ரிக் வேதத்தில் பொங்கல் திருநாள்

போகிப் பண்டிகை - ஜனவரி 13-2010, புதன்கிழமை, மார்கழி 29, விரோதி ஆண்டு
பொங்கல் மற்றும் தை அமாவாசை - ஜனவரி 14, 2010, தை 1, விரோதி ஆண்டு, வியாழக்கிழமை
மாட்டுப் பொங்கல் - ஜனவரி 15, 2010, தை 2, விரோதி ஆண்டு வெள்ளிக் கிழமை
=================================
ரிக் வேதத்தில் சொல்லப் பட்டுள்ள மஹா விரதம்

ஒரு வருடம் முழுதையும் குறிக்கும் கவ மாயன சாத்திரம் (கவ = பூமி, மாயனம் = சூரிய மண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது) என்ற நாளுக்கு முதல் நாளே மஹா விரதம். விஷுவத் (விஷு) என்று சொல்லப்படும் நாள் பனிக்காலம் முடிந்து சூரியனின் முழு வெப்பமும் பூமிக்கு கிடைக்கும் நாளாக கொண்டாடப் படுகிறது. இன்று செய்யப்படும் கொண்டாட்டங்கள் மூலம் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும், பின்பனி விரைவில் விலகி தாவரங்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப் படுகிறது.

தொன்மை நாட்களில், போர் வீரர்கள் இறந்த பசுவிலிருந்து எடுக்கப் பட்ட மாட்டுத் தோல் மீது தம் அம்புகளைத் தீட்டுவார்கள். பின் அந்தத் தோல் கொண்டு முடையும் பறையில் ஒலி எழுப்பி ஒலிக்கேர்ப்ப நடனம் புரிந்தும், பிராமணர்கள், ஆரியர்கள் மற்றும் சூத்திரர்களுக்கு இடையே மல்யுத்தம், வாட்போர், விற்போர், வேதங்கள் உரைத்தல், பேச்சு, கல்வி, கவிதை புனைதல், பாடல், நடனம், மந்திர ஜாலங்கள் செய்தல் போன்ற போட்டிக்களை நடத்தியும் கொண்டாடப் பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தாம் தற்போது புரியும் தொழிலை விட்டு அதை விட ஒரு உயர்ந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று குறிக்கப் பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் க்ஷத்திரிய ஆரிய சூத்திரர்கள் அதாவது பிராமணன் வென்றால் க்ஷதிரியத் தொழிலையும், ஆரியன் வெற்றி பெற்றால் பிராமணத் தொழிலையும், சூத்திரன் வென்றால் ஆரியத் தொழிலையும் செய்ய வேண்டும் என்று பணித்தார்கள். தோற்றவர்களுக்கு depromotion கொடுத்து அந்ததந்ததொழிலை மேற்கொள்ள வேண்டும்.

மஹா விரதம் என்ற இந்தத் திருநாளை கலாச்சார மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்குமான நாளாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்து, திறமைகளை கண்டறியும் நாளாகவும் கொண்டாடப் பட்டு வந்தன. இந்தியா முழுவது, பைசாக்கி, விஷு, ரோஹ்ரி, போகலி பிஹு, போகிப் பொங்கல், என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பெரிய மாற்றம் தரும் நாளாகவே இருக்கின்றது. அதைத்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றும் சொன்னார்களோ என்னவோ?

ஐத்திரேயம், ஆரண்யகம் என்பது ரிக் வேதத்தில் முக்கியமான பகுதிகள் ஆகும். ஆரண்யகத்திற்கு மூன்று புத்தகங்கள்.

முதல் புத்தகத்தில் "கவ மாயன" மஹா விரத நாளைக் கொண்டாடப்பட வேண்டிய வழி முறைகளையும், அன்றைய தினம் விடியற்காலை, மதியம் மற்றும் மாலையில் செய்ய வேண்டிய செயல்களை சாத்திரமாகவும் ரிக் வேதத்தில் பதியப் பட்டுள்ளது.

இரண்டாம் புத்தகத்தில் அன்றைய தினம் நடக்கும் (உக்தம்) கூத்து முறைகள் (பூதங்கள்/மிருகங்கள் வேஷம் கட்டி நன்னெறி நாடகங்கள் நடத்துதல்), புராணக் கதைகள் சொல்லுதல், வில்லுப் பாட்டு, போன்றவைகளை "நிஷ்கேவல்ய சாஸ்திர உபநிஷத்" என்று சொல்லப் பட்டுள்ளது.

மூன்றாம் புத்தகத்தில் பூடகமான ஞானம், ஆன்மிகம், மறைபொருள் சாஸ்திரம், ஆகியவற்றின் நேரடி அர்த்தங்கள் நிர்பூஜம், பிரார்த்தனா, உபயமந்திரேனா என்று சம்ஹிதப்பதம் மற்றும் க்ரமப்பத சம்ஹிதைகளாக கொடுக்கப் பட்டுள்ளன. இதில் உள்ள vowel, semi vowel, consonant இலக்கண முறைகளைக் கண்டறியும் போது விவரிக்கவே முடியாத அற்புத உணர்வு ஏற்படும். நாம் கற்றது கை மண்ணாவது ஒன்றாவது, சுண்டு விரலில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்குமே அந்த அளவு கூட இல்லையென்றும் உணர்வோம்.

ஆரண்யகம் என்ற புத்தகம் காடு, வனங்கள் (ஆரண்யம்) போன்ற தனிமையான இடங்களில் வாழ நேர்ந்தால் தனி மனிதன் தன்னம்பிக்கையோடும், வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்காமலும், தனிமையை வென்றும் வாழும் முறைகளை பற்றியது. சௌனக மகரிஷி கி.மு. 500-இல் எழுதியதாக நம்பப்படும் இப்புத்தகம் நூறு வருடங்கள் கழித்து பாணினியால் மீட்கப் பட்டதாக நம்பப் படுகிறது. (சான்று A.B.Keith, 1909, Aitareya Aranyaka, Oxford, Clarendon Press)

மஹா ன் பவதி அனேன வ்ரதேன
ஓர் மாஹதோ தேவஸ்ய வ்ரதாம்
ஓர் மாஹக் ச தத் வ்ரதாம்
(சயன மகரிஷி உரைத்தது. ஐத்திரேய ஆரண்யகம் அத்தியாயம்-1, பாடல் வரி-1)

இதன் பொருள் "மஹா விரதத்தின் வழி முறைகள் இங்கே துவங்குகின்றன. இந்திரன் போர் வீரர்களுக்கான விரதங்களைக் கடை பிடித்து செல்வாக்குப் பெற்று அதிகாரியானான். அவன் அதிகாரத்தின் கீழ் இந்த மஹா விரதம் கடை பிடிக்கப் படுகின்றது.

ஐந்தாம் அத்தியாத்தில் இருபத்தைந்து வரிகளில் நெருப்பு ஏற்றப் படவேண்டிய முறைகளும், அக்னியைக் கொண்டாடும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. காலையில் (மாலை வரை) அக்னிஸ்தோமன் (சூரியன்) என்றும் மாலையில் சோமன் (நிலவு) என்றும் அக்னிஹோத்திரம் செய்யவேண்டிய முறைகளையும் பேசுகிறது. மஹா விரதம் பற்றி வேதங்களில் ஐத்திரேய ஆரண்யகம் மற்றும் சனகாயன ஆரண்யகம் இரண்டில் மட்டும்தான் குறிக்கப் பட்டுள்ளது. மஹா விரத்தன்று நடக்கும் செயல் முறைகளையும், வெற்றி பெற்றவர் / தோல்வி அடைந்தவரின் தொழில் மாற்றங்கள் குறித்த செயல்பாடுகளையும், அவர்களது அடையாளங்களையும் பரம இரகசியமாக வைக்கப் பட்டதாகவும் குறித்துள்ளனர்.

====================================================================

மகர சங்கராந்தி என்ற நாள் சூரியனின் பாதை northern hemisphere (மகர ராசி) நோக்கி இருப்பதைக் குறிக்கிறது. இதுவே உத்திராயன புண்ணியகாலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இந்நாள் திருவிழாக்களின் துவக்கமாகவும் இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் சக்கரை மிட்டாய்கள், எள்ளுருண்டைகள், தானியங்கள் போன்றவற்றை இந்நாளில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.

குஜராத்தில் வீட்டுக்குத் தேவையான புதியன வாங்கியும், பட்டங்கள் விட்டும் கொண்டாடுகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதிகளில் லொஹ்ரி என்றும் கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில், கரும்பு, எள், வெல்லம், கொப்பரைத் தேங்காய், கடலை போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள்.

அஸ்ஸாமில் அக்னியை வணங்கும் தினமாகவும், பெங்காலில் "பித்தா" மிட்டாய்கள் செய்து, கங்கா ஸாகர் மேளாவைக் கொண்டாடியும் மகிழ்கின்றனர். ஆந்திராவில் போகியன்று கொலு வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தைப் பொங்கலும், ஜல்லிக்கட்டும், என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ரத சப்தமி: சூரியனின் பாதையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப் படும் இன்னொரு பண்டிகை ரத சப்தமி. சூரியன் தோன்றிய நாள் என்றும் நம்பப் படுகிறது. இன்றைய தினம் சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் அமர்ந்து புதிய பயணத்தைத் துவக்குவதாகக் கருதுகின்றனர். சூரியனின் பன்னிரண்டு பெயர்களான மித்ரா, ரவி, சூர்யா, அஹானு, கங், புஷன், ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்யா, சவிதா, அற்கா மற்றும் பாஸ்கரா போன்ற பெயர்களை உச்சரித்தும், எருக்கம் இலையைத் தலையில் வைத்து நீர்நிலைகளில் மூழ்கியும் கொண்டாடுகின்றனர். இதன் தத்துவம் என்னவென்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன்.

விஷு / யுகாதி / சித்திரைத் திருநாள்

சித்ரா விஷு சூரியனை வணங்கும் இன்னொரு பண்டிகை. மேஷ ராசிக்கு சூரியன் வரும் நாள் என்று நம்புகின்றனர். இதை மிகவும் புனிதமாகவும் கருதுகின்றனர். இன்றைய தினத்தில்தான் பூமி உருவானது என்று நம்பப் படுகிறது. அதனால் இத்தினத்தை யுகாதி என்றும் கொண்டாடுகின்றனர். இன்றைய தினத்தில் பகவான் ஸ்ரீ ராமபிரான் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் நம்புகின்றனர். வாழ்க்கையின் இனிமையையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் குறிக்கும் வண்ணம் வெல்லம், மாங்காய், வேப்பம் பூ கொண்டு பச்சடி செய்வது விசேஷம்.

பைசாக்கி

வடக்கில் பைசாக்கி. விளைச்சலுக்கும் புது தானியங்களுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் நாள். இன்றைய தினம்தான் சீக்கிய குருமாரான மரியாதைக்குரிய குரு கோபிந்த் சிங் அவர்கள் பஞ்ச் பியரா என்ற அன்புக்குரியவர்களுக்கான ஜோதியை ஏற்படுத்தினார்.

=================
எந்தப் பெயரில் கொண்டாடினாலும், மனிதன் இயற்கையை மதித்து வணங்கவும், சமூகத்தில் எல்லோருக்கும் வாய்பளித்து சமநிலை விளங்கவும், சோர்வான குளிர் நாட்கள் முடிந்து பசுமையைக் கொடுக்கும் வெயில் காலம் ஆரம்பிக்கும் நாட்களைக் கொண்டாடி மகிழ்வதையே இப்பண்டிகை குறிக்கிறது.

டெக்னாலஜியை வைத்து இன்று நாம் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலையிலேயே இருக்கிறோம். ஆனால் இயற்கையை??
====

நடப்பில் உள்ள பொங்கல் பண்டிகை

====

அமோக விளைச்சலைத் தந்து புதுத் தானியங்கள் கரும்பு என்று , பழையன கழிதலும், புதியன புகுதலும் நடைபெறும். வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீட்டின் முன் தீயிட்டுக் கொளுத்தி, அல்லவை அகன்று நல்லவை பெருக, வரும் ஆண்டு முழுவதும் மழை நன்றாகப் பெய்து உழவுக்கும், மக்களின் வாழ்வுக்கும் வளம் கிடைக்க வேண்டி இந்திரனை வணங்குவர். இதற்குப் பின்னணியில் ஒரு கதையும் உண்டு. போகிப் பண்டிகையன்று கண்ணனும், இடையர் குல மாந்தரும் கோவர்த்தன மலையை வணங்கி வழிபட்டனர். இதனால் இந்திரன் கோபமுற்றான். தன்னை வணங்காமல் கோவர்த்தன கிரியை வணங்குவதா? என்று சினம் கொண்ட இந்திரன், ஏழு மேகங்களை அனுப்பி மின்னல், இடி மற்றும் கன மழையை உருவாக்கினான். இதனால் இடையர்களும், நண்பர்களும் பீதியடைந்தனர். கண்ணன், கோவர்த்தன் மலையை அப்படியேத் தூக்கி குடையாக மாற்றி அதன் கீழ் அனைவரையும் வரச் செய்து, மழை, இடி, மின்னலிலிருந்து நண்பர்களையும், இடையர்களையும் காத்தார் கிருஷ்ணன். இதைக் கண்டு பயந்துபோன இந்திரன், கிருஷ்ணரிடம் வந்து தன்னை மன்னிக்க வேண்டினான். அதனை ஏற்ற கிருஷ்ணர், இந்திரனை மன்னித்ததோடு போகியன்று இந்திரனை மக்கள் வணங்கலாம் என்று ஆசிர்வதித்தார்.

அழகான வண்ணக்கோலங்கள் இட்டு, கலர்பொடிகள் கொண்டு அலங்கரித்து, நடுவில் சாணி உருண்டையில் பூசணிப் பூ சொருகி வாசல்கள் களை கட்டும் நாள்.

இரண்டாம் நாள் பொங்கல். சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தல். புது அரிசி கொண்டு பொங்கப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு நிவேதனம் செய்து எல்லாம் புதிதாகவேத் துவங்கப் படும் தை முதல் நாள்.

இன்றைய தினம் தான் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல் யானைக்கு உயிர் கொடுத்து கரும்பு தின்றதாக கல்வெட்டு பேசுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாடு, காளைகளுக்கு நன்றி சொல்லும் தினம். மஞ்சு விரட்டு ஜல்லிக் கட்டு என்று இளைய சமுதாயம் கொண்டாடும் ஆர்பாட்டமான நாள்.

இதே நாளில் காணும் பொங்கல், கனுப் பொங்கல் என்று வித விதமான வண்ணங்களில் (சர்க்கரைப் பொங்கல் (அரக்கு), வெண்பொங்கல் (வெளிர் மஞ்சள்), மோர் சாதம் (வெள்ளை), எலுமிச்சை சாதம் (மஞ்சள்), கருவேப்பிலை சாதம் (பச்சை), எள்ளு சாதம் (கருப்பு), சாத உருண்டைகள் பிடித்து மஞ்சள்செடி இலையில் காகங்களுக்கு படைக்கும் தினம். "காக்காப் பிடி, கண்ணு பிடி, காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்" என்று சொல்லி பெண்கள் தன் சகோதரனுக்காக வேண்டிக் கொண்டு, ஏழு குட்டி குட்டி உருண்டைகளைப் பிடித்து மாடியில் காலை ஆறு மணிக்குள் வைத்து வரவேண்டும். பின் கனுபீடை நீங்க உடனே எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

=====

இப்போதெல்லாம் இது கூட குறைந்து ஒரு லீவு நாளாகவும், "உலக தொலைக்காட்சியில்" காட்டப் படும் மொக்கை பட்டிமன்றகளும், முதன் முறையாக டீ.வீ. யிலேயே ரிலீஸ் ஆகும் சினிமாக்களைப் பார்க்கவும் சரியாக போய்விடுகிறது இல்லையா?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.






.

20 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு இவை அனைத்தும் புதிய தகவல்கள்...

இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்....

பா.ராஜாராம் said...

பொங்கள் வாழ்த்துக்கள் வித்யா!

வுடு ஜூட் ராஜாராமா..

:-)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான தகவல்கள்

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Paleo God said...

அருமையான தகவல்கள்..

மிக்க நன்றி.
பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும், நண்பர்களுக்கும்.::))

பின்னோக்கி said...

இவ்வளவு விஷயம் இருக்காங்க ?. நன்றி.

வால்பையன் said...

ரிக் வேதத்தில் சொல்லப்பட்டதால் தான் தமிழன தலைவர் தை ஒன்னாம் தேதியை வருடப்பிறப்பாக அறிவித்து விட்டாரா!?

என்ன கொடும சார் இது!?

வால்பையன் said...

//பொங்கள்//

இது எந்த மரத்திலிருந்து இறக்கப்பட்ட ”கள்”

வால்பையன் said...

உங்களுக்கு எல்லா வாழ்த்துக்களும்
(எதை சொல்றதுன்னு தெரியல)

கமலேஷ் said...

பொருத்தமான பதிவு..பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

நேசமித்ரன் said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

நசரேயன் said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

நிறைய தகவல்களைத்தெரிஞ்சுக்கிட்டேன் விதூஷ் நன்றிம்மா பொங்கல் வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏ அப்பா விவரங்களை விஜயகாந்த் மாதிரில்ல அடுக்கறீங்க .:)

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்ப்பா..

S.A. நவாஸுதீன் said...

பொங்கள் வாழ்த்துக்கள் வித்யா!

R.Gopi said...

//நாம் கற்றது கை மண்ணாவது ஒன்றாவது, சுண்டு விரலில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்குமே அந்த அளவு கூட இல்லையென்றும் உணர்வோம்.//

*-*-*--*--*-*-

மிக மிக சரியே வித்யா....

ஏன்....உங்களோட இந்த பதிவையே படிச்சு பிரமிச்சு போயிட்டேன்... எப்படி இவ்வளவு அழகா, விரிவா எழுதறீங்கன்னு....

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.... வாழ்த்துக்கள் வித்யா...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

என் பொங்கல் வாழ்த்து சிறப்பு பதிவு இதோ :

பொங்கலோ பொங்கல் http://jokkiri.blogspot.com/2010/01/blog-post.html

Radhakrishnan said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் வித்யா.

இன்றைய கவிதை said...

கருத்து அருமை...!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

-கேயார்

Vidhoosh said...

எல்லோருக்கும் ரொம்ப நன்றி.

லாங் வீக் எண்டு ஒரு பக்கம் என்றால் வீட்டுக் கம்ப்யூட்டர் ரிப்பேர். வியாழன் அன்று மீண்டும் சந்திக்கலாம்.
-வித்யா

Unknown said...

என் மனம் கனிந்த
இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Post a Comment