முறிந்த காதல்-களு-க்கு ஆறுதல்

இராதையும் கண்ணனும்
மற்றும் சில
காட்சிகள் கொண்ட கதை
முற்றுப்பெறவில்லை
இன்னும்
தலைப்பில் உள்ள
காதல் பிரசித்தியென
அதை மட்டும் மாற்றவில்லை

அவளின் பின்னல் சிடுக்குகளை
மெல்ல விலக்குகிறேன்
இவள் கூந்தலில் -
சூடியுள்ள
மல்லிகை வாசம் சுமந்து
காதலின் பொருள் விளங்காமலே
வீசிக் கொண்டே இருக்கும்
காற்றும் குழலோசையும்


நாலு முடிஞ்சு போச்சாம். இன்னும் ஆறு பத்தி பேசுவேன் என்று கண்ணீர் ஆறாப் பெருக மருகும் பதிவர்/நண்பர்  பலாபட்டறை ஷங்கருக்கு:





.

15 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

present vidya

பா.ராஜாராம் said...

கவிதை அருமை!

அப்படியா?வாழ்த்துக்கள் ஷங்கர்!

Paleo God said...

இராதையும் கண்ணனும்
மற்றும் சில
காட்சிகள் கொண்ட கதை
முற்றுப்பெறவில்லை
இன்னும்
தலைப்பில் உள்ள
காதல் பிரசித்தியென
அதை மட்டும் மாற்றவில்லை

அவளின் பின்னல் சிடுக்குகளை
மெல்ல விலக்குகிறேன்
இவள் கூந்தலில் -
சூடியுள்ள
மல்லிகை வாசம் சுமந்து
காதலின் பொருள் விளங்காமலே
வீசிக் கொண்டே இருக்கும்
காற்றும் குழலோசையும்
காதலின் பொருள் விளங்காமலே

ஒருநாள் கற்றுத்தந்தது
மீண்டும் கண்ணனாகிய நானே
என்னையே
தந்தையாக்கியபோது

தூணிலும் துரும்பிலும்
என்னிலும் நானே
என் குழந்தையுமானேன்

இராதையும் கண்ணனும்
மற்றும் சில
காட்சிகள் கொண்ட கதை
முற்றுப்பெறவே இல்லை..

::)))

Paleo God said...

ஒருத்தர் ரெண்டு பேர்னா பரவா இல்லைங்க 10 பேர வருஷ கணக்குல மனசுல சுமக்கறது ரொம்ப கஷ்ட்டம்:) ப்ளாக் ன்னு ஒரு நல்லவன் கிடச்சான் எத சொன்னாலும் வாங்கிக்கிரானேன்னு ரொம்ப நல்லவனா தெரிஞ்சான் அதான் .. ஹி ஹி.. காயங்கள் ஏதும் படாத காவியங்க (?) இது!!??. (நான் ரொம்ப நல்லவன்:) ) ஆனா இப்படி ஒரு கவிதை எழுதி அடேங்கப்பா... திருப்பியும் back to square one ல உக்கார வெச்சிட்டீங்களே :)

ரிஷபன் said...

காதலின் பொருள் விளங்காமலே
வீசிக் கொண்டே இருக்கும்
காற்றும் குழலோசையும்
சூப்பர்!

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு விதூஷி

கவிதை ஷங்கரோடதா உங்களோடதா

நசரேயன் said...

//அவளின் பின்னல் சிடுக்குகளை
மெல்ல விலக்குகிறேன்//

பொடுகு அதிகமா இருக்கோ ?

//காதலின் பொருள் விளங்காமலே
வீசிக் கொண்டே இருக்கும்
காற்றும் குழலோசையும் //

அடிக்கடி தலைக்கு குளிக்கணும்,அப்பத்தான் இந்த வாசம் இல்லாமல் இருக்கும்

sathishsangkavi.blogspot.com said...

//அவளின் பின்னல் சிடுக்குகளை
மெல்ல விலக்குகிறேன்
இவள் கூந்தலில் -
சூடியுள்ள
மல்லிகை வாசம் சுமந்து
காதலின் பொருள் விளங்காமலே
வீசிக் கொண்டே இருக்கும்
காற்றும் குழலோசையும்
காதலின் பொருள் விளங்காமலே//

கவிதை அருமை!

நேசமித்ரன் said...

:)

ராதைகள் கண்ணன்களைத்தான் காதலிக்கிறார்கள் யுகந்தோறும்

Santhini said...

மன்னனை காதலித்தால் மணமுடித்து விடுவானே !!?

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்குங்க..

Vidhoosh said...

நன்றி டி.வி.ராதாகிருஷ்ணன் சார்

நன்றி ராஜாராம் - என்ன v யை விட்டு நல்லா கொடுத்தா, அதுவும் உங்களைப் போன்றவர்கள் கொடுத்தா,வாங்கிப்பார் என்றே நினைக்கிறேன். :))

ஷங்கர்: :)) அது சரி... பத்து பத்துமா? சும்மாவா..
நாங்கள்லாம் ஒன்னை சமாளிக்கவே யுகங்கள் ஆகிடும் போலருக்கு. உங்கள் விடா முயற்சியை வியந்து பாராட்டுகிறேன். இன்னும் "ஆறு"தான் ஒரு ஆறுதல் சொல்லிருந்தீங்க பாருங்க, அப்ப எழுதிட்டேன் இந்தக் கவிதையை :))

நன்றி ரிஷபன்

தேனம்மை: நாந்தேன் எழுதினேன். :))

நசரேயன்: இதெல்லாம் நீங்கள் பலாபட்டறை ஷங்கர் கிட்டதான் கேட்கணும். :))(உங்களுக்கு இனிமே புரியாத கவிதைதான் லாயக்கு)

நன்றி சங்ககவி

நேசன்: :)) அதானே... என்ன செய்யறது? அம்மணிகளுக்கு யுகங்கள் ஆனாலும்..!!

நானும் என் கடவுளும்: அதானே? ராதை வந்து பதில் சொல்கிராளான்னு பாக்கலாம்.

புலவன் புலிகேசி: நன்றிங்க.

Vidhoosh said...

////காயங்கள் ஏதும் படாத காவியங்க (?) இது!!??. (நான் ரொம்ப நல்லவன்:) ) ///

அது சரி.... வெளிக்காயம் நிறையா பட்டிருக்குமே?? :))

தேவன் மாயம் said...

கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியது கவிதை!

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்....

Post a Comment