பயணக்குறிப்பு #4: ஔரங்காபாத்


கிஷனோடு தகராறானதில் ஜூ-இருப்பதை அறிய முடிந்தது.

Photo Courtesy: Aganazhigai Vasu

ஔரங்காபாத் ஜூ-வுக்குள் நானும் ப்ரேமாக்காவும் போகும்போதே மணி 5.55PM. சாயந்திரம் ஆறு மணியோடு ஜூ-வை மூடிடுவாங்க. ஷங்கர், மணிஜி, வாசு, செல்வம், கும்க்கி, அமிழ்தினி, ஆதிரை, தர்ஷிணி & கிருபா எல்லாரும் ஏற்கனவே ஐந்தேகால் மணிக்கெல்லாம் உள்ளே போய்ட்டாங்க.  லேட்டானதால் நாங்கள் ஜூ-வுக்கு போக முடியலை. ஜூ- நம்ம வண்டலூர் ஜூ-வில் பாதி கூட இருக்காது, ஆனால் அவ்ளோ அழகா முனிசிபாலிடி நிர்வாகம் பண்றாங்க. மைதானத்தின் முன் சிறுவர்கள் பூங்கா அமைத்து இருக்கிறார்கள். புத்தர் சிலை ஒன்றும் பெரியதாக அமைத்து உள்ளார்கள். நான் ஜூ-வை பார்க்க முடியாததால் இதை பற்றி விரிவாக எழுத முடியலை.குழந்தைகள் பூங்காவில் கொஞ்சம் நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பிட்டோம். குழந்தைகள் ரொம்ப மகிழ்ச்சியா விளையாடிகிட்டு இருந்தாங்க.

அகநாழிகை வாசுவும், ஷங்கரும் தங்கள் பார்வையில் எழுதும் பயணக்கட்டுரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

அப்புறம் டாண்டியா போகலாம்னு தீர்மானிச்சோம். ஜூ-வாசலில் இருந்த செக்யூரிட்டி கிட்ட விசாரித்த போது ஞாய் ரோடில் அமைந்திருக்கும் செயின்ட் பிரான்சிஸ் ஸ்கூல்-லில் நடந்த டாண்டியா-வுக்கு போனோம். ஆண்களுக்கு இருநூறு ரூபாய் என்ட்ரி டிக்கெட்டாம், பெண்களுக்கு நூறு ரூபாய்தான், குழந்தைகளுக்கு இலவசம். bouncers எல்லாம் இருந்தாங்க. அழகழகா அலங்காரம் செய்து கொண்டு பெண்களும் ஆண்களும் கார்பா நடனம் ஆட தயாராகிக் கொண்டிருந்தாங்க.

செல்வம், ஷங்கர், கும்க்கி மூணு பேரும் வெளியேவே பார்த்துக்கரோம்னு தங்கிட்டாங்க. நானும் ப்ரேமாக்காவும், குழந்தைகள் கிருபா, தர்ஷிணி யை அழைத்துக்கொண்டு உள்ளே போனோம். மணிஜியோட கேமெராவில் வீடியோவும் எடுத்தோம். குழந்தைகளுக்கு சுவாரசியப்படலை. அயர்ந்து வேறு போயிட்டாங்க. சரின்னு அவங்களையும் 'பசங்க'ளையும் அனுப்பி வைத்துட்டு, ப்ரேமாக்கவும் நானும் அங்கேயே திரும்பவும் வேடிக்கை பார்க்கப் போனோம். தமிழ்நாட்டுலேர்ந்து வந்திருக்காங்கன்னு அறிவிச்சு எங்களுக்கும் கார்பா ஸ்டெப்ஸ் கத்துக் கொடுத்து, ஆடச் சொன்னாங்க. சும்மா கொஞ்சம் தத்துபித்துன்னு ஆடிட்டு வந்தோம். அப்போதான் புரிஞ்சுது எவ்ளோ கஷ்டம்னு, அவங்க எல்லாருமே சளைக்காம, மூன்று மணிநேரத்துக்கு மேல ஆடிட்டே இருந்தாங்க.

பத்து மணி ஆயிடவே, ரூமுக்குத் திரும்பிட்டோம். வழக்கம்போல ஒரு லோட்டா லஸ்ஸி தான் எனக்கு டின்னர். ஆகா..

மறுநாள் காலையிலேயே லோகலில் ஏழெட்டு இடம் போகலாம்னு ப்ளான். முதலில் எல்லோராவுக்கு போகலாம்னு முடிவாச்சு.

Click to zoom view


எல்லோரா... என்னன்னு சொல்ல. வெட்டிக்கு இருக்கும்போது வேற வழியில்லாம எதையாவது பண்ணிட்டு, பண்ணிட்டோம் பண்ணிட்டோம்னு வெறும் பெருமை பேசுபவர்கள் கண்டிப்பா பார்க்கணும்.

ஒரு இடத்தில் கூட அந்த அரும்பெரும் ப்ராஜெக்டை ஆரம்பிச்சவரோ, வழிநடத்தினவரோ, இல்லை செயலாக்கினவரோ, தன் பெயரை செதுக்கி வைக்கலை. வெறும் கற் பாறைகளைப் பார்த்து இப்படி ஒரு அற்புதமான இடத்தை உருவாக்கணும்னு எப்பிடித்தான் யோசனை உதித்திருக்கும்?




கல்லைக் குடைந்து மூணு floor அபார்ட்மென்ட் கட்டி இருக்காங்க... இப்பிடியெல்லாம் கல்லைக் குடைந்து உருவாக்கலாம்னு எப்பிடி தோன்றி இருக்கும்? யாரு ஆர்கிடெக்ட்?



இந்த லாங் வெராண்டா முழுக்கவும் வெறும் உளியால் செதுக்கி உருவாக்கினது என்பதை கற்பனையாவது செய்து பார்க்க முடியுதோ?

போட்டோக்கள் எல்லாம் சும்மாதான், பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு இடம், நான் ரொம்பவே ரசிச்சு, கிளம்பவே மனமில்லாமல் திரும்பிய இடம் எல்லோரா. சில இடங்களில் வௌவால்கள் துர்நாற்றம் எனக்கு ஆஸ்துமாவை கிளப்பி விட்டது. கொஞ்சம் நிலமை சிவியர் ஆகிடுமோன்னு ஹெவியா தோணும்போது போகமுடியாமல் நிறுத்திக் கொண்டேன்.

இங்கே கற்றுக் கொண்ட பாடங்கள்:

லோகலில் ஆட்டோவாலாக்கள் கூறுவதை கேட்டுக் கொண்டிருக்காமல், உங்கள் காரிலேயே ஜெயின் / சமணர் குகைகள் மற்றும் இன்னும் சில குகைகளை (எண் 33 முதல் -17 வரை) பார்க்க முடியும்

முக்கியமான குகைகள் 1 முதல் 16 வரை முதல் பார்கிங் (நுழைந்தவுடன் வரும்) இடத்திலிருந்து நடந்தே போகமுடியும். அற்புதமான குடைவறை கோவில்கள் இருக்கின்றன.

விஸ்வகர்மா குகை என்று குறிப்பிடப் படும் குகையுள் சற்றும் கற்பனையில் கூட எதிரே பார்க்காத மாதிரி குடைசல் வேலைகள் இருக்கின்றன. நின்று நிதானமாக ரசிக்க வேண்டியவை. இசை / போதனைக்கான இடமென்று குறிக்கப்பட்டுள்ளது.


இந்த குகை உட்சுவர்களில் ஒரு ஆள் உயரத்துக்கு ஒப்பான கணக்கீட்டில் ஹூக் மாட்டுபடியான கொக்கிகள் போன்று கல்லிலே குடைந்து வைத்திருக்கிறார்கள். அவை என்னவென்று தெரியவில்லை. அந்த போட்டோ வாசுவிடம் இருக்கு. தன் கட்டுரையில் பகிர்வார் என்று நினைக்கிறேன்.

இங்குள்ள புத்தரின் மடியில் ஷங்கர் உக்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்ட போதுதான் கவனித்தேன், சரியாய் ஒரு ஆள் உட்கார தோதான இடம் அது, அப்படி உட்காரும் போது புத்தரின் உள்ளங்கை உட்கார்ந்திருப்பவரின் தலையில் படுவது போல அமைக்கப்பட்டிருக்கிறது.

எல்லா வெளிச்சமும் குகைகளிலும் போதுமான அளவு சூரிய வெளிச்சமும் காற்றும் வரும்படி அமைத்திருக்கிறார்கள். சில குகைகளில் தரைப்பகுதி சரிவர சமனப்படுத்தப்படாமல் அப்படியே rough ஆக உளி பட்ட வண்ணமே மிஞ்சி இருக்கிறது. உணவுக்கூடங்களும், சமையலறைகளும், ராவணின் பற்கள், கூரையின் மேற்பரப்பில் செதுக்கப்படிருந்த நான்கு சிங்கங்கள், சில இடங்களில் மிஞ்சிய ஓவியங்களும் என, மீண்டும் மீண்டும் தன்வசம் அழைக்கும் எல்லோரா.. நான் மீண்டும் ஒரு தரம் சென்று பார்க்கவேண்டும்.

இந்த அனைத்துக் குகைகளுமே ஒரு தலைமுறையில் உருவாக்கி இருப்பார்கள் என்று தோன்றவில்லை. எல்லோரா குகைகள் என்னை மீண்டும் ஒரு பரந்த வாசிப்பைத் தேடிச் செல்ல உந்தி இருக்கிறது. என் நினைவுகளில் சிலாகித்துக் கொண்டு இருப்பவற்றில் ரொம்ப கொஞ்சமே எழுதி இருக்கேன். மீதி, என்றேனும் எழுதுவேன், வாசித்து விட்டு வரலாற்றுக் குறிப்புக்களோடு. :-)

எல்லோராவுக்கு என்று இரண்டு நாட்கள் வைத்துக் கொண்டால், நீங்கள் ரசிகன்/ரசிகை. தனியாப் போங்க, இல்லையா ஒத்த ரசனைக்காரரோடு போங்க. அப்படி முடியாதவர்கள் அபாக்கியவான்கள்.

4 comments:

pudugaithendral said...

எல்லோரா போகணும்ன் ரொம்ப நாளா ப்ளான் இருக்கு. எப்ப வசதிப்படும்னுதான் தெரியலை.

ரிஷபன் said...

ஒரு இடத்தில் கூட அந்த அரும்பெரும் ப்ராஜெக்டை ஆரம்பிச்சவரோ, வழிநடத்தினவரோ, இல்லை செயலாக்கினவரோ, தன் பெயரை செதுக்கி வைக்கலை. வெறும் கற் பாறைகளைப் பார்த்து இப்படி ஒரு அற்புதமான இடத்தை உருவாக்கணும்னு எப்பிடித்தான் யோசனை உதித்திருக்கும்?

எல்லோராவுக்கு என்று இரண்டு நாட்கள் வைத்துக் கொண்டால், நீங்கள் ரசிகன்/ரசிகை. தனியாப் போங்க, இல்லையா ஒத்த ரசனைக்காரரோடு போங்க.

ஆசையைத் தூண்டும் அழகான பதிவு

உண்மைத்தமிழன் said...

நன்றி விதூஷ்.. இப்போதுதான் படிக்கத் துவங்குகிறேன்.. அடுத்த முறை போகும்போது லக்கேஜ் தூக்குறதுக்கு ஒரு ஆள் வேணும்னா என்னைக் கூப்பிடுங்க..

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.

Post a Comment