பெண்களுக்கு ட்ரைவர் வேலை ஒத்து வராது

மகப்பேறு விடுப்பு போன்ற 'இத்தியாதி' காரணங்களுக்காக பெண்களுக்கு ட்ரைவர் வேலை ஒத்து வராது என்கிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர்.

ஒரு பக்கம், பணிக்கு வரும்போதே திருமணமாகி இருந்தால், கர்ப்ப/மகப்பேறு காலம் என்பது ஓட்டுனராக இருக்கும் பெண்களுக்கு பெரிய சவாலாகவே இருக்கும் என்பது உண்மைதான்.

இருந்தாலும், எல்லாவிதமான பணிகளிலும் பெண்கள் இந்த சவாலான காலகட்டத்தை தாண்டித்தான் செல்லவேண்டி இருக்கிறது. இதை ஒரு பெரிய காரணமாக அவர் கூறி இருக்க வேண்டாம்.

இன்றைய சூழலில் வேலை நேரத்தில் அளவுக்கு மீறி மது அருந்தி விட்டு இருக்கும் (அல்லது) திடீரென ஷிப்டுக்கு வராமல் இருக்கும் ஓட்டுனர்களுக்கு என்று சப்ஸ்டிடூட் ஆப்ஷன்கள் இருக்கிறதே?

இப்போது அதிக பட்சமாக இருக்கும் ஆண் ஓட்டுனர்களுக்கு இயல்பாகவே வந்து விடும் நோய்களான ஹெர்னியா, மூலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும் போது மூன்று மாத காலம் அவர்கள் விடுப்பு எடுப்பதில்லையா?

இருந்தாலும் தற்போதைய சூழலில், எனக்குள்ள மனநிலையில், எனக்கு சவாலாகத் தோன்றும் ஒரு சில

தக்க நேரத்திற்குள் ஷெட்டுக்கு போகவேண்டும்

டிராபிக் எரிச்சல்களோடு வீட்டுக்குள் போக நேரும் போது... ???

பொதுவாக சென்னையில் அடிக்கடி காணக் கிடக்கும் பெரும்பான்மை பயணிகளான மாணவச் செல்வங்களின் அடாவடிகள், கல்லெறி உற்சவங்கள், விபத்துக்கள்

சக ஆண் ஓட்டுனர்களின் ஈகோ தவிர இதை போன்றவற்றை சமாளிக்கும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது பெண் ஓட்டுனர்களுக்கு கூடுதல் சவாலாக இருக்கும்.

தற்போது இருக்கும் பெண் கண்டக்டர்கள் ஆளாகும் இன்னல்களுக்கு எல்லையே இல்லை என்பது நிதர்சனம். இதனாலேயே பெரும்பான்மையான பெண் கண்டக்டர்கள் மாற்று வேலை கேட்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். இதே நிலைமை ஓட்டுநர்களுக்கும் வரலாம்.

உலகில் ஏறத்தாழ எல்லா ஊரிலுமே பெண் ஓட்டுனர்களைப் பற்றிய எதிர்மறை கருத்தே நிலவுகிறது. அதே போல நடைமுறையிலும், பெண் ஓட்டுனர்கள் சாலையில் சற்றே அலட்சியமாகவே நடத்தப் படுவதை கண்டிருக்கிறேன். சோர்ந்து போகாத போராட்ட மனம் வேண்டும்...

இது ஆரம்பகால hiccup தான். இதுவும் கடந்து போய் பெண்கள் சாதிப்பார்கள் என்பது என் நம்பிக்கை. ஆனால் கடந்து போக வேண்டிய தொலைவுகளில் அம்புகளும் ஆயுதங்களும் அதிகம். தாண்டிப் போவதற்கு கண்டிப்பாய் சோர்வுறாத மனம் வேண்டும் என்பதே என் கருத்து.

ட்ரைவர் வேலையே வேணாம், டிரைவி வேலையா இருந்தா பரவால்லைங்கறேன் நான்.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

5 comments:

துளசி கோபால் said...

இதெல்லாம் இங்கேதான்.........:(

போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக அனுசரிக்கும் நாடுகளில் ஒரு பிரச்சனையும் இல்லை. பெண் ட்ரைவர்கள் ரொம்ப ஸ்மூத்தா வண்டி ஓட்டறாங்கன்னு பாராட்டு மழைதான் அங்கெல்லாம், நியூஸி உட்பட.

நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.

Vidhoosh said...

அதேதான்.. நாமேத்தான் ஓட்டிகிட்டு போகணும்... :)

ராகவன் said...

அன்பு வித்யா,
மாதவராஜ் பஸ்ஸில் சிபாரிச்சதற்கு என்னுடைய பின்னூட்டத்தையே திரும்பவும் இதில் இடுகிறேன்... இது அடிப்படை உரிமையை மறுப்பதாகும்... எந்த எம்ப்ளாயிருக்கும் இதுபோன்ற பாகுபாடு இருக்கும்பட்சத்தில் தொழில் நடத்தவே உரிமையில்லை என்று அரசியல் சட்டம் சொல்லுது... இவரு யாரு அதெல்லாம் முடியாதுன்னு சொல்ல... முழுமையாய் அரசியல் சட்டம் தெரியாதவர்கள், முழுமையாய் அடிப்படை உரிமைகளைப் பற்றி தெரியாதவர்கள் நம் ஆட்சியாளர்கள்... எல்லாம் தெரியனும்னு அவசியம் இல்லேன்னா கூட இது போல ஒரு அறிக்கை விடும்போது, கருத்து வெளியிடும்போது... அந்த அமைச்சகத்தில் இருக்கும் படிச்ச சிவில் செர்வண்ட் கிட்ட கேக்கலாம்.... மகா அநியாயம் இது...

அன்புடன்
ராகவன்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஆனால் கடந்து போக வேண்டிய தொலைவுகளில் அம்புகளும் ஆயுதங்களும் அதிகம். தாண்டிப் போவதற்கு கண்டிப்பாய் சோர்வுறாத மனம் வேண்டும் என்பதே என் கருத்து.

// ரொம்ப சரியா சொன்னீங்க வித்யா..

ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து நலமா..?

Vidhoosh said...

ரொம்ப நன்றி துளசி அம்மா.

ரொம்ப நன்றி ராகவன். அடிப்படை பகுத்தறிவு இல்லாதவர்களின் ராஜ்ஜியம் ஆகிவிட்டது.... :-(

நன்றி தேனம்மை. நலமே.. சாயந்திரமாக தொலைபேசுகிறேன்.

Post a Comment