல்கள் அதிகமாயிட்டே வராங்க. இதுனால எங்களைப் போன்ற நல்ல டாக்டர்களுக்கும் கெட்ட பேராகிடுது. பேஷண்டுகளை காப்பாத்தறது பெரிய சேலஞ்.. கோர்ட்டு கேசுன்னு அலைச்சல் வேற.. " என்று அலுத்துக் கொண்டே, "பேஷன்ட் உயிரை காப்பாத்தியாச்சு. நீங்க போய் பாக்கலாம்" என்றார்.
"டாக்டர் ! ஸ்வாதியையும் பாஸ்கரை பாக்க அழைத்துப் போகலாம் இல்லையா"
"ஒவ்வொருத்தராப் போயி பாருங்க. பேஷன்ட் கிட்ட எதுவும் பேசாதீங்க. இப்ப நல்லா தூங்கிட்டு இருப்பாரு" என்று டாக்டர் சொன்னதும், இன்ஸ்பெக்டர் ஸ்வாதியை நோக்கி ஒரு புன்னகை வீசி விட்டு "டோன்ட் வொர்ரி" என்று சொல்லிவிட்டு ஐசியூகுள்ளே போனார் இன்ஸ்பெக்டர்.
"ஸ்வாதி. இப்ப என்ன செய்யறது" என்றார் டாக்டர்.
"நீங்க பேசாம இருங்கப்பா. எல்லாம் நான் பாத்துக்கறேன்" என்றாள் ஸ்வாதி.
=======================================
"பாஸ்கர் பாஸ்கர்" என்று கிசுகிசுப்பாய் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.
தேங்காய் எண்ணெய் வாசத்தோடு வந்த நர்ஸ் "பேஷண்டை தொந்தரவு செய்யண்டாம்." என்றாள்.
"ம்க்கும்" என்று தொண்டையைச் செருமிக் கொண்டு இன்ஸ்பெக்டர் "சிஸ்டர். இருமலை அடக்க முடியல. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரீங்களா" என்றார்
நர்ஸ் அவரை முறைத்துக் கொண்டே தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.
பாஸ்கர் கண்கள் மூடிய விழிக்குள் லேசாய் அசைந்தது. "இதயத் துடிப்பைக் கேட்கலாமா...... சிஸ்டர் . கொஞ்சம் ஸ்டெத் கொடுங்க." என்றவாறே நெஞ்சில் தலைவைத்து சாய்ந்துகொண்டு, "பேசு பாஸ்கர்" என்றார் இன்ஸ்பெக்டர்.
"ஸ்வாதி ஸ்வாதி" என்றான் பாஸ்கர்.
"ஓ. ஸ்வாதியை பார்க்கணுமா" என்றபடியே "வெயிட். அவளை அனுப்புகிறேன்" என்று நகர்ந்து, கதவைத் திறந்து வெளியேறி,
"ஸ்வாதி. ஹீ வாண்ட்ஸ் யூ" என்று சொல்லி "தேங்க் யூ டாக்டர். நீங்க பெரிய மெடிகல் கிரிமினல் கும்பலை பிடிக்க உதவப் போறீங்க.. பாஸ்கர் இஸ் தி ஒன்லி விட்னஸ். அவரை பத்திரமா பாத்துக்கோங்க. மூன்று எஸ்.ஐ-களை ஸ்பெஷல் டியூட்டியில் இங்கேயே இருக்கச் செய்திருக்கிறேன்." என்று கூறிவிட்டு மூன்று எஸ்ஐகளையும் டாக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஸ்வாதியை பார்த்து "டேக் கேர் ஆப் ஹிம். அண்ட் யூ டூ.." என்று புன்னகைத்தார்.
"தேங்க்ஸ் அர்ஜுன்... உங்களை நான் அர்ஜுன்னே கூப்பிடலாமா. இப்போதுதான் நாம் நண்பர்கள் ஆகிவிட்டோமே" என்றாள் ஸ்வாதி கைகுலுக்கியபடி.
அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.
ஐசியூவுக்குள்ளிருந்து மலையாள நர்ஸ் ஓடி வந்தாள். "டாக்டர் டாக்டர். ஆ ஆளு தப்பிச்சு ஓடிட்டான்..:" என்றவள்..
"ஒஹ். மை காட். லெட்ஸ் டிரேஸ் ஹிம் அவுட்.. ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. சாயந்திரத்துக்குள்ள புடிச்சிரலாம்" என்றவாறே விரைந்தார் இன்ஸ்பெக்டர் அர்ஜுன். மூன்று எஸ்ஐகளும் பின்னாலேயே ஓடினார்கள்.
தன் கைபேசியை எடுத்து "மிஸ்டர் எக்ஸ். மறுபடி சப்ஜெக்ட் தப்பிச்சிட்டான். அவனைத் தேடுங்க" என்று கிசுகிசுத்தாள் ஸ்வாதி.
பாஸ்கர் அடையார் அருகில் இருக்கும் கூவம் சந்துகளில் நுழைந்து ஓடிக் கொண்டிருந்தான். இருளத் துவங்கியது. வயிறு வலிக்க ஆரம்பித்தது. குப்பையில் கிடந்தப் பழையச் சீலையைப் போர்த்திக் கொண்டு டீக்கடை பெஞ்ச் ஒன்றில் சாய்ந்துக் கொண்டான்.
டீக்கடையில் "இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மாயம்" என்றத் தலைப்புச் செய்தியோடுத் தொங்கிக் கொண்டிருந்தது மாலைமுரசு.
"அந்த பாஸ்கரைத் தேடித் பிடிங்க..எல்லாம் தெரிஞ்சிரும்" என்று ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன்.
(முடிந்தது ... சோடா கடலை சோடா கடலை...)
.....
எங்கே செல்லும் - தொடர்கதை - கடைசி பாகம்
Posted by
Vidhoosh
on Saturday, January 30, 2010
Labels:
கதை,
தொடர் பதிவு
29 comments:
பெரும் தொடரை வெற்றி கரமாக முடித்து ஒரு ஜனரஞ்சக டச் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்.
ஆஹா, அற்புதமாய் முடித்திருக்கிறீர்கள் வித்யா... கூட்டாஞ்சோறு போல் என்றாலும் சுவையாகத்தான் இருக்கிறது, பத்து பேரால் உருவான இந்த தொடர்கதை...
பிரபாகர்.
nanraaga ullathu.
-:)
வெற்றிக்கரமாக முடித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள்..
ஒரு விறுவிறுப்பான முடிவோடு..
என்ன, நான் மட்டும் தான் இந்த தொடர்ல சம்பந்தமே இல்லாமல் ஒரு பாரீன் ட்ரிப் அடிக்கலாம்னு நினைத்தேன்..
அந்த எபிசோடு மட்டும் அந்தரத்தில் தொங்குது..:)
கலக்கலான முடிவு..
விசா, பிரபாகர் சொன்னது ரிப்பீட்டு...
அடுத்த தொடரை யாருப்பா தொடங்கப் போறீங்க??
நல்லா முடிச்சிட்டிங்க.
//வினோத்கெளதம்:
வெற்றிக்கரமாக முடித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள்..
ஒரு விறுவிறுப்பான முடிவோடு..
என்ன, நான் மட்டும் தான் இந்த தொடர்ல சம்பந்தமே இல்லாமல் ஒரு பாரீன் ட்ரிப் அடிக்கலாம்னு நினைத்தேன்..
அந்த எபிசோடு மட்டும் அந்தரத்தில் தொங்குது..:)//
அது உங்க தப்பு இல்ல வினோத், அது எல்லாம் கிஷோர் செய்த வேலை.
கலக்கல் வித்யா ஜி. :)
எப்படியோ கத பேப்பர்ல பப்ளிஷ் ஆயிடிச்சு..:))
----
அடுத்த கதைக்கு முன்பாக முதலில் குழுவும், விதிகளும், கருவும் முடிவு செய்து பின்னர் வெளியிட்டால் நலம் (படிப்பவர்களுக்கு) என்று நினைக்கிறேன். :)) comments Pls
ம்ஹூம்..நல்லா முடிச்சிருக்கீங்க..!!!
பாராட்டுகள் வித்யா.
நானும் ஒரு பாகம் எழுதிருக்கேன்.ஆனா எனக்கு இன்னும் கதை கொழப்பமாவே இருக்கு.!!!
தொடர் முடிஞ்சிருச்சின்னு புரியுது.
சோடா கடலை - இண்ட்ரவெல்ல தானே கூவுவாங்க
பாகம்-2 போட ஏதுவாக இருக்கு போல.
சரி அடுத்த ஆட்டத்தில் குதிக்க வேண்டியது தான்,
ஆஹா முடிஞ்சு போச்சு அய்யய்யோ ..வடபோச்சே...
வித்யா சிறப்பா முடிச்சுட்டீங்க வாழ்த்துகள்....
நன்றி விசா, பிரபாகர், மலர்விழி, வினோத், முகிலன், தமிழினியன், ஷங்கர், செய்யது, ஜமால், வசந்த்.
இதுதான் சிறப்பான முடிவுன்னும் முடிவெடுக்க முடியாது.
வசந்த், செய்யது மற்றும் ஷங்கர் -- மாற்று சிந்தனையோடு வேறு முடிவு வந்தால் வெளியிடுங்களேன். ரசிப்பாய் இருக்கும்.
இந்த மாதிரி தொடர்களுக்கு (கதைகளுக்கு) characters எண்ணிக்கையும், புதுசு புதுசா கதையின் போக்குக்கு அவசியமா என்று யோசித்து, தேவை இல்லாம சேர்க்கக் கூடாது என்பதையும் ரூல்சில் சொல்லிடுங்க. இந்தக் கதையில் தங்கை, அம்மா, திவ்யா போன்றவர்களை என்ன செய்யரதுன்னே தெரில. அவங்களப் பத்தி எங்கயாவது சொல்லனும்னு முயற்சி பண்ணேன். ஒட்டவே இல்லை. :(
சம்பந்தப் பட்ட எழுத்தாளர் மன்னிக்க. புண் படுத்தும் நோக்கம் இல்லை. நீங்களே முழுக் கதையையும் படித்தால் அவர்களின் முக்கியத்துவம் ரொம்பவே கம்மியாக இருப்பதை உணர்வீர்கள்.
வெற்றி-[க்]-கதிரவன் நன்றி
வித்யா,
நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் அவைகள் எல்லாம் ஆரம்ப நிலையிலேயே அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அடுத்து உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்டதால் கடைசியில் கோர்க்க இயலவில்லை. ஷங்கர் ஒரு காதலி இருப்பதாய் சொன்னவுடன் அடுத்து அவனுக்கு ஒரு குடும்பமும் இருப்பதாய் சொல்லியிருந்தேன். சங்கர் இப்போது சொல்வது போல் முதலிலேயே எதை சொல்கிறோம் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட்டால் மிக அருமையாய் வரும் என்பதில் ஐயமில்லை. மற்றபடி எல்லோரின் பங்களிப்பும் மிகச் சிறப்பாகவே இருந்தது...
பிரபாகர்.
தொடர்கதை முடிஞ்சுதா. ஒகே. இப்ப பொறுமையா பாகம் ஒன்னுலேர்ந்து படிக்கத் தொடங்குறேன்.
10 அத்தியாயங்களும் முடிச்சிட்டேன்பா. படு சுவாரசியமா எல்லாருமே கொண்டு போயிருக்கீங்க. வித்யா முடித்த விதமும் அருமை.
பட் ஸ்டில் எதுவோ மிஸ்ஸிங் மாதிரி ஒரு ஃபீல் வருவதையும் தடுக்கமுடியலை. இருந்தாலும் முதல் முயற்சியே சூப்பர் ஹிட்தான். அதில் நோ டௌட்.
தொடரை முடித்த பெருமை உங்களுக்கா...வாழ்த்துக்கள்
இது சோதனை ஓட்டம் தானே...!! அதனால.. இன்னும் ஒரு 2-3 தொடர் போனால்.. அதெல்லாம் சரியாகி இன்னும் சுவாரசியமாவே போகும்னு நம்பறேன்.
ஏற்கனவே எழுதினவங்களையே எழுத விடாதீங்க. இந்தத் தொடராலதான்.. எனக்கு அ.மு.செய்யது அறிமுகம் கிடைச்சிருக்கு. மத்த எட்டு பேரும் ஏற்கனவே தெரியும்.
அடுத்த முறை.. பத்து பேரின் அறிமுகமும் திறமையும் தெரிஞ்சிக்க வாய்ப்பு கொடுங்க.
its really fun! :)
Bala solrathu sari. Puthu aalunga vaangappa.
Bala solrathu sari. Puthu aalunga vaangappa.
புது ஆட்கள் வரவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமும். குறிப்பாக புதுபதிவர்கள். ஆக அவர்களுக்கு இது ஒரு அறிமுகமாக இருக்கும் என்பது. நம்ம தொடர் கதை குழுவோட முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்க வேண்டும். மேலும் யார் யார் எழுதப்போகிறார்கள் கதையை எப்படி பத்து எப்பிசோடும் ஒரு ஸ்வாரசியத்தோடு நகர்த்தவேண்டும் என்று குழு முன்னரே முடிவு செய்து ரகசியமாக அறிவித்துவிட வேண்டும்.
Better to try a comedy story next time.
//ஏற்கனவே எழுதினவங்களையே எழுத விடாதீங்க//
அவ்வ்வ்...
நான் புதுசில்லையா அப்ப..
பாஸிஸ ஹாலிபாலி.. ’உங்கூரு’ வித்தைய காமிச்சிட்டீங்களே.. :)))
விசா குழு குழுன்னு சொல்றீங்களே அந்தக் குழுல யார்யாரெல்லாம் இருக்காங்க? அதையும் ரகசியமா வச்சிடப்போறீங்க:P
நன்றி பிரபாகர், நீங்க சொல்வதும் சரிதான். :)
நன்றி நவாஸ். முதல் முயற்சி. வரும் நாட்களில் இந்த முறை நிச்சயம் சூப்பர் டூபர் ஹிட் ஆகிடும். :)
நன்றி புலவன் புலிகேசி
நன்றி பாலா aka ஹாலி பாலி:))
///ஏற்கனவே எழுதினவங்களையே எழுத விடாதீங்க./// ஏற்கனவே பைத்தியக்காரன் சிவராமன் நடத்திய கதை பட்டறையால கதை எழுதினாலும் வெளியிடவே பயமா இருக்கு... நீங்க வேறயா.. :))
but seriously, this will help us exploring more writers. :)
தமிழினியன்: :) நன்றி
விசா: ஆஹா.. காமெடியா.. நல்ல ஐடியாதான். :))
கு.ஜ.முக. நசரேயன், குசும்பன் எல்லாரும் பூமி அதிர களத்தில் குதிங்க
ஷங்கர்: :)) நீங்க "நூறு" பதிவு பழசுங்க.
தமிழினியன்: அதானே.. :)) சீக்கிரம் குழு உறுப்பினர்கள் பெயர்களை வெளியிடுங்க பாஸ் (தலைவரே!!)
அப்பாடா... :-)
//மருத்துவமனையில் ஸ்வாதி குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை நர்சுகள் வரும்போதெல்லாம் "எப்டி இருக்காரு" என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.//
அது என்ன மருத்துவமனையா ? மைதானமா?
//இன்ஸ்பெக்டர் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார். அசப்பில் தீபிகா படுகோனேவை நினைவூட்டினாள் அவள்//
யாரு நர்சா?
கதையோட கதைய முடிச்சதுக்கு ஒரு கும்பிடு போட்டுகிறேன்
ஒரு வழியாக் கதையை முடிச்சுட்டீங்க இல்லே! அப்புறம் எதுக்கு இண்டர்வல் வியாபாரம் மாதிரி சோடா கடலை, பாப்கார்ன், பஜ்ஜி எல்லாம்!
எனக்கென்னமோ இது ஆவுறதில்லைன்னு தான் தோணுது!
செம த்ரில்லிங்க்.
Post a Comment