சாலையோரம் - தொடர் இடுகை

சில பேரை இது வரை சந்தித்திருக்காவிட்டாலும் நீண்ட நாள் பழகிய உணர்வு வந்து விடுகிறது. இன்றும் கூட அலுவலகத்தின் மூலம் முகமே தெரியாமல் நட்பாகி, குடும்ப விஷேஷங்களுக்கேல்லாம் அன்பளிப்பு வாங்கி அனுப்பும் அளவுக்கு நட்பாகிப் போனவர்கள் உண்டு. சென்னை சுனாமியின் போது, முதன் முதலாக வந்த தொலைபேசி அழைப்பு அவர்களுடையதாகத்தான் இருந்தது. அந்த முகமறியா வரிசையில் எனக்கு சிதறல்கள் தீபா  - அவரோடு ஈமெயில் அல்லது சாட் மூலம் கூட பேசியதில்லை. இருந்தாலும், நீண்ட நாள் பழகிய உணர்வு எனக்கு உண்டு. அவர் இந்தத் தொடர் பதிவை எழுத என்னையும் அழைத்துள்ளார்.
================================

துர்கா டிரைவிங் ஸ்கூல்லில்தான் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டேன். வித விதமா அலங்காரம் பண்ணிக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்வதுதான் துர்கா மேடம்கு ஒரே ஒரு வீக்னெஸ். மற்றபடி அவர் ஒரு உதாரண புருஷி. மேடம் மீது எனக்கு அலாதியான மரியாதையும் பாசமும் உண்டு. வருடா வருடம் நியூ இயர் அன்று நேரில் வாழ்த்தி விடுவேன். ஏனோ, என் குறைதான், ஏறத்தாழ நாலைந்து வருடங்களாக அவரை சந்திக்கவே முடியவில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு முதல் நாள் இந்திரா நகர் மார்கெட்டில் கறிகாய் வாங்கிக் கொண்டிருந்தேன். என் பின்னால் வந்து நின்று கொண்டு "வித்யா... ஹாப்பி பொங்கல்" என்றார் பாருங்கள்... காலைத் தொட்டு கும்பிட்டு வந்தேன். மனுஷிங்க...
=====================================
முதல் வண்டி வாங்கிய கதை: அந்த நாள் வரைக்கும் பாஸ்கர்தான் அலுவலகத்தில் ட்ராப் அண்ட் பிக் அப். ஒருநாள் சாயந்திரம் டர்ன் புல்ல்ஸ் ரோடுக்கு அருகில் சாலையோரம் (இப்போது கார்பரேஷன் பார்க்) இருந்த நடைபாதைவாசி தம்பதிக்கு ஏழெட்டு குழந்தைகள். தினம் தினம் கடந்து செல்வதுதான். அன்று ஏனோ சும்மா இல்லாமல் "வாழ்கையின் பாதுகாப்போ வீட்டுக் கூரையோ கூட இல்லாமல் எந்த நம்பிக்கையில் குழந்தை பெறுகிறார்கள். எப்படி வளர்ப்பார்கள்" என்று புலம்பி விட்டேன்.  "அவர்கள் பெறுவதில்லை. பிறந்து விடுகிறது" என்றார். இந்த கிண்டலான அலட்சிய பதில் எனக்கு எரிச்சல் கொடுத்து விட்டது. ஏதேதோ பேச்சு அப்படி இப்படி வளர்ந்து ஒரு நிமிஷத்துக்குள்ளேயே எங்கள் இருவருக்கும் பயங்கர சண்டையாகி -- வாய் தகராறுதான் :)) விட்டது. பாலம் தாண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் 'ஒரு நிமிஷம் இறங்கு' என்றார். என்னவோன்னு "நம்பி" இறங்கினேன். சர்ர்னு போய்ட்டாரு. அவ்ளோதான். அன்று முடிந்ததுதான் அவருடனான பில்லியன் பயணம். அடுத்த வாரமே வாங்கிய கைனடிக் ஹோண்டா-ZX தான் என் முதல் வண்டி. அதன் பின் மீண்டும் இன்று வரை அவருடன் டூ-வீலரில் போனதில்லை (அட!! ஆமாம்) என்பதை இன்றுதான் நினைவு கூர்கிறேன். இல்லை அதற்கான வாய்ப்பு அமையவில்லையோ என்னவோ???  இப்போதெல்லாம் அவர் அதிகம் டூ-வீலர் ஓட்டுவதில்லை என்பது கொசுறுத் தகவல். எனக்கென்னவோ காரை விட சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் ரொம்பப் பிடிக்கும். பட்டுபுடவை கட்டி இருந்தால் மட்டுமே அவரோடு காரில் பயணம்.

==================================
முதல் ரைட்... கைனடிக் ஹோண்டா வந்ததும் முதல் நாள் ராயப்பேட்டை திரு வி க ரோடில் இருந்த என் அலுவலகத்திற்கு மவுன்ட் ரோட் வழியாகப் பயணம். பின்னாடியே பாஸ்கர் அவர் வண்டியில். ஸ்பீட் இருபத்தைந்து முப்பது வந்தாலே "ஸ்லோ.. ஸ்லோ .." என்று அலறுவார். :)) மவுன்ட் ரோடில் எண்ட்டர் ஆகும் வரை பயமாக இல்லை. மவுன்ட் ரோடில் டி.எம்.எஸ் வந்ததும் வலது பக்கமாக ஒருத்தர் பயங்கர ஸ்பீடில் ஓவர்-டேக் செய்தார் பாருங்கள்...நடுங்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஜெமினி பிளை ஓவர் இறங்கும் போது ரொம்ப பயமாக இருந்தது. பாலம் இறங்கியதும் ஆனந்த் தியேட்டர் பஸ் ஸ்டாப்... ரொம்ப நெரிசலாக இருக்கும். வேகமாக இறக்கத்தில் இறங்கிய நடுக்கத்தில் ப்ரேக் பிடிக்கத் தெரியாமல் சிக்னலுக்கு நின்று கொண்டிருந்த ஒரு அம்பாசிடர் காரில் மோதினேன். எனக்கொன்னும் ஆகலை. வண்டியை பை-பாக்கில் (buy-back) கொடுக்கும் வரை முன் ப்ளேட்டில்  இருந்த டென்ட் அப்படியே இருந்தது. முதல் நாள் வண்டி அனுபவம் இப்படி மறக்கவே முடியாதது. சாயந்திரம் திரும்பி வந்ததும் "பாஸ்கர்..என்னிக்காவது நான் திரும்பி வரலன்னா ஜெமினி பாலத்துக் கிட்ட தேடுங்க"ன்னு சொன்னேன்... அவ்ளோ பயமா இருந்துதுங்க அன்னிக்கி... (மட்டும்)
================================
விபத்துக்கள்.
குழந்தை பிறந்த பிறகு கூட எழுபது ஸ்பீடு வரை போயிருக்கேன். அவள் வளர்ந்து பேச ஆரம்பித்து "சாயந்திரம் எப்பம்மா வருவ" "இன்னிக்கு ஆபீசுக்கு லீவு வுற்றும்மா" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்த பிறகு எனக்கு என் உயிர் மீதான பற்றும் பயமும் ரொம்பவே (ஜாஸ்தியாக) தொற்றிக் கொண்டு விட்டது.இப்போதெல்லாம் தினமும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு,  container-கள், காலேஜ் பஸ்சுகள், தண்ணீர் லாரி எல்லாம் வந்தால் கூட, சமத்தாக இடது பக்கம் ஓரமாய் ஒதுங்கி விடுகிறேன் என்றால் பாத்துக்கோங்க.

டச் வூட்... ரொம்ப ஸ்பீடாகப் போனபோதும் கூட இது வரை விபத்துக்கள் நிகழ்ந்ததில்லை. முட்டாள்தனமாக ஆரம்ப காலத்தில் ஒரு முறை, slope-பில் (ஓவரா வீரம்)  கால் ஊன்றாமல் திருப்பி கீழே விழுந்தேன். முழங்கை-முட்டிக்காலில் சிராய்ப்பு. அவ்ளோதான்.

ஆனால், ஆக்சிடென்ட்களைப் பார்த்த அனுபவம் நிறையா உண்டு.

சென்னை வந்த புதுசு. அண்ணா சிலை கிட்ட தான் என் முதல் அலுவலகம். அலுவலக வாசலியே பஸ் ஸ்டாப் இருந்தது. ஆந்திரா பஸ்ஸுகள் எல்லாம் அப்போது அந்த வழியாகப் போகும். இருபது வயதுதான் இருக்கும். ஒருவர் ரன்னிங்கில் பேருந்தின் முன் பக்கமாக இறங்கினார்... அவ்ளோதான். மிகக் கொடூரமான, பாதங்கள் மட்டும் துடிக்கும் காட்சியைப் பார்த்து குலைநடுங்கிப் போன நாள் அது. :(
"ரன்னிங்கில் இறங்காதீங்கப்பா"

(இந்த அலுவலகத்தில் நடந்த ஒரு சுவையான அனுபவம்) அப்புறம் ஒரு நாள் ஜெ முதலமைச்சரா இருந்தப்போ, அண்ணா சிலைக்கு மாலை போட வந்த போது, பாதுகாப்புகாக டிராபிக் போலிஸ்காரர் ஒருவர் எங்கள் அலுவலகத்தின் ஜன்னல் கதவு மேஜைக்கு அடிப்பக்கம் , எலி பொந்துகள் எல்லாவற்றிலும் தேடிவிட்டு, அக்கௌன்டன்ட் மேஜைக்கருகில் இருந்த நாற்காலியில் கலக்ஷனுக்காக அமர்ந்தார். அது சக்கரம் வைத்த, பின்னால் சாயும் கம்ப்யூட்டர் chair. கால் மேல் கால் போட்டு பின்னால் சாய்ந்தார் பாருங்கள்..... எழுந்து எழுதுவும் வாங்கிக்காமையே போயிட்டார்.

முடில.... நான் ரொம்ப சிரித்து விட்டேன். அவர் துரியோதனனாக இருந்திருக்கலாம்.. நல்ல வேளை, நான் பாஞ்சாலி இல்லை. :))

இந்த 2010 -க்கும் முதல் நாள். 2009-ன் கடைசி நாள்.. 31.12.2009 அன்று... மதியம் மூன்று மணிக்கு அலுவலகத்தில் அனுமதி வாங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஐயோ சாமி... அப்போது தான் splendor வண்டியில் இரண்டு பேர் கந்தன் சாவடியில் இருந்த ஒரு அலுவலகத்தில் இருந்து கிளம்பியதைப் பார்த்தேன். படு வேகம்...மனுஷன் பறந்து பாத்து இருக்கீங்களா?? YMCA வுக்கு அருகில் பள்ளத்தில் ஒருத்தனும், petrol bunk காம்பவுண்டைத் தாண்டி ஒருவனுமாக வீசி எறியப்பட்டார்கள். இருவரும் குடித்திருந்தார்களாம். எனக்கு மிக அருகில் நடந்த ரத்தக்களரி இது. TNRDC நிறுவனத்தின் தகவல்படி அன்று மட்டும் மொத்தம் எட்டு mortal accidents மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை நடந்துள்ளதாம். எல்லாம் குடி... இன்சுரன்ஸ் பணம் கூட கிடைக்காது. பணத்தை விடுங்க... அவங்க எல்லாருமே 35 வயதிற்குள் இருந்த இளைஞர்கள் - அதுவும் ஆண்கள் - அவர்களுக்கு ஒரு வேளை திருமணமாகி இருந்தால், நிச்சயம் பத்து வயதுக்குள்தான் குழந்தை இருக்கும்... அவங்க கதி!!!!!!!
 குடிச்சுட்டு எங்கயாவது விழுந்து கிடக்க வேண்டியது தானே... ஏம்பா வண்டி ஓட்டறீங்க.

அதே போல, ஸ்பென்செர் பின்பக்கம் தாஜ் கோரமண்டேல் ஹோட்டல்லுக்கு எதிரில், முன்பெல்லாம் யு-டர்ன் அனுமதி இருந்தது. ஒரு விற்பனையாளர் (salesman) என்றுதான் நினைக்கிறேன். பெரிய கருப்பு எக்சிக்யூடிவ் பை வண்டியின் பில்லியனில். மதியம் சுட்டெரிக்கும் வெயில். யூ டர்ன் எடுக்கும்போது கவனிக்காமல் திரும்பி, வேன் ஒன்று மோதி விட்டது. வண்டி வேனின் bumper-ரில் மாட்டிக் கொண்டது. இவர் மட்டும் கொளுத்தும் தார்சாலையில் சறுக்கிக் கொண்டே போய் மீடியனில் மோதி கால் முறிந்தது. "ஐயோ அம்மா.. காலு.." என்று கதறினார் பாருங்கள். அவரால் நான் கொடுத்த தண்ணீரைக் கூட குடிக்க முடியாமல் அலறிக் கொண்டே இருந்தார். தரையில் அவர் ஊன்றி கொண்டிருந்த உள்ளங்கையெல்லாம் உடனே கொப்புளாமாகியது. மயக்கம் போட்டிருந்தாலும் பரவால்லைங்க. ஆம்புலன்ஸ் வரும் வரை கதறிக் கொண்டே இருந்தார். அவரைக் கூட்டி கொண்டு போயிட்டாங்க. எனக்குத்தான் சாயந்திரம் வரை தலை சுற்றிக் கொண்டே இருந்தது.
==============

ரோடை கிராஸ் செய்பவர்கள், முக்கியமாக வாகனம் வரும் போது திமு திமு என்று குறுக்கே ஓடாதீங்கப்பா. போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது எவ்வளவு ஆபத்தோ, அதை விட போன் / கூட்டமாக பேசிக்கொண்டே சாலையைக் கடப்பதும், நடந்து செல்வது. DO NOT WALK AND TALK...

ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் பண்ணும் அலட்சியம் ... இதற்கு காரணம் யார்?  நாம் எங்கே வேண்டுமானாலும் கை காட்டி, திடீர் என்று ஆட்டோ என்று அழைப்பதால் தானே அவர்களும் எதிர்பாராமல் ஒதுக்குகிறார்கள். ஆட்டோ, ஷேர் ஆட்டோ பிடிப்பவர்கள், கொஞ்சம் பொறுப்போடு செயல்படுங்கள். ஏதும் பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு அருகில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்தும்படி அழையுங்கள். அம்மாதிரி இடங்களில் மற்ற வாகன ஓட்டிகளும் (பெரும்பாலும்) மெதுவாகவே ஓட்டிச் செல்கிறார்கள்.

அதே போல, சிக்னலில் நிற்க நேர்ந்தால், முடிஞ்ச வரைக்கும், கார்கள் கண்டைனர் வண்டிகள் போன்றவற்றிற்கு பின்னால் மிக அருகில் வண்டியை நிறுத்தாதீர்கள். இடுக்குகள் கிடைத்தால் புகுந்து புகுந்து செல்வது என்பதெல்லாம் வேண்டாம்.

நாற்பதுக்கு மேல் இரு சக்கர வாகனங்கள் போகும் அளவுக்கு சென்னை சாலைகளோ, இல்லை போக்குவரத்து நெரிசல்களோ இடம் கொடுப்பதில்லை. அப்படியும் எப்படி இத்தனை விபத்துக்கள்??? ஓரளவுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் வேகம் அடைந்து விட்டாலே வாகனமும் நம் உடலும் நமது கட்டுப்பாட்டை மீறி விடுகிறது. அந்த நிலையில்தான் விபத்துக்கள் அதிகம் நிகழ்கிறது... வேகமாய் போனாலும், புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி மெதுவாகப் போகும் இடங்களில் மெதுவாகப் போயும், இடம் கிடைத்ததும் விரைவாகப் போயும் சமாளித்துக் கொள்ளுங்கள்.

ஒரு விதத்தில் உயிர் போய் விட்டால் கூடப் பரவாயில்லை. அரையும் குறையுமாய் மிஞ்சிப் போகும் போது, அவர்களைச் சார்ந்தவர்கள் படும் துன்ப வேதனைகளை யாராவது உணர்ந்திருந்தால், இன்னும் பொறுப்போடு சாலையில் வண்டிகளை ஓட்டுவோம். நடந்து செல்வோர் சாலைகளைக் கடக்கும் போது வாகன ஓட்டிகள் மீதும் அக்கறை கொண்டு கடப்பார்கள்.

ஒரே மகன்... இருபத்தி இரண்டு வயதுதான். வேலைக்குச் சேர்ந்து மூன்றாம் நாளே இரவு திரும்பி வரும்போது, சாலை விபத்தில் முதுகெலும்பு தூள் தூளாகி இன்று படுத்த படுக்கையாக இருக்கிறான். ஹெல்மெட் போட்டிருந்தான் - உயிர் பிழைத்து விட்டது... ஒப்பந்தகாரரின் negligence தான் அது என்பது விபத்து நடந்த இடத்தை பார்த்தாலே போதும்.. உள்ளங்கை நெல்லிக் கனி...  ஐடீ காரிடார் /contractor மீது வழக்கு தொடர வேண்டும், என்று இன்றும் ஒரு தந்தை நடையாய் நடந்து கொண்டிருக்கிறார். வழக்கு போட்டு ஜெயித்தாரா தோற்றாரா என்பதெல்லாம் வேறு கதை. முதல் நாள் வரை ஜம் என்று உடையணிந்து முதல் முதலாக வேலைக்கு சேர்ந்து முதல் மாசம் சம்பளம் வருவதற்குள், ஆறடி உயரத்தில் நின்றிருந்த மகன் இனி மீளவே முடியாத படுக்கையில் விழுந்து கிடப்பதை ஒரு தந்தையாக அவர் தினம் தினம் கண்கொண்டு பார்க்கும் போது... அவர் கண்களில் கண்ணீரெல்லாம் வற்றி... அழுவதில்லை.... கண்ணீர் வர அழுவதில்லை! இல்லையா?        "நான் இருக்கும் வரை பாத்துப்பேன்.. அப்புறம்?" என்று குரல் உடைந்து என்னிடம் அவர் கேட்டபோது என்னால் அவரை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை.

எல்லோரும் வாழும் வரை நலமாகவே இருக்கவேண்டும்பா. இன்று முதல் வண்டியை எடுக்கும் போது, உங்களைப் பற்றி மட்டும் இல்லாமல் அடுத்தவரைப் பற்றிய அக்கறையும் கொண்டு, courteous ஆக drive செய்ய வேண்டும் என்று புன்னகைத்துக் கொண்டே, பாட்டுப் பாடிக் கொண்டே வண்டி ஒட்டுங்கள்.. ஜாக்கிரதையாக.
It may not be your fault, but it's your accident. என்று தீபா சொன்னதையும் திருப்பி சொல்லிக்கிறேன்.


Enjoy your drive - everyday.


update at 12.45 PM/ 22 - I - 2010

ஹேய்... மறந்து விட்டேன். நான் கூட யாரையாவது அழைக்க வேண்டுமே...

கு.ஜ.மு.க குடுகுடுப்பை

கேவிஆர் பக்கங்கள் கே வீ ஆர்

வானவில் போல் வாழ்க்கை ராஜகோபால்

சாஸ்திரம் பற்றிய திரட்டு சுவாமி ஓம்கார்

பலா பட்டறை ஷங்கர்

விட்டு விடுதலை ஆகி தோழி கிருத்திகா வாசுதேவன் (மிஸஸ் தேவ்-அப்படீன்னுதான் எனக்கு ஞாபகம் இருக்கு:))

திரும்பிப் பார்க்கிறேன் ஸ்ரீ ரமேஷ் சதாசிவம்



..

27 comments:

Paleo God said...

ஒழுங்கா வண்டி ஓட்டியும் ஜஸ்ட் எஸ்க்கேப்பான அனுபவங்கள் எனக்கும் உண்டு..:(

நல்ல பதிவுங்க.

எறும்பு said...

நிறைய விபத்த பாத்திருக்கீங்க...
//"நான் இருக்கும் வரை பாத்துப்பேன்.. அப்புறம்?"//

இந்த குரலை நானும் கேட்ருகிறேன். என் நண்பனின் தந்தையுடையது
:(

எறும்பு said...

//எஸ்க்கேப்பான அனுபவங்கள் எனக்கும் உண்டு..:(

நல்ல பதிவுங்க.//

நான் எங்க போனாலும் எல்லா பதிவுலையும் இவரோட கமெண்ட பாக்கிறேன்....
ரெம்ப பாசக்காரரா இருப்பாரு போல..
;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அவள் வளர்ந்து பேச ஆரம்பித்து "சாயந்திரம் எப்பம்மா வருவ" "இன்னிக்கு ஆபீசுக்கு லீவு வுற்றும்மா" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்த பிறகு எனக்கு என் உயிர் மீதான பற்றும் பயமும் ரொம்பவே (ஜாஸ்தியாக) தொற்றிக் கொண்டு விட்டது.இப்போதெல்லாம் தினமும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு, container-கள், காலேஜ் பஸ்சுகள், தண்ணீர் லாரி எல்லாம் வந்தால் கூட, சமத்தாக இடது பக்கம் ஓரமாய் ஒதுங்கி விடுகிறேன் என்றால் பாத்துக்கோங்க.//

இந்த அக்கறை தாங்க எல்லாரிடமும் வரணும். வெளியே போகிற எல்லாருக்காகவும் வீட்டிலே எதாவது உறவு ஒன்று காத்திருக்கிறது என்கிற எண்ணம் வேண்டும்..

எறும்பு said...

//'ஒரு நிமிஷம் இறங்கு' என்றார். என்னவோன்னு "நம்பி" இறங்கினேன். சர்ர்னு போய்ட்டாரு. அவ்ளோதான். //
இப்படிதாங்க பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் நாவல்ல ஹீரோயின் ஹீரோவ இறக்கி விட்டுட்டு போய்டுவா...

இம் அத ஞாபகபடுத்திடீங்க...

KarthigaVasudevan said...

நல்லா எழுதி இருக்கீங்க வித்யா ...

எனக்கு சைக்கிள் தாங்க தெரியும். பாப்பு கேட்டுட்டே இருக்கா அவளை ஸ்கூல்க்கு அழைச்சுட்டுப் போயிட்டு வர வண்டி வாங்கச் சொல்லி. சென்னைல ரோட்ல வண்டி ஓட்ட எனக்கு இன்னும் தைரியம் வரலையோ என்னவோ?! இன்னிய தேதி வரை பில்லியன் riding தான்.

//எனக்கு என் உயிர் மீதான பற்றும் பயமும் ரொம்பவே (ஜாஸ்தியாக) தொற்றிக் கொண்டு விட்டது.//

ஆமாங்க..பயமாத்தான் இருக்கு,

////'ஒரு நிமிஷம் இறங்கு' என்றார். என்னவோன்னு "நம்பி" இறங்கினேன். சர்ர்னு போய்ட்டாரு. அவ்ளோதான். //
இப்படிதாங்க பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் நாவல்ல ஹீரோயின் ஹீரோவ இறக்கி விட்டுட்டு போய்டுவா...//

:)))
தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி ,கொஞ்சம் லேட்டா எழுதினாலும் சட்டை பண்ணாதிங்கப்பா. . நிச்சயமா எழுதறேன் .எதுவும் மறக்க மாட்டேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொடுத்த வேலையை கனகச்சிதமா செய்திருக்கீங்க.

well written.

விக்னேஷ்வரி said...

நிறைய விபத்துக்கள் பார்த்த அனுபவம் உங்களுக்கு. சொன்ன விஷயங்கள் எல்லாம் ரொம்ப சரி. எல்லோரும் பின்பற்றனும்.

Vidhoosh said...

பலாபட்டறை; ஜாக்கிரதையாக வண்டி ஓட்டுங்க. வருகைக்கு நன்றி

எறும்பு ராஜகோபால்; :( நிறைய விபத்தை பார்த்திருக்கேன் என்பது என் துரதிருஷ்டம்தான். என்ன செய்வது...
//பலாப்பட்டறை ஷங்கர்../// கேட்டீங்களா :))

முத்துலெட்சுமி: நன்றிங்க. அதான் :)

அமித்து அம்மா: நன்றிங்க. அதெப்படி பிசகாம கதை எழுதிடறீங்க. நான் வனங்கள் எழுதறத்துக்குள்ள நாக்கு தள்ளிடுச்சுங்க.

விக்னேஷ்வரி: நன்றிங்க. :( நிறைய விபத்தை பார்த்திருக்கேன் என்பது என் துரதிருஷ்டம்தான்.

எல்லோரும் பின்பற்றினால் நன்று.

Deepa said...

மிக மிகப் பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் எழுதி இருக்கிறீர்கள். உங்களை அழைத்ததற்குப் பெருமைப் படுகிறேன்.

நீங்கள் வண்டி வாங்கிய கதையில் எனக்குப் புரிந்தது: ஆஹா, எனக்கு மேல டார்ச்சர் குடுக்கற ஆளா நீங்க!?

ப்ரியமுடன் வசந்த் said...

ஏனோ இதுபோல பதிவுகள் படிக்கும்போது புதுசா வண்டியெடுக்கலாம்ன்ற என் எண்ணம் தினம் சுக்கு நூறா உடையுதுங்க வித்யா...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க வித்யா கடவுள் பற்றிய பதிவுகளுக்கு பதிலாக இது போன்ற பொதுநல கட்டுரைகள் உங்களுக்கு சிறப்பாய் எழுத வருகிறது இதை தொடரலாம்...!

நட்புடன் ஜமால் said...

அன்று அவர் இறக்கிவிட்டு போகாமல் இருந்தால் - இன்னும் உங்களுக்கு டிரைவர் தேவைப்பட்டு இருக்கும்...

--------------

விபத்துகள் :(

நசரேயன் said...

//ஏதேதோ பேச்சு அப்படி இப்படி வளர்ந்து ஒரு நிமிஷத்துக்குள்ளேயே எங்கள் இருவருக்கும் பயங்கர சண்டையாகி -- வாய் தகராறுதான் :))//

நம்பிட்டேன்

பா.ராஜாராம் said...

//அந்த நாள் வரைக்கும் பாஸ்கர்தான் அலுவலகத்தில் ட்ராப் அண்ட் பிக் அப். ஒருநாள் சாயந்திரம் டர்ன் புல்ல்ஸ் ரோடுக்கு அருகில் சாலையோரம் (இப்போது கார்பரேஷன் பார்க்) இருந்த நடைபாதைவாசி தம்பதிக்கு ஏழெட்டு குழந்தைகள். தினம் தினம் கடந்து செல்வதுதான். அன்று ஏனோ சும்மா இல்லாமல் "வாழ்கையின் பாதுகாப்போ வீட்டுக் கூரையோ கூட இல்லாமல் எந்த நம்பிக்கையில் குழந்தை பெறுகிறார்கள். எப்படி வளர்ப்பார்கள்" என்று புலம்பி விட்டேன். "அவர்கள் பெறுவதில்லை. பிறந்து விடுகிறது" என்றார். இந்த கிண்டலான அலட்சிய பதில் எனக்கு எரிச்சல் கொடுத்து விட்டது. ஏதேதோ பேச்சு அப்படி இப்படி வளர்ந்து ஒரு நிமிஷத்துக்குள்ளேயே எங்கள் இருவருக்கும் பயங்கர சண்டையாகி -- வாய் தகராறுதான் :)) விட்டது. பாலம் தாண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் 'ஒரு நிமிஷம் இறங்கு' என்றார். என்னவோன்னு "நம்பி" இறங்கினேன். சர்ர்னு போய்ட்டாரு. அவ்ளோதான்//

//என்னவோன்னு "நம்பி" இறங்கினேன்//

இதுதான் டாப் பாஸ்!

சத்தமா சிரிச்சுட்டேன்...

ஆமா,ஏன் இவ்வளவு 'enjoy" பண்ணேன் என தெரியலை வித்யா...

:-)))

பாஸ்கரும் அவர் தரப்பை சொல்லட்டும்.அப்புறம் பஞ்சாயித்து பண்றேன்..

என்ன கொடுமையோ ஏதுவோ?

:-)

நீங்கமட்டும் டிராபிக் போலீஸ் காரரை பார்த்து சிரிக்கலாமாக்கும்?...

:-)

இந்த தொடரை இவ்வளவு சுவராசியமாய் எழுதமுடியுமா..கிரேட்!

பா.ராஜாராம் said...

நீங்கள் அழைத்த ஒரு தொடரை வேலைப் பளுக்களில் தொடரமுடியாமல் போயிருச்சு வித்யா.இனி தாமதமும் ஆயிருச்சு.மனசில் குறையாத்தான் இருக்கு.மன்னியுங்கள் வித்யா.

Romeoboy said...

\\DO NOT WALK AND TALK...//

இது நல்ல "IDEA" வா இருக்கே..


\\ "நான் இருக்கும் வரை பாத்துப்பேன்.. அப்புறம்?//

படிக்கும் போதே மனசு கனமா இருக்கு.

Radhakrishnan said...

வண்டி வாங்கிய கதை மிகவும் சுவாரஸ்யம்.

சாலை விபத்துகள் பற்றியும் ஒரு மகனுக்கு ஏற்பட்ட நிகழ்வு பற்றி குறிப்பிட்டது எச்சரிக்கை உணர்வு தந்தது.

----

ஆஹா, தீபா... பெண்கள் என்றாலே டார்ச்சர் தரக்கூடியவர்கள் என்பது போல மாயத்தோற்றம் தெரிகிறதே ;)

sathishsangkavi.blogspot.com said...

நல்ல இடுக்கை...

உங்கள் அனுபவம் அருமை...

Vidhoosh said...

மிசஸ் தேவ்: :) ரொம்ப நன்றி. மெதுவாவே எழுதுங்க. இதுக்கு வண்டி ஓட்டனும்னு தேவை இல்லை. உண்மையில் பில்லியனில் உட்காந்து போகும்போதுதான் நிறையா வேடிக்கை பார்த்து கவனிக்க முடியும். வண்டிய நாமே ஓட்டும் போது வேடிக்கை பாக்கவே முடியாதுங்க. :(
என்னவோ, பெற்றோர்-கணவர் எல்லாம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்தாலும், வாழும் ஆசையை (வெறி!!) நமக்கு நம் குழந்தைகள்தான் கொடுக்கிறார்கள். அடுத்து அடுத்து என்று ஒவ்வொரு அடியாக போய்க் கொண்டே இருக்கவும் என் மகளே காரணம்.

அவரு இறக்கி விட்டு போனது உங்களுக்கு சிரிப்பா இருக்குல்ல ;))

=======

தீபா: அழைத்ததற்கு முதலில் உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் இதை நாமும் எழுதனும்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டேன்.

///ஆஹா, எனக்கு மேல டார்ச்சர் குடுக்கற ஆளா நீங்க!?////
ஆமா...பின்ன...காதலிக்கும் போது ஐயா "நீ உட்காரணும்னுதான் வண்டியே வாங்கினேன்.. நமக்கு குழந்தை பிறந்த பின்தான் கார் எல்லாம்..... அது வரைக்கும் 'அண்ணாமலை'(இது வேற!! க்கும்) மாதிரி நாம வண்டிலேயே போலாம். அப்படி இப்படின்னு காதுல பூ சுத்திட்டு, அம்மி மிதிச்சு, அக்னி சாட்சியாய் கல்யாணமும் பண்ணி, ஒரு மாசம் கூட அத காப்பாத்தாம, இப்படி நடுத்தெருல விட்டுட்டு போயி "தர்மத்த" மீறினால் சும்மாவா விட முடியும். :))
====================
வசந்து: என்னங்க... சாகத்தானே போறோம்னு வாழாம இருக்க முடியுமா.. சும்மா தெகிரியமா வண்டிய வாங்கி ஓட்டுங்க. ஆனா ஜாக்கிரதையா..
உண்மைதான். நானே இப்போதெல்லாம் குறைத்துக் கொண்டே வருகிறேன் பாத்தீங்களா!! எப்பயாவது நான் ரொம்ப ரசித்து விடும் பகுதிகளை மட்டும் போட்டுவிடுவதுதான். :)) கடவுளை பற்றி எழுதுவது நோக்கம் இல்லை. ஆனால் வேதங்கள் எனக்கு பிடித்த சப்ஜெக்ட். :)
=====
திருமணத்துக்கு முன்னாடியே வண்டி ஓட்டுவேன் ஜமால். மனுஷன் "நீ பில்லியனில் உட்காந்து ராணி மாதிரி வா"ன்னு சொன்னதை நம்பினேன் பாருங்கள்.. :)) jokes aside, நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் உண்மைதான் ஜமால். கல்யாணம் ஆன புதுசில் நான் அவருக்காக காத்திருப்பதும் இனிமையாகத்தான் இருந்தது. இப்போது பொறுப்புக்கள் ஜாஸ்தியாக ஆகிற போது அதெல்லாம் இப்போது சாத்தியப் பட்டிருக்குமா என்று நினைக்கும் போது பிரமிப்பை தருகிறது. அதே போல ஒவ்வொரு பெண்ணும் வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். தினசரி பயன்பட வில்லை என்றாலும், அவசரத்தில் சொந்த வாகனம் எனக்கு நிறையா உதவியாய் இருந்திருக்கிறது. இனி வண்டி இல்லாத ஒரு நாள் எனக்கு எப்படி இருக்குமோ>>>
==============

Vidhoosh said...

வாய்யா நசரேயா/// :)) எங்க இன்னும் காணுமேன்னு பாத்தேன். அதெப்படி தேடி கண்டுபிடிச்சுடறீங்க :)) உங்க கருப்பு கலர் மேல சத்தியமா...ன்னு சொன்ன நம்புவீங்களா.. :))

=====================
ம்ம்ம்.. என் சோகம் உங்களுக்கு காமெடியா :)) அதும் டாப் கிளாஸ்... :)) நீங்க இந்தியா வரும்போது பஞ்சாயத்தை வச்சுக்கலாம்.. :)
///என்ன கொடுமையோ ஏதுவோ?// இது வேற... யாக்கும் ...
//டிராபிக் போலீஸ்// ஐயோ நீங்க அந்தாளை பார்த்திருக்கனும்ங்க.. அந்த சீனை இப்போ நினைச்சாக்கூட :))))))
கை நீட்டி அப்பையே ஐநூறு ரூபா கையூட்டு கேட்டான் பாவி..

/////ஒரு தொடரை வேலைப் பளுக்களில் தொடரமுடியாமல் போயிருச்சு///பரவால்லைங்க. மெள்ளமா சமயம் கிடைக்கும் போது எழுதுங்க. எழுதாட்டியும் பரவாயில்லை. ச்சே ச்சே இதுக்கு போயி மன்னிப்பெல்லாம் எதற்கு..
=========================

ரோமியோ; வாங்க .. நன்றி .. அதும் இப்போ ஒரு ஆட் (ADVT)வருது பாருங்க... மொபைல் யூஸ் பண்ணி மரத்தையெல்லாம் காப்பாத்துன்னு... heights of comedy... மொபைல்-லினால் எந்த ஆபத்தும் இயற்கைக்கு கிடையாதா..
எப்படித்தான் யோசிப்பாங்களோ..

------------------------
நன்றி ராதாகிருஷ்ணன்" ////பெண்கள் என்றாலே டார்ச்சர் தரக்கூடியவர்கள் என்பது போல மாயத்தோற்றம் //// மாயம் என்ன.. அது நிஜம் தான். ஆண்கள் அவர்களை டார்ச்சர் தரும்படி செய்யாதிருக்கும் வரை.. :))

======
சங்ககவி: :) நன்றி.

Sundar சுந்தர் said...

செம பதிவு. அனுபவங்களை உணர வைக்கும் எழுத்து நடை.

S.A. நவாஸுதீன் said...

இங்கே (சௌதியில்) எத்தனையோ ஆக்சிடெண்ட் பார்த்திருக்கேன் வித்யா. அப்பெல்லாம் இவனுங்க திருந்தமாட்டானுங்கடான்னு சொல்லிட்டு சாதாரணமா எடுத்துட்டு போயிட்டிருப்போம். அந்த அளவுக்கு கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் அதிகம் இங்கே. நாங்க தினமும் வீடு-ஆஃபிஸ் போயிட்டு வருவது போருக்கு போயிட்டு வருவது போல்தான்.

பின்னோக்கி said...

மிகவும் இயல்பான பதிவு.

//என்னிக்காவது நான் திரும்பி வரலன்னா ஜெமினி

முதல் வாசிப்பில் சின்ன சிரிப்புடன் போய்விட்டேன். பதிவை படித்து முடித்தவுடன் உணர்ந்தேன். மேலே சொன்ன வரிகள் உணர்த்தும் பயங்கரம்.. சொல்ல முடியவில்லை. ஆண்டவா!!

"உழவன்" "Uzhavan" said...

மிக அருமையான பதிவு. ஜனவரி முதல் வாரத்தில் ரோடு சேப்டி வீக் கடைப்பிடித்தார்கள். அப்போது எனது கம்பெனிக்கு ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டரை அழைத்து வந்து ஒரு அவார்னஸ் புரொகிராம் நடத்தினார்கள்.. அதுபற்றி ஒரு இடுகை போடவேண்டும் என இன்னும் எண்ணிக்கொண்டே....... ம்ம்.. இன்னும் முடிந்தபாடில்லை. அக்குறையை இப்போது நீங்கள் போக்கிவிட்டீர்கள். நன்றி

பாலா said...

ஆத்தி.....

நீங்க பெண்பால்-ன்னே இன்னைக்குத்தான் தெரியும்! :) ‘வித்யா’ங்கறது.. வித்யாதரன் -வித்யாசாகர் பெயர்களின் ஷார்ட் நேம்-னு நினைச்சிகிட்டு இருந்தேன். :) :)

பாக்ஸ் மடிச்ச கதையை எல்லாம்.. ஒரு பையன் மடிச்சிட்டு இருந்தா மாதிரி.. யோசிச்சி வச்சிருந்தேன். :( :(

ramesh sadasivam said...

ஹலோ அக்கா அழைப்புக்கு நன்றி. வேறு வேலையாக இருப்பதால் தொடர் பதிவில் பங்களிக்க முடியவில்லை மன்னிக்கவும். கொஞ்ச நாட்களாக இணைய தளம் பக்கம் வர முடியவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அப்படித்தான் இருக்கும் என் நினைக்கிறேன்.

Suresh S R said...

//வாழ்கையின் பாதுகாப்போ வீட்டுக் கூரையோ கூட இல்லாமல் எந்த நம்பிக்கையில் குழந்தை பெறுகிறார்கள். எப்படி வளர்ப்பார்கள்//

எனக்கும் இவர்களை பார்க்கும் போதெல்லாம் இதே எண்ணம் தான்.

Post a Comment