கடல்

ஏனென்றால்-
வேறொன்றை கவனித்துத்
தீரவில்லை தற்போதைய வலிகள்
அவளுக்கு
விளையாட்டில் விழுந்ததும்
வலிதான் - முகம்
புதைக்கவொரு முந்தியிருந்தவரை.
மணற்மேட்டிலிடிக்கும் அலைகள்
கடந்து நடுவில் இருக்கிறது கடல்
முன்பிருந்தவைகள்
அப்படியாக அழைக்கப்படுவதில்லை

0 comments:

Post a Comment