மணற்துகளின் முனை உடைந்திருக்கிறது

இவ்வளவு அருகில் வந்தும்
மிகத் தொலைவில் நீ
இடையில் இருள் சூழ்ந்திருக்கிறது

மணலை சலிக்கிறாய்
அலையைப் பார்க்கிறாய்

ஏதும் சொல்லாமலேயே எழுந்து செல்கிறாய்

நானை மட்டுமே
சகிக்க முடியாது பின் நானும்.

நானே நானுக்கு சொல்லும்
வார்த்தைகளும் பூட்டியிருக்க
சிதறிக் கிடக்கும் மணற்துகளின்
முனை உடைந்திருக்கிறது


.

19 comments:

Karthikeyan G said...

கவிதையின் தலைப்பு அருமையா இருக்கு.. கவிதையும் நல்லா இருக்கு.

thnks..

அண்ணாமலையான் said...

சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்...

உயிரோடை said...

//சிதறிக் கிடக்கும் மணற்துகளின்
முனை உடைந்திருக்கிறது
//
வாவ் மிக அருமையான சொல்லாடல் தோழி வாழ்த்துகள்

நந்தாகுமாரன் said...

சூப்பர் - கவிதையின் தலைப்பு மட்டும்

Paleo God said...

ஏதோ சும்மனாங்காட்டி என் கவிதல்லாம் படிச்சிட்டு நல்லாருக்குனு பொய் சொன்னது இத படிச்சதும் புரிஞ்சிது..::(

இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்குங்க ::))

Ashok D said...

தலைப்பு புருவமுயற்துகிறது
ஆனாலும் ஏதோ நெருடல்

நேசமித்ரன் said...

தலைப்பு - கவிதை


:)

ப்ரியமுடன் வசந்த் said...

நானை மட்டுமே
சகிக்க முடியாது பின் நானும். //

இந்த வரிகள் நல்லா எழுதியிருக்கீங்க தலைப்பு அட்டகாசம்...

பா.ராஜாராம் said...

வாவ்..

இப்படியெல்லாம் தலைப்பு தொடங்கி கொல்லக் கூடாது பாஸ்.ஒரே ஒரு infrior இல்லாமல் இருந்தேன்.அதுவும் பொறுக்கலையா.. i love this vidhyaa!

நட்புடன் ஜமால் said...

மேலே சொன்ன அனைத்து கருத்துகளையும் நான் வழிமொழிகிறேன்

(எல்லோரும் முன்பே சொல்லிட்டாங்களே)

நட்புடன் ஜமால் said...

தலைப்பு மட்டுமே கவிதை தான்.

R.Gopi said...

//இவ்வளவு அருகில் வந்தும்
மிகத் தொலைவில் நீ//

வித்யா.... ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது...

//நானை மட்டுமே
சகிக்க முடியாது பின் நானும். //

நான் உனை நீங்க மாட்டேன்.... நீங்கினால் தூங்க மாட்டேன்... இந்த வரிகளை நினைவு படுத்தியது உங்களின் மேலே குறிப்பிட்டுள்ள வரிகள்...

//நானே நானுக்கு சொல்லும்
வார்த்தைகளும் பூட்டியிருக்க
சிதறிக் கிடக்கும் மணற்துகளின்
முனை உடைந்திருக்கிறது//

முடிவு அதை விட அற்புதம்...

வாழ்த்துக்கள் வித்யா..... உங்களிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது என்பதை மீண்டுமொரு முறை எனக்கு நினைவு படுத்தியது...

Romeoboy said...

சத்தியமா ஒன்னும் புரியல :(

S.A. நவாஸுதீன் said...

தலைப்புக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். (வாவ், க்ளாஸ்)

கவிதையும் அருமை.

மணிப்பயல் said...
This comment has been removed by the author.
மணிப்பயல் said...

கவிதை சூப்பருங்க.

( ஆனா புரியலங்க...)

sathishsangkavi.blogspot.com said...

கவிதையும் நல்லா இருக்கு...

Radhakrishnan said...

மணற்துகளின் முனை உடைந்திருக்கிறது என்பதை எதனுடன் உருவகப்படுத்திக் கொள்வது என்பதில் சற்று தடுமாறிப் போகிறேன்.

நசரேயன் said...

//மணலை சலிக்கிறாய்
அலையைப் பார்க்கிறாய்

ஏதும் சொல்லாமலேயே எழுந்து செல்கிறாய்//

மண்ணை அள்ளிப் போட்டுகிட்டே இருந்தா எப்படி பேச முடியும்

//
நானே நானுக்கு சொல்லும்
வார்த்தைகளும் பூட்டியிருக்க
சிதறிக் கிடக்கும் மணற்துகளின்
முனை உடைந்திருக்கிறது//

ரெம்ப கடலை வருத்தா அப்படித்தான் உடையும்

Post a Comment