==========================================================================================
ஊஞ்சல்:
==============================================================================================
ஊஞ்சல்:
==============================================================================================
நம் உடலிலிருந்து வெளியேறும் எண்பது சதவிகித நச்சுக்கள் நம் மூச்சுக்காற்றின் மூலம் வெளியேறுகின்றது. மேலும் ஆழ்ந்த மூச்சிழுத்தல் (Inhalation) மூலம் இரத்த ஓட்டம் சீராகி மனமும் உடலும் அமைதி பெறுகின்றது.
இந்துக்களில் ஒரு பிரிவினர் தன் தினசரி வழக்கமாக மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வது என்று வைத்திருக்கிறார்கள். ஆழ்ந்து கவனிக்கும் போது சந்தியாவந்தனப் பயிற்சிகளில், சூரிய வெளிச்சத்தை உள்வாங்குவதும், மூச்சுப் பயிற்சியும் உள்ளடங்கி இருக்கின்றன.
இந்துக்களில் ஒரு பிரிவினர் தன் தினசரி வழக்கமாக மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வது என்று வைத்திருக்கிறார்கள். ஆழ்ந்து கவனிக்கும் போது சந்தியாவந்தனப் பயிற்சிகளில், சூரிய வெளிச்சத்தை உள்வாங்குவதும், மூச்சுப் பயிற்சியும் உள்ளடங்கி இருக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்கள், நிறைய பிரயாணங்கள் மற்றும் ஓயாத சொந்த மற்றும் புற வேலைகள் ஒய்வு என்பதையே இல்லாமல் செய்து தினமும் உறங்கும் நேரமே ஒன்றிரண்டு மணிநேரம் மட்டும் என்றாகி, பதினைந்து நாட்களுக்கு முன் தீராத தலை வலி மற்றும் கழுத்து வலி உண்டாகி துன்புற்றேன். அதன் விளைவாக நான்காவது முறையாக இப்பயிற்சி வகுப்புக்களுக்குப் போனேன்.
புல்லாங்குழல் ஊதுவது போன்ற இசையான ஒலியோடு மூச்சை உள்ளிழுத்தும், கடல் அலை போன்ற ஒலியோடு மூச்சை வெளி விட்டும் காட்டினார் குருஜி (கணேஷ்).
ஒவ்வொரு முறை வகுப்புக்களுக்குப் போகும்போதும் குருஜி "தினமும் உனக்கென ஒரு மணி நேரம் ஒதுக்கக் கூடாதா?" என்று கேட்பார்.
வழக்கம் போல புன்னைகைத்து "இப்போதெல்லாம் blog எழுதறேன் குருஜி" என்று சொல்லினேன்.
"அதான்" என்றார் சிரித்தார் குருஜி.
நான் என்னவோ "blogging எனக்கு ஒரு மாற்று சிந்தனை மாதிரி குருஜி" என்றே இன்னும் புன்னகைத்துக் கொண்டே சொல்லிவிட்டு வந்தேன்.
வாழும் கலை பயிற்சியில் பல நுணுக்கமான மூச்சு பயிற்சிகள் சுலபமாகப் பின்பற்றும் வகையில் கற்றுகொடுக்கப்படுகின்றது. கஷ்டமான உடற்பயிற்சியை aerobics என்ற வகையில் சுலபமாகினது போல. உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள வாழும் கலை மையத்திற்குச் சென்று முடிந்தால் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறுங்கள்.
"தினோம்தான் மூச்சு விடறோம். இதுக்குப் போயி பாடம் சொல்லிக்கணுமா?" என்று கேட்பவர்கள் கொஞ்சம் மாத்தி யோசிங்க. குருஜிக்களின் கதைகளையும் உரையாடல்களையும் கொஞ்சம் பின்னே தள்ளி விட்டு, பயிற்சி முறைகளை மட்டும் கவனியுங்கள். ஒரே ஒரு முறை சும்ம்ம்ம்ம்மா முயற்சித்துப் பாருங்களேன். காற்றின் மொழி இசைபோல இதமாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து அனுபவித்தேன். பின்ன...சும்ம்ம்மாவா?
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி வான்கட்டே உலகு (27)
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.=============================================================================================
மழை:
==============================================================================================
நண்பர் நேசமித்திரன் அனுப்பிய மின்னஞ்சல் தகவல். மீண்டும் ஒரு அற்புதமான சேவையைத் தருகிறது டாட்டா நிறுவனம். எத்தனையோ குறை நிறைகள் இருந்தாலும், ethics and morale விஷயங்களில் டாட்டா நிறுவனங்களில் உள்ள கட்டுப்பாடு வேறெங்கும் நான் கண்டதில்லை. சரி. விஷயத்துக்கு வருவோம்.
இதய நோய் உள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் அவர்கள் பெற்றோர்களை திக்கித்து விடச் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் தொண்டு அமைப்பு இந்தச் சிகிச்சைகளை இலவசமாகவே செய்கிறது.
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும், மற்ற எல்லோருக்கும் இத்தகவலைப் பரப்புங்களேன்.
ஈ.பி.ஐ.பி ஏரியா, வைட் ஃபீல்டு, பெங்களூர் - 560066 கர்நாடகா, இந்தியா.
போன்: +91-80-28411500, ஃபாக்ஸ்: +91-80-28411508
மின்னஞ்சல்: adminblr@sssihms.org.in
E.P.I.P. Area, Whitefield, Bangalore - 560066 Karnataka, India
Phone: +91-80-28411500, Fax: +91-80-28411508
Email: adminblr@sssihms.org.in
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19
வானம் வழங்கா தெனின். 19
மழை பெய்யவில்லையானால் இந்தப் பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லை
=============================================================================================
பக்கோடா:
==============================================================================================
இதுவும் ஒரு மின்னஞ்சல்தான்.
உங்கள் கார் கண்ணாடிகளில் முட்டை எறியப்பட்டால், Wiper அல்லது Wind Shield Washer (தண்ணீரை spray செய்வது) போன்றவற்றை இயக்கவேண்டாம். இதனால் முட்டை கலக்கப்பட்டு, வெண்ணிறமாக உங்கள் கார் கண்ணாடியில் பால் போல படிந்துவிடும். பார்வையையும் மறைக்கும். இதனால் வேறு வழியின்றி நீங்கள் காரை ஓரமாக ஒதுக்க வேண்டி வரும். வழிப்பறி கொள்ளைக்காரர்கள் இப்போது (இந்தியாவில் இன்னும் ஆரம்பிக்கவில்லை) இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு உங்களை சிக்க வைக்கிறார்களாம். மாறாக முட்டையை உடனே துடைக்காமல் கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று விட்டு நிதானித்துத் துடையுங்கள். ஜாக்கிரதை நண்பர்களே.
எப்படியெல்லாம் பீதியக் கிளப்புறாங்கப்பா!
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். (284)
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
வீயா விழுமம் தரும். (284)
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
==============================================================================================
தேநீர்:
==============================================================================================
==============================================================================================
தொலைதூரக்கல்வி மாணவர்கள் கூடுதலாக பட்டயபடிப்பில் சேர்ந்தால் அவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பல்கலைக்கழக மானியக்கழு மற்றும் தொலைநிலைக்கல்வி குழுமம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி பட்டப்படிப்புகளுக்கான பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரே குறிக்கோள் தொலைதூரக்கல்வி பாடங்களும் நேரடி வகுப்பு பாடங்களும் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பாடத்திட்டங்களும் தரமாகவும் சுலபமாகவும் புரியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. நேரடிப் பயிற்சி வகுப்புகள் பல புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பாடங்கள் பட்ட மேற்படிப்பு, பட்ட படிப்பு, பட்டய மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை உள்ளடக்கியதாகும்.
தொலைதூரக்கல்வி மூலம் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மேலும் ஒரு பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் அல்லது சான்றிதழ் படிப்பினை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தற்போது தொலைதூரக்கல்வி மூலம்பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் படிக்க விரும்பினால் அவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
(நன்றி தினத்தந்தி - 15.11.2009)
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)
காமுறுவர் கற்றறிந் தார். (399)
தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.
==============================================================================================
நிச்சயம் வோட்டுப் போடுங்க. இந்த தமிழ்மணத்தில் இணையவே முடியலையே...:(
==============================================================================================
==============================================================================================
.
10 comments:
அனைத்து தகவல்களும் "பலே" ரகம்...
வாழ்த்துக்கள் விதூஷ்.......
மிக நல்ல பகிர்வு வித்யா
தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
பதிவும் குறளும் மிக சரியான தேர்வுகள்
சமூக அக்கறை ததும்பும் இந்த பதிவுக்கு ஓட்டு போடாமல் ....
இதோ...
தகவல்களும் அதற்கு ஒப்பான குறளுமாய் பதிவு அமர்க்களம்.
நன்றி.
நல்ல தகவல் பகிர்வு வித்யா. பாராட்டுக்கள்
நானும் டாடா க்ரூப்ல இருந்தும் இதை பதிவில் போட தோணாமல் போச்சே. நண்பர் நேசனுக்கு நன்றி.
கலக்குறீங்க !!!
தினமும் ஸாயி மருத்துவமனை வழியாகவே போகும் எனக்கு இது தெரியவில்லை!
-பருப்பு ஆசிரியர்
//மீண்டும் ஒரு அற்புதமான சேவையைத் தருகிறது டாட்டா நிறுவனம். எத்தனையோ குறை நிறைகள் இருந்தாலும், ethics and morale விஷயங்களில் டாட்டா நிறுவனங்களில் உள்ள கட்டுப்பாடு வேறெங்கும் நான் கண்டதில்லை//
டாடா குழுமத்தின் ஊழியன் என்கிற வகையில் எனக்கு இது பெருமையே!
அருமையான பதிவு!!
-கேயார்
எம்புட்டு மேட்டரு!
//http://vidhoosh.blogspot.com/2009/11/16-nov-09.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+pakkodapapers+(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....)&utm_content=Google+Feedfetcher//
உலகமே உங்க யு.ஆர்.ல இருக்கு, அதானாலே தான் பிரச்சனை, இடுகையின் தலைப்பை மாற்றி முயற்சி செய்யுங்க
எவ்வளவு தகவல்கள். சூப்பர் :-)
Post a Comment