கூத்தாய் போன கூத்து

சொந்த அனுபவம்தான், வேறென்ன. சும்மா சிரிக்கத்தான்.


நம்ம துளசி (கோபால்) மேடம் போடும் படமெல்லாம் பாத்துப் பாத்து எனக்கும் கொசுவத்தி புகை மூட்டமாகி, கண்ணெல்லாம் இருட்டி, தொண்டை எரிந்து, இருமி, தும்மி, கண்ணீர் வழிந்து ......... நாங்கல்லாம் "சின்னப்ள---யா"  "கூத்து கட்டிய" காலங்கள் நினைவுக்கு வந்தது(நானும் ரவ்டீதான்).


துளசி மேடம்! நீங்க கோபால் சாரை கன்னடத்து பைங்கிளி மாதிரித்தானே கூப்பிடுவீங்க!! எங்க! நானும் கேட்கட்டும்..
=========================================
எங்க நண்பர்கள் குழுவில் மொத்தம் பிரபா(கர்), (பால)மணி(கண்டன்), கன்னி(கா-பரமேஸ்வரி), கவி(தா), சம்ஸு(தீன்), (இவர்கள் எல்லாம் பாடகர்கள்) அலோ(சியஸ்) - கிடார் வாசிப்பான், பரத்(தன்) - ட்ரம்மர், மற்றும் நான் (வயலின்) என்று மொத்தம் எட்டு பேர்.


வழக்கமா ஸ்கூல் பங்க்ஷன்ல மட்டும் "வோகல் குரூப் - "பறவைகள்" ஆக பாடிட்டு 'சிவனே'ன்னு இருந்துவிட்டு போன எங்களுக்கு திடீர்னு நாடகம் போடணும்னு ஆசை வந்தது. நாடகம்னா மேடை வேணும், அலங்காரம் பண்ணத் தேவையான பூஷண ஆபரண ஆடை இத்யாதிகள் எல்லாம் வேணுமேன்னு யோசித்து கொண்டே இருக்கும் போது, எங்கள் நண்பர்கள் குழுவிலேயே "சிகப்பழகன்" ஹீரோ சம்சுதீன் "முதல்ல நாடகம் எழுத வேண்டாமா??? எதுக்கு இந்த வெட்டி வேலை. பரீட்சைக்கு படிக்கலாம் வாங்க"ன்னு குண்டை தூக்கிப் போட்டான்.


அப்புறம் யாருக்கும் என் பேச்சு எடுபடலை. கால்பரீட்சைக்கு ரொம்ப நாள் கழித்து, டிசம்பர் கடைசியில் நடக்கும் கல்சுரல் விழா மற்றும் "கலை" போட்டி அறிவிப்பு வந்தது.

திடீர்னு சம்சுவே 'ஹே.. விதூ நல்ல ஐடியா கொடுத்தாடா. நாமெல்லாம் ராமாயணம் ட்ராமா போடலாம்" அப்டீனான்.


"நான்தான் தசரதன்" என்றான் அலோ..

"ஐ ஆசையைப் பாரு.. அது நான்தான்" என்றான் பரத்.

"சிம்மாசனம்லாம் வேண்டாமா.. ரொம்ப செலவாகுமே" இது கன்னி.

எருமைமாடு(கள்) மேல மழை பெஞ்சா மாதிரியே உட்காந்திருந்தோம் நானும் கவியும்.

"விச்வாமித்திரரோட கமண்டலம், மகுடம், ஜடை முடி எல்லாம்... கன்னி இன்னும் அடுக்கிக் கொண்டே இருந்தாள்.

"வழக்கம் போல மைக் மோகன் பாட்டு எதாச்சும் பாடிட்டு போயிர்லாம்டா." என்றான் பிரபாவும் மணியும்.

ராமாயணத்துக்கு ரொம்ப செலவாகும் போல இருந்ததால் கைவிடப்பட்டது. ஆனாலும் கூத்துகட்டும் ஆசை மட்டும் விடவே இல்லை. தினமும் லைப்ரரியிலேயே "பட்ஜெட் நாடகம்" எதுவென்று தேடுதல் வேட்டை நடந்து கொண்டே இருந்தது. எங்க பட்ஜெட்டுக்கு  தகுந்த மாதிரி ஒத்த பைசா செலவே இல்லாம நடத்தும்படியான நாடகம் மட்டும் கிடைக்கவே இல்லை. பாரதிதாசன் யுனிவெர்சிட்டி நூலகத்தில் தேடச் சொன்னார் தமிழாசிரியை "பன்னீர்" செல்வி (பெயர் காரணம் அறிய இங்கே பார்க்கவும்) தன்னுடைய அடையாள அட்டையையும் கொடுத்து உதவினார்.நூலகரிடம் "சார்.. கொஞ்சம் புஸ்தகம் வேணும். ஹெல்ப் பண்றீங்களா" என்று கேட்டேன் நான்.

அவர் பார்த்த பார்வையில் எள்ளல் தெரித்தது. "புக் பேரு தெரியுமா... இனிமேதான் வைக்கப் போறீங்களா" என்றார்.

"ஷேக்ஸ்பியர்" என்றேன்...

"அவர் புத்தகம் எழுதறவருமா.. ஷேக்ஸ்பியர் ஆட்டோபயகிராபி ஏதும் இல்லையே" என்றார் சிரித்தபடி...

அவமானம் தாங்காமல் என் கருப்பான முகம் சற்றே சிவந்தது (இதைத்தான் ஆங்கிலத்தில் ப்லஷிங் என்பார்களோ!) "சார். நாங்க "ச்சூள்ள" ஒரு டிராமா போடலாம்னு இருக்கோம். கம்மி பட்ஜெட்ல, அதாவது பட்ஜெட்டே இல்லாம ஒரு ட்ராமா ஐடியா கொடுங்க சார் ப்ளீஸ்" என்றேன்.


அவரும் இன்று போய் நாளை வான்னு அனுப்பிட்டார். வேலை முடிந்தது என்பது போன்றான நம்பிக்கை எங்களுக்குள் வந்தது.
இரண்டு வாரம் ஓடிப்போச்சு. அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் நாங்களே படையெடுத்தோம். லீவில் அவர் புறமுதுகிட்டு ஊரை விட்டே ஓடிப் போனாதாக சொல்லப் பட்டது. வீராவேசமாக பேரு வேற கொடுத்தாச்சேன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலை.

கடைசியில் உலகமே கைவிட்டுவிட, 'சுப்பாண்டியின் சாகசங்கள்' வருமே, அதையே தொகுத்து ஒரு பத்து நிமிஷ டிராமாவா மாத்தினோம். மொத்தம் மூன்று பேர்தான் நடிக்க. 

மணி சுப்பாண்டியாகவும், கன்னி வீட்டுத் தலைவியாகவும், நம்ம ஹீரோ சம்சு தாத்தாவாகவும் நடிப்பதென முடிவானது. பின்னணி இசை நானும் (வயலின்) ட்ரம்மர் பரத்து கிட்டாரிஸ்ட் அலோ....  எல்லோரும் அவங்கவங்க வேலையை மனப்பாடம் செய்து கொண்டு தயாரானோம். 


அந்த நாளும் வந்தது. சுப்பாண்டி பப்ளிக் பார்க்கில் செய்யும் அட்டகாசங்கள் பற்றிய டிராமா.. திரை விலக, புடவையில் கன்னிகா செட்டில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இருப்பது போல முதல் சீன். 

மைக்கில் டீச்சர் அறிவிச்சாங்க... வழக்கமா பாட்டு பாடி கலக்கும் "பறவைகள்" டீம் இன்று ட்ராமா ஒன்றை தானே எழுதி அரங்கேற்றப் போறாங்க. என்றதும், பயங்கர கைத்தட்டல். "இப்போது "அசோகவனத்தில் சீதை" என்ற நாடகத்தை பார்க்கப் போறீங்க என்றார் பாருங்கள்....


வேற வழி பத்து நிமிஷ டிராமா முழுதும் கன்னி மட்டும் உட்கார்ந்து தனியாவே சீதை வசனமெல்லாம் எதுவும் நினைவுக்கு வராமல் அழுது கொண்டே "ஜானகி தேவி ராமனைத் தேடி ... " என்று விசு படத்தில் வரும் பாட்டை "கமலா காமேஷ்" குரலிலேயே பாட, அது கூட "ராமன் வந்தான் மயங்கி விட்டாள்" என்ற வரிக்கு பிறகு மறந்து போய் திரும்பத் திரும்ப அதே வரியையே பாடிக் கொண்டிருந்தாள். மீதிப் பாட்டு ராகம் கூட தெரியாமல் நான் பின்னணியில் "விவித்பாரதி"யில் தலைவர்கள் செத்தால் அஞ்சலி செலுத்தும் போது வாசிக்கும் சோக இசையை தனியாவர்த்தனமாக வயலினில் வாசிக்க, கல்சுரல்லில் தோத்துட்டோம் என்று மேடைக்கு நடுவில் வந்து நின்று கொண்டு மணி அறிவிக்க, பயங்கர கடுப்பில் சம்சு முதுகில் "வாசிக்க" ட்ரம்மர் பரத் காத்துக் கொண்டே இருந்தான்...

...

13 comments:

எறும்பு said...

//எங்களுக்கு திடீர்னு நாடகம் போடணும்னு ஆசை வந்தது//

விதி வலியது
:)

சின்ன அம்மிணி said...

//கல்சுரல்லில் தோத்துட்டோம்//

பாத்தவங்க நிலைமை என்னன்னு சொல்லுங்க :)

பலா பட்டறை said...

தமிழாசிரியை கார்டு கொடுத்து ஷேக்ஸ்பியர் புக் கா..? சரிதான்.:))

-----------

அடடா எறும்பு பொடி போட மறந்துட்டனே..:)

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. செம கூத்தால்ல இருக்கு.

Sangkavi said...

//எங்களுக்கு திடீர்னு நாடகம் போடணும்னு ஆசை வந்தது//

பாக்கறது யார்னு யோசிக்கவே இல்லையா?

நேசமித்ரன் said...

:)

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் நகைச்சுவையாக இருந்தது. :)

பரவாயில்லையே அசோகவனத்தில் சீதை!

முகிலன் said...

குடுத்த தலைப்பை மாத்த வேணாமா? இப்பிடியா பண்றது??

Sundar said...

:)

மணிப்பயல் said...

ஒருவேளை நீங்க வாசிச்ச அந்த வயலினோட அதிர்வுல கன்னிகா எல்லாத்தையும் மறந்திட்டாங்க போலிருக்கு பாவம்.

Vidhoosh said...

thank you all. sorry transliteration not working here.
thanks erumbu rajagopal. mmm

chinna amini thanks. thakkali kallu ellam eriyala.. :))

palapattarai suresh: thanks. mm..

navaas. thanks :)

sangkavi: pakka aal irunthaanga. aana...

nandri nesan

nandri v.radhakrishnan

nandri mukilan. athann.. :(

nandri sundar

nandri mani.. :))

நசரேயன் said...

அடுத்த முறை நாடகமுனா சொல்லுங்க, அந்த ஏரியா பக்கமே வரமட்டேன்

நட்புடன் ஜமால் said...

நல்ல கூத்து ...

Post a Comment