குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்

குழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு.  என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இதில்: 
1. படமும் பாடலும் - Tamil Nursery Rhyme
2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக்  குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)
3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)
4. குழந்தைகளுக்கான புதிர்கள்
5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)
6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்
7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்

உங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நன்றி.

= =வித்யா

24 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ஐடியா விதூஷ்..

என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல ஐடியா, நானும் என்னாலானதை செய்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

என்னாலான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராய் இருக்கிறேன் விதூஷ்

முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!

Paleo God said...

மிக நல்ல யோசனை. வாழ்த்துக்கள் வித்யாஜி..:)

Radhakrishnan said...

நல்லதொரு யோசனை, தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் நிச்சயம் செய்கிறேன்.

அமுதா said...

அருமை வித்யா. எனக்கும் ஆர்வம் உண்டு. இணைத்துக் கொள்ளுங்கள்

புலவன் புலிகேசி said...

நல்ல முயற்சி..என்னுடைய ஆதரவும் உண்டு..

நட்புடன் ஜமால் said...

இணைகிறேன் நன்றிகளோடு.

Sundar சுந்தர் said...

அருமையான முயற்சி!

Unknown said...

இன்றுதான் நாற்றாங்காலில் இணைந்தேன். சமயம் கிடைக்கும் போது எல்லாம் படிக்கின்றேன். நன்றி.

Vidhoosh said...

ரொம்ப நன்றிங்க எல்லோருக்கும்.

முத்துலெட்சுமி, அமித்தம்மா, வெ.ராதாக்ருஷ்ணன், அமுதா, புலவன் புலிகேசி, ஜமால்: இணைந்ததற்கு எல்லோருக்கும் நன்றி. தனியாக நிச்சயம் திண்டாடுவேன். நீங்கள் எல்லோரும் உங்கள் பங்களிப்புக்களை (குழந்தைகளுக்கான கதை, ரைம்ஸ், புதிர்கள், எதா இருந்தாலும் அனுப்புங்க. உங்கள் நிஜப் பெயர் மற்றும் வலைப்பூ முகவரி கொடுங்க.)

நேசன்: நீங்கள் குழந்தைகளுக்கான எளிமையான அறிவியல் செயல்முறைகளை தாருங்களேன்.

நன்றி பலா ஷங்கர், ராமலக்ஷ்மி, சுந்தர், சுதாகர். :)

--வித்யா

Rajeswari said...

நல்ல விசயம் இது..

விக்னேஷ்வரி said...

நல்ல வரவேற்புக்குரிய முயற்சி. என்னாலானதை செய்கிறேன் வித்யா.

எறும்பு said...

Good idea.. i will mail you about my ideas..

My wishes...

Vidhoosh said...

நன்றி ராஜேஸ்வரி

நன்றி விக்கி: குழந்தைகளுக்கான எளிய குறிப்புக்கள் எது இருந்தாலும் அனுப்புங்க:) ரொம்ப நன்றி

ராஜகோபால்: ரொம்ப நன்றி. உங்கள் மெயில்லை எதிர்பார்கிறேன்.

காமராஜ் said...

அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் வித்யா.

நசரேயன் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் .. யோசனை சொல்லுற அளவுக்கு நான் இன்னும் வளரலை

உயிரோடை said...

ந‌ல்ல‌ முய‌ற்சி வித்யா. வாழ்த்துக‌ள்

Kanchana Radhakrishnan said...

அருமை வித்யா. எனக்கும் ஆர்வம் உண்டு. இணைத்துக் கொள்ளுங்கள்

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி said...

நல்ல யோசனை. சிறப்புற வாழ்த்துகள்.

Muthu Kumar N said...

நல்ல முயற்சி,

வாழ்த்துகள் உங்கள் கடினமான வேலைக்கு என்னால் முடிந்தத உதவிகளை கண்டிப்பாய் செய்கிறேன்.

இதோ முதல் உதவியாக குழந்தைகளுக்கான ஓப்பன் ஆபி்ஸ்
http://download.ooo4kids.org/en

மற்றும் அடுத்ததாக Browser for Kids
http://www.kidzui.com/

மற்றும் பல வரும் நாட்களில் முடியும்போதெல்லாம்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Muthu Kumar N said...

இதோ மற்றும் பில லிங்க்குகள் திரு.பிகேபி அவர்களின் தளத்திலிருந்து


http://pkp.blogspot.com/2008/01/blog-post_17.html

http://pkp.blogspot.com/2008_05_01_archive.html

http://pkp.blogspot.com/2007_10_01_archive.html

http://pkp.blogspot.com/2008/01/blog-post_14.html


http://pkp.blogspot.com/2008/05/gps.html

http://pkp.blogspot.com/2007/10/blog-post_31.html

http://pkp.blogspot.com/2007/12/blog-post_10.html

ஒவ்வொரு பதிவின் கீழே பார்த்தால் குழந்தைகளுக்கு தேவையானவற்றை தரவிறக்கிக்கொள்ளலாம். நீங்கள் எதிர்பார்த்தது இதுமாதிரி உதவியா எனச்சரியாகத் தெரியவில்லை.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Post a Comment