நாமெல்லாம் என்னவோ சம்சார சாகரத்தில் மூழ்கித் தவித்துக் கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் மறைந்திருக்கும் பாலங்கள் போலவே சில நட்புக்களும் சொல்லப்படாமலேயே இருக்கிறது. நாம் யாரென்றே தெரியாத ஒருத்தர் நம் எழுத்தின் மூலம் நட்பாகி 'உன் எழுத்து எனக்கும் பிடிக்கிறது' என்று சொல்லும்போது ஏற்படும் உணர்வு மகிழ்ச்சி என்ற வார்த்தையினால் அளவிடுவதும் குறைவாகவே இருக்கிறது.
எனக்கு முதலில் அகநாழிகை வாசு கொடுத்த விருதை பகிர்ந்தளித்த மாதிரியே, வீட்டுப்புறா சக்தி, சந்ரு, மற்றும் பா.ராஜாராம் (interesting blog மற்றும் scrumptious (means சுவையான) blog awards) கொடுத்ததயும் பகிர இப்போது தகுந்த சமயமாக இருக்கலாம் என்று நம்புகிறேன். தாமதமாக இந்தப் பகிர்தலைச் செய்வதற்கும் மன்னிக்க. இந்த இரண்டு அவார்டுகளையும் இவர்களுக்கு வழங்குகிறேன். இதோ விருதுகள் என்ற நட்புப் பாலம்.
- Finishing touch-ஆக ஒரு பஞ்ச் லைன் தருவதை பழக்கமாக்கி வைத்திருக்கும் ரேகா ராகவன். அவரது இன்னொரு வலைப்பூவான அன்பே சிவம்-மும் ஒரு காரணம்.
- இவர் புதிய பதிவர் இல்லை. நமக்கெல்லாம் நன்றாகவே தெரிந்த நர்சிம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். (Captain நரசிம்மா..புனைவு என்ன ஆச்சுன்னு சொல்ற வரைக்கும் விடமாட்டேன் என்பதையும் அறிக. பதிவர்களும் தமிழர்கள்தானே. பழசை எளிதில் மறந்துர்றாங்க. ஹி ஹி)
- சைடு டிஷ் புகழ் சஞ்சய் காந்தி
- rapp - கேசட் கால தல ஹும்ம்ம்..
- அனுஜன்யா - இப்போலாம் கலர் கலராக எழுதுகிறார். :))
- புத்தகம் - சேரல் என்ற இந்த இளைஞனின் மூன்றாம் பார்வையாக விரியும் புத்தக விமர்சனங்கள். அற்புதமான பல புத்தங்கங்களை அறிமுகம் செய்யும் வலைப்பூ. சேரலை முதன் முதலின் உரையாடல் கதைப் பட்டறையில் சந்தித்த போது, அசந்துதான் போனேன். முதிர்ந்த எழுத்துக்கொண்ட இளைஞர்.
- பின்னோக்கி - இவரது இந்த பதிவுக்காக - பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 3 மற்றும் 1000 தடவை சொல்லியாச்சு
- இராதாகிருஷ்ணன் - தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்
- நந்தா -Cosmic நடை - இவர் எழுதியதில் எனக்கு பிடிக்கும் என்பதை விட பிடிக்காது என்கிற கவிதைகள் நிறைய உண்டு. ஆனாலும் இவர் எழுத்தை இரசிக்கிறேன். :)
- வாரக்குறிப்புகள் எழுதிய D.R.Ashok
- சந்தான சங்கர் - இதற்காக
- அகல் விளக்கு - நல்ல எழுத்து திறமுடையவராக இருக்கிறவர். இன்னும் எழுத வேண்டும். பிச்சைப் பாத்திரம் நான் வியந்த ஒன்று.
- ராமலக்ஷ்மியின் முத்துச்சரம் எனக்கு இவர் எழுதியதில் ரொம்ப பிடித்தது இது
- என் வானம் படைத்த அமுதா - இந்தப் பதிவு ரொம்ப பிடிக்கும் மற்றும் மண்வாசனை
- சின்ன அம்மிணி - இதுன்னு ஒன்றை எடுத்துச் சொல்லணுமா என்னங்கம்மிணி ? ஆனாலும், படிச்சிட்டு நான் ரொம்பநேரம் யோசித்த பதிவு இது.
- விக்னேஷ்வரி - இவர் பன்முகம் கொண்டவர். இவரது இந்தப் பதிவு எனக்கு ரொம்ப பிடித்தது. அப்பப்போ கிசுகிசுக்களும் எழுதுவார்.
- நிலாரசிகன் கவிதைகள்..- ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்ல?
- கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் என்று சொல்லும் மிஸஸ்.தேவ் - இவரது இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும்
- யாத்ரா இவரது கவிதைகளுக்கு பரம இரசிகை நான். நான் படித்த முதல் கவிதை இதோ
- நேசமித்ரன் - இவர் சாதாரணப்பட்டவராக நிச்சயம் இல்லை என்பது மட்டும் உணர முடிகிறது. இவர் பக்கத்தில் நான் சிக்கிக்கொண்ட முதல் நூலிழை இங்கே
- செல்வநாயகியின் நிறங்கள் - இவர் எழுத்தில் நான் படித்த முதல் பதிவு இது
- ரௌத்ரன்- ஜலதரங்கம்... - இவரது நீல வெயில் எனக்கு ரொம்ப பிடிக்கும்
- camera eyed வெங்கிராஜா - எதிர்காலத்தில் ஒரு சிறந்த photographer ஆக வரும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ள மூன்றாம் கண்ணுடையவன். வெங்கிராஜாவைக் கடைசியில் குறிப்பிடக் காரணம் இங்கு David Seymour பற்றியும் நான் பேச விழைந்ததுதான். இதோ David-டின் ஒரு போட்டோ உங்கள் பார்வைக்கும். Land Distribution Meeting, Extremadura, Spain, 1936 என்ற இந்தப் புகைப்படம்.
வெங்கியின் காமெராவும் இப்படிப்பட்ட தனிக்கதைகள் பேசும் ஆற்றல் கொண்டது. இன்னும் தேவை photography மேல் அவரது focus மற்றும் light.
========================
இது ஒரு பகிர்தல் மட்டும்தான். இதை நீங்கள் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம், வழங்காமலும் வச்சுக்கலாம். ;)
அன்புடன்,
-விதூஷ்
.
34 comments:
நன்றி வித்யா. மிக்க மகிழ்ச்சி.
/*நம் எழுத்தின் மூலம் நட்பாகி 'உன் எழுத்து எனக்கும் பிடிக்கிறது' என்று சொல்லும்போது ஏற்படும் உணர்வு மகிழ்ச்சி என்ற வார்த்தையினால் அளவிடுவதும் குறைவாகவே இருக்கிறது*/
உண்மை. உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ஒருத்தர் விடாம ”நல்லவங்க” எல்லாத்துக்கும் கொடுத்துடிங்க போல!
நன்றி அமுதா.
வாங்க வாலு. சமீபத்தில கொஞ்ச நாளா கொஞ்சம் இறுக்கம் தாங்காமல் மௌனித்திருந்தேன். இது ஒரு மாற்று சிந்தனைக்காக. நட்பு என்றும் மகிழ்ச்சி தருமே :) நல்லா எழுதறவங்க இவங்க. அதுக்காகத்தான் :))
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி வித்யா.
மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன்.
விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
//நாம் யாரென்றே தெரியாத ஒருத்தர் நம் எழுத்தின் மூலம் நட்பாகி 'உன் எழுத்து எனக்கும் பிடிக்கிறது' என்று சொல்லும்போது ஏற்படும் உணர்வு மகிழ்ச்சி என்ற வார்த்தையினால் அளவிடுவதும் குறைவாகவே இருக்கிறது.//
இதை நீங்கள் சொல்லாமலிருந்தால் நான் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கக் கூடும். உங்களுக்கு என் பதிலும் இதுவே. இதற்கு நான் தகுதியானவனா இல்லையா ஆராய்ச்சி அவையடக்கம் கடலைப் புண்ணாக்கு எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு உங்கள் பாசத்திற்கு என்றென்றும் நன்றி.
அன்புடன்,
சஞ்சய்காந்தி.
விருதுக்காக வாழ்த்துகளும் நன்றியும் ;)
-ப்ரியமுடன்
சேரல்
உங்கள் விருது பட்டியலில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி வித்யா. முதல் விருது. உங்களிடமிருந்து. மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நல்ல அனைவரும் ரசிக்கக்கூடிய பதிவுகளை எழுத இது மிகவும் ஊக்கமாக இருக்கும். மீண்டும் நன்றி.
பகிர்வுக்கு நன்றி வித்யா.பெற்று கொண்டோம் :))
விருது வாங்குன சந்தோஷத்துல மற்றவர்களை வாழ்த்த மறந்துவிட்டேன். விருதுகள் வாங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
விருதுகளுக்கு நன்றி விதூஷ்...சனிக்கிழமை பதிவர் சந்திப்புக்கு வருவீங்களா?
உங்கள் அன்புக்கு நன்றிங்க வித்யா.
சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்கிறேன்.
இந்த விருது என்னை இன்னும் எழுத உற்சாகப்படுத்துகிறது.
விருது பெற்ற மற்றவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்!
நன்றி வித்யா.
wishes to all
மிக்க நன்றி..புனைவு ரிசல்ட் வரும்ம்..
விருதுக்கு நன்றி வித்யா. விருது பெற்ற எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்.
நன்றி
விருது வாங்கும் தகுதி எனக்கா? ஆயிரம் ஆச்சர்யங்களுடன் வாங்கிக் கொள்ளும் அதே வேளையில் விருது பெற்ற மற்ற பதிவர்களுக்கு என் வாழ்த்தும் பாராட்டும். அளித்து கௌரவித்த உங்களுக்கு நன்றி வித்யா மேடம்.
கே.ராகவன் (ரேகா ராகவன்)
அப்பா..எவ்வளவு இடங்களுக்கு போறீங்க!
நண்பர்களுக்கு வாழ்துக்கள்!
பகிர்ந்தளித்த விதம் அழகு வித்யா
உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
//அப்பா..எவ்வளவு இடங்களுக்கு போறீங்க!// ஆச்சரியமே..
எனது ‘வாரக்குறிப்புகளை’ தேடி கொடுத்தற்கு நன்றி விதூஷ்.
வள்ளலைப்போல அள்ளித்தந்திருக்கிறீர்கள். அழகு.!
நல்ல தொகுப்பு :))
ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க, ரொம்ப நன்றிங்க
நன்றி வித்யா.
விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
:)
vaazhththukkal
விருதைக் குமிச்சிட்டீங்க போல.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பக்கோடா பேரே தூளா இருக்கு
அவார்டு வேற அள்ளிக் குடுத்து அசத்துறீங்க வித்யா
பாராட்டுக்கள்
மற்றவரின் படைப்பினைப் படிப்பதற்கு நேரம் வேண்டும்!
மற்றவரைப் பாராட்ட நல்ல மனம் வேண்டும்!
உங்களுக்கு இரண்டுமே இருக்கிறது!
நல்ல பதிவு, தொடருங்கள்!
-கேயார்
நீங்க கர்ணன் தொடர் எழுதுபோதே தெரியுது இப்படி எல்லாம் எதாவது நடக்குமுன்னு, நீங்க ரெம்ப நல்லவங்க.
பின் குறிப்பு :இதை சகுனி மாதிரி படிக்கவும்
இது மேல சொல்ல எனக்கு டமில் தெரியாது.
அனைவருக்கும் வாழ்த்துகள்!
ரொம்ப நன்றிங்க. எனக்கு இந்த பட்டியலில் வருவதே பெருமை தான். நண்பர்கள், சீனியர்கள் பலருடன் க்ரூப் ஃபோட்டோவில் முகம் சிரிக்கும் சின்னப்பிள்ளை போன்ற சந்தோஷத்துடன்,
வெங்கி.
>> தண்ணீருக்குள் மறைந்திருக்கும் பாலங்கள் போலவே சில நட்புக்களும் >>
அட...எப்டி இப்டி எல்லாம் யோசிக்கறே! :)
விருது வழங்கி பதிவர்களைச் சிறப்பித்தமைக்கு மிகவும் நன்றி வித்யா.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
விருது பெற தகுதி படைத்த 'ஆண்டாளுக்கு கல்யாணம்' கதையை நினைக்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
தங்களுக்கு மிக்க நன்றியும் அன்பு கலந்த வணக்கங்களும்.
Post a Comment