மூன்றாவது பர்த் (உமா சீரிஸ் - ரிலே ரேஸ் கதை)

உமா-வை கதாநாயகியாக்கி ரிலே ரேஸ் தொடர் எழுதணும்னு ரொம்பநாளா மணிஜி கேட்டுட்டு இருக்கற விஷயம். உண்மையிலேயே ப்ளாகிங்ல அது ஒரு பொற்காலம்தான்.

ரொம்ப நன்றாக எழுதும் சிலபலரும் பிரளயத்தில் நோவாஸ் ஆர்க்கில் தொற்றிக் கொண்டது போல பஸ்ஸில் அரட்டைக்கு ஒதுங்கியாகிற்று.

இந்தப் பதிவை நேசன் பஸ்ஸில் பகிர்ந்தபோது அப்பிடியே உமா.. ஞாபகம். இதை ஆரம்பிச்சு வைச்சு, திரும்பவும் full swing-ல பிளாகில் எழுதணும்னு ஆரம்பிச்சாச்சு.

நடிகையாகட்டும், இல்லையா காதலியோ, மனைவியோ, ஜஸ்ட் லைக் தட் பார்க்கிற பெண்ணோதான் ஆகட்டும், வக்கிரமில்லாத க்ஷண நேர ஆராதனைகள் - செய்யப்படவும், செய்யவும் - சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அப்படியொருத்தி மணிஜிக்கு உமாவாகவும், லதாமகனுக்கு கௌரியாகவும் கிடைத்திருக்கிறார்கள்.

இந்த ரிலேவில் மணிஜி, நேசன், பா.ராஜாராம், லதாமகன், விந்தைமனிதன் ராஜாராம் மற்றும் நான் எழுதலாம்னு.. நான் சுமாராத்தான் எழுதுவேன், சும்மா நாமளும் எழுதிப் பாக்கலாம் என்றுதான் நான் இங்கே.

விரும்பினால் இரும்புத்திரை அரவிந்த், பலாபட்டறை ஷங்கர் எழுதலாமே.. அப்புறம் ரைட்டர் விசாவையும் கூப்பிடலாம்னு.. நல்லா எழுதுங்க நண்பர்களே.. :-)

ஆரம்பிக்கலாமா?



மாநிறம், கூர்மையானக்கண்கள், வட்டமுகம். எதிர் பர்த்ததில் அந்த பெண் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தாள். இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர். தனியாகத்தான் வந்திருக்கிறாள். இரவு உணவு சாப்பிட்டாள். நான் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டதால், சின்ன புன்னகையை பகிர்ந்து கொண்டு, பர்த்தை விட்டு இறங்கி கதவருகே சென்று புகைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு கையில் துண்டு மற்றும் பிரஷ் பேஸ்ட் சகிதமாய் பல்துலக்க வந்தாள். காற்று சட்டென்று வீசும்போதெல்லாம் அலைகள் போல முடிக்கற்றைகள் அலைந்தன. அவளது முகம் என் தூக்கத்தை முற்றிலும் கலைத்துவிட்டது.

பொதுவாகவே எட்டு மணிக்கு முன் காலை எழுவதில்லை. ரயில் பயணம் என்றால் பிடிக்கும் - பயண நேரம் அதிகமாக ஆகும்படியே திட்டமிடுவேன். ரயில் பயணத்தில் இரவு பத்து பதினோரு ஆகிப்போனால்தான் என்ன? இதனாலேயே பகல் பயணம் என்றாலுமே பாசஞ்சர் ரயில் ஸ்லீப்பரில் மூன்றாவது பர்த் புக் செய்து படுத்துக் கொள்வேன். ஐபாட், சிகரெட், சில புத்தகங்கள் - இதோடு என் பயணம் துவங்கும், தூங்கி எழுந்ததும் பயணம் முடிந்திருக்கும்.

புதுதில்லி ரயில்நிலையத்தைக் கடந்தது, அம்பாலாவுக்கு மூன்று மணிநேரம். அடுத்து ஸ்டேஷனில் இறங்கி ஏதாவது குளிர்பானம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பாசஞ்சர் ரயிலில் ஒரே ஒரு பிரச்சினைதான், பர்த்தை விட்டு இறங்கிவிட்டால் பர்த் நமதில்லை. யாராவது படுத்துக் கொண்டுவிடுவார்கள். ஹரியானா மக்களோடெல்லாம் நான் பேசும் 'படிச்சவன் ஹிந்தி'யில் சண்டை போடமுடியாது.

புதுதில்லியில் ஆறுவருடம் மென்பொருள் உத்தியோகம். ஸ்டூடியோ பிளாட் ஒன்றை வாங்கி விட்டு செட்டில் ஆகிவிட்டதாய் நம்பிக் கொண்டிருந்தேன். போன வருஷம் பிங்க் ஸ்லிப் வாங்கி சென்னையில் வேலை ஆகி போகும்போதும் "எப்போது திரும்பி வருவாய்" என்று கேட்க ஆளில்லை. இந்தப் பயணத்திலும் அப்படியே. ரயிலில் போகும்போதெல்லாம் பயண நேரத்துக்கற்பனை வாழ்க்கைக்கு என்றே எதிர் பர்த்ததில் ஒரு யுவதி எதிர்பட்டுவிடுகிறாள் என்பதைத் தவிர, சுவாரசியமான வாழ்கைக்கு எதுவும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.

டீ குடிக்க இறங்கி அமர்ந்து கொண்டோம்.

"ஆப் கஹான் ஜா ரஹே ஹை" என்றாள்.

"சென்னை"

"நீங்களும் தமிழா?" பேசும்போதே தமிழ் வாசனை வீசுமோ என்னவோ. எப்படியோ கண்டு பிடித்து விடுகிறார்கள்.

"ஆமா.. ரிசர்வேஷன் கிடைக்கலை. அம்பாலாவில் இருந்து சென்னை ரயில்"

"அட.. நானும்தான்" என்று சிரித்தாள்.

அந்த பெண்ணின் முகம் அழகாக இருந்தது. அவளது குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல ஒலித்தது. முகங்கள் கால ஓட்டத்தில் மாறக்கூடும். குரல் அப்படியில்லை. இது போன்ற சூழ்நிலையில் குரல் முதலில் மனத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்படியே ஆனது, இந்த முறையும்.

"டோன்ட் மைன்ட், உங்க பேரென்ன"

"உமா"

"அம்பாலா டு சென்னை என்ன இரயில்" என்றேன்.

"தேராதூன் சண்டிகட் எக்ஸ்பிரஸ், அதுல தேர்ட் ஏசிதான்" என்று புன்னகைத்தாள்.

"நான் செகன்ட் ஸ்லீப்பர்தான்" என்றேன். அவள் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி, "இன்னும் அரைமணிநேரத்தில் அம்பாலா வந்துடும்" என்றாள்.

"செமஸ்டர் லீவா" என்றேன்.

"தலைதீபாவளிக்கு" என்று புன்னகைத்தாள்.

ரெண்டுநாள் பயணம், நல்லவேளை எப்போதும் போல நான் செகண்ட் ஸ்லீப்பர்தான். இவளையே பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அவள் ரயில் சிநேகங்களை பற்றி ஏதாவது யோசிப்பாளா? அவள் கணவன் கண்டிப்பாய் முன்வழுக்கைகாரனாய் இருப்பான்.


Part 2: மணிஜி http://www.thandora.in/2011/10/2.html
Part 3: ஷங்கர் http://palaapattarai.blogspot.com/2011/10/3.html

3 comments:

எல் கே said...

expecting much better attempt

Paleo God said...

திடீர்னு நின்னாப்போல இருக்கே? இதுலேர்ந்துதான் தொடர்ந்து எழுதனுமா? கார்த்தி சொல்றாப்ல கொஞ்சம் நீட்டி இருக்கலாமோ? ரைட்டு மீ ஆல்ஸொ இன் ரிலே வெயிட்டிங்.. :))

Vidhoosh said...

சே.குமார் has left a new comment on your post "மூன்றாவது பர்த் (உமா சீரிஸ் - ரிலே ரேஸ் கதை)":

ஆரம்பம் நல்லாயிருக்கு. தொடருங்கள் எழுத்தாளர்களே எக்ஸ்பிரஸ் வேகத்தில்..


Sorry - Se.Kumar, You comment got deleted by mistake.

Post a Comment