பெரிய்ய தேவதாஸ் பரம்பரையாக்கும்

இந்த மாதம் நான் எப்போதும் எழுதும் அந்த மகளிர் பத்திரிக்கைக்கு விஷயம் ஏதும் இல்லையே என்று ஒரு வாரமாய் மண்டை குடைச்சல். என்ன செய்யலாம்? பொறுப்பாசிரியர் மேடம் வேறு "என்ன ஆச்சு" கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

ரொம்ப நாள் கழித்து ஒரு நண்பனைப் போல இன்றுதான் அவனைச் சந்தித்தேன். அவனுக்கு VLCC விளம்பரத்தில் இருக்குமே அதே போல ஒட்டிய வயிறு, களைத்துப் போன, வெளிறிய முகம், குழி விழுந்து பஞ்சடைந்த கண்கள், என்று அப்படியே என் போலவே. தரையில் புரண்டு புரண்டு ஏதோ உளறிக் கொண்டே இருந்தான். நிறைய குடித்திருப்பான் போல.

ஆமாம் இந்த குடிகாரர்கள் எல்லாம் கரெக்டா குப்பைத்தொட்டிக்கருகிலேயே தேவதாஸ் மாதிரியே விழுந்து கிடக்கிறார்களே அது எப்படி? எத்தனை பாட்டில் குடித்தானோ தெரியவில்லை. நாய் ஒன்று தன்பங்கு எச்சிலை சோத்து மேல் விழுந்து கிடந்த வில்லனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

"சொக்குதே மனம்ம்...." அப்படியே ஜெயா டீவீ பிரியா சுப்பிரமணியம் மாதிரியே பாடிக் கொண்டிருந்தான். குரலும் உச்ச ஸ்தாயிக்குப் போகும்போது ஸ்லேட்டில் கீறினால் பல் கூசுமே அப்படி கிரீச்சிட்டது. "அடிக்கிற கைதான்" பி.சுசீலா மாதிரி ஹக்க்கென்றுஅடிக்கு ஒருதரம் விக்கல் வேற. எல்லாம் காலக் கேடு. ஹும்.

எனக்கோ ரொம்ப நாளா ஒரு பழுத்த குடிகாரன்கிட்ட நேர்காணல் செய்ய யோசனை உண்டு, அப்படி என்னதான் இருக்குங்க அந்த சைடு டிஷ்ல? என்று ஒரு தரமாவது கேட்கணும்னு.

"என்னப்பா ஆச்சுன்னு" கேட்டுக் கொண்டே "பாத்து பாத்து" என்று சொல்லிக் கொண்டே "அவர கொஞ்சம் உக்காத்தி வைங்கப்பா" என்று அருகிருந்த ஆட்டோகார நண்பர்களிடம் கேட்டுக் கொண்டேன். அப்படியே அவர்கள் அவனை அலாக்காத் தூக்குவதையும் நாலஞ்சு கிளிக்கிக்கொண்டேன்.

"டபுள் டிகாக்ஷன் ஊத்தி ஐஞ்சாம் நம்பர் டேபிள்க்கு ஒரு கா..ஆஆஆஆ..பி" என்று சொல்லிக் கொண்டே போனார் சர்வர். அதையும் குடித்து விட்டு அரைக் கண்ணால் என்னைப் பார்த்தான். எங்கே வாந்தி எடுத்து விடுவானோ என்று வேறு பயமாக இருந்தது. கொஞ்சம் தள்ளியே அமர்ந்துகொண்டேன்.

"என்னப்பா இது கோலம். இத்தனை சின்ன வயசுல" என்று ரொம்ப அக்கறையோடு கேட்டேன். "எங்கேயாவது நல்ல டாக்டர்கிட்ட போகக் கூடாது. வயிறெல்லாம் எரிஞ்சு போயிருக்குமா?"

அவன் என்னை அதிசயமாய் பார்த்தான் "என்னாங்க அப்படி ஆயிருச்சு எனக்கு" என்று கேட்டான். "அப்ப்ழி எதும் மருந்து ஷாப்தா எதுக்குங்க ஷாப்டனும்?" என்று எதிர்கேள்வி கேட்டான்.

"ஏதாவது நல்லது நடக்கும்னுதான்"

“நான் இப்போ நல்லா ஷாப்ட்ருக்கேன் தொரிதுல்ல?” என்றான்.

“நான் அந்த சாப்பிடுறதச் சொல்லலைங்க, மருந்து.. மருந்து” என்று உரத்துச் சொன்னேன்.

“என்னங்க பச்ச புள்ள மாதிரி... இப்ப மருந்துதான ஷாப்ட்ருக்கேன்” ஹெ ஹெக் என்று சிரித்துக் கொண்டே விக்கினான்.

எனக்கோ கொஞ்சம் பொறுமை இழப்பு ஏற்பட ஆரம்பித்தது. கொஞ்சம் கோபமான குரலில் எழுந்து நின்று “மருந்து சாப்டா இதோ இப்படி இருக்கமாட்ட நீ,” என்றேன்.

“மருந்தானது இம்மருந்து
என் மனதுக்கதுவே விருந்து
தள்ளாடுறேன் நானே,
தாலாட்டுதே காற்று
சுற்றுகிறேன் நானே
தட்டாமாலையானது வானே” என்று கவிதை வேறு சொன்னான்.

“நீங்க வேற மேடம். இவனுக்கு தினப்படி இதுதான் பிழைப்பு” என்றான் அந்த சர்வர்.

“காலையில் கம்யூட்டர் மாலையும் கம்யூட்டர்
தினமும் சாட்டிங்கில் செய்வேனே மின்அரட்டை
வருவேன் என்றாளே கொஞ்ச நாள் ஆனதும்
பணமெல்லாம் நெஃப்டில் டிரான்ஸ்பர் ஆனபின்
மொக்கயாண்டி ஆனதும் ஆனேனே பரட்டை” என்று தத்துவப் பாடல் வேறு பாடினான்.

“உங்க பேரு என்னங்க?” என்று மீண்டும் பொறுமையாகக் கேட்டேன்.

“பீர்க்கரணை கள்ளழகர் மகன் சுந்தரம்-ங்க”

“விளங்கிடும்” என்றேன் நான்.

“என்னை குடிகாரன் என்று நினைக்கவேண்டாம். நானாக் குடிக்கலைங்க. என் கையில் இந்த பாட்டில் திணிக்கப்பட்டது. யாரு திணிச்சாங்க தெரியுமா? பாழாப்போன உலகம். நெஞ்சு வலிக்குதுங்க...” என்றான்.

“ ஆமா இப்படிக் குடிச்சா?” என்றேன்.

“ அட..நீங்க வேற, இது காதல் வலி” என்று அழுதான். “அஞ்சலை அஞ்சலை... வாடி.. திரும்ப வாடி” என்று கத்திக் கூப்பிட்டான். நான் சுற்றி முற்றி திரும்பிப் பார்த்தேன். யாரும் வரவில்லை.

“அவ போயிட்டா, வரமுடியாத இடத்துக்கே போயிட்டா. எப்பூடி வருவா?” என்று மீண்டும் அழுதான்.

“யாரார் பேரச் சொல்லுவேன். என் அப்பனால் கொஞ்சம் குடிச்சேன் அவ அப்பனால் கொஞ்சம் குடிச்சேன். அவ நிம்மதியாப் போயிட்டா. என் வேலையும் போயிருச்சு. இந்தக் கேவலமான நிலையில ரோட்டுக்கு வந்தப்பபுறம் தான் என் வீட்டின் நினைவே வருதுங்க. உங்க கால்ல விழுந்து கும்பிடறேங்க, என்னை இங்கிருந்து வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விடுங்க” என்று என் காலில் விழப்போனான். பதறி எழுந்தேன். மனம் மிகவும் சோர்ந்து போனது.

"நான் செத்துட்டேன்னு வைங்க. என்னோட சேத்து ரெண்டு பாட்டிலையும் பொதச்சுருங்க. அப்பப்போ யமனுக்கும் கொஞ்சம் தரனுமில்ல." என்றான்.

.

5 comments:

பூங்குன்றன்.வே said...

உங்க பிரண்டை நினைச்சா பாவமா தான் இருக்குங்க.முதல்ல எதாச்சும் ஒரு டாக்டர் கிட்ட கூட்டிட்டுபோங்க.நல்ல பதிவு.

நேசமித்ரன் said...

arumainga vithyaa

nallaa irukku

நசரேயன் said...

கீழ்பாக்கத்திலே சேத்து விடுங்க

நந்தாகுமாரன் said...

இந்த மஹாமொக்கைப் புனைவில் ஒரு குடிகாரனின் privacy கெடுக்கப்பட்டிருக்கிறது

Unknown said...

நந்தா:
அதுனாலதான் இதை புனைவு என்றேன். :))

Post a Comment