இழை கோலம்

20-நவம்பர்-2009 அன்று எழுதிய பதிவு.


இழை கோலம் போடுவதற்கென கோலக்கட்டியும் கிடைக்கிறது.சென்னை தி.நகர் தாயார் டைரி, சாரதா ஸ்டோர், நங்கநல்லூரில்  பலசரக்கு விற்பனை செய்யும் எல்லாக் கடைகளிலும் ஏறத்தாழ கிடைக்கிறது. மைலாப்பூர் என்றால் விஜயா ஸ்டோர் மற்றும் கிரி டிரேடர்ஸ், அல்லது மற்ற இடங்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும் விசாரித்துக் கேட்டு வாங்கலாம். நிச்சயம் இருக்கும்.

  • Thayar Dairy, No 31, T Nagar Ranganathan Street, Chennai, Tamil nadu 600017 - 044 24341952
  • Sharada Stores, No.51, Arya Gowda Road, T.Nagar, Chennai, Tamil Nadu 600017 - 044 24893223
  • Sharada Stores, New #30/ Old #7, Nanganallur, Chennai -600061 - 044-22245191
  • Sri Vijaya Stores, New No.40 Old No.42 North Mada Street, Opp. Kapaleeswarar Temple Office, Mylapore, Chennai, Tamil Nadu 600004 - 044 24957555
  • Giri Trading Agency, 58/2, TSV Koil Street, East Mada Street, Mylapore, Chennai, Chennai, Tamil Nadu 600004 - 044 2464 3551

கோலக்கட்டியை கெட்டியாக தோசை மாவு பதத்தில் ஒரு சின்ன கப்பில் (50 -100 மில்லி அளவு மட்டும் நீர் விட்டு) கொஞ்சமாகக் கரைத்துக்கொள்ளலாம்,


கோலத்திற்கு காவியும் இட்டால் தான் அழகாக இருக்கும். காவியும் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.

அல்லது ஒரு பால் கரண்டியளவு பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். நல்ல வெள்ளை வெளேரென்று கோலம் வரும். ஏற்கனவே அரைத்த அரிசிமாவில் நன்றாக கோலம் வராது.

கொஞ்சமாக கரைத்துக் கொண்டு வேண்டுமென்றால் மீண்டும் கரைத்துக் கொள்ளவும். இதனால் வீணாவதை தவிர்க்கலாம். மேலும் நிறையா கரைத்துக் கொண்டு தெரியாமல் கொட்டிவிட்டால் கோலமே பாழாகும். அதைவிட, மாவை / காவியை எடுக்கும் போது பொட்டுப் பொட்டாக கீழே சிந்தும். கொஞ்சமாக  விரல் மட்டும் தொடும் அளவுக்கு வாயகன்ற ஒரு சின்னக் கப்பில் கரைத்துக் கொண்டால் சௌகரியமாக இருக்கும்.

மறு நாள் பண்டிகை அல்லது சுப காரியம் என்றால் முதல் நாள் இரவே கோலம் போட்டால்தான் காலையில் காய்ந்து இருக்கும். போடவேண்டிய இடத்தை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டு காயவைக்கவும். கால் மணிநேரத்தில் தரை காய்ந்தது சுத்தமாகியிருக்கும்.

கோலத்தைக் குனிந்து நின்று போட்டால் கோடுகள் நேராகவும், கோலமும் கோணலாகாமல் வாசலுக்கு நேராக வரும். உட்கார்ந்து போட்டால், முதுகு வலி வருவதோடு, கால் அழுத்திக் கொண்டு குதிகால் வலியும் வரும்.  மேலும் கோலம் நம் காலுக்கருகில் குறுகியும் மேலே தள்ளிப் போகப் போக விரிந்து கொண்டே கூம்பு போல ஆகிவிடும்.

வலது கை நடு விரல் மற்றும் மோதிர விரலால் கோலம் போட வேண்டும். இக்கோலம் காய்ந்தபின்தான் அதன் அழகு தெரியும்.

கை நகம் / நகக்கணு பாழாகுமே என்று கவலைப் பட்டால், அல்லது  வளர்ப்பவராக இருந்தாலும், கோலம் போடும் போது handyplast அல்லது bandage cloth-தை விரலில் சுற்றிக் கொள்ளலாம்.  நகம் பாழாகாது.

.

14 comments:

தேவன் மாயம் said...

கோலத்தைக் குனிந்து நின்று போட்டால் கோடுகள் நேராகவும், கோலமும் கோணலாகாமல் வாசலுக்கு நேராக வரும்.///

நல்ல யோசனை!!!

"உழவன்" "Uzhavan" said...

கடை முகவரியோடு கோலம் போட்டது பாராட்டத்தக்கது :-)

க.பாலாசி said...

இழைக்கோலத்தை தெரிந்துகொள்ள முதலில் வந்த மூவருமே ஆண்கள்....(அடடே ஆச்சர்ய குறி)

தேவையான பகிர்வு...

LK said...

அருமை இந்த காலத்தில யாரு போடறா எல்லாம் stickerthan

J. KOTHAI said...

Dear Mam,

this kola katti shall I use for Rangoli & other kolams also. Pls conform

reg
kothai

Vidhoosh(விதூஷ்) said...

அன்புள்ள கோதை.
வருகைக்கு நன்றி. இல்லை கோலக் கட்டி என்பது நாமக் கட்டி போலவே வெள்ளையாக கிடைக்கிறது. இதை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் சொல்லும் ரங்கோலி கட்டி என்பது சாக் பீஸ் போல இருக்கலாம் என்று அனுமானிக்கிறேன்.

J. KOTHAI said...

DEAR MAM,

TKS FOR YOUR REPLY.

WHAT I AM ASKING IS SHALL WE USE THIS KOLA KATTI TO DRAW RANGOLI & OTHER TYPE OF KOLAMS ALSO,OR ONLY FOR THIS IZHAI KOLAM. PLS CONFORM
WAITING FOR YOUR REPLY
REG
KOTHAI

Vidhoosh(விதூஷ்) said...

:)) கோதை. தண்ணீரில் தொட்டு தொட்டு போடலாம். ஆனால் ரங்கோலிக்கு வெள்ளையாய் இந்தக் கட்டம் தெரிந்தால் அழகாக இருக்காதே. ஒரு முறை முயற்சித்துப் பாருங்க.

தாரணி பிரியா said...

எங்க வீட்டில் சாணம் போட்டு மெழுகி அப்புறம் கோலம் போடுவோம். அரிசி அரைச்சுதான் போடறது. மஞ்சள் பேக்ரவுண்ட்ல வெள்ளையும் ஆரஞ்சுமாய் அழகா இருக்கும் இழை கோலத்தில் இருக்கிற அழகே தனி ::)

சங்கவி said...

கோலம் அருமை...

கோலம் போடுவது ஓர் அருமையான யோகங்க... இன்று கோலம் போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது...

V.Radhakrishnan said...

:) போன வருஷம் சொன்ன பாடம் இன்றும் புதிதாய். நன்றி விதூஷ்.

அமைதிச்சாரல் said...

இப்பல்லாம் நம்மூர்ல கோலம் போட்ட வாசல்களையே பார்க்கமுடியலை. அதுவும் இழைக்கோலம் ரொம்பவே அரிதாகிவிட்ட சமாச்சாரம்..

மாதேவி said...

அழகிய இழைக்கோலம்.

வித்யா said...

கோலம் போட மூலப்பொருள் சரி. இந்த அளவெடுக்கற ஸ்கேல், காம்பஸ் அதெல்லாம் எங்கப்பா கிடைக்கும்?

Post a Comment