கைப்பையுள் ஒளிந்திருந்த கடல்
ஒரு விசித்திர நகரை நோக்கி
அந்நகரின் அனைத்து மக்களையும் நாடு கடத்தி
நான் மட்டும்  இப்போது நடக்கிறேன்
நாமிணைந்து நடந்த
சுவடுகள் படிந்திருந்தச் சாலையில்

கைப்பையுள் ஒளிந்திருந்தக்
கடலில் மூழ்குகிறேன்
அந்நகரின் தனிமையும் அமைதியும் கொன்று
எப்படியேனும் தெரியப்படுத்துங்கள்
குழந்தை அழுதால் மட்டும் பாலூட்டிச் செல்ல.

1 comments:

ரிஷபன் said...

கைப்பையுள் ஒளிந்திருந்தக்
கடலில் மூழ்குகிறேன்
அந்நகரின் தனிமையும் அமைதியும் கொன்று
எப்படியேனும் தெரியப்படுத்துங்கள்
குழந்தை அழுதால் மட்டும் பாலூட்டிச் செல்ல

கைப்பைக்குள் ஒளிந்திருந்த கடல் வாசிக்கிற எவரையும் மூழ்கடித்துவிடும் வலிமை

Post a Comment