மாமியும் தமிழ் சைன் போர்டும்


ஏண்டாப்பா. இப்பல்லாம் தமிழ்லயே கடைலல்லாம் போர்டு வைக்கச் சொல்றாளாமே! அவனவன் கைகாசப் போட்டோ, லஞ்சம் கிஞ்சம் கொடுத்து கடனோ உடனோ வாங்கி தொழில் பண்ணின்றுந்தா, தமிழ்ல எழுதி வைய்யு தெலுங்குல எழுதி வைய்யுன்னு என்னடா இது. ஆனா தமிழ்ல ஸ்கூட்டர் நம்பர மட்டும் எழுதப் ப்டாதுங்றானே... இதுனால அவாளுக்கெல்லாம் வ்யாபாரம் பெருஷா வளருமாக்கும் அப்படீங்கறான்.. சரி.. தமிழ்ல எழுதிட்டா உடனே லோகத்துல இருக்கரவாள்லாம் சம்பாதிக்கற காசெல்லாம் எடுத்துண்டு திமுதிமுன்னு இவன் கடையப் பாத்து ஓடி வருவாளாக்கும்?  அப்டீன்னா... டான்டெக்ஸ்காரன் என்னடா பண்ணுவான்? அவன் எப்படி தான் வ்யாபாரம் பண்றத்த தமிழ்ல எழுதுவான். அப்டியே எழுதிபிட்டாலும் பாஷை தெரியாதவா எப்படி கண்டு பிடிப்பா? ஒரு பேச்சுக்கே வச்சுக்கலாம். நம்ப பக்கத்தாத்துல மூஞ்சிக்கு முக்காடு போட்டுண்டு முதுகே இல்லாத சட்டை போட்டுண்டு திரியரதுகளே, அவாத்துகாரர் ஜட்டி வாங்கனும்னு கடைத் தெருக்குப் போறான்னு வச்சுக்கோ. அவன் தெரியாத்தனமா அங்க போயி இன்னர்வேர் இன்னர்வேரும்பான், இவனும் ஒன்னும் தெரியாம, நாட்டு மருந்து கடைக்கு அனுப்பிடுவான்.. அது சரி.. அதானேங்கறேன்....  சித்தக் கூட எதிர்பாக்காம மார்கெடிங் கீர்கடிங் அட்வடைஸ்மண்டுன்னு எதுவுஞ் செய்யாம  நாட்டு மருந்து வ்யாபாரம் நடந்துடறது பாருங்கோ.. அதைத்தான் வியாபாரம் பெருகரதுன்னு சொல்லிட்டான் போலருக்கு. "இங்கே குறைந்த செலவில் தியாகம் செய்யப் படும்" அப்டீன்னு நீயும் ஒரு போர்டு போட்டுர்ரா அம்பி. ஆமா காசு வாங்கிண்டு பண்ணா அது எப்படி தியாகமாகும், தமிழ்ல ஹோமத்துக்கு வேறன்ன பேரு சித்த கண்டு பிடிச்சு சொல்லுங்கோன்னா!




.
...

22 comments:

துளசி கோபால் said...

நன்னாச் சொன்னேள் போங்கோ:-))))

தமிழ்ன்னு சொன்னா அதைப் படுத்தப்படாது. என்ன பாஷையில் இருக்கோ அதை அப்டியே தமிழில் எழுதுனாப் போறுமாம். அரசு ஊத்திக்கொடுக்கும் சாராயக்கடைன்னு மாஞ்சுமாஞ்சு எழுதண்டாம். டாஸ்மாக்ன்னு சிம்பிளா எழுதுன்றான். வடமொழி எழுத்துவேற நடுவில் வர்றது! பகவானே..... என்னமாட்டும் ஆகட்டும்.....

அதென்ன த யாகம்?????

Unknown said...

தமிழ்லயே வைக்கச் சொல்லல மாமி தமிழ்லயும் வைங்கோன்னு சொல்றா அவ்வளவுதான்..

நீங்க பெங்களூரு பக்கம் போனதில்லையோ? அங்க கடைல மட்டும் இல்ல, கார்ப்பரேட் ஆஃபிஸ் கூட கன்னடத்துல தான் போர்டு வைக்கனும்ங்கறா? பெங்களூரு எந்த விதத்துல வளர்ச்சியில கொறஞ்சிடுச்சிங்கறேள்?

அது மட்டுமில்ல, ஆங்கிலம் தெரியாதவாளும் இருக்கா இல்லையா? அவாளுக்கும் என்ன கடைன்னு தெரியணுமோல்லியோ??

நான் டோரோண்டோ போயிருக்கேன். அங்க தமிழ்ல கடைப் பேரு எழுதியிருக்கறதப் பாத்தும் இருக்கேன். அங்கல்லாம் யாவாரம் ஆகாமலா இருக்கு?

S.A. நவாஸுதீன் said...

பெயர்ப்பலகை தமிழில் மட்டும்தான் வைக்கனும்னா தப்புத்தான். தமிழிலும் வைங்கன்னு சொன்னா தப்பில்லை.

கமலேஷ் said...

இதெல்லாம் தமிழ வாழ வைக்கிற வேலை இல்ல....அவுங்க வாழ்றது எதுன்னா ஒரு பிரச்சனைய கிளப்பி விட்டுக்கிட்டு இருக்றவங்க செய்ற வேலை....

நேசமித்ரன் said...

:)

கொஞ்சம் யோசிச்சு இருக்கலாமோ ?

Vidhoosh said...

:)) எல்லோருக்கும் நன்றி.

நேசன்: இன்னும் பக்குவம் போறலை :))

--வித்யா

ரிஷபன் said...

இன்னர்வேர்.. நாட்டு மருந்துக் கடையிலா கிடைக்குது?! அது தெரியாம இத்தனை நாள் வைகிங்ஸ் போயிட்டேனே..

ரிஷபன் said...

வேள்வி - அதுதான் தமிழில்!

Paleo God said...

TASMAC (TN State Marketing Corporation Limited, சன் TV, கலைஞர் டிவி, இன்னும் நிறைய இருக்கிறது..


தொழில் பண்றவனுக்குத்தான் வலி தெரியும், மற்றபடி கட பேர் இப்படி வைய்யின்னு சொல்றதுக்கும், மொழி முன்னேற்றத்திற்க்கும் எந்த சம்பந்தமுமில்லை..



நேசன்: இன்னும் பக்குவம் போறலை :))//

எனக்கு கூடத்தாங்க..::))

சாந்தி மாரியப்பன் said...

எல்லா இடத்திலும் ஒரே கதைதான் போலிருக்கு.

இங்கே மஹாராஷ்ட்ராவில், கொஞ்ச நாள் முந்தி, மராட்டியில் மட்டும்தான் பெயர்ப்பலகை இருக்கணும்னு சொல்லி, இங்கிலிபீசில் எழுதியிருந்த பலகைகளை எல்லாம் அடித்து உடைத்தார்கள்.

கடைக்காரர்களும் 'சேனை'யை தொட்டா அரிப்பு ஜாஸ்தி ஆயிடுமேன்னு பயந்து, பலகைகளை மாற்றிய கூத்தெல்லாம் நடந்தது.

பா.ராஜாராம் said...

:-)))

//தமிழ்ல ஹோமத்துக்கு வேறன்ன பேரு சித்த கண்டு பிடிச்சு சொல்லுங்கோன்னா!//

வயிற்றெரிச்சல் மாமி.

:-)

ஹுஸைனம்மா said...

இந்த “தமிழில் பெயர் எழுதும் விதி” ரொம்ப நாள் முன்னயே இருக்கே, இப்ப ஏன் இந்தப் பதிவு? புதுசா கடை தொடங்கிருக்கீங்களா? ;-)

நட்புடன் ஜமால் said...

ஏதோ மேட்டர் இருக்கு

புரிஞ்சிக்கதான் இன்னும் பக்கவும் போறலை எனக்கு.

ரவி said...

நம்மவாக்கெல்லாம் சம்ஸ்க்ருததுல போர்ட் வெக்கச்சொன்னா இனிக்குமில்லியோ மாமி ? நம்ம தாய்மொழி அதானே ?

Nathanjagk said...

நாட்டுமருந்துக் கடைக்கு நல்ல விளம்பரம். உங்களுக்கு கருங்கல்லி​வேர் கால்கிலோ பார்ஸல்ல்ல்..!

Vidhoosh said...

துளசி மேடம், முகிலன், நவாஸ், கமலேஷ், நேசன், பலா பட்டறை ஷங்கர், அமைதிச்சாரல் (நல்லப் பெயருங்க), ராஜாராம் (வயத்தெரிச்சல் ஜாஸ்தியாகித்தான் பதிவே வெளியிட்டேன்), ஜெகநாதன்
எல்லோருக்கும் நன்றீஸ்.

ஜமால், ஹுசைனம்மா மற்றும் செந்தழல் ரவி: :)) மேட்டர் ஒன்னும் புதுசு இல்லீங்க. ரொம்ப நாள் முன்னாடியே எழுதினதுதான். வெளியிட வேணாம்னு அப்டியே வச்சிருந்தேன்:) சனிக்கிழமை ஒரு கடைக்கு போன போது சகலமும் தமிழில் எழுதப்பட்டிருந்தது. நிஜமாவே அங்கிருந்த எல்லோருமே அப்டீன்னா என்ன? கேட்டுத்தான் தெரிந்து கொண்டார்கள். பாதி பேர் எரிச்சலாகி எதுவுமே வாங்காமல் போனதும் நடந்தது. தொழில் வேறு மொழி வேறு இல்லையா. நேர்ல பாத்திருந்தீங்கன்னா இதே வயத்தெரிச்சல் உங்களுக்கும் வந்திருக்கும். ஏறத்தாழ கடைக்கு வந்த நுகர்வோர் பாதிக்கும் மேல் எதுவும் வாங்கமலேயே திரும்பி போய் விட்டனர். அதான்:(

ரிஷபன்: வேள்விதான்.. நன்றிங்க ஹோமத்திற்கு உண்மையான பொருள் தியாகம்தான், இங்கே satire க்காக மட்டுமே நகையாடல்.

R.Gopi said...

பலே... பேஷா சொன்னேள் போங்கோ மாமி....

தமிழ்லேயும் வைங்கோன்னு சொன்னா தப்பில்லையே... தமிழ்ல மட்டும் வைங்கோன்னு சொன்னா தான் தப்பு...

”ஹோமம்”ங்கறதுக்கு தமிழ்ல ”வேள்வி” அப்படின்னு சொல்லலாமே மாமி....

அயல் மொழி படிப்போம், தாய் மொழியை மறவாதிருப்போம்...

Vidhoosh said...

செந்தழல் ரவி: ஒரு அரசாங்க உத்தரவுக்கான relevance பற்றிய விமர்சனப் பதிவுதான் இது.

தொழிலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

தொழில் முன்னேற்றத்திற்கான பல்லாயிரம் red tagged files திட்டங்கள் கிடப்பில் இருக்கிறது தெரியுமா? இந்த உத்திரவு மட்டும் மூன்றே மாதத்தில் அங்கீகாரமானது எப்படி?

Jaleela Kamal said...

மாமி சூப்பரான சைன் போர்டு பதிவு மாமி.

தமிழில் வைக்கலாம் தப்பே இல்ல மாமி

Radhakrishnan said...

தமிழில் எழுதி வைப்பது மிகவும் நல்லதொரு யோசனைதான். எல்லாம் பழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்தால் பெரிய பிரச்சினை ஒன்றும் இருக்காது.

முதன் முதல் அப்படித்தான் எரிச்சலாக இருக்கும், பின்னர் பழகிப் போகும். தமிழ் வளர்ப்போம். தமிழ் மொழி காப்போம்.

சில மாற்றங்கள் கொண்டு வர ஏமாற்றங்களையும், அவமானங்களையும் சந்திப்பதில் தவறில்லை.

நமக்கு தமிழில் எழுதி வைப்பதே பிடிக்கவில்லையெனில் எப்படி தமிழ் வளரும்? அது எப்படியும் வளரும்!

வெளிநாடுகளில் கூட தமிழில் எழுதப்பட்டிருக்கும் கடைகள் உண்டு. நாங்கள் தமிழ் வளர்த்துக் கொள்கிறோம் என தமிழ் சங்கங்களும் உண்டு, தமிழ் பள்ளிகளும் உண்டு.

நசரேயன் said...

தமிழ் பெயரை கேட்டு கேட்டு பழகிடும்

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment