வனங்கள் - 2

வனங்கள் 1

2.
ப்படிம்மா இருக்க? என்ற அவனது கேள்விக்கு பதிலாக அவள் புன்னகை அவளுக்கே புதிராக இருந்தது. இருவருமே பேசாமல் அமர்ந்திருந்தார்கள். மர நாற்காலியின் கால் கிரீச்சிட்டது. அவள் எழுந்து ஜன்னல் அருகில் போய் நின்று கொண்டாள்.

"ழில சிரமம் ஏதும் இல்லையே" என்றாள். அவனும் அதே போல புன்னகை பதிலளித்தான்.

ன்னல் ஓரத்தில் உதிர்ந்து கிடந்த பூக்களைப் விரல்களால் தள்ளியவாறே "டீ?" என்று கேட்டாள்.

டீச்சரம்மா. பூ வச்சிருக்கேன்." என்ற அகல்விழியின் குரல் கேட்டுச் சென்று பூவை எடுத்து காளிங்கநர்த்தனம் ஆடிக் கொண்டிருந்த கண்ணனின் வெண்கலச் சிலைக்குச் சாத்தினாள்.

"பூ சாத்தும் போது இப்பல்லாம் கண்ணனுக்கு பாடுவதில்லையா" என்றான் அவன். ரங்கநாயகியின் கண்கள் நிறைந்ததை மறைத்துக் கொள்ளத் தவித்தாள்.

"ம்மா. சின்னஞ் சிறு கிளியேன்னு பாடுவாயே. அதைப் பாடேன்" என்றான் அவன்.

ம்மா.... நான் ஒரு கொலைகாரன்னு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவேல்ல. தூக்கில்லைன்னாலும் ஆயுள் தண்டனையாவது கொடுப்பாங்களே.  ஆனா இந்தக் கொலையை நான் செய்யவில்லைம்மா. முத்துராமன் உடம்புல என் கை ரேகை இருந்ததுன்னு என் மேலே தீர்ப்பு சொல்லிட்டாங்க.  எப்படி நம்ப வைப்பேன்னு தெரிலையே? யார் கிட்ட சொல்வேன். நான் சொல்றதைக் கேட்டீன்னா நம்புவாய்.ஏழுநாள் லீவுல வந்திருந்தேனே அப்போ, அதுக்கும் சரியாய் ஒரு வாரத்துக்கு முன்னே முத்துவைக் கொலை செய்ய திட்டம் போட்டாச்சு. ஆனா நான் அங்க இல்ல. அப்புறம் எப்படி தெரியும்னு கேப்ப இல்ல.. ஆனா கடவுள் சத்தியமா நான் அவனைக் கொல்லவில்லை. எனக்கு நல்ல வேலை கிடைத்ததைப் பற்றி நீ எவ்ளோ சந்தோஷப் பட்ட. எல்லாம் போச்சு.. என் வாழ்க்கையே வீணாப்போச்சு. நான் கோபக்காரன்தான். உன்னை எவ்வளவோ காயப் படுத்தி இருக்கேன். ஆனால் கொலை செய்யும் அளவுக்கு உணர்ச்சி வசப்படறவன் இல்லைம்மா. முதல் நாள் வீட்டு கிடந்த நிலையைப் பார்த்து எல்லாத்தையும் ரிப்பேர் செஞ்சேனே. அதுக்கப்பறம் மூணு நாளும் வீட்டுக்கு வேண்டியதை வாங்கி போடவே சரியாக இருந்தததே. இனிமே தனியா இருக்க வேண்டாம்னு சொன்னேனே.


கல்விழி ஜன்னல் வழியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


-- தொடரும்
(மீண்டும் வியாழன் அன்று)


.

10 comments:

நட்புடன் ஜமால் said...

முதல் பகுதி படிக்கவில்லை

இந்த பகுதியின் தூண்டலில் படிக்கனும்

அடுத்த பதிவுக்கு நெம்ப எதிர்ப்பார்த்திங்ஸ்

S.A. நவாஸுதீன் said...

இன்னும் கொஞ்சம் பெருசா போட்டிருக்கலாமே. சரி வியாழன் வரை வெயிட் பன்றோம்.

கல்யாணி சுரேஷ் said...

முழு கதையையும் படிச்சுடறனே? please.

நேசமித்ரன் said...

இந்த ட்விட்டர் டைப் உரையாடல் ஈர்க்கிறது சுவாரஸ்யம் குறையாமல் சொல்லிக் கொண்டிருகிறீர்கள்

விதூஷ் டச் ...!

:) க்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பக்கோடா மடிச்சு வர பேப்பர் மாதிரியே சின்னச் சின்ன பகுதிகளாக கதைகள்.. ம் .. :) வெயிட் பண்ணறோம்.

குடந்தை அன்புமணி said...

யெஸ்... அதைத்தான் சொல்ல நினைத்தேன். முத்துலட்சுமி அக்கா சொல்லிட்டாக... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்... (முதல் பகுதியையும் படிச்சிட்டோம்ல...)

பலா பட்டறை said...

வியாழன் வரை வெயிட்டிங்..:))

பா.ராஜாராம் said...

இரண்டு பகுதியும் படித்தேன்.ரொம்ப நல்லா போய் கொண்டிருக்கு.

time balance சொல்லிக் கொடுங்க பாஸ்.

நசரேயன் said...

//-- தொடரும்
(மீண்டும் வியாழன் அன்று)//

எந்த வியாழன் கிழமையா கிரகமா ?

அமிர்தவர்ஷினி அம்மா said...

வியாழக்கிழமைக்கு வெயிட்டிங்க் :)

Post a Comment