பயணக்குறிப்பு#1: ஷிர்டி நோக்கி


சென்னையிலிருந்து பெங்களூரு:

ஷிர்டி சிறப்பு ரயில் புதனன்று இருப்பதால் அதிலேயே சென்று விடலாம் என்று தீர்மானித்தோம். இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்த இரயிலில் புக்கிங் எடுப்பார்கள் என்பதால், அரும்பெரும் முயற்சிகளுக்குப் பின் IRCTC இணையத்தில் சக்கரம் சுத்தி ஷிர்டி எக்ஸ்பிரஸ் இரயிலில் டிக்கட் கிடைக்காமல், சென்னை - பெங்களூரு - கோபர்காவ்ன் செல்வதாக திட்டமிட்டு பிருந்தாவன் எக்ஸ்ப்ரெசில் பெங்களூரு பயணம்.

எட்டுமணி நேரம் கழித்தே அடுத்த ரயில். குழந்தைகளை வைத்துக் கொண்டு அதற்குள் மதிய உணவு, ஊர் சுற்றல் என்று எதுவும் சீக்கிரம் முடியாது என்பதால், ஒரே ஒரு இடம் மட்டும் போய் வரலாம் என்று நினைத்தோம்.

இந்த நேரத்துக்குள்ள "சுத்தி"ய வேணா பாக்கலாம்.. [மணிஜி]

திருமதி.மணிஜி ஆலோசனையில், பெங்களூர்-ரில் நவராத்திரி ஆரம்பாகும் அன்று எதிர்பாராமல் உல்சூர் கெம்பம்மா அம்மன் கோவிலுக்கு போகும் அருமையான வாய்ப்பு. அருமையான அலங்காரம், ஆரத்தி. கல்உப்பும் தயிரும் சாற்றினால் warts / தோல் நோய்கள் நீங்கும் என்பதாக நம்பிக்கை.

இந்த மூக்கு எங்கியோ பார்த்தமாதிரியே இருக்கேன்னு பார்த்துக் கொண்டிருந்தேன், மணிஜி "வாணி (கமல்)" தானே.. என்றார். வயசு ஆக ஆக அழகாகிட்டே போவாங்க போலருக்கு.

பெங்களூர் ஆட்டோ / கால் டாக்ஸி-க்காரர்கள் ரொம்ப தன்மையாகவும் ரீசனபில் ஆகவும் இருக்கிறார்கள். சந்தோஷ் மற்றும் ஜீவ்ஸ் - வந்து ஆசி பெற்றுச் சென்றார்கள்.

தமிழ்நாட்டைத் தாண்டினால் டீயும் தந்தூரி சப்பாத்தியுமே உணவாகிப் போகிறது.

அரட்டையும் சிரிப்பு வெடிகளுமான பயணத்துக்குகந்த நண்பர்கள் வரிசையில் திரு&திருமதி. மணிஜி, வாசு, திரு & திருமதி செல்வம். ஷங்கர் & கும்க்கி கும்பகர்ண பரம்பரை. தர்ஷிணியை பிசியாக வைத்து எனக்கு பெரிய உதவி பண்ண ஜூனியர் லேடீஸ் செல்வம் மற்றும் ஜூனியர் கருணா-வுக்கு ஸ்பெஷல் நன்றீஸ்.

கோபர்காவ்ன் நோக்கி....

2 comments:

துளசி கோபால் said...

ஆஹா ஆஹா..... தொடர்ந்து வருவேன்.

வாணியை சிலமாசங்களுக்கு முன் சண்டிகரில் ஒரு நடன நிகழ்ச்சியில் கண்டேன். அப்படியே இருக்காங்க:-)

புதுகைத் தென்றல் said...

இப்பத்தான் பாத்தேன். மத்ததையும் படிக்கிறேன்

Post a Comment