புர்கா போட்டுண்டா என்ன

எனக்கு இன்னும் புர்கா, பக்டி, கூங்கட் போன்றவற்றை அணியும் அவர்களது கலாச்சாரமோ இல்லை அவர்களது புனித நூல்களையோ முழுமையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் பர்தா தேவையா இல்லையா என்னவென்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லாத எனக்கு இதென்ன கேள்வி?

இப்போதெல்லாம் ப்யூட்டி பார்லர் போய் வெய்யிலில் கருத்துப் போன என் தோலை வெளுக்கச் செய்யும் பிளீச்சிங், ஸ்கின் டோனிங் போன்றவற்றுக்கு சில ஆயிரங்களை செலவழித்து விட்டு, இரு சக்கர வாகனங்களில் போகும் போதும்,

அக்னி நட்சத்திரத்தின் போது சென்னை அண்ணா சாலை முதல் தம்புரான்பட்டி வரை இருக்கும் மக்கள் அனைவரும் ஈரத்துண்டை தலையில் போட்டுக் கொண்டாமாதிரியே நானும்,

பன்றிக் காய்ச்சல் பயத்தில் உலகம் முழுதும் இருந்த பகுத்தறிவாளர்களும் செய்ததையும் போலவே, நானும் ஏதோ ஒரு காரணத்தால் பாதுகாப்பு கருதி, துப்பட்டாவையோ, கர்சீப்பையோ இல்லை துணிக்கிழிசலையோ, இல்லை ஐம்பது ரூபாய்க்கு விற்ற மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாஸ்க் அல்லது ஏதோ ஒன்றையோ அணிந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டேன்.

அதே வாயால் பேசும்போதும் 'பெண்ணடிமைத்தனம்' என்று நான் பேசும் போதும் சிறிது யோசித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும். ஆண்களிடம் இருந்து பெண்ணைப் பாதுகாப்பது என்று இன்னும் ஏதேதோ காரணங்கள் கூறினாலும், எனக்கு தோன்றிய ஒன்றையும் பகிர விரும்புகிறேன்.

பாலைவனங்கள், மணற்பகுதிகள், அதிக வெய்யில் சூடு, தூசிக்காற்று மற்றும் அனல் வீசும் காற்றுடைய பகுதிகளில் வாழும் ராஜஸ்தானியர்கள், அரபியர்கள், முகமதியர்கள்  வாயையும், மூக்கையும் மறைக்கும் முகத்திரை (PARDA / BURKA) மற்றும் பக்டி (PAGDI) என்ற தலைப்பாகை அணிகிறார்கள். இதனால் என்ன லாபம்? இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சுற்று சூழல் மாசிலிருந்து தம்மைப் பாதுகாக்க இந்தமாதிரி எல்லாம் துணிகளையோ அல்லது உடலையே மறைக்கும் உடையோ அணிய வேண்டியுள்ளது.

இன்றைக்கு சென்னையில் இருக்கும் அனல் காற்றுக்கும், தூசிக்கும், கார்பன் மாசுக்கும் தினமும் நான் என் கண்ணைத் தவிர முகத்தின் எல்லா பகுதிகளையும் துப்பட்டாவால் மறைத்துக் கொண்டால்தான் வீசிங், தொண்டை எரிச்சல், வராமலும், கண்ணிலும் வாயிலும் மண் துகள்கள் விழாமலும், அதற்கும் மேல் ஒரு ஹெல்மெட் ஒன்றையும் அணிந்து கொள்ள வேண்டியிருப்பதால், இருக்கும் கொஞ்ச நஞ்ச தலை முடியும் கொட்டாமல் இருக்க தலைக்கும் ஒரு துணியை போட்டு மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கண்ணில் தூசி விழாமல் இருக்கவும், UV கதிர்களிடமிருந்து தப்பிக்கவும், வெயிலில் கண் கூசாமல் இருக்கவும், ஒரு கறுப்புக் கண்ணாடியும் அணிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இது போதாது என்று என் கைகள் கருக்காமல் இருக்கவும், புடவை கட்டி டூ வீலர் ஓட்டும் போது இடது பக்கம் புடவைத் தலைப்பு விலகி விடும் பயத்திலும், கிளவ்சோ இல்லை, காட்டன் முழுக்கைச் சட்டை ஒன்றையும் மேலே அணிந்து கொள்ளவும் வேண்டி இருக்கிறது.

சிக்னல் போன்ற இடங்களில் கால் கீழே ஊன்றினால் புடவை மேலே ஏறிக்கொண்டு சில நேரம் ஆடு சதைப் பகுதிகள் வரை தூக்கிக் கொண்டு விடுவதால், எல்லோர் பார்வையையும் தவிர்க்கவென  ஒரு டைட்ஸ் ஒன்றையும் அணிந்து கொண்டால்தான், என்னால் மாற்று சிந்தனைகளோ பயமோ இன்றி அலுவலகத்துக்கு புடவை அணித்து, இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடிகிறது. அட தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டுமே என்றளவுக்கு இன்னும் துணியவில்லையோ என்னவோ போடா மாதவா.....

இங்கே சிக்னலில் எப்போது இவள் புடவை விலகும் - கணுக்கால் தெரியும், நாம் பார்க்கலாம் என்று மற்ற வாகன ஓட்டிகள் காத்திருக்கிறார்கள் என்றோ, கழுகுக் கண்கள் என்றோ, ஆணாதிக்கம் என்றெல்லாமோ, ச்சே இந்த உலகமே மோசம் என்றோ நான் கூற வரவில்லை.

என் சொந்த விருப்பு வெறுப்பின் பேரில், இதெல்லாம் நான் செய்கிறேன். அதே போல இந்த மாதிரி சுற்றுச்சூழலிலிருந்து தம்மை பாதுக்காக்க யாரோ ஒருவர் ஏற்படுத்திய சில பழக்கங்களை, காலப்போக்கில் ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதியானது போலாகியதோ என்னவோ?

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் எழுதியிருப்பதையும் பாருங்களேன்.

இதை படிச்சதும் தோன்றியதை சொல்லலாமே என்ற உணர்வுதான். சரியோ தவறோ? என் தினசரி டூ வீலர் ஆடை ஆயத்தம் செய்வதற்கு பதிலாக நானும் ஒரு புர்கா வாங்கி போட்டுண்டா என்ன? அதையே கொஞ்ச நாள் கழிச்சு சட்டமாக்கிட மாட்டீங்களே?.

25 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் தினசரி டூ வீலர் ஆடை ஆயத்தம் செய்வதற்கு பதிலாக நானும் ஒரு புர்கா வாங்கி போட்டுண்டா என்ன? //

உங்களுக்கு அதில் சவுகர்யம் கிடைக்கும் பட்சத்தில் அதை அணிவதில் தவறேதுமில்லையே?

நமது விருப்பு வெறுப்புத்தானே முக்கியம்.

திருமதி. சகுந்தலாவின் பதிவு கொஞ்சம் புரிதலைத்தந்தது. நீங்க எழுதிய விதமும் நன்றாக இருந்தது.

Asif said...

hi

Asif said...

test message

மர தமிழன் said...

உண்மைதான் சென்னை வெயிலில் வெளியில் தெரியும் உடலின் பாகமெல்லாம் கருப்பதோடு அரிக்கவும் செய்கிறது, அட பர்கா வை விடுங்கள் அம்மணி போகிற போக்கில் ஸ்பேஸ் சூட் போடவேண்டி வந்தாலும் வரும்.

வால்பையன் said...

தேவைக்கு அணிவது வேறு!
கட்டாயமாக்குவது வேறு!

நேசமித்ரன் said...

:) நல்லா எழுதி இருக்குறீஙக !!

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
தேவைக்கு அணிவது வேறு!
கட்டாயமாக்குவது வேறு!
//

வால் !! விதூஷ் கொடுத்த லிங்கை படித்து பார்த்தால் நலம்.நன்றி விதூஷ் பகிர்வுக்கு.

ஒரு சின்ன ஆங்கில போயம்.ஒரு முஸ்லிம் பெண் எழுதியது.ஹிஜாப் பற்றி !!!


// You look at me and call me oppressed,
Simply because of the way I'm dressed,

You know me not for what is inside,
You judge the clothing I wear with pride,

My body is not for your eyes to hold,
You must speak to my mind, not my feminine mould,

I'm an individual. I'm no man's slave,
It's Allah's pleasure that I only crave,

I have a voice so I will be heard,
For in my heart I carry His word,

"O ye women, wrap close your cloak,
So you won't be bothered by ignorant folk".

Man doesn't tell me to dress this way,
It's law from God that I obey,

Oppressed is something I'm truly not,
For liberation is what I've got,

It was given to me many years ago,
With the right to prosper, the right to grow,

I can climb mountains or cross the seas,
Expand my mind in all degrees,

For God Himself gave us liberty,
When He sent Islam, to you and me!//

வால்பையன் said...

//வால் !! விதூஷ் கொடுத்த லிங்கை படித்து பார்த்தால் நலம்.நன்றி விதூஷ் பகிர்வுக்கு.//

அங்கேயும் அதை தான் சொல்லுவேன்!

இஸ்லாமியர்கள் அனைவரும் தாடி வைத்தே ஆகவேண்டும் என்று சட்டம் போட்டால் நல்லாவா இருக்கும்!

உங்க இஷ்டம் வச்சிகிறிங்க

கல்யாணி சுரேஷ் said...

நல்ல பதிவு.

சந்ரு said...

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்

ரௌத்ரன் said...

சௌதில இருந்து கொண்டு இதை பற்றி ஒன்றும் சொல்ல தோனல...escape :))

நசரேயன் said...

உள்ளேன் டீச்சர்

நட்புடன் ஜமால் said...

அதையே கொஞ்ச நாள் கழிச்சு சட்டமாக்கிட மாட்டீங்களே?]]

ஹா ஹா ஹா நல்லா சிரிச்சேன் ...

Vidhoosh said...

நன்றி அமித்து அம்மா.. :)

அஸிப்: ???? என்ன சொல்ல நினைத்தீர்கள். :(

மரத்தமிழன்: அதே அதே :(

வால் அருண்: இப்போல்லாம் ஹெல்மெட்டே கட்டாயமா அணிய வேண்டும் என்பதால்தான் என்னைப் போன்ற sinus பிரச்சினை உள்ளவர்களும், என்னிஷ்டம் என்று அடம் பிடித்தவர்களும் ஹெல்மெட் அணிகிறார்கள். ஏறத்தாழ பன்னிரண்டு வருடமாய் இரு சக்கர வாகனம் ஓட்டும் நான், இப்போது இரண்டு வருடமாகத்தான் ஹெல்மெட்டே அணிகிறேன். :( அதே போலத்தான் புர்கா முறையும் காலப்போக்கில் கட்டாயம்/சட்டமாக ஆக்கப்பட்டிருக்கலாம். தெரியவில்லை. நான் யோசிக்கறது இப்படித்தான் ... :)

நன்றி நேசன்

அ.மு.செய்யது: நல்ல கவிதைங்க. சுதந்திரம் நாம் அணியும் உடையில் இல்லை என்பதில் எனக்கும் மாற்ற முடியாத நம்பிக்கை உள்ளது.

வாலு: காதல் தோல்வி அடைந்தவர்களும், கவிஞர்கள், ஓவியர்கள், சாமியார்களும்தான் தாடி வளர்கிறார்கள். இதெல்லாம் போய் .. :)) அப்புறம் எல்லோரும் பேன் வந்து கஷ்டப் படுவாங்க..:))

நன்றி கல்யாணி

நன்றி சந்ரு

ரௌத்ரன் : ஹும்ம்ம்

நசரேயன்: அட்டெண்டன்ஸ் குறிக்கப்பட்டது :)) எப்பயுமே இப்படித்தானா? உங்க வீட்டம்மிணி பாவம்...:))

ஜமால்: ஒரு பயம்தான் நண்பரே... :))

--விதூஷ்

இன்றைய கவிதை said...

சிரிக்கவும் வைத்து,
சிந்திக்கவும் வைத்து,

அங்கங்கே ஆண்களுக்கு
'பஞ்ச்'-ம் வைப்பது....

விதூஷ்-க்கு மட்டுமே முடியும்!!

'புர்கா போட்டுண்டா' தலைப்பிலேயே
இந்து-முஸ்லீம் ஒற்றுமை தெரிகிறது அம்மணி!!

-கேயார்

S.A. நவாஸுதீன் said...

அருமை வித்யா. திருமதி சகுந்தலாவின் இடுகை பகிர்வுக்கும் நன்றி.

வால்பையன் said...

//இப்போல்லாம் ஹெல்மெட்டே கட்டாயமா அணிய வேண்டும் என்பதால்தான் என்னைப் போன்ற sinus பிரச்சினை உள்ளவர்களும், என்னிஷ்டம் என்று அடம் பிடித்தவர்களும் ஹெல்மெட் அணிகிறார்கள். ஏறத்தாழ பன்னிரண்டு வருடமாய் இரு சக்கர வாகனம் ஓட்டும் நான், இப்போது இரண்டு வருடமாகத்தான் ஹெல்மெட்டே அணிகிறேன். :( அதே போலத்தான் புர்கா முறையும் காலப்போக்கில் கட்டாயம்/சட்டமாக ஆக்கப்பட்டிருக்கலாம். தெரியவில்லை. நான் யோசிக்கறது இப்படித்தான் ... :)//


தடுப்பூசி போட்டு கொள்ளுதல் கட்டாயமயமாக்கப்படனுமா இல்லையா!?
ஏன் இன்னும் பண்ணலை,

உயிர் காக்கவே தலைகவசம்,

பர்தா எவ்வகையில் உயிர் காக்கிறது!?

சுழியம் said...

படங்கள்: முஸ்லீம் பெண்கள் பர்தா அணியவேண்டும் என்று முஸ்லீம் ஆண்கள் சொல்வதன்காரணம் என்னவென்று யோசிப்பவர்களுக்கு இந்த படங்க்ளைபார்த்தால் தெரியும்.


http://ezhila.blogspot.com/2009/11/blog-post_24.html

சுழியம் said...

Hope this also answers.

சுழியம் said...

In the Islamic countries and other parts of the world like India there are plenty of acid throwing on women by muslims; but men are not punished with the acid. Why?

It looks like the Abrahmic mentality is against women. It is the Eve who is condemned for the fall of adam and the entire humanity. May be that is the subconcious reason the islamic cults demand women to hide themselves - get covered you shame. Wear a purdah !!

That is the reason they are against Vande Mataram - the beautiful song praises the land as motherland and not a fatherland - glorification of women. We muslims donot want to sing the song !

This hatred is making them attack the part of a lady that is allowed to be shown outside - the face.

They do not want to see even the face. It is the face where the beauty of feminity is alive - so destroy it.

Here is a site that gives horrid actions of abrahamic mindset.

Warning: If you love women, please do not visit.


Terrorism that's personal (12 images) http://blogs.tampabay.com/photo/2009/11/terrorism-thats-personal.html

வெ.இராதாகிருஷ்ணன் said...

தப்பே இல்லை. நல்லதொரு அலசல்.

சுழியம் said...

Dear writer,

I request you to check since when burqa has come into practice and why.

And please write another article with your findings.

Vidhoosh said...

நன்றி சுழியம்.
I will try. :)

சுழியம் said...

Fatwa against Muslim women

September 7, 2008 The Federation of Muslim Jammat, in Muthupettai region in Tamil Nadu's Thanjavaur district, has issued a fatwa against Muslim women for using mobile phones

The following muslim site proudly announces this fatwa:

http://www.muthupettai.com/index.asp

Ethicalist E said...

இங்கு பாய்ந்து வந்து பின்னூட்டம் போட்ட இஸ்லாமிய மதவாதிகளே இதுக்கு ஏதாவது பதில் தாருங்கள்.

மத வெறியர் வாஞ்சூரும் பதில் தரலாம்


http://www.tampabay.com/blogs/alleyes/2009/11/terrorism-thats-personal.htmlPost a Comment