குஜாரிஷ்

சூப்பர்... சூப்பர்... ஆனா not everyone's cake... மனசார சிரிச்சேன், அழுதேன். :) ஒரு இறகு போல மெத்துன்னு இருக்குங்க. பாட்டெலாம் எப்போ வரதுன்னே தெரியலை. டைட் க்ளோஸ் அப்பிலும் அலுக்காத காட்சியமைப்பு.. அழுகை அழுகையா வந்தாலும் தலைவலி வரவே இல்லை, எழுந்து போகவே தோணலை. டயலாக்ஸ் எல்லாமே அருமை. செம கிளீன் படம்.

கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும் என்பதை ப்ரூவ் பண்ணிக்கிட்டே பக்கத்துல உக்காந்து ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்த பாஸ்கருக்குத்தான் இந்தப் படத்தை தமிழ்ல எடுக்கணும்ன்னு விபரீதமா ஒரு ஆசை ... என்னை படமே பாக்க விடாம வரிக்கு வரி தமிழ் படம் டயலாக்கு வேற.. அதுவும் யாரை வச்சு..

ஹ்ரிதிக் ரோஷன் ரோல்ல சிவாஜி கணேசன்-னாம்
சுஹேல் சேத் - டாக்டர் - பூர்ணம் விஸ்வநாதன்-னாம்
ஐஸ்வர்யா = கே.ஆர்.விஜயா-வாம்
ஜட்ஜு - மேஜர் சுந்தர்ராஜன்-னாம்
நபிஸா அலி - ஹ்ரிதிக்கின் அம்மா - பண்டரி பாய்-யாம்

இமோஷனல் டிராமாவா இருந்த க்ளைமேக்ஸ்ல நான் கர்சீப்பே நனையும் அளவுக்கு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன். அப்போ பாஸ்கர்... அவங்க டயலாக் பேசப் பேச கூடக் கூட ...

கே.ஆர்.விஜயா: நானே உங்களை கொன்று விடுகிறேன் சார்.
சிவாஜி: என்னை கல்யாணம் பண்ணிப்பியா
கே.ஆர்.விஜயா... (சிரிப்பும் அழுகையுமாய் அப்படியே காலில் விழுதல்)

அடுத்த காட்சி...
ஜட்ஜு மேஜர் சு.ரா.: ஹிஸ் பெடிஷன் பார் இந்தோனேசியா அஹ் அஹ் ஈதொனேஸியா இஸ் டிஸ்மிஸ்ட் ... இந்த கருணை கொலை மனுவை தள்ளுபடி பண்ணறேன்

அடுத்த காட்சி
சிவாஜி தன் கே.ஆர்.விஜயா தன்னை கொல்லப்போவது பற்றியும் திருமண அறிவிப்பு செய்தலும்...

உதடு தழுதழுக்க... "அம்மா விஜயா... .. நீயே என்னை கொன்னுடும்மா... அப்படி பாக்காதே.. சகிக்கலை " அப்டீங்கறார்..

உடனே கே.ஆர்.விஜயா... "அதெப்படி உங்களை கொல்வது அத்தான்" என்று சொல்லியபடி தாலியை எடுத்து கண்ணில் ஒத்திக் கொள்ளுதல்...

பண்டரிபாய் கதறி கதறி அழுதல்..

இப்போ கரெக்டா ஜட்ஜு என்ட்ரி கொடுக்கராராமாம்... "என்ன... இவளைப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்டயா... இதுக்கு நானே உன்னை கருணைக் கொலை செய்ய தீர்ப்பு கொடுத்திருப்பேன் சிவாஜி " அப்டீன்னு சொல்லிட்டு டுமீல் டுமீல்ல்னு துப்பாக்கியால் சுட்டுடறார்..

எனக்கு அழறதா சிரிக்கறதான்னு தெரிலைங்க...

இன்னொரு தரம் நிம்மதியா பாக்கணும், யாராவது நண்பர்களோடு மட்டுமே சினிமாவுக்கு போவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்...

6 comments:

R. Gopi said...

அப்போ இன்னொரு பதிவும் உண்டா? ஐயையோ, மீ த எஸ்கேப்:)))))))

Vidhya Chandrasekaran said...

பாஸ்கரண்ணா என்னதான் பண்ணுவாரு?

இந்தப்பக்கம் நீங்க. ஸ்க்ரீன்ல ஐஸ்வர்யா ராய் (அந்த அழுத்தமான லிப்ஸ்டிக். யக்).

காட்டுல தனியா போகும்போது பயம் தெரியாம இருக்க பாடிக்கிட்டே போவாங்களாம். பாஸ்கரண்ணா பேசிட்டே இருந்திருக்காரு. அவ்வளவுதான்:)

R.Gopi said...

//ஹ்ரிதிக் ரோஷன் ரோல்ல சிவாஜி கணேசன்-னாம்
சுஹேல் சேத் - டாக்டர் - பூர்ணம் விஸ்வநாதன்-னாம்
ஐஸ்வர்யா = கே.ஆர்.விஜயா-வாம்
ஜட்ஜு - மேஜர் சுந்தர்ராஜன்-னாம்
நபிஸா அலி - ஹ்ரிதிக்கின் அம்மா - பண்டரி பாய்-யாம்//

**********

விதூஷ்....

இது என்ன, இவ்ளோ பெரிய டெர்ரர் ஐடியா பாஸ்கர்க்கு எப்படி வந்தது?

//ஜட்ஜு மேஜர் சு.ரா.: ஹிஸ் பெடிஷன் பார் இந்தோனேசியா அஹ் அஹ் ஈதொனேஸியா இஸ் டிஸ்மிஸ்ட் ... இந்த கருணை கொலை மனுவை தள்ளுபடி பண்ணறேன்//

ஹா...ஹா...ஹா... ரசித்து சிரித்தேன்... சுருக்கமா மேஜர் மாதிரி சொல்லணும்னா, நான் குழந்தை மாதிரி சிரிச்சேன்...ஐ ஜஸ்ட் லாஃப்ட் லைக் ய கிட் ஐ ஸே!!!

Vidhoosh said...

நன்றி கோபி ராமமூர்த்தி :))

நன்றி வித்யா... ஙே!!!

நன்றி ஆர்.கோபி

அமுதா கிருஷ்ணா said...

என்ன ஒரு கற்பனை...

விக்னேஷ்வரி said...

பாவம் உங்களவர். நீங்க படத்துக்குக் கூட்டிட்டுப் போய் இம்சை பண்ணா, அவர் பதிலுக்கு பண்ணிட்டார். :)

படம் நல்லாருக்குங்கறீங்க. எனக்கும் பார்க்கணும்னு ஆர்வமா இருக்கு. போய்ட்டு வந்து சொல்றேன்.

Post a Comment