நேக்கு இந்த பாலிடிக்ஸ் கீலிடிக்ஸ்செல்லாம் கிஞ்சித்தும் புடிக்காது தெரியுமோன்னோ. இருந்தாலும் எம் புள்ள அம்பி வைதீகம் பன்றானோல்யோ. அவன் ஹோமம் பரிகாரம்னு பண்ணிவச்சா அப்டியே பலிக்கரதுன்னு இந்த மந்திரிகள்லாம் இவனையே சுத்தி சுத்தி வரா. விட்டாத்தான?
முந்தாநாள் சாயந்திரம் அப்பிடியே எங்காத்துல ஊஞ்சலாடிண்டு டீ வீ பாத்துண்டு இருக்கச்சே மாயாக்கா கிட்டேந்து போன் வந்துடுத்து. சரீன்னு எல்சீடி டீவிய அணைச்சுட்டு போனை எடுத்தேன்.
"யாரு? மாயாவா? போனதரம் அம்பி அமெரிக்கா போயிருந்தச்சே ஏதோ கார்ட்லெஸ் போனாமே அத வாங்கிண்டு வந்துருந்தான். சனியன், பெல்லடிச்சா காதுலையே விழ மாட்டேங்கறது. அடிக்கடி அமெரிக்கா சிங்கபூருன்னு போயிடுவான். எதாவது வாங்கிண்டு வந்துருவான். காசோட அருமையே தெரியமாட்டேங்கறது" அப்டீன்னேன்.
"சரி சரி"ன்னுட்டு அவாளே பேசினா. "அடுத்த பிரதமர் நானே ஆகணும்னு ஹோமம் பண்ணி எங்காத்துல சுமங்கலி பூஜை செய்யறோம். உங்காத்து அம்பிதான் வைதீகம் பண்றான். பட்டுப் புடவையும் அரை பவுன் தங்கக் காசும் தாம்பூலத்துல வச்சு தரோம். நீங்க இல்லாமயா. நிச்சியம் வந்துடுங்கோ. கிங் பிஷர் பிளைட்டுல டிக்கெட்டு போட்டுருக்கேன். அழகழகா பொம்மனாட்டிகள் ஆரஞ்சு ஜூசு தருவா. காசுக்குத்தான் பஹன்ஜீ. அந்த காசுல உங்கூரு fruit shop on greams road-துல பத்து ஜூசு குடிக்கலாம். தொலஞ்சு போட்டுமே. சாஞ்சாப்போல தூங்கிண்டே வந்துடலாம். என்ன வந்துர்ரேளா" அப்படீன்னு கேட்டா.
அன்னிக்கு மட்டும் சாயந்திரம் இந்த அபி, தொல்காப்பியன் இவா கதியெல்லாம் என்னாச்சோன்னு இருக்கும். இந்த கடங்காரன் ஆதிப் பய வேற அவாள சுட்டுத் தொலச்சுட்டனே, பகவானே, பரவால்லை. தாம்பூலம் வாங்கிக்க வான்னு சொல்றா. சுமங்கலியா இருந்துண்டு மாட்டேன்னு சொல்லலாமோ. சரீன்னுட்டேன்.
நான் எவ்ளோவோ வேண்டாம் வேண்டாம்னு சொல்லிண்டே இருந்தப்பவும், "வச்சுக்கோடீ" அப்டீன்னு அந்தகாலத்துலையே எங்கம்மா வாங்கிக் கொடுத்த பதினெ...ட்டு கல் வைரத்தோட்டையும், மாட்டலையும் காதுல மாட்டிண்டு, எட்டு கல்லு பேசரியையும் மூக்குல போட்டுண்டு, அப்டியே கெம்பு நெக்லசு, ரெட்ட வடம் சங்கிலி, நெளி வளை, பட்ட வளை, பெங்கால் பாட்ர்ன் உருண்ட வளை, பஞ்ச லோக கொலுசு, வெள்ளி சாவி கொத்து எல்லாத்தையும் போட்டுண்டு மாந்துளிர் கலர்ல, கையகலம் பச்சை ஜரிகை வச்ச மடிசார்ல வெளில வந்தேன்.
"ஐயோ மாமி. அப்டியே மகாலக்ஷ்மி மாரியே இருக்கு" அப்டின்னா குருக்களாத்து மாமி. கீழாத்துலத்துல இருந்துண்டே இந்த மாமிக்கு அவ்ளோ கண் பொசுக்கு பாத்துக்கோங்கோ. தேவாங்கு மாதிரி கண்ணு வச்சுன்டு காலங்கார்த்தாலயே ஆரம்பிச்சுடுத்து இன்னிக்கி.
உள்ளூர பயந்துண்டே கிடுகிடுன்னு அரங்குள்ளுக்கு போயி, பெரிசா தேக்குல டிரெஸ்ஸிங் டேபிள், ஏதோ உட் பெக்கராமே, அத வேற இவன் வாங்கி வச்சுருக்கான் பாருங்கோ. இந்த வயசுல எனக்கெதுக்கு இவ்வளோ பெரிய கண்ணாடி. பாவம் குழந்தை ஆசை படரதேன்னு சரீன்னுட்டேன். சின்னதா கன்னத்துல திருஷ்டி பொட்டும் வச்சுண்டேன். கல்லடி படலாம்ன்னா, கண்ணடி படலாமோ?
சமயத்துல செஞ்சுட்டு போன ஒதவி மாரி ரொம்ப பெரிசாக்கும் லோகம். கழுதை தேஞ்சு போனாப்ல மனுஷாளெல்லாம் ரொம்ப சின்னச் சின்னதா இருக்கா. பிளேன்ல போறச்ச பாக்கரச்ச இப்படித்தான் தோணித்து. அதச் சொன்னேன். நீங்க என்னன்னு நினைச்சுண்டேள்?
ஆனா பாருங்கோ, சித்த நேரத்துக்கெல்லாம் சட்டுன்னு தரேல இறங்கிடுத்து. எத்தனை தரம் பிளைட்டுல போனாலும் தரேல இறங்கரச்ச வயத்த பிரட்டறது. பழகவே மாட்டேங்கறது.
ஏர்போர்ட்டுக்கு இன்னோவா கார் அனுப்பிருந்தா. இந்த blackberry-யோ என்னவோ, இத்தனை பட்டன் வச்சா நேக்கென தெரியப்போறது. ம்ம்க்கும். இதில் சன்-டீவி சீரியல்லாம் தெரியும்னு வாங்கிக் கொடுத்தான் அம்பி. வெடவெடன்னு மெல்லிசா சிடுக்குன்னு இருக்கற நேக்கு எதுக்கு இவ்ளோ பெரிய கார்னு உடனே போன் பண்ணி கோச்சுண்டேன்.
"பஹன்ஜீ. உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்"ன்னு கேட்டு என் வாயடைச்சுட்டா. பைத்தியக்காரி. மாயா மாதிரியெல்லாம் லோகத்துல இன்னோத்தர் ஜனிக்கறதே அபூர்வம். கார் நேர கொண்டு போய் நம்ப மாயாவதியாத்து வாசல்ல விட்டுடுத்து.
வரிஞ்சு வரிஞ்சு அழைச்சதுக்குன்னு ஷிவ ஷிவான்னு சுமங்கலிப் ப்ரார்த்தனை முடிஞ்சதும், ஆச்சுன்னு குங்குமத்த வாங்கிண்டு கோலங்கலுக்குள்ள ஆத்துக்கு போயிடலாம்னு பாத்தா இங்க யாரையுங் காணுமே. அம்பிப் பயலையும் காணுமே. கோட்டை மாதிரி வீடு. ம்ருகங்கள், பறக்கறது ஊர்றது எல்லாம் இருக்காக்கும் இந்தாத்துல. மனுஷா மட்டும் இல்லன்னு தேடிண்டே போனேன்.
அங்கேர்ந்த நாயி கழுதை குரங்கெல்லாம் என்னப் பாத்துச் சிரிப்பா சிரிச்சுது. அஷ்ஷோ கிரகச்சாரம். இதென்ன எழவு இப்படிச் சிரிக்கரதுகள். ம்ருகங்களா இருக்கறச்சேவே இத்தனை! இன்னும் இந்தாத்துல இருக்கற மனுஷாளுக்கு எவ்வ்ளோ இருக்குமோ. வாச கேட்டுல வாச்மேனோ கீச்மேனோ ஒரு பயலையும் காணும்.
ஷரி, அப்டியே நடுக்கூடத்துக்கு நடந்து போயி சோபால உக்காந்துண்டேன். சித்த சாஞ்சுண்டுருக்லாம்னு பாத்தா ஓயாம டீவில லோலோன்னு எவனோ ஹிந்தி பாட்ட பாடறான். நூல் ஜட்டியப் போட்டுண்டு கூச்ச நாச்சம் இல்லாம பொம்மனாட்டிகள் தூணைப் பிடிச்சுண்டு ஆடறா.ஆம்பிளைகள் இவனுக்கு கோட்டும் சூட்டும். ஷிவஷிவா. கலி முத்திடுத்தூ...ன்னேன்.
பெங்கால் பாட்டர்ன் வளையப் சரி பண்ணிண்டேன். பெங்கால்ன்னது ஞாபகம் வந்துடுத்து. இந்த டாடாக்கார கடன்காரனுக்கு லோகத்துல எடமே இல்லன்னு நந்திகிராமத்துல போயி ஆபீசு கட்றானாம். கிராமத்துல எதுக்குன்னா ஆபீசு. இயற்கையா அதது அப்பிடியே விட்டுருந்தா நாம்பல்லாம் ஜம்னு கற்காலத்துலையே சந்தோஷமா இருந்திருக்கலாம். இந்த ஆபீசு, எழவெடுத்த கம்ப்யூட்டர் இதெல்லாம் வந்திருக்காதோன்னோ?
இவன் ஆபீஸ கட்டி ஏசில உக்காந்துடுவான். பாவம் ஏழைப்பட்டவாள்லாம் எங்க போவா. யோசிச்சானா மடையன். அவனவன் கள்ளு குடிச்சுட்டு சண்டைய போட்டுண்டு வேல வெட்டி இல்லாம இருந்த இவனுக்கென்ன. அந்த ஊரு முன்னேறினா என்ன முன்னேராட்டா என்ன? ஆடு நனையரதேன்னு ஓநாய் அழுதுதாம். ஏழையா இருக்கரதெல்லாம் அவா அவா தலேலெழுத்து அது. இப்படித்தான் விதிச்சிருக்குன்னு போவேன்டியதுதான்ன.
சட்டசபையோ என்னவோ, அங்க இதெல்லாம் பத்தி, பொங்கலன்னிக்கு சாலமன் பாப்பையா பட்டி மன்றம் மாதிரி, நிறையா அறிவிபூர்வமா லோக விஷயமெல்லாம் பத்தி விவாதிப்பாளாமே. அவா பேசின்றுகரச்ச இதையே சாக்கா வச்சுண்டு கவர்மென்ட் ஆர்டர் ஒன்னுத்தை போட்டா நம்ப மாயா. புத்திசாலிப் பொண்ணு. எத்தனை நல்ல யோசனை கொடுத்தா. எல்லாரும் மாட்டேன்னுட்டாளே.
இந்த ஆம்பிளைகள் இருக்காளே அவா பொம்மனாட்டிகளை அதிகாரம் பண்ணி அடக்கியே வச்சிருக்கா. ஏழைப்பட்ட விவசாயிகளோட நிலங்கள ஜமீந்தார்கள் ஏமாத்தி அடகு வாங்கி, அபகறிச்சுர்ரா பாருங்கோ. அதுக்கு பதிலா விவசாயிகளே அத கவர்மன்ட்டுக்கு எழுதிக் கொடுத்துட்டா அவாளுக்கு பாதுகாப்பு, மாச மாசம் இந்த நிலத்துக்கான வாடகையும் தரேன்னா இவ.
பாவிகள் ஜாஸ்தியாப் போய்ட்டா லோகத்துல மானமோ பொய்ச்சுப் போச்சு. சொட்டு மழை கிடையாது. அவனுக்கு எதுக்குன்னா நிலம். அடகு வச்சு யாரோ ஒத்தன் ஜமீந்தாரோ என்ன எழவெடுத்தவனோ அபகரிச்சுக்கப் போறான். எப்படியும் அவாளுக்கு நிலம் இல்லை. வேலையே செய்யாம விவசாயிக்கு கவர்மண்டு சம்பளம் வந்தாப்லயும் ஆச்சு. இவ வேணுங்கும்போது மெமோரியலோ கோவிலோ இல்ல சட்டசபையோ ஏதோ ஒன்னை கட்டிக்கலாமே. மாச சம்பளத்த வாங்கினோமா, கள்ளு குடிச்சோமா, பொண்டாட்டிய அடிச்சோமானு போகவேண்டியதுதான்ன.
மனு கொடுத்து தடுத்துடுத்துகள் முட்டாப்பசங்க. அதுனாலதான் அதுகளுக்கு தரித்திரம் தாண்டவமாடறது. இவளப் பாருங்கோ, எத்தனை பெரிய வீடு, வசதி சௌகரியம். ஆனா பாருங்கோ, என்னவோ பாவம், நல்ல நகையோ துணிமணியோ ஒன்னு போட்டுகறது கிடையாது. என்ன சொல்றேள்? இவளுக்கு மெமோரியல் கட்டாம யாருக்கு கட்டுவேள்னேன்? சர்வ ஜனத்துக்கும் மூளையே கிடையாது.
அவாளுக்கு ஜாதி வித்யசம்லாம் தெரியாது தெரியுமோன்னோ. இந்த கள் வியாபரம்லாம் பண்ணுவானே நாராயண் தனீராம்னு ஒத்தன், அவன்கூட சொன்னான், கவர்மெண்டு உத்யோகத்துல யாராருந்தாலும் வேறடத்துக்கு மாத்தல் வேணும்னா, ஜாதி மதம்னு பாகுபாடே கடயாது இந்த இளிச்ச வாய்க்கு.
வேரறோருத்தனாயிருந்தா போலீஸ் ஏட்ட மாத்தரத்துக்கே பத்து லட்சம் வாங்கினுடுவான் பாவி. இவ இருக்கா பாருங்கோ ஒத்த காசு வாங்கமையே நூத்துக் கணக்கான பேர மாத்தி விட்டுட்டா. லூசு. லோகம் தெரியாத பொண்ணு பாவம். பல்லாண்டு பாடுபட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்திக்கு சிலை வைச்சமோல்யோ? இவ்ளோ பெரிய சாதனைய ஒத்த காசு வாங்கிக்காம, தனீ மனுஷியா, போராடி இத்தனை நல்ல காரியங்கள் இவ பண்ணிருக்கா. தனக்குத்தானேன்னு தானே காங்ரஸ்காரன் சொல்லிண்டுருக்கான். மாயா பாவம், தனக்குத்தானே இவளுக்கு ஒரு மெமோரியல் கட்டிண்டா என்ன தப்பு? பகவானே! யானை ரூபத்துல இருக்கற நீதான் இவளுக்கு ஹெல்ப் பண்ணனும்.
ராகுல் யாராராத்துக்கோ போறானாமே. பாருங்கோ, இவா என்னை மாதிரி சாதாரணப் பட்டவாள எல்லாம் தங்காத்துக்கே கூப்ட்டு எத்தனை உபஜாரம் பண்றா.
லோகத்துல நூறு ராகுல் வருவான், ஆயிரம் முலாயம் பூசறவன் வருவான், இந்தப் பொண்ணு மாதிரி இன்னொத்தி ஜனிப்பாளோ? ராமதாஸ் அட்டை வாலா, ஜூசு வந்துடுத்தான்னு கேப்பானே சிங்கு, இவாள்லாம்தான் கொஞ்சம் நல்லவா. மழை அப்பப்போ பெய்யர்து பாருங்கோ, அது இவானாலதான், புரிஞ்சிதோ?
சமீபத்துல அஞ்சு வருஷம் முன்னாடி எங்காத்து திண்ணை சுவத்துல சில வாண்டுகள் இவா மூஞ்சிய வரஞ்சு அதுக்கு மீச வேற போட்டத்துலேந்து அவாள என் நெஞ்சுக்குள்ள பெண் பாரதியாராவே கண்டுண்டுருக்கேனாக்கும். அதுனால வருஷா வருஷம் இவ ஐம்பதாவது பொறந்தநாளுக்கு நீங்கல்லாம் ஒரு கோடி ரூபாக்கு கேஷ் அனுப்பிடுங்கோ? பணங்காசெல்லாம் பெரிசில்லைன்னா. மனுஷா முக்கியம். என்ன நாஞ் சொல்றதுன்னேன்.
தோ பாருங்கோ. யானையும் கருப்புத்தான், ஒபாமாவும் கருப்புத்தான். அதுனால இந்த பிரைம்மினிஸ்டர் கிரைம்மினிஸ்டர்ன்னு சொல்லிண்டேல்லாம் அவள தரங்குறைச்சுக்க குழப்பாதீங்கோ. அதெல்லாம் சின்னப் பசங்களுக்கு அவளே விட்டுக் கொடுத்துடுவாளாக்கும்.
நேக்கு இந்த பாலிடிக்ஸ்லாம் ஒரு எழவும் புரிய மாட்டேங்கறதுன்னா!!
.
12 comments:
விதூஷ்!
என்ன ரொம்ப எழுத்துப் பிழைகள் இருக்கே?!
மாமிக்கு சரியா எழுத வராதா?!!
பேஷ்! பேஷ்! மத்தபடி எல்லாம் நன்னா இருக்கு போங்கோ!
-கேயார்
விடு ஜுட்!
நாந்தேன் ·பர்ஸ்ட்டு!!
-கேயார்
விதூஷ்!
எந்த பால் போட்டாலும் சிக்சர் அடிக்குரீஙகளே எப்பிடி அது ?
!!!!!!!!!!!!!!!!
தலைப்பு மிகசரிங்க....
வலைபூவ மாற்றி...ப்ளாக் டக்கரா இருக்கே! கீப் இட் அப்!
படிக்குறதுக்குள்ள.. யப்பா.. படிக்கும்போது tongue twister மாதிரி இருந்தது :-)
படிச்சி முடிக்கும் முன்னே நாக்கு தள்ளிபோச்சி.. எழுதினது யாரு.. என்னை விட அதிகமா எழுத்து பிழை இருக்கு. எந்த ஊரிலே கள்ளு கடை இருக்குன்னு சொன்ன கொஞ்சம் வசதியா இருக்கும்.
கேயார், நேசமித்ரன் , Sivaji Sankar " உழவன் , நசரேயன் எல்லோருக்கும் நன்றிங்க. எழுத்துப் பிழைகள் தெரிந்தே செய்ததுதான். பேச்சு வழக்கில் அப்படித்தான் பேசுவதால் அப்படியே பாஷை உணர்வு தருமே என்று எழுதினேன். உங்கள் நாக்கெல்லாம் சுருட்டிக் கொண்டு விட்டதா? :))
//நேக்கு இந்த பாலிடிக்ஸ்லாம் ஒரு எழவும் புரிய மாட்டேங்கறதுன்னா!! //
நேக்கும் இந்த பதிவோட பாலிடிக்ஸ் புரியலை மாமி.. :)
புது டெம்ளெட் நல்லா இருக்குங்க..
எல்லாரும் உரைநடைத் தமிழில் ஜல்லியடிக்கிறப்போ இந்த மாதிரி இடுகைகள் சுவையா இருக்கு. என் பிளாக்கில் சில்லகிச்சு ஓரிஉ வார்த்தைகள் சொல்லி லிங்க் தரத் தங்கள் அனுமதி தேவை
சிலாகிச்சு ஓரிரு வார்த்தைகள்
நன்றி சஞ்சய்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. :)) புது டெம்ப்ளேட் நிறைய வேலை வாங்கிவிட்டது :( இருந்தாலும் ரொம்ப ரசிச்சு செய்தது. நல்லா இருக்குன்னு சொன்னத்துக்கு நன்றிங்க.
லதானந்த்: என் பதிவு உங்களுக்கு இரசிப்பாய் இருந்ததில் மகிழ்ச்சி. ரொம்ப நன்றிங்க.
லிங்க் தருவது பற்றி: இதொண்ணும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பதிவில்லங்க. :)) இதற்கு முக்கியத்துவம் தரவேண்டியது தேவைதானா?
--வித்யா
Post a Comment