பயணக்குறிப்பு#2: ஷிர்டி நோக்கி - via கோபர்காவ்ன், தவுன்ட்
சொன்னா "ரொம்ப ஓவரா இருக்கே"ன்னு தோணும், ஆனால் வசதி/சொகுசுகள் பழகப் பழக அசௌகரியங்களை சகித்துக் கொள்ள முடியாமல் ஆகிவிடுகிறது. பிருந்தாவனில் செகன்ட் சிட்டிங். வாசு சில புத்தகங்களைக் கொடுத்தார். வண்ணதாசன் புத்தகம் சட்டுன்னு பிடிச்சுப் போனதால், கரெக்டா 23 பக்கம் படிச்சேன். வெயில் புழுக்கம் நிஜமாவே தாங்க முடியலை. ஜன சந்தடி, கூச்சல், டீ டீ குரல்கள், ஸ்நாக்ஸ் வியாபாரம், எல்லாமாய் புத்தகம் படிக்க முடியாமல் செய்தன. அரட்டை அடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். குழந்தைகள் இலக்கியம் கூட பேசவில்லை. மணிஜி கூட குப்பம் ஸ்டேஷன் வரும் வரை சமத்தாவே இருந்தது எனக்கு ரொம்ப ஆச்சிரியம்.
பெங்களூரில் கெம்பம்மா-வை பார்க்கப் போன இடத்தில், "உன்னைப் போல்" என்றார் மணிஜி. வித்யா-வை நிறையா பேர் விதூஷ்-ன்னு தான் கூப்பிடறாங்க போலருக்கு. மணிஜி-யின் சொந்தக்காரப் பெண் ஒருத்தியை , ஸ்மார்ட் கேர்ல், விதூஷ்-ஷோல்யோ.. :D
இந்த மாதிரி குழுப் பயணங்களில் யாராவது ஒருத்தர் மூஞ்சியை வெண்கலப் பானையாக்கி கொள்வது தமிழ் பாரம்பரியம். அப்பிடி இது வரை யாரும் ஆகாததும் ஒரு ஸ்வீட் ந்யூஸ். எல்லாருமே தேங்காய் துருவி போல பல்ளிளித்து கொண்டிருந்தோம்.
பெங்களூரு ஏசி வெயிடிங் அறையில் நாங்கள் பெண்களும் குழந்தைகளுமாய் முதுகு வலிக்க உக்காந்திருந்தோம். ஆண்கள் அனைவருக்கும் ரூ.600/- செலவில் ரயில்வே டார்மிட்டரியில் இடம் கிடைத்து விட்டது. பபாஷா ஷங்கரும் கும்க்கியும் தூங்கிட்டாங்க. நாங்கள் கெம்பம்மாவை தரிசன நமஸ்காரம் பண்ணிட்டு வந்தோம். ஸ்நாக்ஸ் அல்லது காப்பி குடிக்கக் கூட நேரமில்லை. அவசரமாய் டீ குடித்து விட்டு ரயிலேறினோம்.
பெங்களூரு - தவுன்ட் - உதயன் எக்ஸ்ப்ரஸ்
இரவு 10.10. ரயில்வே ஸ்டேஷன்களின் நிலை பொறுத்து, பெங்களூரு தாண்டியதும் தமிழ்நாட்டுப் பெருமை விளங்க ஆரம்பித்தது. இப்போது ஏசி கோச். தூக்கம்.
நள்ளிரவில் ஒருதரம் ஜிமெயில் செக் பண்ணேன். ஏர்செல் ஐடியாவாகி பிரசாந்தி நிலையம் காட்டியது. அத்தோடு சிக்னல் அவுட்.
கூ சுக் சுக்.. நாராயண்பேட் என்ற இடத்தில் டீ. எல்லாரும் எழுந்து வந்தாங்க. ஏதோ டிபன் சாப்பிட்டோம்.
ஈஸ்வரி இரும ஆரம்பித்து அப்பர் பர்த்ததில் அடைக்கலமானார். பபாஷா மௌன குரு ஷங்கர் எங்களோடு வந்திருப்பதை நாங்களே மறக்க ஆர்ம்பித்திருந்தோம். கும்க்கி தோழராகி புன்னகைக்க மறக்க ஆரம்பித்திருந்தார். "பசங்க" எல்லாரும் ஆரம்பித்திருந்தார்கள், பேச, பதிவர் சந்திப்பு போலவே.
சோலாபூர் ... வந்ததும் அப்பாடா ஒரு வழியாய் வந்துட்டோம்னே இருந்தது. ட்ரையின் ஒரு மணிநேரத்துக்கு மேல் லேட்டாம்.
தவுன்ட் ஸ்டேஷன் வந்துட்டோம். டெம்போ ட்ராவலர் ஒன்றில் போயிடலாம்னு ரயில்வே டீக்கடையில் பேசின போது அடுத்த பிளாட்பார்மில் புனே-நிஜாமாபாத் பாசஞ்சர் இரயில் இருப்பதாகவும், அதிலேயே போய் விடுங்கள் என்றும் ஆலோசித்தார். அதற்குள் ரெண்டு டாக்ஸிவாலாக்கள் வந்து ரூ.3500/-க்கு ஷீரடியில் ட்ராப் பண்ணுவதாகக் கூறினார். கும்க்கி, செல்வம் & பபாஷா இரயில் டிக்கெட் எவ்வளவாகும்னு விசாரிக்கப் போனார்கள். ஈ காக்கை இல்லாத இரயில் நிலையம். டிக்கெட் சார்ஜ் 13-பேருக்கு மொத்தம் ரூ.300/-. செல்வத்துக்கு ரெண்டு குழந்தைகள்தான், ஆனா ரத்த சிவப்பில் இழுத்த இழுப்புக்கு வரும் ஒரு துணைவியாரையும் அழைத்து வந்திருந்தார். நல்லவேளை சிவப்பா இருந்ததால அவங்களுக்கு டிக்கெட் கேட்கலை.
அன்பே சிவம் யூகி சேது மாதிரி இருந்த டிக்கெட் பரிசோதகருக்கு மூன்னூறு. ஆகமொத்தம் 2900/- மிச்சம் பிடிச்சோம். யூகி சேது என்னை பார்த்து என்ன நினைச்சாரோ என்னவோ ஹிந்தியில் "சிவப்பு சட்டைக்காரனிடம் ஜாக்கிரதையா இரு" ன்னாரு. சுத்தி முத்தி பார்த்தா காலேஜ் பசங்க மாதிரி ரெண்டு பேர்ல ஒருத்தன் சிவப்பு சட்டை. தமிழ் நாட்டுக் கலாச்சாரப் பிரகாரம் கூட வந்த குழுவுக்கு வதந்திய பரப்பியாச்சு.. யாரு யாருன்னு எல்லாரும் மலையூர் மம்பட்டியான் போர்வைக்குள்ள அமுக்கி தர்ம அடி கொடுக்க அவனை குறி பார்த்து வச்சுகிட்டோம்.
அந்த பச்சையப்பா பை காணாம போற வரைக்கும் யூகிசேது சிவப்பு சட்டைக்காரன்னு சொன்னது நம்ம அகநாழிகை வாசு-வைத்தான்னு தெரியாம போச்சு. மம்பட்டியான் போர்வையை அங்கேயே போட்டுட்டு வந்துட்டோம்.
டீ டீ.. காப்பி வாசனை மறந்தே போச்சு.. காப்பி காப்பி ... அட்லீஸ்ட் சன்ரைஸ் இன்ஸ்டன்ட்-டாவது கொண்டு வந்திருக்கலாம்னு மனசுக்கு என்னையே சபிச்சுக்க ஆரம்பிச்சேன். டீ கசப்பு ... வேணாம் போ.
மண் வாசனை, மழை, காட்டு குதிரைகள், தாமரைக் குளங்கள், டர்பன் வெள்ளை பஞ்சகச்சம் கதர் பனியன் மனிதர்கள், கச்சம் வைத்து புடவை அணிந்த பெண்கள், எங்கே பார்த்தாலும் மேய்ச்சல் நிலம், செம்மறி ஆடுகள்.. என்று அழகு... அழகு அழகு.
நல்லவேளை செம்மறி ஆடு மேய்ந்து கொண்டிருந்த புல்லின் மீதிருந்த பனி என் போன்ற அ-இலக்கியவாதியின் கண்களுக்குப் புலப்படவில்லை. இல்லையெனில் சமகால இலக்கியத்துக்கு இன்னொரு நீண்ட நாவலொன்றும் எழுதப்பட்டிருக்கும். அது எழுதப் படாமல் போனதுக்கு என் subconscious mind-டுக்கு புல்லின் மீதிருந்தது பனியா மழைத்துளியா என்ற குழப்பம் ஏற்பட்டது கூட காரணமாயிருக்கலாம்.
ஆனால், உண்மைக் காரணம் அந்த நறுமணம்... ஆகா.. உணவு.. உணவு... சமோசா வித் வறுத்த பச்சை மிளகாய்.. ஆகா. தென்னாட்டு குஷ்பூ மாதிரி இல்லாம வடநாட்டு ஊர்மிளா மடோன்கர் மாதிரி ஒல்லியா இருந்தது.
பேல் பூரியில், பேல் (பொரி) மட்டும்தான் இருந்தது. சுவையும் இல்லை, மனமும் இல்லை, நமத்து போயிருந்தது. பசி, உண்டு வைப்போம் என உண்டு வைத்தோம்.
அஹமத் நகர் மற்றும் பேலாபூர் ஸ்டேஷன்களில் கூட்டமான கூட்டம். அந்த முகங்கள் எனக்கு வெள்ளந்தி முகங்கள் போலத் தெரிந்தது. அவங்கவங்க கணவரிடமும் மனைவியிடமும் கேட்டா தெரியும். கோபர்காவ்ன் வந்தாச்சு...
டாடா மாஜிக் வண்டியில் ஷீரடி பயணம். ரூ.450/- பயணச்செலவு.
ஷீரடியில் https://online.sai.org.in என்ற இணையதளத்தின் மூலம் அறை ஒன்றுக்கு ரூ.1000/- கட்டி ஐந்து பேர் (மூன்று பெரியவர் இரண்டு குழந்தைகள்) தங்கும் வசதிக்கு நாங்கள் அனைவரும் தங்க இரண்டு அறை பதிந்து வைத்திருந்தோம். அங்கேயும் அறை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள்.
த்வாராவதி-க்குப் போனதும், அடாடா... எவ்ளோ உன்னத சேவை இது, இத்தனை கம்மி வாடகைக்கு இவ்ளோ நல்ல வசதிகளா என்று சந்தோஷம். வெயிடிங் ஹாலில் லைவ்-வாக சாய்பாபா ஆராதனை காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். நேரடி ஒளிபரப்பில் இரவில் சரியான கூட்டம் இருப்பது தெரிந்தது. இரண்டு நாள் பயண அசதி வேறு. கார்த்தால போய் பார்த்துக்கலாம்னு இரவு உணவு தேடினோம்.
மல்லூஸ் மல்லூஸ்தான். பிரதான சாலையில் உடுப்பி ஹோட்டல். ஆஹா உணவு உணவு.. இட்லி தோசை.. காப்பி... காப்பி... அந்த சுமாரான காபியவே நான் மூன்று தரம் வாங்கி குடிச்சேன். பதிமூணு பேருக்கும் மொத்தம் பில் ரூ.800
எம்ஜியார் பாட்டுக்கள் எங்கும் ஒலிக்கவில்லை. டாண்டியா கார்பா நடப்பதாக அங்கங்கே கூடாரங்கள் இருந்தன. நாங்க பெண்களும் குழந்தைகளும் அறைக்குத் திரும்பிட்டோம்.
அவங்கள்லாம் காலையில் தான் காப்பி குடிச்சாங்களாம்.
இந்த தரம் travel check-list டையே யம்மாடின்னு மலைச்சவங்களுக்கு சொல்லிக்கறேன், அடுத்த லிஸ்டில் மறக்காம நெஸ்கபே சன்ரைஸ் இன்ஸ்டன்ட் சேர்க்கணும்.
அடுத்தது.. சாய்பாபா கோவிலில்
1 comments:
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
Post a Comment