நவராத்திரி



2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 28, புதன்கிழமை அன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது.
துர்காஷ்டமி: செவ்வாய்  - அக்டோபர் 4-2011
சரஸ்வதி பூஜை / மகாநவமி : புதன் - அக்டோபர் 5-2011
விஜயதசமி: வியாழன் - அக்டோபர் 6-2011


 2009-ஆம் ஆண்டு, செப்டம்பர் 19, சனிக்கிழமை நவராத்ரி ஆரம்பிக்கிறது.
2010-ஆம் ஆண்டு அக்டோபர் 8, வெள்ளிக்கிழமை நவராத்திரி துவங்கி 17-அன்று முடிந்தது.  

பேணி செய்வது எப்படின்னு விரைவில் ஒரு போஸ்ட் ஒன்றை எதிர்பாருங்கள்... எப்டி இருந்ததுன்னு வேணா... ஸ்கிரிப்ளிங்க்ஸ் வித்யா மற்றும் எறும்பு சார் ராஜகோபாலிடமும் கேட்டுக்கோங்க.. :-p


================================================================
நவராத்திரி ஸ்லோகங்கள்
================================================================
ஸ்லோகங்கள் Print-ready PDF download செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள். சரஸ்வதி பூஜை மந்திரங்கள் Print-ready PDF download செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
================================================================


நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி `சிவசக்தியாக' ஐக்கிய ரூபிணியாக - அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

முதல் மூன்று நாட்கள், மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும்,

அடுத்த மூன்று நாட்களில் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும்,

நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம்.

இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்டவரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.

================================================================
பாலிகை தெளித்தல் /  முளைப்பாரி சடங்கு
================================================================

வாயகலமாய் இருக்கும் மண் சட்டியில், மண்ணும் பசுஞ்சாண எருவும் கலந்து நவதானியங்களும் தெளித்து செழிக்கச் செய்யும் பாரம்பரிய சடங்கு இது.

கடுகு, நெல், பச்சைபயறு, அவரை, எள், கொள்ளு, கோதுமை, கம்பு, கேழ்வரகு ஆகியவை சட்டென்று முளை கட்டும். அமாவாசை அன்று பாலிகை தெளித்து, கலசம் எடுத்து வைப்பது பழக்கமாக இருக்கிறது.

சிலர் மண்சட்டிக்கு பதிலாக பித்தளை பாத்திரங்களிலும் இடுவர்.

================================================================
நைவேத்தியம் / ‌பிரசாத‌ முறைக‌ள்
================================================================

9 நா‌ட்களு‌ம் ஒ‌‌வ்வொரு ‌விதமான ‌பிரசாத‌ங்களை வை‌த்து நைவேத்தியம் செய்ய வே‌ண்டு‌ம்.


சுண்டல்கள் செய்ய, ரெசிப்பிகள் இங்கே கிடைக்கும்



================================================================
முதல் நாள்:

காலை:
வெண்பொங்கலை பிரசாதமாகக் கொடுப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.

மாலை: இது தவிர நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது.

முதல் நாள் சனிக்கிழமையாக அமைவதால் சனிபகவானுக்காக கருப்புக் கொண்டைக் கடலை சுண்டல் செய்யலாம்.
================================================================
இரண்டாம் நாள்:

காலை: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.

மாலை: இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் சூரிய பகவானுக்காக கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு (கோதுமை ஹல்வா)போன்றவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.

================================================================
மூன்றாம் நாள்:

காலை: சர்க்கரைப் பொங்கல். இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

மாலை: சந்திர பகவானுக்காக அரிசி கலந்த தேன் குழல், தட்டை முதலியவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.
================================================================
நான்காம் நாள்:

காலை: பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.

மாலை: செவ்வாய்க் கிழமையாக அமைந்துள்ளதால் செவ்வாயான அங்காரகனுக்கும், துர்கைக்கும் உகந்ததான சிவப்பு காராமணி சுண்டலை விநியோகிக்கலாம்.
================================================================
ஐந்தாம் நாள்:

காலை: தயிர் சாதம் பிரசாதம். இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.

மாலை: புதன் கிழமையாதலால் புத பகவானுக்குகந்த பாசிப்பருப்பை சுண்டலாக நிவேதனம் செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.
================================================================
ஆறாம் நாள்:

காலை: தேங்காய் சாதத்தை பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.

மாலை: வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்தது. கொண்டைக்கடலைசுண்டல் விநியோகிக்கலாம்.
================================================================
ஏழாம் நாள்
காலை: எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக அளிக்கிறோம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.

மாலை: வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர பகவானுக்காக அரிசியுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து அரிசிப்புட்டு செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.
================================================================
எட்டாம் நாள்

காலை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும்.கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.

மாலை: மாலையில் நவதானிய சுண்டல் விநியோகிக்கலாம்.

================================================================
ஒன்பதாம் நாள்

காலை: சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனம் செய்யலாம்.

மாலை: கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.

================================================================

கொலு வை‌க்க ‌சில கு‌றி‌ப்புக‌ள்

================================================================
  • கொலுவில் முக்கியமானது கலசம். தங்கக் கலசமாய் வைத்தால் கொலு பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்! நிஜத்தங்கம் இப்போது வாங்குகிற விலை இல்லை, ஆகவே தங்கம் போல மினுக்கும் சம்கிகளைக் கொண்டு செய்யலாம். சிறிய ப்ளா‌ஸ்டி குடம் வாங்குங்கள் சொம்பு சைசில் கடைகளில் இது கிடைக்கும். ப்ளா‌ஸ்டிக் மாவிலை 5 நல்ல பச்சை நிறத்தில் வாங்கிக்கொள்ளுங்கள். தங்க நிற சம்கிகள் சிறு இலை வடிவில் கிடைக்கும் இதை குண்டூசியால் குடம் முழுவதும் நெருக்கமாய் குத்தி விடுங்கள்.குடத்தின் வாய்பகுதிக்கு வெள்ளி நிற லே‌ஸ் கிடைக்கும். அதை குடத்தின் வாய் அளவுக்கு கத்திரித்து பெவிகால் தடவி ஒட்டிவிடுங்கள். மாவிலைகளை குடத்தின் மேல் செருகி விட்டு ஒரு தேங்காயை நடுவில் வையுங்கள். தங்கக் கலசம் தயா‌ர்.
  • கொலுவிற்கு 4 நாட்கள் முன்னதாகவே தோட்டத்திலோ தொட்டியிலோ கேழ்வரகு கடுகு தெளித்து வையுங்கள். இவை முதல் நாள் கொலுவுக்கு செழித்து வளர்ந்திருக்கும். அந்தப் பயிர்களை அப்படியே தாய்மண்ணோடு எடுங்கள். பழைய அட்டைகளை முக்கோண அ‌ல்லது சதுர அ‌ல்லது செவ்வக வடிவில் கத்திரித்து வளர்ந்த பயிர்களை அதன் மீது சீராக வையுங்கள். இரண்டொரு நாளில் அவை மேலும் வளர்ந்து புது‌ப் பொலிவினைத்தரும்!
  • பார்க் அமைக்கும் போது உபயோகித்த கொசு மேட்களை தரையில் வைத்தால் ப்ளாட்பார்ம் போல தெரியும். உலர்த்திய காபிப்பொடியால் தார்சாலை நடுவில் அமைக்கலாம்.
  • சிறு ப்ளா‌‌ஸ்டிக் கிண்ணங்களில் மண்ணை நிரப்பி அதில் வீட்டுத் தோட்டத்தில் வளரும் சிறு செடிகளையோ அல்லது கொத்தாய் புற்களையோ வைத்து பார்க்கில் இயற்கையான தொட்டி செடிகள் செய்யலாம் அவ்வப்போது நீர் தெளித்தால் போதும் இவை பசுமையாய் இருக்கும்.
  • பு‌த்தக‌த்‌தி‌ன் அ‌ட்டை‌ப் ப‌க்க‌த்‌தி‌ல் வரும் பெரிய கோபுரப் படங்களை அப்படியே கட் செய்து அட்டையில் கவனமாய் ஒட்டி கொலு முகப்பில் வைக்கலாம்.
  • கொலுவிற்கு வருபவர்களுக்குக் கொடுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை சிறு கவரில் போட்டு வைத்து விட்டால் தனித்தனியாய் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
  • இனிப்பு பூந்தி, சக்கரையுடன் பொட்டு கடலை அரைத்தமாவு, கடலை உருண்டை, தேங்காய் வெல்லம் சேர்த்துக் கிளறிய பூரணம் இவைகளை தயாராய் பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் சுண்டல் தீர்ந்த நேரங்களுக்குக் கை கொடுக்கும்.
  • கோலத்தில் வ‌ண்ணபொடி தூவுவதற்கு டீ வடிகட்டியை உபயோகித்தால் சீராகப் பொடி விழும்
  • பழைய குக்கர் கா‌ஸ்கட்டு ஒன்றினை அலுமினிய ஃபாயில் கொண்டு சுற்றி வைத்தால் பார்க்கில் மணலில் கீழ்பாதியை மறைத்து விட்டு மேல் பாதியை நுழைவு வாயில் போல செய்யலாம். மேலும் அலங்கரிக்க அதில் சிறிதும் பெரிதுமாய் மணிச்சரங்களைக் கட்டி தொங்க விடலாம்.
  • கொலுவின் ஒரு படிக்கட்டில் குழந்தைகளின் கைவண்ணத்தில் உருவானதை வைத்து அவர்களை மகிழ்விக்கலாம்.
  • செட்டியார் பொம்மை கடைக்கு முன்பாக புளி அரிசி பருப்புவைப்பது வழக்கம். குழந்தைகளை விட்டு சிறு பாட்டில் மூடி, குச்சி, டொய்ன் நூல் கொண்டு தராசு செய்ய வைத்து ஒரு அட்டையில் செட்டியார் கடை என்று பெயரையும் எழுதச் சொல்லுங்கள். குழந்தைகள் கற்பனைக்கு வேலை கொடுங்கள்.
  • கூடிய வரைக்கும் தெய்வ உருவ பொம்மைகளை மேல்படிகளிலும் மனித உருவ பொம்மைகளை கீழ்ப்படியிலும் வைப்பது நல்லது.
  • வசதி படைத்தவர்களுக்குக் கொடுப்பதை விட படிக்கும் ஏழைச் சிறுமிகளுக்கு புத்தகம் நோட்டு பேனா போ‌ன்றவ‌ற்றை வா‌ங்‌கி வ‌ந்து தா‌ம்பூல‌‌த்துட‌ன் சே‌ர்‌த்து கொடுக்கலாம்.
  • தீ‌க்கு‌ச்‌சி அ‌ல்லது காதுகுடையும் பஞ்சு குச்சிகளை பார்க்மணலில் வேலி போல் வைத்தால் அழகாயிருக்கும். அதேபோல் பால்பாயிண்ட் பேனாவில் காலியான பால்பாயிண்ட் குச்சிகளை ஒரு வட்டம் போல அமைத்து நடுவில் சிங்கம் புலி போன்ற விலங்குகளால் ஆன ப்ளா‌ஸ்டிக் பொம்மையை நிறுத்தலாம்.
  • கிறி‌ஸ்தும‌ஸ் மரத்தின் அடர்த்தியான இலை ஒன்றை அருகில் மரம் போல மணலில் நட்டு விட்டால் மிருகக்காட்சி சாலை போலவே இருக்கும்.
  • ஃப்யூசான பழைய பல்புகளுக்கு தங்கத்தாள் சுற்றி படிகளின் இருபக்கமும் வைத்தால் மின்விளக்கு வெளிச்சத்தில் கொலு பளபளக்கும்!
  • கல் உப்பில் வண்ணம் சேர்த்து கோலமிடலாம். முத்தாரத்தி நவராத்திரியில் விசேஷம்.
  • ஜவ்வரிசிக் கோலமு‌ம் இடலாம். ஒரு தாம்பாளத்தில் மாவினால் கோலம் வரைந்து ஃபெவிகால் ஆங்காங்கே தடவி விடவும். ஜவ்வரிசி மீது விதவிதமான வண்ணம் கலந்து தனித்தனியாக வைத்திருக்கவும். கோலத்தின் டிசைனுக்குத் தகுந்தபடி கற்பனை சேர்த்து ஜவ்வரிசியினை பரவலாய் போடவும். ஃபெவிகால் பசையில் அவை நன்கு ஒட்டிக் கொள்ளும். மணிமணியாய் பார்க்க அழகாயிருக்கும்.
  • ரவிக்கைத் துணி ம‌ட்டு‌ம்தா‌ன் கொடு‌க்க வே‌ண்டியது எ‌ன்‌றி‌ல்லை. வளையல்கள், சிறு டாலர்கள், கோல ‌ஸ்டிக்கர், ம‌‌ந்‌திர புத்தகங்கள், சுவாமி படங்கள் என்று தாம்பூலத்தோடு வைத்துக் கொடுக்கலாம்.
  • ஸ்‌ட்ரா குச்சிகளை பாதியாய் நறு‌க்‌கி அவைகளையும் குளத்திற்கு சுற்றி வேலி அமை‌க்கலா‌ம்.


    2 comments:

    *இயற்கை ராஜி* said...

    தங்களின் வலைப்பூவைப் பற்றிய விவரத்தை httப்://blogintamil.blogspot.com இங்கே தந்துள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள். நன்றி

    ரிஷபன் said...

    அட.. நவராத்திரியைக் கொண்டாடின எபக்ட் வந்தாச்சு..
    நிறைய்ய தகவல்கள்.. நைஸ்!

    Post a Comment