வனங்கள் - 3

வனங்கள் 1
வனங்கள் 2

ங்கநாயகி அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். "நீ ஏண்டா அவனை அடிச்ச. ஏண்டா.. அவனப் பத்தி உனக்குத் தெரியாதா? அவனோட சேராதேன்னு சொன்னேனேடா?" என்று சீறினாள்.

"ன்னை லக்னோவின் மிகச் சிறந்த நாட்டியக்காரி என்றான் அம்மா.." அவன் கண்களில் தெறித்த அவமான உணர்வு கண்ணீராகி வழிந்தது.

"ன் முதுகில் குத்த இன்னும் எத்தனை கத்திகளை வைத்திருக்கிறாய் கண்ணா?" என்று வெண்கலசிலையை உலுக்கினாள் ரங்கநாயகி.
===========================

" ரி க ம ...." என்று பாடிக் கொண்டிருந்தாள் வசுமதி.  "ம்ம் சொல்லு" என்றதும் மழலையாக "ஷா ரீ" என்றாள் ரங்கம். வேங்கடன் எதையோ எழுதி கொண்டிருந்தார். அவரிடம்  "வடநாட்டுக்காரனோட சேந்துண்டு இப்படி அல்லாடாதீங்கோ.. ஜெயில்ல போட்டான்னா வசுவையும் ரங்கத்தையும் யாரு காப்பாத்துவா. ராமுவும் சுதந்திரம் சுதந்திரம்னு அலையறான். உங்களுக்கும் வயசாயிண்டே போறது" என்றாள்.

"ந்திரா. புரட்சிக்காரன் கூட்டாளின்னு நம்ம ராமுவை கொன்னுட்டா. நாமெல்லாம்  போகணும்."

"நீங்க மட்டும் போய்ட்டு வாங்கோ. நானே இவா ரெண்டு பேரையும் காப்பாத்திக்கறேன். புள்ளைய தொலைச்சுட்டேன். ஊர் பேர் தெரியாத இடத்துல நமக்கொன்னு ஆச்சுன்னா வசுவையும் ரங்கத்தையும் யார் பாத்துப்பா?" அழ ஆரம்பித்தாள் சந்திரா.

"ங்க விட்டுட்டுப் போனா மட்டும் ? என்னோட கப்பல்ல வேலை செஞ்சவன்  மீரட்ல இருக்கான். அவனுக்குத்தான் தந்தி அனுப்பறேன். இவாள அவன்கிட்ட ஒப்படைச்சுட்டு நாம மட்டும் போயிட்டு வந்துரலாம். அவ கிட்ட எதுவும் சொல்லாதே இப்போ" என்றார் கோதண்டம்.

==========================================

க்னோவின் இருள் சூழ்ந்த சந்துகளில் "ஹஜாரோன் க்வாயிஷோன்  ஐஸே ஹை கி ஹர் க்வாயிஷ் பர் தாம் லிக்கே" (ஆயிரம் ஆசைகள், ஒவ்வொன்றுக்கும் விலை குறிக்கப் பட்டுள்ளன)  என்று பாடும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

"தராஸ் பட்டினத்துலே இருந்து வந்தவளாம்.. என்ன குரல். கஜல் பாடும் முன் தேன் குடிப்பாளோ."

"ல்லையில்லை உன் கடையின் பாதுஷாவை சாப்பிட்டுருப்பாள்" என்று சிரித்தான் இன்னொருவன்.



......


20-ஜனவரி-2010====== தொடரும் போட மறந்துட்டேன். அடுத்த பாகங்கள் முழுதும் ஒன்றாகவே கடைசி பாகமாய் வரும். மீண்டும் படிக்கும் போது எனக்கே பிடிக்காத மாதிரி இருக்கு. அதனால், வனங்கள் கொஞ்ச நாட்களுக்கு. withdraw செய்கிறேன் - சரியாக எழுதி மீண்டும் ஒரே பதிவாக, முழுக் கதையாக, முழுதாகப் பதிகிறேன். நண்பர்கள் மன்னிக்க.





.....

2 comments:

நட்புடன் ஜமால் said...

இரண்டு முறை படித்தாயிற்று - ஏனோ ஒட்டலை இன்று

கடைசி பத்தியை தவிர ...

லேட்டா வந்து மறுக்கா படிச்சி பார்க்கோனும்.

Vidhoosh said...

தொடரும் போட மறந்துட்டேன். அடுத்த பாகங்கள் முழுதும் ஒன்றாகவே கடைசி பாகமாய் வரும். மீண்டும் படிக்கும் போது எனக்கே பிடிக்காத மாதிரி இருக்கு. அதனால், வனங்கள் withdraw செய்கிறேன் - கொஞ்ச நாட்களுக்கு. சரியாக எழுதி மீண்டும் முழுதாகப் பதிகிறேன். நண்பர்கள் மன்னிக்க.

Post a Comment