ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் - பூர்வ பாகம் - அத்தியாயம் 1 (தொடர்)

சென்ற வருடம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுமையாக முடித்து திருவண்ணாமலையில் அருணை ஈசனிடம் 'உன்னுடையது' என்று ஒப்படைத்து விட்ட மொழிபெயர்ப்பு இது. ஸ்ரீ ரமணர் போன்ற மகான்களுக்கு வாய்த்தது எனக்கும். பல இன்னல்களையும் இடையூறுகளையும் கடந்து முழுமையாக இதை மொழிபெயர்க்க முடிய வைத்தது ஸ்ரீ அருணாச்சலேஸ்வரரின் ஆசியேயன்றி வேறேதும் இல்லை.

பல பொருளாதார சிக்கல்களால் புத்தக வடிவம் பெற முடியாமல் அப்படியே முடங்கிப் போனது. கடந்தவாரம் நான் இதன் பொருட்டு பெற்ற முன்பணத்தையும் உற்றவரிடம் திருப்பிச் செலுத்தியாகி விட்டது. இது பற்றி பேசிக்கொண்டிருந்த இரவே, ஈசனின் வாக்கு போல, என் ஆசானே, "நீயே எல்லோரும் இலவசமாக பெறும்படி வெளியிட்டுவிடேன்" என்றார். இன்றைய நிலையில் ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் புத்தக வடிவம் பெறாமல் போனாலும், என்றேனும் ஈசனின் வரம் பெற்றால் அதுவும் வாய்க்கும். அருணாச்சலேச்வரரின் ஆணையாகவே கருதி இனி வரும் சில மாதங்கள், முழுமையாக ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் இங்கு தொடராக வெளிவரும். எல்லோரும் இன்புற்று வாழவேண்டும்.

ஸ்ரீ அருணாச்சலேஸ்வரரின் காலடிக்கு சமீபம் எப்போதுமிருக்கும் ஆசான் ஸ்ரீ ரமணர் காலடிக்கு சமர்ப்பணம். எனக்கு கல்வி தந்த என் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கும். இந்த பெரிய செயலில் ஈடுபட்டிருந்தபோது, ஒருநாளும் என்னை வருத்தாமல் எனக்கு ஆதரவாய் துணை நின்ற என் கணவர் பாஸ்கருக்கும்.
================================================================================

श्रीअरुणाचलमाहात्म्यम्
ஸ்ரீஅருணாசலமாஹாத்ம்யம்

श्रीगणेशाय नमः
अथ स्कान्देमहापुराणे प्रथमे माहेश्वरखण्डे
त्रुतीयमरुणाचलमाहात्म्यम्
तत्र पूर्वार्धः प्रारभ्यते
प्रथमोऽध्यायः
लिङ्ग् प्रादुर्भाववर्णनम्

ஸ்ரீகணேஸாய நம:
அத ஸ்காந்தேமஹாபுராணே ப்ரதமே மாஹேஸ்வரகங்டே
த்ருதீயமருணாசலமாஹாத்ம்யம்
தத்ர பூர்வார்த: ப்ராரப்யதே
ப்ரதமோத்யாய:

விநாயகருக்கு நமஸ்காரங்கள்
மகேஸ்வரக் காண்டம் - ஸ்கந்த மகாபுராணத்தின் முதல் காண்டம்
மகேஸ்வரக் காண்டத்தின் மூன்றாம் பாகமான அருணாசல மஹாத்மியம்
முதல் பகுதித் துவக்கம்
முதல் அத்தியாயம்
லிங்காம்சங்கள்

ललाटे त्रैपुण्ड्री निटिलक्रुतकस्तूरितिलकःस्फ़ुरन्मालाधारःस्फ़ुरितकटिकौपीनवसनः
दधानो दुस्तारं शिरसि फ़णिराजं शशिकलां प्रदीपःसर्वेषामरुणगिरियोगीविजयते
व्यास उवाच
अथाऽऽहुर्मुनयः सूतं नैमिषारण्यवासिनः।
अरुणाचलमाहात्म्यं त्वत्तःशुश्रूषवोवयम्
तन्माहात्म्यं वदेत्युक्तः सुत प्रोवाच तान्मुनीन्।

லலாடே த்ரைபுங்ட்ரீ நிடிலக்ருதகஸ்தூரிதிலக:ஸுரன்மாலாதார:ஸுரிதகடிகௌபீனவஸன:
ததானோ துஸ்தாரம் ஸிரஸி அணிராஜம் ஸஸிகலாம் ப்ரதீப:ஸர்வேஷாமருணகிரியோகீவிஜயதே
வ்யாஸ உவாச
அதாஹுர்முனய: ஸூதம் நைமிஷாரங்யவாஸின: |
அருணாசலமாஹாத்ம்யம் த்வத்த:ஸுஸ்ரூஷவோவயம்
தன்மாஹாத்ம்யம் வதேத்யுக்த: ஸுத ப்ரோவாச தான்முனீன் |

தன் நெற்றியில் திரிபுண்டரம் (சாம்பல் / விபூதி) மற்றும் கஸ்தூரித் திலகம் (புனுகு) அணிந்தவரும், கழுத்தில் ஒளிமிகு மாலை அணிந்தவரும், இடையில் திருவரைக்கோவணம் தரித்தவராயும்,
யாருக்கும் அடங்காத கொடும் விஷமுள்ள இராஜ நாகங்களைத் தலையில் சூடியும், சடாமுடியில் பிறை அணிந்தவராகவும், உலகின் பேரொளியாக, சிவபெருமான் அருணகிரியில் ஒளிர்கிறார். இவரது ரூபம் நிரந்தரமற்றத் தன்மையைக் குறிப்பதாகவும், எளிமையை ஏற்கவும், போற்றவும் நமக்கு அறிவுருத்துவதாகவும் இருக்கின்றது.
வேத வியாசர் கூறுகிறார்.
நைமிசரண்யத்தின் பெருமுனிவர்கள் சூதரைப் பணிந்துக்கீழ் கண்டவாறுக் கேட்டனர்.
இந்தப் பூமியைப் பாதுகாக்கவும் இவ்வுலக மக்கள் வளம் பெறவும் அருணாச்சல ஈஸ்வரன் மனமிரங்கி எழுந்தருளியதைப் பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறோம்.
தயவு செய்து அருணாச்சல ஈஸ்வரனின் மகிமை பற்றி விளக்குங்கள். முனிவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சூதர் மகிழ்ச்சி அடைந்து பேசத் துவங்கினார்.

श्रीसूत उवाच
एतदर्थं चतुर्वक्त्रं पप्रच्छ सनकः पुरा॥ ३॥
श्रुणुताऽवहितायूयंतद्वोवक्ष्यामिप्ताम्प्रतम्।
यदाकर्णयतांभक्त्यानराणांपापनाशनम् सत्यलोके स्थितं पूर्वं ब्राह्माणां कमलासनम्।

ஸ்ரீஸூத உவாச
ஏததர்தம் சதுர்வக்த்ரம் பப்ரச்ச ஸனக: புரா || 3 ||
ஸ்ருணுதாவஹிதாயூயம்தத்வோவக்ஷ்யாமிப்தாம்ப்ரதம்|
யதாகர்ணயதாம்பக்த்யானராணாம்பாபனாஸனம் ஸத்யலோகே ஸ்திதம் பூர்வம் ப்ராஹ்மாணாம் கமலாஸனம்|

சூதர் உரைத்தது:
முன்பு ஒரு சமயம், மாமுனிவர் ஸனகர் பிரம்மதேவரிடம் இதையே அறிய வேண்டினார்.
நான் அதையே உங்களுக்கு உரைக்கிறேன். கவனத்துடன் கேளுங்கள்.
பக்திப் பற்றோடு கேட்டால் மரணத்தை நோக்கிப் பயணத்துக் கொண்டிருக்கும் ஜீவனானது, பாவச் சுழல்களில் இருந்து சீக்கிரம் விடுபடும். சத்தியலோகத்தில் கமலாசனத்தில் அமர்ந்திருந்த பிரம்மதேவரிடம் ஸனகர் கோரியது:

सनकपरिपप्रच्छप्रणतःप्राञ्जलिःस्थितः
सनक उवाच
भुवनाधार! देवेश! वेदवेद्य चतुर्मुख़। आसीदशेषविज्ञानं प्रसादाद्भवतो मम॥६॥
भवद्भक्तिबिभूत्या मे शोधिते चित्तदर्पणे।
बिम्बते सकलं ज्ञानं सकृदेवोपदेशतः
सारार्थं वेदवेदानां शिवज्ञानमनाकुलम्।
लब्धवानहमत्यन्तं कटाक्षैस्ते जगद्गुरोः
लिङ्गानि भुवि शैवानि दिव्यानिचकृपानिधे।
मानुषाणिचसैद्धानिभौतानिसुरनायक यलिङ्गममलं दिव्यमरिच्छेदनवैभबम्।
स्वयम्भु जाम्बवे द्वीपे तैजसं तद्वदस्व मे नामस्मरणमात्रेण यत्पातकविनाशनम्।
शिवसारूप्यदं नित्यं मह्यं वद दयानिधे॥
अनादिजगदाधारं यत्तेजः शैवमव्ययम्।
यच्चदृष्ट्वा कृतार्थः स्यात्तन्मह्यमुपदिश्यताम् इति भक्तिमतस्तस्य कौतूहलसमन्वितम्।

ஸனகபரிபப்ரச்சப்ரணத:ப்ராஞ்ஜலி:ஸ்தித:
ஸனக உவாச
புவனாதார தேவேஸ வேதவேத்ய சதுர்முஉக| ஆஸீதஸேஷவிஜ்ஞானம் ப்ரஸாதாத்பவதோ மம||6||
பவத்பக்திபிபூத்யா மே ஸோதிதே சித்ததர்பணே|
பிம்பதே ஸகலம் ஜ்ஞானம் ஸக்ருதேவோபதேஸத:
ஸாரார்தம் வேதவேதானாம் ஸிவஜ்ஞானமனாகுலம்|
லப்தவானஹமத்யன்தம் கடாக்ஷைஸ்தே ஜகத்குரோ:
லிங்கானி புவி ஸைவானி திவ்யானிசக்ருபானிதே|
மானுஷாணிசஸைத்தானிபௌதானிஸுரனாயக யலிங்கமமலம் திவ்யமரிச்சேதனவைபபம்|
ஸ்வயம்பு ஜாம்பவே த்வீபே தைஜஸம் தத்வதஸ்வ மே நாமஸ்மரணமாத்ரேண யத்பாதகவினாஸனம் |
ஸிவஸாரூப்யதம் நித்யம் மஹ்யம் வத தயானிதே||
அனாதிஜகதாதாரம் யத்தேஜ: ஸைவமவ்யயம்|
யச்சத்ருஷ்ட்வா க்ருதார்த: ஸ்யாத்தன்மஹ்யமுபதிஸ்யதாம் இதி பக்திமதஸ்தஸ்ய கௌதூஹலஸமந்விதம்|

பிரம்மதேவர் முன் ஸனகர் கை கூப்பித் தலை வணங்கி நமஸ்கரித்தார்.
ஸனகர் கேட்டார்:
புவனங்களின் ஆதாரமே! தேவர்களுக்கும் தேவனே! வேதங்களின் தலைவா! நான்முகா! நான் பெற்றிருக்கும் ஞானம் முழுதும் உங்கள் ஆசிர்வாதத்தின் பலனேயாகும்.
உங்கள் மேலான என் பக்தியின் காரணத்தால் என் மனம் சுத்தமானது. என் புலன்களும் உணர்வுகளும் கட்டப்பட்டு இருக்கின்றன.
உங்கள் பரிவு இருப்பதாலேயே எனக்கு ஞானத்ருஷ்டி உண்டாகியிருக்கிறது.
வேதங்களின் சாராம்சமானது சிவஞானமே ஆகும்.
உங்கள் அருட்பார்வை இருப்பதால் மட்டுமே இது எனக்கும் கிட்டியது.
கருணை நிறைந்த மனம் கொண்டவரே. இவ்வுலகில் தெய்வாம்சம் பொருந்திய லிங்கங்கள் அதிகம் நிறுவப்பட்டுள்ளன.
மனிதர்கள் நிறுவியது, சித்தர்களால் பூரணமாக்கப்பட்டது மற்றும் மாசில்லாதது, திவ்யமானது மற்றும் கொண்டாடப்படுவது ஆகிய ஒன்றான
சுயம்பு லிங்கம், பேரொளி பெற்றது மற்றும் எதிரிகளை நாசம் செய்வது போன்றவற்றை, அவன் பெயர் கொண்டு அழைப்பதால் மாத்திரமே வரமாக வழங்கக்கூடிய வகைகளில் உள்ளன. ஜம்புத்வீபத்தில் உள்ள அப்படிப்பட்ட ஒரு லிங்கத்தை பற்றிக் கூறுங்கள்.
ஹே. கருணை மூர்த்தியே. பூரணமாய் சிவனது சாநித்தியம் பெற்ற, சிவரூபமான லிங்கத்தை அடையாளம் காட்டுங்கள்.
இவ்வுலகம் படைக்கப்பட ஆதாரமாய் இருந்த, சிவதேஜஸ் பொருந்தியதும்,
பார்த்த மாத்திரத்திலேயே வாழ்கையின் பூரண பலனை கொடுக்கக்கூடியதுமான அந்த லிங்கத்தை எனக்கு காட்டுங்கள். என்று மிகுந்த ஆர்வத்தோடும் பணிவோடும் பக்தன் கேட்டான்.

वाक्यामाकर्ण्यभगवान्प्रससादतपोनिधिः
दध्यौ च सुचिरं शम्भुं पङ्कजासनसंस्थितः।
अन्तरङ्गसुखम्भोधिमग्नचेताश्चतुर्मुखः॥१४॥
दृष्ट्वा यदापुरादृष्टं तेजःस्त्म्ममयं शिवम्।
उत्तीर्ण्सकलाधारं नकिञ्चित्प्रत्यबुध्यत पुनराज्ञां शिवाल्लब्धामनुपालयितं प्रभुः।
निर्वच्यर् हृदयं योगात्सस्मार् सुतमानतम् शिवदर्शनसञ्जातपुलकाङ्कितविग्रहः।
आनन्दबाष्पवन्नेत्रः सगद्गदमभाषत॥१७॥

வாக்யாமாகர்ங்யபகவான்ப்ரஸஸாததபோனிதி:
தத்யௌ ச ஸுசிரம் ஸம்பும் பங்கஜாஸனஸம்ஸ்தித:|
அன்தரங்கஸுகம்போதிமக்னசேதாஸ்சதுர்முக:||14||
த்ருஷ்ட்வா யதாபுராத்ருஷ்டம் தேஏஜ:ஸ்த்ம்மமயம் ஸிவம்|
உத்தீர்ங்ஸகலாதாரம் நகிஞ்சித்ப்ரத்யபுத்யத புனராஜ்ஞாம் ஸிவால்லப்தாமனுபாலயிதம் ப்ரபு:|
நிர்வச்யர் ஹ்ருதயம் யோகாத்ஸஸ்மார் ஸுதமானதம் ஸிவதர்ஸனஸஞ்ஜாதபுலகாங்கிதவிக்ரஹ:|
ஆனன்தபாஷ்பவன்னேத்ர: ஸகத்கதமபாஷத||17||

பக்தி நிறைந்த இவ்வார்த்தைகளைக் கேட்டதும், பகவான் பிரம்மா பெருமகிழ்ச்சி அடைந்தார்.
பத்மாசனத்தில் அமர்ந்திருந்த அவர், தம் மனதிற்குள்ளேயே சிவனை தியானித்து,
நான்முகன், சம்புத்தியானத்தினால் உண்டான பேறுநிலையின் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார்.
பிரம்மா மீண்டும் ஒருமுறை சிவபெருமானை தேஜஸ்தம்பமாய் கண்டார். மீண்டும் ஒரு முறை அவ்வாறே சிவனைக் கண்டதும்,
சிவதரிசனத்தில் புல்லரித்து ஆழ்ந்து தன்னைச் சுற்றி நிகழ்வன அறியாது தன்னிலை மறந்திருந்தார்.
சிவனருளாலும் சிவாஞ்கையினாலும், பிரம்மா இந்நிலையிலிருந்து விடுபட்டு, நாத்தழுதழுத்து
குரல் நடுங்க, ஆனந்தக் கண்ணீர் வடித்து, பேசத் துவங்கினார்.

ब्रह्मोवाच
अन्तः सन्स्मारितःपुत्र भवताऽहंपुरातनम्।
शिवयोगमनुध्यायन्नस्मार्षतवचाऽऽदरात् शिवभक्तिः परा जाता तपोभिर्बहुभिस्तव।
तथा मदीयं हृदयं ओयावर्त्तितमिवक्षेणात् पावयन्तिजगत्सर्व चरितैस्ते निराकुले।
येषां सदाशिवे भक्तिर्वर्र्द्धते सार्वकालिका सम्भाषणं सहावासः क्रीडा चैक्विभिश्रणम्।
दर्शनंशिवभक्तानांस्मरणंचाधनाशनम् श्रुयतामद्भुतं शैवमाविर्भूतं तथा पुरा।
अव्याजकरुणापूर्णमरुणाद्र्यभिधंमहः॥२२॥

ப்ரஹ்மோவாச
அன்த: ஸன்ஸ்மாரித:புத்ர் பவதாஹம்புராதனம்|
ஸிவயோகமனுத்யாயன்னஸ்மார்ஷதவசாதராத் ஸிவபக்தி: பரா ஜாதா தபோபிர்பஹுபிஸ்தவ|
ததா மதீயம் ஹ்ருதயம் ஓயாவர்த்திதமிவக்ஷேணாத் பாவயன்திஜகத்ஸர்வ சரிதைஸ்தே நிராகுலே|
யேஷாம் ஸதாஸிவே பக்திர்வர்ர்த்ததே ஸார்வகாலிகா ஸம்பாஷணம் ஸஹாவாஸ: க்ரீடா சைக்விபிஸ்ரணம்|
தர்ஸனம்ஸிவபக்தானாம்ஸ்மரணம்சாதனாஸனம் ஸ்ருயதாமத்புதம் ஸைவமாவிர்பூதம் ததா புரா |
அவ்யாஜகருணாபூர்ணமருணாத்ர்யபிதம்மஹ: ||22||

பிரம்மாவின் வாக்கு.
ஹே புத்ர. பணிவின் இலக்கணமே. என்னன்பு மகனே. இன்று உன் பொருட்டு எனக்கு ஆத்மதரிசனமாக சிவதரிசனம் கிட்டியது.
உனக்கிருக்கும் சிவபக்தி, உனது தவத்தின் பயனே ஆகும்.
முழுமையான முறையில் யார் சிவபக்தி கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் பூமியில் இருப்பதால் மட்டிலுமே பூமி புனிதமடைகிறது.
அப்படிப்பட்ட பக்திமான்களோடு பேசுவதும், இணைந்திருப்பதும், அவர்களை மகிழ்விப்பதும்
அல்லது அவர்களைப் பார்ப்பதோ அல்லது அவர் பற்றி நினைப்பதுவுமே கூட முக்தி அளிக்கும்.
கருணாமூர்த்தியான பிரம்மா சிவபெருமான் எப்படி அருணாசலம் உண்டாயிற்று என்பதைப் பற்றி தெளிவித்தார்.

अहं नारायणश्चोभौ जातौ विश्वाधिकोदयात्।
बहुस्यामिति सङ्कल्पं वितन्वानात्सदाशिवात्॥२३॥
स्वभावेनसमुद्भूतौविवदन्तौ परस्परम्।
नच श्रान्तौ नियुध्यन्तौ साहङ्कारौकाचन परस्परं रणोत्साहमांवयोरतिभीषणम्।
आलोक्य करुणामूर्तिरचिन्तयदथेश्वरः॥
किमर्थमनयोर्युद्धं जायते लोकनाशनम्।
मया सृष्टमहं पातेति विवादमधितस्थुषोः समयेऽस्मिन्स्वयम्लक्ष्योमुग्धयोरनयोभॄर्शम्।
यदियुद्धंनरोत्स्यामितदस्याद्भुवनक्षयः वेदेषु मममाहात्म्यं विश्वाधिकतया श्रुतम्।
नजानाते इमौमुग्धौक्रोधतोगलितस्मृती सर्वोऽपि जन्तुरात्मानमधिकंमन्यतेभृशम्।
अमतान्यसमाधिक्यस्त्वधःपततिदुर्मतिः यद्यहंक्कापिभुवनेदास्ययामिमितिमात्मनः।
तदातद्रूपविज्ञानात्सा आत्मासोऽपितामामियात् इति निश्चित्य मनसास्वयमेव सदाशिवः।
आवयोर्युध्यतोर्मध्ये वह्निस्तम्भःसमुद्यतः
अतीत्य सकलाँल्लोकान्सर्वतोऽग्निरिव ज्वलन॥३२॥

அஹம் நாராயணஸ்சோபௌ ஜாதௌ விஸ்வாதிகோதயாத்|
பஹுஸ்யாமிதி ஸங்கல்பம் விதன்வானாத்ஸதாஸிவாத்||23||
ஸ்வபாவேனஸமுத்பூதௌவிவதன்தௌ பரஸ்பரம்|
நச ஸ்ரான்தௌ நியுத்யன்தௌ ஸாஹங்காரௌகாசன பரஸ்பரம் ரணோத்ஸாஹமாம்வயோரதிபீஷணம்|
ஆலோக்ய கருணாமூர்திரசின்தயததேஸ்வர:||
கிமர்தமனயோர்யுத்த்ம் ஜாயதே லோகனாஸனம்|
மயா ஸ்ருஷ்டமஹம் பாதேதி விவாதமதிதஸ்துஷோ: ஸமயேஸ்மின்ஸ்வயம்லக்ஷ்யோமுக்தயோரனயோப்ரூர்ஸம்|
யதியுத்தம்னரோத்ஸ்யாமிததஸ்யாத்புவனக்ஷய: வேதேஷு மமமாஹாத்ம்யம் விஸ்வாதிகதயா ஸ்ருதம்|
நஜானாதே இமௌமுக்தௌக்ரோததோகலிதஸ்ம்ருதீ ஸர்வோபி ஜன்துராத்மானமதிகம்மந்யதேப்ருஸம்|
அமதான்யஸமாதிக்யஸ்த்வத:பததிதுர்மதி: யத்யஹம்க்காபிபுவனேதாஸ்யயாமிமிதிமாத்மன:|
ததாதத்ரூபவிஜ்ஞானாத்ஸா ஆத்மாஸோபிதாமாமியாத் இதி நிஸ்சித்ய மனஸாஸ்வயமேவ ஸதாஸிவ: |
ஆவயோர்யுத்யதோர்மத்யே வஹ்னிஸ்தம்ப:ஸமுத்யத:
அதீத்ய ஸகலான்க்ல்லோகான்ஸர்வதோஅக்னிரிவ ஜ்வலன||32||

திருமாலும் நானும் உருவாக
ஒரே நிமிடம்தான் ஆனது, அது சிவசங்கல்பத்தால் மட்டுமே நிகழ்ந்தது.
எங்கள் இருவருக்குள் யார் பெரியவர் என்பதான வாக்குவாதம் நடந்தது.
எங்கள் கர்வம் மற்றும் அறியாமையின் காரணமாக நடந்த இந்த வாக்குவாதம் பெரும் யுத்தத்தை தூண்டியது. இந்த யுத்தம் பல யுகங்களுக்கு நீடித்து உலகையே அழித்துவிடும் நிலை ஏற்பட்டது.
இதைக் கண்ட கருணையின் வடிவேயான பரமசிவன், பின்விளைவுகளைத் தடுக்க வேண்டிக் கூறினார்.
எதற்காக இந்த யுத்தம்? உங்கள் யுத்தத்தின் பயனாக மீட்கவே முடியாதவாறு உலகம் முழுதும் அழிந்துவிடும்.
பிரம்மா கூறினார்: "நானே உலகம் முழுதும் உருவாக்கினேன். அசைவது அசையாது எல்லாம் என்னலே உண்டானது. ஆகையால் நானே உயர்ந்தவன்." விஷ்ணுவோ, "நான் காக்காவிட்டால் நீங்கள் உருவாகிய அனைத்தும் அழிந்து விடும். ஆகையால் நானே உயர்ந்தவன்" என்றார். இப்படியாக வாக்குவாதம் நடந்துகொண்டே இருந்தது.
நீங்கள் இப்போது யுத்தத்தை நிறுத்தாவிட்டால், இவ்வுலகம் நிரந்தரமாக அழிந்துவிடும். ஆகையால் நான் வெளிப்படுவேன்.
இவ்வுலகத்தில் ஒவ்வொரு உயிரும் தான் மற்றொன்றைக் காட்டிலும் பெரிதென நினைக்கிறது.
அறியாமையாலும் கர்வத்தாலும் மற்ற உயிரை தனக்கு சமமானதாகவோ மேலானதாகவோ உணர்ந்து ஏற்காவிட்டால், தன்னிலையிழந்து கீழானவர்களாக ஆக வேண்டி வரும்.
ஒன்றும் அறியாத சாதாரணன் கூட என்னை சதாசிவா" என நினைத்த மாத்திரத்தில் அடையுமாறு நான் என்னை இவ்விதம் தெளிவுற வெளிப்படுத்துகிறேன்" என்று கூறினார்.
எங்கள் பேதங்களை நீக்கவும், உலகைக் காக்கவும், சிவபெருமான் எங்கள் முன் அளப்பரிய உயரங்களில் ஒரு அக்னி ஸ்தூபமாக உயர்ந்து நின்றார்.
இதன் ஒளி பிரபஞ்சம் முழுதும் பரவி எங்கும் அளவில்லாத ஒளி பரவி, இன்னதென்று அறியமுடியாத வண்ணம் எங்கும் ஒளிமயமானது.

अनाद्यन्ततयाचाथदृगारतौसम्व्यतिष्टताम्।
तेजःस्तम्भंज्वलन्तंतमालोक्यसिथिलाशयौ आवयोः पुरतोजाता वाणीचाप्यशरीरिणी।
किमथे वलकौयुद्धंकल्प्यतेमूढमानसौयुवयोर्बलवैषम्यंशिव एव विवेक्ष्यते।
तेजःस्तम्भमयं रूपमिदं शम्भोव्यर्वस्थितम्॥
आद्यन्तयोर्यदि युवामीक्षिषाथांबलाधिकौ।
इतितांगिरमाकर्णयनियुध्दाध्दिरतौतदा॥
अहंविष्णुश्चगतिमान्विचेतुंतद्व्यवस्थितौ।
अग्निस्तम्भमयंरूपंशम्भोराद्यन्तवर्ज्जितम् अलोकितुंव्यवसितावावामाद्यन्तभागतः।
विम्वितंव्योमगंचन्द्रंयथाबालोजिघृक्षतः॥
तथैवाऽऽवण्समुद्युक्तौपरिच्छेत्तुंचतन्मः।
अथविष्णुमहोत्सहात्क्रोडोऽभूत्सुमहावपुःतन्मूलविचयाऽयाच्चभूमिगर्भंव्यदारयत्।
अहं च हंसतां प्राप्तो महावेगं समुत्पतन्
दिदृक्षुस्तच्छिरोभागं वियदूर्ध्वमगाहिषम्।
अधोधो दारयन्क्षोणिमशेषामपि माधवः॥ ४१॥
आविर्भूतमिवाधस्तादग्निस्तग्भमवैक्षत।

அனாத்யன்ததயாசாதத்ருகாரதௌஸம்வ்யதிஷ்டதாம்|
தேஜ:ஸ்தம்பம்ஜ்வலன்தம்தமாலோக்யஸிதிலாஸயௌ ஆவயோ: புரதோஜாதா வாணீசாப்யஸரீரிணீ|
கிமதே வலகௌயுத்தம்கல்ப்யதேமூடமானஸௌயுவயோர்பலவைஷம்யம்ஸிவ ஏவ விவேக்ஷ்யதே|
தேஜ:ஸ்தம்பமயம் ரூபமிதம் ஸம்போவ்யர்வஸ்திதம்||
ஆத்யன்தயோர்யதி யுவாமீக்ஷிஷாதாம்பலாதிகௌ|
இதிதாம்கிரமாகர்ணயனியுத்தாத்திரதௌததா||
அஹம்விஷ்ணுஸ்சகதிமான்விசேதும்தத்வ்யவஸ்திதௌ|
அக்னிஸ்தம்பமயம்ரூபம்ஸம்போராத்யன்தவர்ஜ்ஜிதம் அலோகிதும்வ்யவஸிதாவாவாமாத்யன்தபாகத:|
விம்விதம்வ்யோமகம்சந்த்ரம்யதாபாலோஜிக்ருக்ஷத:||
ததைவாவங்ஸமுத்யுக்தௌபரிச்சேத்தும்சதன்ம:|
அதவிஷ்ணுமஹோத்ஸஹாத்க்ரோடோபூத்ஸுமஹாவபு: தன்மூலவிசயாயாச்சபூமிகர்பம்வ்யதாரயத்|
அஹம் ச ஹம்ஸதாம் ப்ராப்தோ மஹாவேகம் ஸமுத்பதன்
தித்ருக்ஷுஸ்தச்சிரோபாகம் வியதூர்த்வமகாஹிஷம்|
அதோதோ தாரயன்க்ஷோணிமஸேஷாமபி மாதவ:|| 41||
ஆவிர்பூதமிவாதஸ்தாதக்னிஸ்தக்பமவைக்ஷத|

நாங்கள் ஒளியினால் பீடிக்கப்பட்டு, பார்வை தெரியாமல் நிலைத்திருந்தோம்.
நாங்கள் அந்த ஒளிவெள்ளத்தைக் கண்டு மனங்கலங்கி நின்றோம்.
அசரீரியாய் ஒரு வாக்கு ஒலித்தது: "புத்திரர்களே. உங்கள் அறியாமையால் ஏன் ஒருவருக்கொருவர் யுத்தம் புரிகிறீர்கள்? உங்கள் பலம் மற்றும் பலஹீனங்களை சிவன் மட்டுமே அறிவார்."
இந்த தேஜஸ்தம்பமானது பகவான் சம்புவேயன்றி யாருமில்லை.
இந்த அக்னிஸ்தம்பத்தின் முடியையும் அடியையும் யார் கண்டறிகிராரோ அவரே பெரியவர்.
இதைக் கேட்டதும் நாங்கள் யுத்தஞ்செய்வதை நிறுத்தினோம்.
விஷ்ணுவும் நானும் அளப்பறியா சிவனின் அடிமுடிகளைத் தேட முடிவுசெய்தோம்.
அக்னி ஸ்தம்பமாக தோன்றிய சிவனின் அடிமுடிகளைக் கண்டறிய தீர்மானஞ்செய்தோம். இப்படியாகத் தீர்மானித்து, பரஞ்சோதி ரூபமான சிவனை அளக்க ஆரம்பித்தோம், இது எப்படி இருந்ததென்றால்,
ஏதுமறியாத பாலகன் தண்ணீரில் தோன்றும் நிலவின் நிழலைப் பார்த்து, அதுவே நிலவென்றும் நினைத்து அதை பிடித்து,
நிலவை அறிய முயற்சி செய்வது போல நாங்களும் இயலாத பெருமுயற்சியில் இறங்கினோம்.
தனியாச்சினம் கொண்ட விஷ்ணு, தன்னை ஒரு வராஹமாக மாற்றிக் கொண்டு பூமியை பிளந்து கொண்டு இந்த பேரொளியின் அடியைக் காண விரைந்தார்.
நான் ஒரு அன்னபக்ஷியாகி உயரே பறந்தேன், மென்மேலே
விண்ணையும் தாண்டி, அவரது முடியைக் காண வேண்டி, பறந்தேன்.
மாதவனான விஷ்ணு, பூமியை துளைத்துக் கொண்டு
அவரது அடியைக் காண வெகு கீழே சென்று கொண்டிருந்தார்.

अनेककोतिवर्षाणि विचिन्वन्नपि तेजसः॥
अपस्यन्नादिमक्षय्यमार्त्तरूपः स विव्हलः।
विशीर्णदंष्ट्रवलयो विगलत्सन्धिवन्धनः॥
श्रमातुरस्तृषाक्रान्तो नो यातुमशकध्दरिः।
वाराहं रूपमतुलं सन्धारयितुमक्षमः॥
विहन्तुमपि विश्रान्तो विषसाद रमापतिः।
अचिन्तयदमेयात्मा परिश्रान्तशरीरवान् गलितश्रीः क्रियाश्रान्तःशरण्यंशिवमाश्रयन्।
धिङ्ममेदं महान्मौग्ध्यमहङ्कारसमुभ्दवम् येनाऽहमात्मनो नाथमात्मानं नावबुद्दवान्।
अयं हि सर्ववेदानां देवानां जगतामपि
मूलभूतः शिवः साक्षान्मूलमस्य कथं भवेत्।
अस्मादेव समुद्भूतोऽस्म्यहमाद्यन्तवर्ज्जितात्॥४८॥

அனேககோதிவர்ஷாணி விசின்வன்னபி தேஜஸ:||
அபஸ்யன்னாதிமக்ஷய்யமார்த்தரூப: ஸ விவ்ஹல:|
விஸீர்ணதம்ஷ்ட்ரவலயோ விகலத்ஸன்திவன்தன:||
ஸ்ரமாதுரஸ்த்ருஷாக்ரான்தோ நோ யாதுமஸகத்தரி:|
வாராஹம் ரூபமதுலம் ஸன்தாரயிதுமக்ஷம:||
விஹன்துமபி விஸ்ரான்தோ விஷஸாத ரமாபதி:|
அசின்தயதமேயாத்மா பரிஸ்ரான்தஸரீரவான் கலிதஸ்ரீ: க்ரியாஸ்ரான்த:ஸரங்யம்ஸிவமாஸ்ரயன்|
திங்மமேதம் மஹான்மௌக்த்யமஹங்காரஸமுப்தவம் யேனாஹமாத்மனோ நாதமாத்மானம் நாவபுத்தவான்|
அயம் ஹி ஸர்வவேதானாம் தேவானாம் ஜகதாமபி
மூலபூத: ஸிவ: ஸாக்ஷான்மூலமஸ்ய கதம் பவேத்|
அஸ்மாதேவ ஸமுத்பூதோஅஸ்ம்யஹமாத்யன்தவர்ஜ்ஜிதாத்||48||

யுகங்களாக அவரது ஆதியையும், முடிவையும் அந்தத்தையும் காண முயற்சி செய்து கொண்டேயிருந்தோம்.
அந்தப் பேரொளியின் மூலத்தைக் கூடக் காணமுடியவில்லை.
ஒரு நிலையில் விஷ்ணு மனமிழந்து விசனத்திலாழ்ந்தார்.
களைப்படைந்து விட்ட அவர், நாவரட்சியினாலும் மீண்டு வந்துவிட ஏங்கினார்.
பொறுமையிழந்த அவரால் களைப்பு மிகுதியால் தம் வராஹ உடலையும் சுமக்கவியலாமல் தவித்தார்.
ஆனால், மிகவும் களைப்படைந்து இருந்ததால் ஓய்வெடுக்கவும் விரும்பினார்.
இயலாத இம்முயற்சியின் விளைவாக அவர் மிகவும் சோர்ந்தும், பலகீனமாகவும், சக்தியிலந்தும் காணப்பட்டார். திரும்பி வரவும் முயற்சித்தார். தீனசரண்யனான பரமசிவனை நோக்கித் தொழுது சரண் புகுந்தார்.
இப்படியாக, அதீத ஞானம் பெற்ற விஷ்ணு, தன் கர்வந்தினாலும் துக்கித்து யோசித்தார் "ஆகா! என் அறியாமையாலும், கர்வத்தினாலும், வெஞ்சினத்தாலும் நிலை தவறி, பரமாத்மாவை மறந்தேனே.
அவரே வேதங்கள், தேவர்கள் மற்றும் இவ்வுலகத்தின் சர்வாதாரமாக இருக்கிறார்.
அவருக்கு ஏதும் மூலாதாரம் இருக்க முடியுமா என்ன? நானே அடி-முடியில்லாத அவரிடமிருந்துதானே உருவானேன்.
அபூர்வமானவரும் அசாதாரணமானவருமான அவரையா நான் அளந்துவிட முயற்சித்துக் கொண்டிருந்தேன்?

यन्मयाऽन्वेष्टुमारब्धं शिवं पशुवपुर्धृता।
अव्याजकरुणाबन्धोःपितुःशम्भोःप्रसादतःपुनरेवेदृशी लब्धा मतिर्मेस्वत्मबोधिना।
स्ययमेव महादेवः शम्भुर्यं पातुमिच्छति तस्य सद्यो भवेज्ज्ञानमनहङ्कारमात्मजम्।
न शक्नोमि पुनः कर्तुं पूजामस्यजगद्गुरोः निवेदयामिचात्मानंशरणंयामि शङ्करम्।
इति दध्यौशिवंविष्णुःस्तुत्यामपितचेतनः॥
सत्प्रसादाद्भूत्पतेः पुरनेवोद्धृतः क्षितौ।
अहं च गगनेऽभ्राम्यनेकानपिवत्सरान् आघूर्णमाननयनः श्लथपक्षः श्रमं गतः।
उपयु परिचाऽपश्यं ज्वलं पुरतः स्थितम्॥
तेजः स्तम्भं स्थूललिङ्गाभं शैवं तेजः सुरार्चितम्।
आहुः स्म केचिदालोक्य सिद्धास्तेजोंऽशसंभवाः॥५५॥

யன்மயான்வேஷ்டுமாரப்தம் ஸிவம் பஸுவபுர்த்ருதா|
அவ்யாஜகருணாபன்தோ:பிது:ஸம்போ:ப்ரஸாதத:புனரேவேத்ருஸீ லப்தா மதிர்மேஸ்வத்மபோதினா|
ஸ்யயமேவ மஹாதேவ: ஸம்புர்யம் பாதுமிச்சதி தஸ்ய ஸத்யோ பவேஜ்ஜ்ஞானமனஹங்காரமாத்மஜம்|
ந ஸக்னோமி புன: கர்தும் பூஜாமஸ்யஜகத்குரோ: நிவேதயாமிசாத்மானம்ஸரணம்யாமி ஸங்கரம்|
இதி தத்யௌஸிவம்விஷ்ணு:ஸ்துத்யாமபிதசேதன:||
ஸத்ப்ரஸாதாத்பூத்பதே: புரனேவோத்த்ருத: க்ஷிதௌ|
அஹம் ச ககனேஅப்ராம்யனேகானபிவத்ஸரான் ஆகூர்ணமானனயன: ஸ்லதபக்ஷ: ஸ்ரமம் கத:|
உபயு பரிசாபஸ்யம் ஜ்வலம் புரத: ஸ்திதம்||
தேஜ: ஸ்தம்பம் ஸ்தூலலிங்காபம் ஸைவம் தேஜ: ஸுரார்சிதம்|
ஆஹு: ஸ்ம கேசிதாலோக்ய ஸித்தாஸ்தேஜோமஸஸம்பவா: ||55||

அதுவும் ஒரு மிருகத்தின் வடிவில்.
கருணைக் கடல், பாதுகாப்பவர், என் தந்தையார், இவை எல்லோருமான பரமசிவனின் கருணை என் மீது படிந்திருக்கிறது.
எப்போது மகாதேவர் ஒருவரை காக்க திட்டமிடுகிறாறோ, அப்போதே, அவன் தன் கர்வத்தை யிழக்கிறான். ஞானம் பெறுகிறான்.
எனக்கு ஜகத்குருவான பரமசிவனை நமஸ்கரித்து வணங்கக்கூட சக்தியில்லை. ஆகையால், அவரிடம் சரணாகதியடைந்து, என்னையே நிவேதனமாக்குகிறேன்.
இப்படியாக, விஷ்ணு சிவபெருமானிடம் வேண்டி அவரையே தியானித்தார்.
பூதபதியான சிவனின் கருணையால், அவர் துக்கமடைந்தாலும், சித்தம் தெளிந்து பூமிக்கே திரும்பினார்.
இதே நிலைதான் எனக்கும் ஏற்பட்டது. வருடக்கணக்கில் பறந்துகொண்டே இருந்த காரணத்தால், என் கண்கள் மங்கின, இறகுகள் களைத்தன.உயர பறக்க பறக்க,
தெய்வாம்சம் கொண்ட அந்தப் பேரொளி மென்மேலும் உயர வளர்ந்துகொண்டே போனது.
தேவர்களால் பூஜிக்கப் பெரும் சிவனின் தேஜஸ் கொண்ட அந்த அக்னிஸ்தம்பம் ஸ்தூலமகாலிங்கமேயன்றி வேறொன்றும் இல்லை.
தவத்தினால் பெற்ற தேஜஸ் நிரம்பிய சித்தர்கள்,

नित्याम्शम्भोःपरांकोटिदिदृक्षुं मांकृतोद्यमम्॥
अहोऽयंसत्यंमुग्धत्वमद्यापिचकीर्षति आसन्नदेहपातोऽपिनाहङ्कारोऽस्यवैगतः।
विशीर्यमाणपक्षोऽयंक्रोडरूपीजनार्दनः व्यावत्तितः शिवेनैव निव्यार्जकरुंणाजुषा।
ईदृशांब्रह्ममुख़्यानां सुराणांकोटिसम्भवः यत्तेजः परमाणुभ्यस्तस्य पारं दिदृक्षते।
स्वात्मयोगतोध्यत्वासमयेभगवाञ्छिवः यदि बुद्धिददात्यस्मै तस्यनश्येदहंक्रिया।
इत्येवंवदतां तेषां सिद्धानां सदयं वचः आकर्ण्यशीर्णाहङ्कारस्य सङ्ग्रहे।
घिङ्मामहंक्रियाक्रन्तमनात्मबलवेदिनम् शिवार्पितमनस्केभ्यः सिद्धेभ्यः सततं नमः।
येषां संसर्गलब्धेन विभवेन समन्विताः देवाः सर्वे भविष्यन्ति सततं शमितारयः। यस्य वेदा न जानन्ति परमार्थमहागमैः॥
तमेव शरणं यामि शम्भुंविश्र्वविलक्षणम्।
अवादिषमथाभाष्यं विष्णुं कमललोचनम् लब्धदेहः शिवंभक्त्यासंश्रितश्चन्द्रशेखरम्।
अहोकिमिदमाश्चर्यमागतंशौर्यशालिनाम्।
तम श्लोके विभवेन समन्विताः इति पाठात्पूवँ तपसा शोधिताशयः॥६५॥

நித்யாம்ஸம்போ:பராம்கோடிதித்ருக்ஷும் மாம்க்ருதோத்யமம்||
அஹோஅயம்ஸத்யம்முக்தத்வமத்யாபிசகீர்ஷதி ஆஸன்னதேஹபாதோஅபினாஹங்காரோஅஸ்யவைகத:|
விஸீர்யமாணபக்ஷோஅயம்க்ரோடரூபீஜனார்தன: வ்யாவத்தித: ஸிவேனைவ நிவ்யார்ஜகரும்ணாஜுஷா|
ஈத்ருஸாம்ப்ரஹ்மமுக்யானாம் ஸுராணாம்கோடிஸம்பவ: யத்தேஜ: பரமாணுப்யஸ்தஸ்ய பாரம் தித்ருக்ஷதே|
ஸ்வாத்மயோகதோத்யத்வாஸமயேபகவாஞ்சிவ: யதி புத்திததாத்யஸ்மை தஸ்யனஸ்யேதஹம்க்ரியா|
இத்யேவம்வததாம் தேஷாம் ஸித்தானாம் ஸதயம் வச: ஆகர்ங்யஸீர்ணாஹங்காரஸ்ய ஸங்க்ரஹே|
கிங்மாமஹம்க்ரியாக்ரன்தமனாத்மபலவேதினம் ஸிவார்பிதமனஸ்கேப்ய: ஸித்தேப்ய: ஸததம் நம:|
யேஷாம் ஸம்ஸர்கலப்தேன விபவேன ஸமந்விதா: தேவா: ஸர்வே பவிஷ்யன்தி ஸததம் ஸமிதாரய: | யஸ்ய வேதா ந ஜானன்தி பரமார்தமஹாகமை:||
தமேவ ஸரணம் யாமி ஸம்பும்விஸ்ருவவிலக்ஷணம்|
அவாதிஷமதாபாஷ்யம் விஷ்ணும் கமலலோசனம் லப்ததேஹ: ஸிவம்பக்த்யாஸம்ஸ்ரிதஸ்சந்த்ரஸேகரம்|
அஹோகிமிதமாஸ்சர்யமாகதம்ஸௌர்யஸாலினாம்|
தம ஸ்லோகே விபவேன ஸமந்விதா: இதி பாடாத்பூவம் தபஸா ஸோதிதாஸய:||65||

முடியைக் காணவேண்டி முயற்சித்துச் சென்று கொண்டிருக்கும் என்னைக் கண்டதும்,
அதிசயித்துத் திகைத்து இவ்வாறு கூறினர் "இது அறியாமையே. இன்னுமா இவர் ஆதியை காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவரது இறகுகள் கூட பலமிழந்து தளர்ந்து விட்டனவே. அவர் விழிகள் மங்கி உயிரற்றுப் போயின. தன் உடலையே இழக்கப்போகிறார், ஆனால் கர்வத்தை மட்டும் இன்னும் விடவில்லையே.
இப்படித்தான் விஷ்ணுவும் பலமிழந்து செய்வதறியாமல், கடைசியில் தன்னையே உணர்ந்து சிவனிடம் சரணாகதி அடைந்தார். சிவனின் கருணையால் மீண்டும் பூமிக்கே திரும்பினார்.
இன்னமும், அறியாமையால் தன்னையே தவறான நம்பிக்கைகொண்டு இத்தேஜசின் ஆதியைக் காணச் சென்றுகொண்டு இருக்கிறார். எந்த அற்பமான ஜீவனுங்கூட சிவதேஜசை உணர விரும்பினால்,
பிரம்மன் உருவாகக் காரணமாக இருந்தவர் சிவனை அறிய விரும்பினால், எவரால் இவ்வுலகம் முழுதும் சிருஷ்டிக்கப்பட்டதோ, அவர்,
சிவனிடம் சரண் புகுந்து அவரையே தியானித்து, அவர் அருள் பெறும்போது அவருடைய கர்வம் அழிந்து ஞானம் பெறுவார்." சித்தர்கள் இப்படிக் கூறக்கேட்டு, நான் தன்னிலையுணர்ந்து பணிவுற்றேன். எனக்குள்ளேயே சிந்தித்தேன். நான் களைப்புற்று சோர்ந்திருந்தாலும் என் கர்வம் இன்னும் அழியவில்லை.
நான் நிரந்தரமில்லா என் உடல் பலத்தின் மீதான கர்வத்தில் நம்பிக்கைக் கொண்டு தவறிழைத்துவிட்டேன்.
சிவாஞ்யையின்றி அவரைப் பற்றிய ஞானமானது கடுந்தவத்தினால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதினால் அல்லது வேத மந்திரங்களை உச்சாடனை செய்வதால் கூட கிட்டாது.
எக்காலமும் சிவனைக் குறித்து தியானிக்கும் சித்தர்களுக்கு என் நமஸ்காரங்கள். தேவர்கள் தன் எதிரிகளை துவம்சம் செய்யும் பொருட்டு சிவனைத் துதித்து அவரருள் பெற்று வெற்றி பெற்றார்கள். ஆகையினால் நானும் இவ்வுலகின் மகாதேவனான பரமசிவனை சரணடைந்து விடுகிறேன்.
இச்சித்தகளின் நல்லுறவினால் தவத்தின் பயனடைந்து, தன்னையுணர்ந்து, சிவதேஜஸை அறிவேன். வேத மகாமந்திரங்கள் கூட அவரது கருணையை முழுமையாகப் பாடமுடியவில்லை. நான் பிறைசூடிய பெருமானின் பாதங்களைப் பணிந்து சரணடைவேன்.
ஆஹா. சிவபக்தியின் காரணத்தால் சிவனாலேயே சிருஷ்டிக்கப்பட்ட விஷ்ணுவும் நானும் யுத்தம் புரிந்தோமே? நான் கூட கமலக்கண்ணனான விஷ்ணுவை இழிவுப்படுத்திவிட்டேன்.
சிவபெருமானே எங்கள் யுத்தத்தை நிறுத்தும்பொருட்டும் எங்கள் அகங்காரத்தை அழிக்கும் பொருட்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

शिवमेनं विजानामि आत्महेतुं पुरःस्थितम्। यत्प्रसादोपलब्धेन इतिपाठःपठनीयः शम्भुनायत्समुद्बूतम्हङ्कारमुपश्रितौ। आपाहरदमेयात्मा स्वामाहात्म्यप्रकाशनत्
इममीश्वरमानतं सुरैरनलस्तम्भमयं सदाशिवम्।
अभिपूजयितुं प्रवर्तते स भवेद्वै भवसागरस्य नौः॥७१॥
इति श्रीस्कान्दे महापुराण एकाशीतिसाहस्र्यां संहितायां प्रथमे माहेश्वरख़ण्डे अरुणाचलमाहात्म्ये पूर्वार्धे ब्रह्मसनकसम्बादे लिङ्गप्रादुभाववर्णनं नाम प्रथमोऽध्यायः॥१॥

ஸிவமேனம் விஜானாமி ஆத்மஹேதும் புர:ஸ்திதம்| யத்ப்ரஸாதோபலப்தேன இதிபாட:படனீய: ஸம்புனாயத்ஸமுத்பூதம்ஹங்காரமுபஸ்ரிதௌ| ஆபாஹரதமேயாத்மா ஸ்வாமாஹாத்ம்யப்ரகாஸனத்
இமமீஸ்வரமானதம் ஸுரைரனலஸ்தம்பமயம் ஸதாஸிவம்|
அபிபூஜயிதும் ப்ரவர்ததே ஸ பவேத்வை பவஸாகரஸ்ய நௌ:||71||
இதி ஸ்ரீஸ்காந்தே மஹாபுராண ஏகாஸீதிஸாஹஸ்ருயாம் ஸம்ஹிதாயாம் ப்ரதமே மாஹேஸ்வரகாங்டே அருணாசலமாஹாத்ம்யே பூர்வார்தே ப்ரஹ்மஸனகஸம்பாதே லிங்கப்ராதுபாவவர்ணனம் நாம ப்ரதமோஅத்யாய:||1||

யார் பரமசிவனை தியானிக்கிறார்களோ, அவர்கள் தேவர்களால் வணங்கப்படுகிறார்கள், அவரைப் பூஜிப்பவர்கள்,
தேஜஸ்தம்பமாக தன்னை வெளிப்படுத்திய சிவபெருமானை, சதாசிவனை உணர்ந்தவர்கள்
அவரையே தொடர்ந்து பூஜிப்பவர்களது வாழ்க்கையோ, இவ்வுலக ஆசைகளைத் துறந்து சம்சாரசாகரத்தைக் கடக்கவுதவும் ஒரு படகு போலாகிறது.
ஸ்கந்த மஹாபுராணத்தின் முதற்பகுதியான ஸ்ரீ அருணாசல மகாத்மியம், பூர்வபாகம், பிரம்மனுக்கும் ஸனகமஹரிஷிக்கும் இடையோயான சம்பாஷணைகளைக் கொண்ட முதற்பாகம் முற்றியது.

6 comments:

LK said...

மிகப் பெரிய பணி விதூஷ். முதலில் எனது நன்றிகள். ஒரு சின்ன யோசனை. ஒவ்வொரு வரியாக மொழிபெயர்க்காமல், ஒரு குறிப்பிட்ட பகுதி க்ரந்தம் பின் அதன் மொழிபெயர்ப்பு என்று போட இயலுமா >>

எறும்பு said...

அண்ணாமலைக்கு அரோகரா

:)

ஸ்வாமி ஓம்கார் said...

//அவரையே தொடர்ந்து பூஜிப்பவர்களது வாழ்க்கையோ, இவ்வுலக ஆசைகளைத் துறந்து சம்சாரசாகரத்தைக் கடக்கவுதவும் ஒரு படகு போலாகிறது.
//

|| ஓம் நமோ பகவதே அருணாச்சலேஸ்வராய ||

ambi said...

Great Job.

//ஒவ்வொரு வரியாக மொழிபெயர்க்காமல், ஒரு குறிப்பிட்ட பகுதி க்ரந்தம் பின் அதன் மொழிபெயர்ப்பு//

ditto

Vidhoosh said...

எல்லோருக்கும் நன்றிகள் பல. :)

கிரந்தம் புரிபட அவ்வளவு கடினமானது இல்லை என்பதை உணரச் செய்ய அப்படி எழுதப் பட்டிருக்கு. முடிவில் வெளியிடும் PDF கோப்பில், ஒரு பக்கத்தில் இடது பக்கம், கிரந்தமும், தமிழ்/ஆங்கில/தெலுங்கு TRANSLITERATION இருக்கும் , வலது பக்கம் அதற்குரிய மொழிபெயர்ப்பு வரிசையாக வரும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தெலுங்கு இன்னும் கொஞ்சம் proof-read வேலை மிச்சம் இருக்கு. வரும்.

அடுத்தடுத்த அத்தியாயங்களை நீங்கள் சொன்னபடியே three column table ஆக வெளியிடுகிறேன்.

Gopi Ramamoorthy said...

படித்து விட்டேன். அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்

Post a Comment