டிராகுலாவின் காதலி


சில செல்லாக் காசுகளை வங்கியில் மாற்றினேன்
என்னையே தின்றுவிடும் தேளாகக் கொட்டிச்
சிதறியவைகளில் சிலதை மட்டும் எடுத்துச்
சேகரித்தவளின் புதைமணற் சிரிப்பில்
கன்னத்துப் பக்கமாய் இரண்டு பற்கள்
வியர்த்திருந்தவென் உதடுகள்
assorted கடவுள்களை அழைத்ததும் வந்தான்
காக்க காக்கவென முனகினேன்
S.Kanakavel என்றதொரு அடையாள அட்டை
மாட்டியிருந்த அவன் கதவு திறப்பவன்
கழுத்தில் மெல்லப் பதிந்தாள், மென்றாள்,
ஜீரணித்தாள், நான் இங்கு இல்லை
வெளித்தள்ளிய அவன் நாக்கு பிளவு பட்டு நீண்டது
சிதறடித்துக் கொண்டே போன சில்லரைகளைச் சேகரித்து
வந்தவளுக்குத் தெரிந்திருக்கும் என் இருப்பு
டார்லிங் என்றவளுக்கு பதில் சொல்ல யத்தனித்தது
நிலைக்கண்ணாடி பார்த்து ஹிஸ்ஸுறுமியது நானோ?
ஆயிரம் துண்டாகச் சிதறிக் கிடந்தது நிலவு
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது காசுகள்
.

பதிவர்/கவிஞர் நந்தாவின் டிராகுலாவின் காதலி 2, 1

இவைக் கொடுத்தத் திகிலில் எழுதியது. :)) நந்தா - நாலு வார்த்தை நறுக்குன்னு (திட்டி) சொல்லிட்டு போகணும்.



.

18 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

திட்டறதுக்கு நந்தா மட்டும் தான் வரணுமா? மத்தவங்க வரக் கூடாதா?

சிவாஜி சங்கர் said...

திட்டற அளவுக்கு தப்பு ஒண்ணுமில்ல..விதூஷ்..

Ashok D said...

பீதிய கெளப்பறாங்களாய்யா... செம்ம காமடிபோங்க..

விக்னேஷ்வரி said...

ஹேய், ரொம்ப நல்லாருக்கு வித்யா.

உயிரோடை said...

நீங்க‌ளுமா ந‌ந்தா க‌விதைக‌ளின் பாதிப்பான்னு கேட்க‌ வ‌ந்தேன் நீங்க‌ளே சொல்லிட்டீங்க‌. ப‌ய‌மா இருக்குங்க‌ ப‌டிக்க‌வே

வால்பையன் said...

நான் சின்னபையன்,
இப்படியெல்லாம் பயமுறுத்தக்கூடாது!

இன்றைய கவிதை said...

புரியலீங்க, நெசம்மாவே!

-கேயார்

(Mis)Chief Editor said...

இதுக்குப் பதிலா உங்க புகைப்படத்தை போட்டிருக்கலாமே?!

இன்னும் 'நிறைய' பயமுறுத்தியிருக்கலாம்!

-பருப்பு ஆசிரியர்

நேசமித்ரன் said...

விதூஷ்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நசரேயன் said...

//சில செல்லாக் காசுகளை வங்கியில் மாற்றினேன் //

எந்த பாங்கிலே

//
என்னையே தின்றுவிடும் தேளாகக் கொட்டிச்
சிதறியவைகளில் சிலதை மட்டும் எடுத்துச்
//

சில்லறையா சிரிப்பா ?

//
சேகரித்தவளின் புதைமணற் சிரிப்பில்
கன்னத்துப் பக்கமாய் இரண்டு பற்கள்
//

பிறகு பல் காதுபக்கமாவா இருக்கும்

//
வியர்த்திருந்தவென் உதடுகள்
assorted கடவுள்களை அழைத்ததும் வந்தான்
//

உதட்டு சாயம் எப்படி வெள்ளையா இருக்கும்

//
காக்க காக்கவென முனகினேன்
S.Kanakavel என்றதொரு அடையாள அட்டை
//

S.Kanakavel உங்க தாத்தாவா ?

//
மாட்டியிருந்த அவன் கதவு திறப்பவன்
கழுத்தில் மெல்லப் பதிந்தாள், மென்றாள்,
//

கழுத்து என்ன கோழி கறியா?

//
ஜீரணித்தாள், நான் இங்கு இல்லை
வெளித்தள்ளிய அவன் நாக்கு பிளவு பட்டு நீண்டது
//

ஜீரணம் ஆகலைனா இஞ்சி காபி குடிக்க சொல்லுங்க

//
சிதறடித்துக் கொண்டே போன சில்லரைகளைச் சேகரித்து
வந்தவளுக்குத் தெரிந்திருக்கும் என் இருப்பு
டார்லிங் என்றவளுக்கு பதில் சொல்ல யத்தனித்தது
நிலைக்கண்ணாடி பார்த்து ஹிஸ்ஸுறுமியது நானோ?
ஆயிரம் துண்டாகச் சிதறிக் கிடந்தது நிலவு
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது காசுகள்
//

பின் மண்டை நவீனத்துவம் ஒண்ணும் புரியலை
.

//
பதிவர்/கவிஞர் நந்தாவின் டிராகுலாவின் காதலி 2, 1

இவைக் கொடுத்தத் திகிலில் எழுதியது. :)) நந்தா - நாலு வார்த்தை நறுக்குன்னு (திட்டி) சொல்லிட்டு போகணும்.
//

ஆமா கண்டிப்பா திட்டுங்க,கவுஜ எழுதும்போது புரியுற மாதிரி எழுதனுமுன்னு

Admin said...

மிக, மிக நல்லாருக்கே...

பழமைபேசி said...

பக்கவடை சுத்திக் கொடுக்குற தாள்ல இருந்தாங்க இதெல்லாம் எடுக்குறீங்க? அருமை! அந்த பக்கவடை எல்லாம் முடிஞ்சுதாங்க? ச்சே, சப்ப்ட்டு எவ்ளோ வருசம் ஆச்சு??

Anonymous said...

//ஹிஸ்ஸுறுமியது நானோ?//

இது நல்லாயிருந்தாலும் என்னமோ ஒட்டாதமாதிரி இருக்கு வித்யா.

Anonymous said...

//S.Kanakavel //

இது Son of Shiva ங்கற அர்த்தத்திலயா எழுதினீங்க? :)

Vidhoosh said...

நன்றி கி.மூ. - ;)) நீங்களும்தான் அடிக்கடி திட்டிறீங்க. ஆனா என் கவித(ற்)கொலைகளை ஆதரித்த முதல் முகம் தெரியா வாசகர் நந்தா. அதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். :))

சிவாஜி: நன்றி

அசோக்: நன்றி. காமெடிக்கும்.

விக்னேஷ்வரி: நன்றி

வால் அருண்: நன்றி

கேயார்: நன்றி. முயற்சிதான். இன்னும் நந்தா வரவில்லை. வந்தாலும் "கேயார்" சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன் என்று சொல்லிட்டுப் போயிடுவாருங்கோ :))

மிஸ்சீப் எடிட்டர்: :)) வெளியிட்டாப் போச்சு.

நேசன்: அவ்வ்வவ்வ்வ்ளோ ஆச்சரியமா. இல்லை இவளா இப்படின்னா..:))

நசரேயன்: தூள் பக்கோடாவை கொத்து பரோட்டா ஆக்கிட்டீரே சாமி.

சந்ரு: நன்றிங்க.

பழமைபேசி: :)) பக்கவடை எல்லாம் தீந்து போயிடுச்சு.

சின்ன அம்மிணி: முன்னாடி வேறமாதிரி இருந்ததை சும்மா வார்த்தைப் புகுத்தல் செய்து பார்த்தேன். R & D கவிதைதான். என் முதல் Halloween கவிதையாக்கும் :))
BTW S.Kanakavel S/o சிவபெருமானேதான். :))


--வித்யா

Vidhoosh said...

நன்றி லாவண்யா. :))

ரௌத்ரன் said...

ஏன் இந்த கொலவெறி???

:))

நல்லாயிருக்கு வித்யா...

நந்தாகுமாரன் said...

அட! not bad at all ... பரவாயில்லையே ... நல்லாதாங்க இருக்கு ... நம்ம கவிதையெல்லாம் நாலு பேர ... ok ... ஒருத்தரயாவது பாதிக்குதுன்னு நெனச்சா கொஞ்சம் சந்தோஷமாத் தான் இருக்கு ... நன்றி

Post a Comment