பயணக்குறிப்பு #4: சனி சிங்கனாபூர்


28, 29 ரயிலிலும் 30 ஷிர்டியிலும் தீர்ந்து போனது. பெங்களூரில் தொலைத்த எட்டு மணிநேரம் அப்படியே நாசிக் பயணத்தை விழுங்கி விட்டது. ஷிர்டியில் கூட தரிசனத்துக்கு அன்று இரண்டு மணி வரை ஆகிப்போனது அன்றைய தினத்தையும் நிதானமாக்கியது. இந்த மூன்று தினங்களுமே அடுத்த நிமிட அதிசயங்களைக் கொண்டதாகவே இருந்தன. ஏதோ திட்டமிடுவதும் ஏதோ நிகழ்வதுமாக கொஞ்சம் எரிச்சல் ஆகிப் போனது. ரொம்ப சிஸ்டமாடிக் ஆக இருந்தால் சரிப்படாது என்று திட்டமிட்ட வரைவை ஷிர்டியிலேயே குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு அமைதியாகிவிட்டேன்.

ஷிர்டியில் இருந்து ஆங்கில எழுத்து Y போன்று நாசிக்-கும் சனி சிங்கனபூர்-ரும் அமைந்திருப்பதாக அறிந்தோம்.

ஷிர்டியில் இருந்து சனி சிங்கனபூர் 70-கி.மீ தொலைவில். நாசிக் 85 -கி.மீ தொலைவில்.

சனி சிங்கனபூர்-ரில் இருந்து ஔரங்காபாத் 60-கி.மீ. தொலைவு. ஆனால் நாசிக்கில் இருந்து 200 கி.மீ.

ஏற்கனவே ஒரு நாள் வீணாய் போக்கிட்டோம் என்பதால், நாசிக்கை ஸ்கிப் செய்வதாக தீர்மானித்தோம்.

சனி சிங்கனாபூர் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஔரங்காபாத் ஏதோ ஒரு நல்ல ஹோட்டலில்  டிராப் செய்ய டாடா விங்கர் ஒன்றை ரூ.2000க்கு புக் செய்து கொண்டோம். டிரைவர் பேரு கிஷன். அதை விட மோசமாய் ஒரு வண்டியை மெயின்டைன் பண்ணமுடியாது. ரைட்டு. புகார் புலம்பல்களை இப்போதைக்கு கொஞ்சம் தள்ளுவோம்.

எழுபது கிலோமீட்டர்தானே, விங்கர் வேற, சர்வ சாதாரணமாய் அதிகபட்சமாக ஒன்றரை மணிநேரத்தில் போய் சேர்ந்துடலாம்னு நினைச்சோம், நம்பினோம். ஷிர்டியை விட்டு கிளம்பியாச்சு. ரோட் பயங்கர மோசம். அதில் மாட்டு வண்டி, கண்டெய்னர் லாரிகள், சுமோ என்று எல்லாவிதமும், ட்ராபிக் ஜாம் / ஸ்லோ ஆனது. கிஷன் தான் நம்ம ஹீரோ இனிமே.

வழியில் எங்கேயாவது டீ குடிக்கலாம்னு நிறுத்தினோம். கடுப்படிச்சான் கிஷன். ஒரு ரோட் சைட் ரெஸ்டாரன்ட்ல டீ குடிச்சோம். அருமையா இருந்துது டீ. (இடக்கரடக்கல்). லேட்டாகுது லேட்டாகுதுன்னு கடுப்படிச்சான் கிஷன். எனக்கு செருப்பு அறுந்து போச்சு. செல்வம் குழந்தைக்கு மேல் டீ கிளாஸ் வேற உடைந்து டீ சிந்திடுச்சு, பாவம், பயந்து போயிடுச்சு குழந்தை. டச் வுட், அடியேதும் படலை.

மீண்டும் விங்கர். இப்போ கிஷன் தானாவே ஒரு இடத்தில் ஓரம் கட்டினான். (கமிஷனா இருக்குமோ)... செக்குமாடு வைத்து சுற்றும் மரத் தடிகளுக்கு நடுவே செலுத்தி பிழியப்படும் eco friendly கரும்புச் சாறு குடித்தோம். செம சுவை..

என்கூரில் எண்ணைக் கடைகளுக்கு பெண்களை அனுப்ப மாட்டாங்க. அதுவும் இல்லாம எண்ணெய் செக்கு வாசல்ல பெரிய தகர கேட் போட்டிருக்கும். ஒரு ஆள் உயத்துக்கு மேல சின்னதா ஒரு ஸ்கொயர் திறப்பு வச்சிருப்பாங்க. தரையெல்லாம் எண்ணெய் பிசுக்கு கருப்போடிப் போயிருக்கும். ஒரே ஒரு குண்டு பல்பு மினுக்கும். அதுனால நாங்களே போக மாட்டோம். நான் செக்குமாட்டை முதல் முதலா இத்தனை அருகில் பார்க்கிறேன். கண்கள் சொங்கிப் போய், அர்த்தமே இல்லாமல் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி தனக்குத் தானே பள்ளம் நோண்டிக்கொண்டு அங்கேயே..

மணிஜி & வாசு ரெண்டு பேரும் செக்கு மாட்டைச் சுத்தினாங்க. வீடியோ, போட்டோவெல்லாம் எடுத்து அமர்க்களம் பண்ணோம்.
ஆகட்டும்னு கிளம்பிட்டோம்.

ஏற்கனவே பேய் கோலம், அதிலே கொஞ்சம் அக்கிலி பிக்கிலி-ன்னு சொல்லுவாங்க, அந்த லட்சணத்தில் டயர் வேறு வீக்-ன்னு ஏற்கனவே சொல்லிட்டார்.... இருந்த ஒரே ஒரு விங்கரோட கதவு வேற கழண்டு விழுந்துடுத்து. ஐயகோ இதென்ன கண்ணாம்பாவுக்கு வந்த சோதனை... கடைசியில் ஒரு தாம்புக் கயிற்றால் கதவை செட் பண்ணி கட்டி விட்டாங்க. "வண்டி உங்களுதுதான்னே கிஷன்"ன்னு கேட்ட போது லுக் விட்டான் பாருங்க.. சலோ சலோ-ன்னு பின் சீட்டில் உக்காந்துகிட்டேன்.

உயிரை கையில் பிடிச்சுக் கொண்டு செல்வம் & ஜூனியர்ஸ் உக்காந்திருக்க, நான் அந்தக் கயிறையே பார்த்துகிட்டு உக்காந்திருந்தேன்.

பாதி வழிக்கு கதவைத் திறந்து கூடத் தப்பிக்க முடியாத அப்புறம் கிஷன் வண்டியில் இருந்த ப்ளேயரில் பாட்டெல்லாம் போட்டான். பழங்காலத்து ஹிந்தி பாட்டூஸ், ஒரே "மொள்"ளிசை கண்ணீர் மயம், மணிஜிக்கு எப்பிடியும் எதுவும் புரிஞ்சிருக்காது, முன் சீட்டில் உக்காந்திருந்த போராளிகள் கும்க்கி & ஷங்கர் ரெண்டு பேரையும் நினைச்சு அகமகிழ்ந்தேன். மணிஜியே கலங்கிப் போய் "விதூஷ் நீங்களே பாடுங்க"ன்னு கெஞ்சிக் கேட்டதால் வாசு வேறு "ஏன் விதூஷ் இன்னும்ம் நல்லாவே பாடுவாங்க"ன்னு பக்கவாத்தியம் வாசிச்சார். ஆட்டோக்காரன் அசிங்கப் படுவதுக்கு முன் "பையா(ஹிந்தி bhaiya) கிஷன், க்ருபா கர்க்கே கானா ரோகோ.. வர்னா ஹம் காடி ஸே கூத் ஜாயேங்கே"னேன்.  திக்கித் திக்கிப் பாடின டேப்பை நிறுத்திட்டான்.

சனி சிங்கனாபூருக்கும் போய் சேர்ந்தோம். ஔரத் / மரத்-ன்னு எழுதி ஆண் பெண் மூஞ்சி படம் வரைஞ்சிருக்குமே, அதே போல ஒரு பொது கழிப்பிடத்துக்கு பின் பக்கமா கொண்டு போய் வண்டிய நிறுத்தினான் கிஷன்.

வண்டிலேயே எல்லாத்தையும் வச்சுட்டு போங்க, பின்னாடி குளம் இருக்கு குளிச்சுட்டுதான் போகணும், எதையும் உள்ள கொண்டு போகப்டாதுன்னு பயமுறுத்தினான். நிறையா கேஷ் இருந்ததால், சர்தான் போடா-ன்னு backpackகை எடுத்துக் கொண்டேன். அவரவர் பர்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டார்கள். கிஷனுக்கு இங்கேயே ஒருவேளை ஏமாற்றம் #4 ஆக இருந்திருக்கலாம். அதுக்கப்புறம் போற வழியில் ஒரு கடைக்கு எதிரே நிறுத்தி "இங்கேர்ந்து ஏதாவது வாங்கிட்டு போயி ஆகணும்"ன்னு அடம் பண்ணான். நாங்க வேணாம்னு அதையும் கடந்து போனோம். பயங்கர வெறியாயிட்டான். ஒரு பத்தடி தூரம்தான், ஆனா வழி முழுக்க கருப்பு கருப்பா துணியில் செய்த பொம்மைகள் - பார்க்கவே பயங்கரமா.. யப்பே.. அங்கங்க எங்கங்க பார்த்தாலும் பான் பராக் கவர்கள்.. பயங்கர வறட்சி நிலத்திலும், மக்கள் முகங்களிலும்.. பல கடைகளுக்கு கதவும் பொருத்தியே இருந்தது.

பெண்கள் போகக்கூடாது என்றெலாம் ஏதோ சொல்லி கொண்டிருந்தாங்க. ஆனால் கோவில் வாசலில் பூத்தில் இருந்த ஒருத்தர் யார் வேணா போகலாம்னு சொல்லிட்டார். திறந்த வெளியில் 1 ஷேப்-ல ஒரு பாறை வடிவம். அதைச் சுற்றி fencing பண்ணிருந்தாங்க. பூஜாரி யாருமே தென்படவில்லை. கூட்டமும் குறைவாகவே இருந்தது. பெண்கள் எல்லாரும் அங்கிருந்த மேடைக்குள் நின்றிருந்தனர். நாங்களும் அப்படியே. ஆண்கள் எல்லாரும் கைவசம் இருந்த நல்லெண்ணையை வேலி இடுக்கு வழியாக விசிறிக்கொண்டிருந்தனர். எல்லாம் தரையிலேயே கொட்டிய படி இருந்தது. வெளியேறும் வழிநடையில் வீர சிவாஜி சிலையொன்று இருந்தது.

வெளியே வந்ததுமே நல்ல அருமையான சோளக்கதிர் சுட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ரூ.10 க்கு ஒன்னு.

ரிடர்ன் வந்து விங்கரில் கிளம்பினோம். கிஷன் தன் ஏமாற்றங்களைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தான். ஏற்கனவே அமர்த்தும் போது பேசியது என்னவோ, நல்ல ஒரு ஹோட்டலில் டிராப் பண்ணும்படிதான்.  ஆனால் பாதி வழியிலேயே ஔரங்காபாத் CBS (சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட்)ல விட மாட்டேன், பிவிகா மக்பரா-வில் தான் விடுவேன் என்றான். அப்புறம் அஞ்சு மணிக்கே மூடிறுவாங்கன்னான். ஒரே தகராறு. ரொம்ப டென்ஷன் ஆகிடுச்சு. அவனுக்கு சாயந்திரம் வேற ஏதோ ஏர்போர்ட் பிக்கப் வேற இருக்காம். ப்ளைட்ல வரவன் இந்த வண்டிலேயா வீட்டுக்கு போகப் போறான்.. பாவம்.. எங்களை மாதிரி இ.வா போலருக்கு .. அதாங்க இலக்கியவாதி.

அட்லீஸ்ட் லஞ்ச் சாப்ட்டுட்டு போகலாம்னு கிஷனோட சண்டை போட்டு ஒரு தாபாவில் நிறுத்தினோம். அங்கேயாவது விட்டுதா..  தந்தூரி ரொட்டி, மூணு சப்ஜி வகை சொல்லிட்டு உக்காந்தோம். ஆச்சா.. வரவே இல்ல.. கசமுசான்னு பான் சாப்டுக்கிட்டு ஒரு வடக்கூர் கும்பல் வந்து உக்காந்துச்சு. அவங்களுக்கு ஒரே நிமிஷத்துல பரிமாறிட்டாங்க..  செம கடுப்பாயிடுச்சு.. மணிஜியும் நானும் போய் கேட்டோம்.. தகராராயிடுச்சு.. அப்புறம் கொண்டு வந்தாங்க. சப்பாத்தி எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. எல்லாருக்கும் மொத்தம் 36 சப்பாத்தி சப்ஜி எல்லாத்துக்குமே பில் 750 தான்...

அங்கேர்ந்தும் கிளம்பிட்டோம்..

நடு வழியில் ஜீப்பை ஓரமா நிறுத்திட்டு மாமூஸ் நின்று கொண்டிருந்தாங்க. வண்டிய நிப்பாட்டு.. கிஷன் பம்மினான், பதுங்கினான்.. கடைசில முந்நூறு ரூபா, ஏன்னு கேளுங்க... வண்டில பேப்பர் எதுவுமே இல்லை.. மீண்டும் கண்ணாம்பாவுக்கு வந்தது சோதனை.. ஐயகோ..

இப்போ கிஷன் நம்மளை பத்திரமா கொண்டு சேர்த்துடுவானான்னு பயம் வந்துடுச்சு.. ஏற்கனவே கலாலக்ஷ்மி-ன்னு ஒரு ஹோட்டல் ஒன்றை சோர்ஸ் பண்ணி, அவ்ளோ திருப்தி இல்லாம இருந்ததால், அங்கே போய் பார்த்துக்கலாம்-ன்னு தீர்மானம் பண்ணிருந்தோம். அவருக்கே போன் போட்டு ரூம் இருக்கான்னு செக் பண்ணிக்கிட்டோம். கலாலக்ஷ்மி ஹோட்டல் ஓனரை கிஷன் கிட்ட பேசி வழி கேட்டுக்கச் சொன்னோம், அவர்கிட்டே கமிஷன் கேட்கிறான் கிஷன்....

வேற வழியில்லாம  ஒரு வழியாய் கிஷனோடு போராடி ஒரு ஜூவுக்கு வாசலில் நிறுத்தச் சொன்னோம். பார்த்தால் எதிர்க்கவே கலாலக்ஷ்மி.  படு திராபை ஹோட்டல். லிப்ட் இல்லை, ஏசி இல்லை, படுக்கைக்கு குத்தும் பழங்கால கம்பளி ... அவ்..  rent ரூ.850 . லக்கேஜ் குழந்தைகளோடு எங்கெங்க அலையறது? அங்கேயே மூணு ரூம் புக் பண்ணிகிட்டோம். மூணாவது மாடியில். ரைட்டு ஒரு நாள் ராத்திரிதானே..

அப்போவே நாலரை மணி. பிரெஷ் ஆகி டீ குடிச்சுட்டு, செல்வம், வாசு, மணிஜி எல்லாரும் குழந்தைங்களை கூப்பிட்டுகிட்டு எதிரே இருந்த ஜூவுக்கு போனாங்க... ஈஸ்வரி ராதிகா ரெண்டு பேரும் தூங்கிட்டாங்க. நானும் பிரேமா-அக்காவும் ஆட்டோ பிடிச்சு போய் செருப்பு வாங்கி கொண்டு, ஜூவுக்கு வந்தோம்.

கற்றுக் கொண்ட பாடங்கள்:

1. டாக்ஸி பேசும் போது, 25% மேல் அட்வான்ஸ் பண்ணக்கூடாது
2. டாக்ஸி பேப்பர்கள் சரியா இருக்கா, வண்டி கண்டிஷன் எப்பிடி இருக்கு எல்லாம் நாமே நேரடியாய் பார்த்து confirm பண்ணிக்கறது நமக்குத்தான் நல்லது.
3.புதிய இடங்களில் கோவில்களுக்கு போகும் போது முடிந்தவரை எதுவும் அர்ச்சனைக்கோ / சுவாமிக்கோ என வாங்கிப் போகாமல், இயன்றளவு உண்டியலில் பணமாக சேர்த்துவிட்டால், செண்டிமெண்டாக பீல் செய்ய நேரிடாது.

அடுத்தது.. ஔரங்காபாத் ஜூ, பிவி கா மக்பரா, எல்லோரா.. எல்லாம் நாளைக்கு...

3 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நடைமுறை சிரமங்களை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள். எனவே முடிந்த வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

pudugaithendral said...

ஆஹா அலைச்சல் அங்கேயிருந்தே ஆரம்பமா....

J S Gnanasekar said...

இவ்வூரில் திருடும் எவரையும் எல்லை தாண்ட விடமாட்டார் என்று சனிபகவான் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையால், கட்டிடங்களில் கதவு வைக்க மாட்டார்களாம்.

இவ்வூருக்குள் பாம்பே வராதென்றும் கேள்விப்பட்டேன்.

Post a Comment