மறந்துட்டப் போலருக்கு
பூக்கள் மேகங்களிலும்
நட்சத்திரங்கள் பூமியிலும் போல
மாறிக்கொண்டே இருக்கிறேன்
சில நாட்களாக
வானம் பூமியாகவும்
பூமி மேகமாகவும்
மாறிய ஏதோ ஒரு பொழுதில்
நான் புன்னகைப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது
இன்னதென்றுத் தெரியாதக் காரணங்களில்
என் நோயொன்று கூட
ஒன்றாக இருந்திருக்கலாம்

யாரோ சொல்லிக்கொண்டேப் போனார்கள்
'மனுசனுக்கு மனசெத்து போச்சுடா'
செத்துக்கூட போயிருக்கலாம் சில மனங்கள்

கூரைகளே இல்லாதக் கட்டிடத்தில் 
தூண்கள் மட்டும் இருந்தென்னவென 
தவறிப் புன்னகைத்தே விட்டாலும்
குறை சொல்ல வேண்டாம்
எனக்கிட்ட கைவிலங்கை அறுத்து
சில மனங்களை உடைப்பதும்,
அதற்காக,அழுதது உயிர் விடுவதும் 
எனக்கின்னும் பழகவில்லை

பல நிறங்களை பீய்ச்சும் பட்டக
வானில் விமானம் கிழித்த மேகக்கோடென
வாழ்நாள் முழுதும் புன்னகைக்கும்
வரம் தந்து தொலைந்து போன
உன் கடைசி புன்னகை
'அவன மறந்துட்டப் போலருக்கு'
என்று அவர்கள் சொல்லும்போது மட்டும்தான்
இன்னும் வலிக்கும்.


.

3 comments:

நேசமித்ரன் said...

உணர்தலில் ஆரம்பித்து
புரிதலில் முடித்திருக்கிறீர்கள்.

ரசித்தேன்..!

பா.ராஜாராம் said...

//பல நிறங்களை பீய்ச்சும் பட்டக
வானில் விமானம் கிழித்த மேகக்கோடென
வாழ்நாள் முழுதும் புன்னகைக்கும்
வரம் தந்து தொலைந்து போன
உன் கடைசி புன்னகை
'அவன மறந்துட்டப் போலருக்கு'
என்று அவர்கள் சொல்லும்போது மட்டும்தான்
இன்னும் வலிக்கும்.//

ஆகா!..எவ்வளவு அழகாய்,எவ்வளவு எளிதாய்,எவ்வளவு உறுதியாய் உணர்த்துகிறீர்கள் வித்யா!

பா.ராஜாராம் said...

தலைப்பு ரொம்ப பிடிச்சுருக்கு வித்யா...

Post a Comment