தட்டிலேயே மிஞ்சிய சோற்றுப்பருக்கைகள்

எல்லாம் தோற்று விட்ட அந்நொடியில்
நண்பன் போலக் கிடைக்கும் பெட்டகத்தில்
உன் காதல் கடிதமொன்றை
கரையான்கள் பாதியாக ஜீரணித்திருக்கும்

தொலைத்துவிட்ட முகவரியால்
முடிந்து போவதில்லை எதுவும்
இன்னும் காயாத உடையில் உன் வாசம் போல
நினைவுகளின் ஈரம்

பாலைத் தென்றல் வீசும் நெருப்புப்பூ மரம்
ஒரே ஒரு மீனுக்காகவென்று
முழுதும் வறண்டு போவதில்லை குளங்கள்
பூர்த்தியாவதில்லை வாழ்வின் குரூரம்

காதலின் சுவடுகள் சுமக்கும் வயதிற்கு,
ஒட்டியிருக்கும் மகிழ்ச்சிகளின் நொடிகள்
தீரப்போவது மீதான பயம்
வாழ்க்கைக்குப் பிறகும் தொடரும்
கொடும்பசியானாலும் தட்டிலேயே
மிஞ்சி விடுகிறது சில சோற்றுப்பருக்கைகள்
மரணத்திற்குப் பிறகும் அஸ்தி

...

20 comments:

அகல்விளக்கு said...

அருமையான கவிதை....

Paleo God said...

எதிர் கவுஜ..::))

கொலை
பட்டினியில்
எப்போதோ கிடைக்கும்
எச்சில் உணவுகளை
தட்டு தேய்ந்துபோகும் அளவு
தின்றாலும்
என் பசி
கையுலுள்ள வாசனையையும்
தின்ன வழி கேட்கிறது...

Vidhoosh said...

நன்றி அகல் விளக்கு.

நன்றி ஷங்கர்.. :)) கேக்கும் கேக்கும்.. :))

Ashok D said...

/தொலைத்துவிட்ட முகவரியால்
முடிந்து போவதில்லை எதுவும்
இன்னும் காயாத உடையில் உன் வாசம் போல
நினைவுகளின் ஈரம்//
:)

R.Gopi said...

//பாலைத் தென்றல் வீசும் நெருப்புப்பூ மரம்
ஒரே ஒரு மீனுக்காகவென்று
முழுதும் வரண்டு போவதில்லை குளங்கள்
பூர்த்தியாவதில்லை வாழ்வின் குரூரம்//

வித்யா... இதில் வரும் “வரண்டு” “வறண்டு” (”காய்ந்து” என்பதற்கான வார்த்தை பிரயோகம் என்றால்) என்று இருக்க வேண்டுமோ??

//வாழ்க்கைக்குப் பிறகும் தொடரும்
கொடும்பசியானாலும் தட்டிலேயே
மிஞ்சி விடுகிறது சில சோற்றுப்பருக்கைகள்
மரணத்திற்குப் பிறகும் அஸ்தி//

மிக பிரமாதம்....

இப்படி உங்களின் பதிவுகளை எல்லாம் படித்து சொல்லி சொல்லி போர் அடிக்கிறது வித்யா....

வேறு ஏதாவது வார்த்தை கண்டுபிடித்து கொடுங்களேன்...

சொல்ல மறந்து விட்டேன்...அங்கே அந்த “கேள்வி பதில்” பதிவில் கூட தங்களின் பதில்கள் கலக்கல்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

காதலின் சுவடுகள் சுமக்கும் வயதிற்கு,
ஒட்டியிருக்கும் மகிழ்ச்சிகளின் நொடிகள்
தீரப்போவது மீதான பயம்
வாழ்க்கைக்குப் பிறகும் தொடரும்
கொடும்பசியானாலும் தட்டிலேயே
மிஞ்சி விடுகிறது சில சோற்றுப்பருக்கைகள்
மரணத்திற்குப் பிறகும் அஸ்தி //

மிகவும் ரசித்த வரிகள்

S.A. நவாஸுதீன் said...

///காயாத உடையில் உன் வாசம் போல
நினைவுகளின் ஈரம்///

///ஒரே ஒரு மீனுக்காகவென்று
முழுதும் வரண்டு போவதில்லை குளங்கள்///

////வாழ்க்கைக்குப் பிறகும் தொடரும்
கொடும்பசியானாலும் தட்டிலேயே
மிஞ்சி விடுகிறது சில சோற்றுப்பருக்கைகள்
மரணத்திற்குப் பிறகும் அஸ்தி///

ரொம்ப நல்லா இருக்கு வித்யா. க்ளாஸ்.

@சங்கர் - விரல் பத்திரம்.

Dr.Rudhran said...

neat. keep writing

Thenammai Lakshmanan said...

//இன்னும் காயாத உடையில் உன் வாசம் போல
நினைவுகளின் ஈரம்//

அருமைய இருக்கு வித்யா

Radhakrishnan said...

மிகவும் அருமையான கவிதை. வார்த்தைகள் உணர்வுகள் பேசுகின்றன.

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ வித்யா

பெரிய‌ எழுத்தாள‌ர் ப‌ட்டிய‌லில் சேர‌ ஆர‌ம்பிச்சிட்டீங்க‌ க‌விதாயினி நாவ‌லாயினி க‌ட்டுரையாயினி இன்னும் வேற‌ எதாவ‌து ச‌ர‌க்கு இருக்கா?

நட்புடன் ஜமால் said...

கரையான்கள் பாதியாக ஜீரணித்திருக்கும்

ஜணித்திருக்கும்ன்னு போட்டு பார்க்க தோனிச்சி

--------

கவிதை நிறைய சொல்லுதுங்க

நேசமித்ரன் said...

இரண்டு படிமங்களும் சில சொற்களும் ....:)

வரண்டு?

கமலேஷ் said...

வரிகள் மனதோடு மிகவும் நெருங்கி பேசுகிறது...மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

பா.ராஜாராம் said...

திருத்தமா,அழகா இருக்கு வித்யா.

Vidhoosh said...

நன்றி அஷோக்.

நன்றி கோபி. வ"ற"ண்டுதான்..:) நன்றி.

நன்றி அமித்தம்மா.. தலை(வி) போல வருமா?

நவாஸ்: நன்றி .... (பலாபட்டறை ஷங்கர் -- நவாஸ் அண்ணன் சொன்ன பேச்சை கேளுங்க :))

டாக்.ருத்ரன்: ரொம்ப நன்றி.

தேனம்மை: :) இன்னா நாற்பதை விடவா.. :)

ராதாகிருஷ்ணன் : நன்றி.

உயிரோடை: லாவண்யா.:)) சைக்கிள் கேப்பில் வரும் விளம்பரங்கள் போல, கவிதை எளிதாக எழுத முடிகிறது (நாவல், கட்டுரையை விட) பின்னணிகளை ஆராய்ந்து நம்பகத்தன்மையை யோசித்து, ரொம்ப வேலை வாங்குதுங்க நாவல்களும் கட்டுரைகளும்... அப்படி ரொம்ப ரசிச்சு எழுதின "வனங்கள்" நாவலை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி இருக்கேன். திருத்தி எழுதவும் சமயம் கிடைக்க மாட்டேங்குது. :(
எம்பொண்ணு சுயசார்பு பெறும் வரை வேறேதும் இப்போதைக்கு இல்லை.

ஜமால்: நன்றி. ஹை.. ஜனித்திருக்கும் கூட ரொம்ப அழகாப் பொருந்துதே.. தோணாம போச்சே..

நேசன்: நன்றி.. :) அழகான கமெண்ட். வ"ற"ண்டுதான்..:)

கமலேஷ்: நன்றி. :)

ராஜாராம் அண்ணே: அண்ணேன்னு கூப்ட்டுக்கறேன். அப்பத்தான் நன்றி சொல்லவேணாம் பாருங்க..

நசரேயன் said...

ஓரளவுக்கு புரியுது

Post a Comment