ஜாக்கிரதை.. மழை பெய்கிறது - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009

த்மாவுக்கு பயம் தொற்றியது. இரவு நேரத்தில் வந்திருக்கக் கூடாதோ? என்னதான் க்ரைம் ரிப்போர்டர் என்றாலும் இரவில் இங்கு தனியாக வந்திருக்க வேண்டாம்.

சில்லென்ற மழைக்காற்று எலும்பு வரைக் குளிர்ந்தது. ரயில் ஸ்டேஷனை  அடைந்த போது நள்ளிரவாகிவிட்டது. இரயில் வாசனை நாசியை ஏதோ செய்தது. மெல்லியதாய் மீண்டும் தூறல் விழ ஆரம்பித்தது. உதடுகளில் தெளித்த மழைத் துளிகளில் ஏதும் சுவையே இல்லை. காற்றோ ஒரு வித துர்வாசனையோடு வீசியது. அமாவாசை இரவென்பதாலோ  என்னவோ அடர்கருப்பின் இருள். மெல்லியதாக தரையைத் தொட முயன்ற தெருவிளக்கின் ஒளி பாதியிலேயே கரைந்து போனது.

ழை அடர்ந்து கொண்டே போனதில் ஒன்றுமே தெரியவில்லை. ஸ்டேஷனில் யாருமே இல்லை. ஸ்டேஷன் ஏதோ உயிரற்றதாகவும் சலனமற்றதாகவும் ஒரு சவமாக ஆகிவிட்டது போலத் தோன்றியது. தடதடவென்ற இரயில் சப்தம் அடங்கியதும் இன்னும் நிசப்தம் நிலவியது. மழைநீர் தரையில் தட்டும் ஒலியைத் தவிர ஏதுமற்ற அமைதி. மழையினூடே எதையும் பார்க்கவும் முடியாமல் கண்கள் கஷ்டப்பட்டது.

டுமாறிக் கொண்டே ஸ்டேஷனின் ஆச்பெச்டாஸ் கூரைக்கு அடியில் இருந்த பலகையில் வந்து அமர்ந்தாள். தன் கைபேசியின் டார்ச்சை எழுப்பினாள். கவனமாக அதை ஒரு ஜிப் லாக் கவருக்குள் போட்டு  மூடினாள். ஏதோ ஓரளவு வெளிச்சம் தெரிந்து சுற்றிலும் பார்த்தாள். எதிரில் தெரிந்த பச்சைக் கண்ணின் பிரதிபலிப்புக்கு திடுக்கிட்டாள். வள்ளென்று இவளைப் பார்த்துக் குரைத்து விட்டு, ஓடியது அது. பெருமூச்சு விட்டாள்.

சிறிது படபடப்பு ஆரம்பித்தது. வந்திருக்க வேண்டாமோ என்ற உணர்வு அவள் வயிற்றிற்குள் பட்டாம்பூச்சிகளை பறக்க வைத்து பதறடித்தது. அருகிருந்த மரத்தின் அசைவும் மின்மினிப் பூச்சிகளின் மினுக்கலும் அவளுக்கு இன்றைய இரவில் ஏதோ பயங்கரமாக நடக்கப் போகும் பயத்தைக் கொடுத்தது. இருட்டையும் ஊடுருவிப் பார்த்தாள். நடக்கத் துவங்கினால் கூட ஊருக்குள் போக விடியற்காலை ஆகிவிடும்.  பேசாமல் சென்னையில் படுத்துறங்கி விட்டு, காலையில் வந்திருக்கலாம் என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் எட்டிப் பார்த்தாள் அவள். யாருமே இல்லை. சுவற்றில் தொங்கிய நெப்போலியனின் படம் வேறு யாருமற்றத் தனிமையில் எதிரிகள் அவனைத் தாக்கிக் கொன்ற நிகழ்வை வேறு நினைவூட்டியது.

நான் என்ன நெப்போலியனா? என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள் அவள். சருகுகள் மிதிபடும் சப்தம் கேட்டது. யாரோ வருகிறார் போலிருக்கிறதே? என்று திரும்பிப் பார்த்தாள் அவள். திடீரென பீடித் துண்டுகளின் புகையிலை வாடை வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. இரவு ஒன்றரை மணியாகிவிட்டது.

திமு திமுவென நான்கு பேர் ஓடி வந்தனர். அவள் எழுந்து நிற்பதற்குள் அவளைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது, அவர்கள்தான் இவள் தேடி வந்த ரௌடிக் கும்பலைச் சார்ந்தவர்கள் என்று. கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.

மூன்று முறை வளைந்து நெளிந்து ஹேர் பின்னை நினைவூட்டிய ஒரு கத்தியை அவள் மீது பாய்ச்ச ஓங்கினான் ஒருவன். அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டு ஓடத் துவங்கினாள் பத்மா. இதயம் திடும் திடும் என்று வாசித்தது அவள் காதுகளில் ஒலித்தது. காலில் இருந்த பெல்ட் வைத்த ஹீல்ஸ் செருப்பை வேறு கழற்றி ஏறிய முடியாமல் அவள் வேகத்தைக் குறைத்தது. தடாரென்று ஒரு கல் இடறி கீழே விழுந்தாள் அவள். நெற்றியில் ஒரு கல் பட்டு இரத்தம் பீறிட்டது.

"யோ" என்றலறியபடியே விழுந்தாள் அவள்.

"ஜாக்கரதகா உண்டு எனி நீக்கு என்னி சாலு செப்பேதி" என்றபடி புகையிலைத் தெறிக்க கத்தியபடி ஓடிவந்தாள் அவள் தாய்.

"ட் கட். லைட்ஸ்" என்று கூவியபடி டைரக்டர் தலையில் கைவைத்துக் கொண்டார்.

========================================================
இந்தக் கதை சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி-க்காக எழுதப்பட்டது
இதுவும்தான்.  
========================================================

...

27 comments:

Vidhoosh said...

//குட்டி இதயங்களையும் //0
எங்களுக்கெல்லாம் ரொம்ப சின்ன மனசுன்னு சொல்ல வரீங்களா? :))

உண்மையை உரத்துச் சொன்னதற்கு நன்றிங்க சங்கர்.

என் படைப்புகளைப் பற்றிய விமர்சனத்துக்கும் நன்றிங்கோ..

-வித்யா

R.Gopi said...

வித்யாகாரு...மீரு பாக உன்னாரா??

ஈ இஷ்டோரி சால சூப்பரா உந்தி... ப்ரைஸு மீருக்கே.... நேனு செப்தானு காதா??!!

நேனு ஒக்க சாலு செப்தே...ஒன்ர சாலு செப்பினன்டே...

அய்யா பாருங்க... அம்மா பாருங்க... நானும் தெலுங்கு எழுதிட்டேன்... எழுதிட்டேன்... இக்கட பூமி இல்லேன்னா கூட, நான் அக்கட பூமியில் என் கடையை போட்டு விடுவேன்...

நானும் இதே சாயலில் ஒரு கதை எழுதி வைத்துள்ளேன்... நீங்கள் முந்தி கொண்டீர்கள்...

Unknown said...

இது பழைய உத்தி என்றாலும் உங்களின் விவரிப்பால் “விறுவிறுப்பு” கூடுகிறது.

யோசனை:

ஸ்டேஷன் பெயர் சொல்லாமல் விட்டிருக்கலாம்.கதைக்கு நம்பகத்த
-ன்மைக் கூடும். விருத்தாசலம் ஜங்ஷன் என்பதால் கொஞ்சம் ஆள் நடமாட்டம் இருக்கும்.

வாழ்த்துக்கள்!

Vidhoosh said...

நன்றி கோபி: நீங்கள் வெளியிடுங்கள். கற்பனை வெவ்வேறுதானே.. :)

நன்றி கேயார். சரிதான். ஸ்டேஷன் என்றே மாற்றிவிட்டேன். :)

--வித்யா

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்குங்க கதை:)! வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

விறுவிறுப்பு

பா.ராஜாராம் said...

நல்லா வந்திருக்கு வித்யா.வாழ்துக்கள்!

கலையரசன் said...

தலைப்பு அட்டகாசம் வித்யா...

Raju said...

எக்கோவ்...சூப்பரு.

விக்னேஷ்வரி said...

ஒரு தொடர் பதிவுக்கு வருமாறு உங்களை அழைக்கிறேன்.

கல்யாணி சுரேஷ் said...

அருமையான கதை. வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

டிவிஸ்ட் சங்கதி ரொம்ப பழசுன்னாலும், அத கடைசி வரை யூகிக்கமுடியாத படி அமைத்திருந்த கதை சூப்பர்.

நசரேயன் said...

//
"கட் கட். லைட்ஸ்" என்று கூவியபடி டைரக்டர் தலையில் கைவைத்துக் கொண்டார்.//

யாரு டைரக்டர் நசரேயனா?

நசரேயன் said...

//
புகையிலைத் தெறிக்க கத்தியபடி ஓடிவந்தாள் அவள் தாய்.
//

அது என்ன புகையிலை தெறிக்க

நசரேயன் said...

முடிவு யூகிக்க முடியலை, வெற்றி பெற வாழ்த்துக்கள்

வேதாளன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

வால்பையன் said...

செம திருப்பம் தான் போங்க!

Sundar சுந்தர் said...

kalakkitta!

இன்றைய கவிதை said...

//உதடுகளில் தெளித்த மழைத் துளிகளில் ஏதும் சுவையே இல்லை. காற்றோ ஒரு வித துர்வாசனையோடு வீசியது. அமாவாசை இரவென்பதாலோ என்னவோ அடர்கருப்பின் இருள். மெல்லியதாக தரையைத் தொட முயன்ற தெருவிளக்கின் ஒளி பாதியிலேயே கரைந்து போனது.//

அருமையான வர்ணனை!

-கேயார்

நேசமித்ரன் said...

நல்லா வந்திருக்குங்க

ஒரு முடிவோடதான் களம் இறங்கி இருக்கீங்க போல

வெற்றி உஙகளுக்கே வாழ்த்துகள்!!!

Anonymous said...

நல்லா எழுதியிருக்கீங்க வித்யா!! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நந்தாகுமாரன் said...

கே.ரவிஷங்கர் சொன்ன கருத்தோடு உடன்படுகிறேன்

"உழவன்" "Uzhavan" said...

ஏன் இப்படி? :-) சினிமா ஷூட்டிங் பக்கமெல்லாம் போகாதீங்க
ஹீரொயின் அம்மாவின் டயலாக் அல்டிமேட்
வெற்றிக்கு வாழ்த்துக்கள்

அவனி அரவிந்தன் said...

கதை முதல் வரியில் இருந்து கடைசிக்கு முந்தின வரி வரைக்கும் விறுவிறுப்பு :) கடைசி வரில தோசைய திருப்பி போட்டுட்டீங்க :D

ஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)

Vidhoosh said...

நன்றி ராம லக்ஷ்மி
நன்றி நவாஸ்
நன்றி ராஜாராம்
நன்றி கலையரசன் - அப்ப கதை??!! :(
நன்றி ராஜு
நன்றி விக்னேஸ்வரி - தொடரையும் முடித்துவிட்டேன்.
நன்றி கல்யாணி சுரேஷ்
நன்றி பின்னோக்கி - :)
நன்றி நசரேயன் :))
நன்றி சம்ராஜ்யப்ரியன்
நன்றி வால் அருண்
நன்றி சுந்தர் - இப்பத்தான் நேரம் கிடைக்குதா உனக்கு???
நன்றி கேயார்: தேங்க்ஸ்
நன்றி நேசமித்ரன் : அதே அதே..
நன்றி சின்ன அம்மிணி
நன்றி நந்தா - வழிமொழிதலுக்கும்
நன்றி உழவன் - இங்கே ECR-ரில் நடக்கும் ஷூட்டிங்-கிற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. போதாக் குறைக்கு எங்கள் தெருவில் மரங்கள் அடர்ந்து (இன்றும் எங்கள் அதிர்ஷ்டம்தான்) காணப்படுவதால் தினமும் இரவெல்லாம் ஷூட்டிங்-தான்... :( பாவம்ங்க நடிகர்களும் அவர்களுக்குப் பின்னால் வேலை செய்யறவங்களும். இந்த அம்மாக்கள் பண்ணும் அலம்பல் தான் பொறுக்க முடியாதது..:))
நன்றி அரவிந்தன்: உங்கள் கதைய நிச்சயம் இன்று படிக்கிறேங்க.

--வித்யா

thamizhparavai said...

கே.ரவிஷங்கர் மற்றும் பின்னோக்கி சொன்னதேதான் நானும் சொல்லிக் கொள்கிறேன்...
நல்லா இருக்கு.,. வாழ்த்துக்கள்...

Swami said...

நல்ல நடை..

முடிவை ஏறக்குறைய எதிர்பார்த்துதான் என்றாலும் நல்லா நச்னுதான் முடிச்சிருக்கீங்க

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
ஐ லவ் யூ - சர்வேசன் – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை

Post a Comment