ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் - பூர்வ பாகம் - அத்தியாயம் 3.1 (தொடர்)




तृतीयोऽध्यायः
पार्वत्याः शिवनेत्रनिमीलनेन तमसाक्षुब्धलोकपापभयेनकाञ्च्यांकम्पस्थित्काम्रतले तपश्चर्याकरणार्थमागमनं शिवविरहश्च

த்ருதீயோஅத்யாய:
பார்வத்யா: ஸிவனேத்ரனிமீலனேன தமஸாக்ஷுப்தலோகபாபபயேனகாஞ்ச்யாம்கம்பஸ்தித்காம்ரதலே தபஸ்சர்யாகரணார்தமாகமனம் ஸிவவிரஹஸ்ச

மூன்றாம் அத்தியாயம்
பார்வதீ தன்னிரு கரங்களாலும் சிவபெருமானின் மூன்று கண்களையும் பொத்தி விளையாடுதலின் பொருட்டு உலகம் இருண்டுபோதல். இதற்குப் பரிகாரமாக பார்வதீ காஞ்சியில் கம்பை நதிக்கரையில் தவம் புரிந்து இறைவனோடு இணைதல்

सनक उवाच
भगन्नरूणाद्रीशमाहात्म्यमिदमद्भुतम्।
श्रुतं शिवप्रसादेन दयया ते जगद्गुरो॥१॥
आश्चर्यमेतन्माहात्म्यं सर्वपापविनाशनम्।
आरधयन्पुनः के वा वरदं शोणपवतम्॥
अनादिरन्तरहितः शिवः शोणाचलाकृतिः।
युवयोस्यपसा देव वरदानाय संस्थितः सकृत्सङ्कीर्तितेनाग्निशोणाद्रिरिति मुक्तिदे।
सन्निधिः सर्व कामानांजायतेचाघनाशनम् शिवशब्दामृताखादः शिवार्चनकथाक्रमः।
इति तद्वचनं श्रृत्वा देवदेवः पितामहः॥
उवाच करुणामूर्तिररुणाद्रीशमानमन्।
ब्रह्मोवाच
श्रूयतां वत्स। पार्वत्याश्चरितं यत्पुरातनम्॥६॥

ஸனக உவாச
பகந்னரூணாத்ரீஸமாஹாத்ம்யமிதமத்புதம்|
ஸ்ருதம் ஸிவப்ரஸாதேன தயயா தே ஜகத்குரோ||1||
ஆஸ்சர்யமேதன்மாஹாத்ம்யம் ஸர்வபாபவினாஸனம்|
ஆரதயன்புன: கே வா வரதம் ஸோணபவதம்||
அனாதிரன்தரஹித: ஸிவ: ஸோணாசலாக்ருதி:|
யுவயோஸ்யபஸா தேவ வரதானாய ஸம்ஸ்தித: ஸக்ருத்ஸங்கீர்திதேனாக்னிஸோணாத்ரிரிதி முக்திதே|
ஸன்னிதி: ஸர்வ காமானாம்ஜாயதேசாகனாஸனம் ஸிவஸப்தாம்ருதாகாத: ஸிவார்சனகதாக்ரம:|
இதி தத்வசனம் ஷ்ருத்வா தேவதேவ: பிதாமஹ:||
உவாச கருணாமூர்திரருணாத்ரீஸமானமந்|
ப்ரஹ்மோவாச
ஸ்ரூயதாம் வத்ஸ| பார்வத்யாஸ்சரிதம் யத்புராதனம்||6||

ஸனகர் உரைக்கிறார்
அருணாத்ரீயின் அற்புதமான புராணத்தைக் கேட்டறிவது மிகவும் பேறானது.
சிவபெருமானின் அருளே இது. ஹே! ஜகத்குரு.
ஆச்சரியமூட்டக்கூடிய இத்திருப்புராணம் ஸகல பாவங்களையும் அழிக்கவல்லது.
மேலும் சோணாசலரை வழிபட்டவர்கள் யார்யாரென்றும் அருள்கூர்ந்து எனக்குத் தெரிவியுங்களேன்.
ஆதியந்தமற்ற பரமசிவனே சோணாசலனாக உருமாறினார்,
இது உன் தவத்தின் பலனேயாகும். சோணாத்ரீ என்று உச்சரிபுட் அவரை அழைக்கும் போதே உலகபந்தங்களில் இருந்து விடுபட்டு ஒருவன் முக்தியடைகிறான்.
அவருடைய சந்நிதானத்தில் ஆசை, வன்மம், காமம் என்ற பாவங்கள் நசிக்கின்றன, மேலும் "சிவ" என்றழைப்பதே தேனைச் சுவைப்பது போன்றுள்ளது. அந்த உச்சாடனையின் அதிர்வலையானது ஒருவரது வாழ்க்கையின் ரசமாகவே ஆகிறது. இதே பலன்தான் பரமசிவனை வணங்கும்போதும், சிவபுராணங்களைப் படிக்கும் போதும் ஏற்படுகிறது.
இதைக் கேட்டதும், பிதாமகரும் தேவதேவருமான பிரம்மா,
தன் நமஸ்காரங்களைச் சிவனாரின் பிரதிமைக்குச் செலுத்தி அவரருளைப் பெற வேண்டி, இவ்வாறு உரைக்க ஆரம்பித்தார்.
பிரம்மா உரைத்தது:
கேளாய் மகனே! மாதா பார்வதீயின் புராணத்தைப் பற்றியும் உனக்கு விளக்குகிறேன்.

अरुणाद्रीशमाश्रित्य यथा निर्वृताऽभवत्।
आससादमहादेवःकदाचित्पार्वतीपतिः रत्नसिंहासनं दिव्यं रत्नतोरणसंयुतम्।
रत्नपुष्पफ़लोपेतकल्पद्रुममनोहरम्॥८॥
परर्ध्यदॄषदास्तीणं बद्ध्मुक्तावितनकम्।
विमुक्तपुष्पप्रकरदिव्यधूपोरुसौरभम्॥९॥
प्रलम्बमालिकाजालनिनदद्भॄङ्गसङ्कुलम्।
दिव्यतूर्यघनारावप्रनृत्यद्गुहवाहनम्॥१०॥

அருணாத்ரீஸமாஸ்ரித்ய யதா நிர்வ்ருதாபவத்|
ஆஸஸாதமஹாதேவ:கதாசித்பார்வதீபதி: ரத்னஸிம்ஹாஸனம் திவ்யம் ரத்னதோரணஸம்யுதம்|
ரத்னபுஷ்ப்பலோபேதகல்பத்ருமமனோஹரம்||8||
பரர்த்யத்ரூஷதாஸ்தீணம் பத்த்முக்தாவிதனகம்|
விமுக்தபுஷ்பப்ரகரதிவ்யதூபோருஸௌரபம்||9||
ப்ரலம்பமாலிகாஜாலனினதத்ப்ரூங்கஸங்குலம்|
திவ்யதூர்யகனாராவப்ரன்ருத்யத்குஹவாஹனம்||10||

அவர் எல்லாம் வல்ல இறைவனை மகிழ்விக்கவும் அவரைச் சமாதானம் செய்யவும் முயற்சித்ததைப் பற்றியும் உரைக்கிறேன்.
பார்வதீபதியான மகாதேவர், சிவனார் அழகிய இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ஆசனத்தின் மீதமர்ந்திருந்தார். அவர் ஆசனத்திற்கும் மேலேயிருந்தக் கூரையில் அதியற்புதமானத் தோரணங்களும் ரத்தினாபரணங்களால் வேயப்பட்டுமிருந்தன.
மேலும் அறிய பல வைர வைடூரியக் கற்களும், ரத்தினங்களையொத்த பளப்பளப்புடன் கூடிய பழங்களையும் பூக்களையும் கொண்டப் பல கற்பக விருக்ஷங்கள் சூழ்ந்துமிருந்தன.
முத்துக்கள் வேய்ந்தவொரு மண்டபத்தில் ஸ்படிகங்கள் பதித்த தரை மீதமைந்திருந்த கூடத்தில் வீற்றிருந்தார்.
அம்மண்டபத்தைச் சுற்றிலும் மணம்வீசும் மலர்களின் நறுமணமும் மகரந்த வாசனையும் சூழ்ந்திருந்தன.
அவ்வறையைச் சூழ்ந்திருந்த மலர்கொடிகளின் மலர்களிலிருந்து மகரந்தம் நுகரும் தேனீக்களின் ஓம்மென்ற ரீங்காரமும் நிரம்பியிருந்தன.
உள்ளங்கவரும் வண்ணமயில்கள் தன் நீண்ட பசுநீலவண்ணத் தோகையை சுருக்கி விரித்து அகவிக் கொண்டும் மகிழ்வுடன் ஆடிக்கொண்டுமிருந்தன.

पार्वतीसिंहसंचारपरित्रस्तमहागजम्।
अप्सरोभिः प्रनर्त्ताभिर्गायन्तीभिश्च केवलम्॥
असोवितपुरोरङ्गं दिक्पालक्निषेवितम्।
ऋग्यजुःसामजैर्मन्त्रैः स्तुवद्भिर्मु निपुङ्गवैः॥
ब्रह्मर्षिभिस्तथा देवैःसिद्धैराजर्बिभिर्पुतम्।
गणैश्चविविधाकारैर्भस्मालङ्कृतविग्रहैः रुद्राक्षधारसुभगैरापूर्णं सिवतत्परैः।
वीणावेणुमृदङ्गादितौर्यत्रिकजनिस्वनैः॥२४॥

பார்வதீஸிம்ஹஸம்சாரபரித்ரஸ்தமஹாகஜம்|
அப்ஸரோபி: ப்ரனர்த்தாபிர்காயன்தீபிஸ்ச கேவலம்||
அஸோவிதபுரோரங்கம் திக்பாலக்னிஷேவிதம்|
ருக்யஜு:ஸாமஜைர்மந்த்ரை: ஸ்துவத்பிர்மு நிபுங்கவை:||
ப்ரஹ்மர்ஷிபிஸ்ததா தேவை:ஸித்தைராஜர்பிபிர்புதம்|
கணைஸ்சவிவிதாகாரைர்பஸ்மாலங்க்ருதவிக்ரஹை: ருத்ராக்ஷதாரஸுபகைராபூர்ணம் ஸிவதத்பரை:|
வீணாவேணும்ருதங்காதிதௌர்யத்ரிகஜனிஸ்வனை:||24||

அங்கு உலவிக் கொண்டிருந்த யானைகளும் தேவியின் வாகனமான சிங்கத்தைக் கண்டு நடுங்கின.
அப்சரஸுக்கள் மயக்கும் விதத்தில் அபிநயக்கூத்தாடிக் கொண்டிருந்தனர்.
திக்பாலர்கள் சிவனார் முன் பயபக்தியுடன் பணிந்து நின்று கொண்டிருந்தனர்.
சிவனாரை மகிழ்விக்கும் நோக்கோடு மகாமுனிவர்கள் ரிக், யஜுர் மற்றும் சாம வேதங்களை உச்சாடனை செய்துகொண்டிருந்தனர்.
பிரம்மரிஷிக்கள், சித்தர்கள் மற்றும் இராஜரிஷிக்கள் சிவனாரைக் குறித்து ஆழ்ந்த தியானத்தில் அமைந்திருந்தனர்.
மேலும் தேவர்கள், கணங்கள், முக்காலமுணர்ந்த ஞானிகள், சிவனடியார்கள் அனைவரும் திருநீறும் உருத்திராக்ஷமும் அணிந்து சிவனார் முன் பணிந்திருந்தனர்.
வீணை, புல்லாங்குழல் மற்றும் தேவர்களின் இசைக்கருவியான மிருதங்கம் போன்ற மங்களவாத்தியங்கள் தாளலயத்தோடு இசைந்துகொண்டிருந்தன.

घण्टाटङ्कारसुभगैर्वेदध्वनिविमिश्रितैः।
मनोहरं महादिव्यप्रासनं पार्वतीसखः॥२५॥
अलञ्चकार भगवान्भक्तानुग्रहकाम्पया।
आस्थाय विमलं रूपं सर्वतेजोमयं शिवम्
अम्बिकासहितः श्रीमान्विजहार दयानिधिः
सङ्गीतेन कथाभेदैर्द्यूतक्रीडाविकल्पनैः॥१७॥
गणानं विकटेर्नृत्यै रमयामास पार्वतीम्।
विसृज्यसकलान्देवानृषीश्चाप्सभासदः वरन्प्रदाय विविधन्भक्तलोकाय् वाञ्छितान्।
आग्मेषु विचित्रेषु सर्वर्तु कुसुमेषु च विजहारोमया सार्द्धं रत्नप्रासादपङ्क्तिषु।
गङ्गातरङ्गशीतेन फ़ुल्लपङ्कजगन्धिना॥२१॥
वातेन मन्दगतिना विहारविहतश्रमः।

கங்டாடங்காரஸுபகைர்வேதத்வனிவிமிஸ்ரிதை:|
மனோஹரம் மஹாதிவ்யப்ராஸனம் பார்வதீஸக:||25||
அலஞ்சகார பகவான்பக்தானுக்ரஹகாம்பயா|
ஆஸ்தாய விமலம் ரூபம் ஸர்வதேஜோமயம் ஸிவம்
அம்பிகாஸஹித: ஸ்ரீமான்விஜஹார தயானிதி:
ஸங்கீதேன கதாபேதைர்த்யூதக்ரீடாவிகல்பனை:||17||
கணானம் விகடேர்ன்ருத்யை ரமயாமாஸ பார்வதீம்|
விஸ்ருஜ்யஸகலான்தேவான்ருஷீஸ்சாப்ஸபாஸத: வரன்ப்ரதாய விவிதன்பக்தலோகாய் வாஞ்சிதான்|
ஆக்மேஷு விசித்ரேஷு ஸர்வர்து குஸுமேஷு ச விஜஹாரோமயா ஸார்த்தம் ரத்னப்ராஸாதபங்க்திஷு|
கங்காதரங்கஸீதேன புல்லபங்கஜகந்தினா||21||
வாதேன மந்தகதினா விஹாரவிஹதஸ்ரம:|

வெண்கல மணிகள் மங்களமாய் இசைக்க, தேவத்வனிகேsளாடு இணைந்து வேதபாராயணங்கள் முழங்கவென்று இருக்கும் சுபங்களனைத்தும்
சிவ-பார்வதியை மகிழ்விக்க நிகழ்ந்து கொண்டிருந்தன.
அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் பகவான் அருளுடன் அமைந்திருந்தார்.
தம் பக்தர்கள் மீது அருள் மழை பொழிந்தவண்ணம், கருணையே வடிவான பகவான் தேஜஸுடன் கூடிய லிங்க ரூபமாகக் காட்சியளித்தார்.
மாதா பார்வதியுடன் பகவான் மகிழ்ந்திருந்தார்,
இனிமையான ஸங்கீதம், கதையாடல்கள், கேளிக்கை, மற்றும் நாட்டியம் போன்றவைகளாலும்,
கணங்களின் வேடிக்கை முதலியவைகள் மூலமும் மாதா பார்வதியை பகவான் மகிழ்வித்தார்.
தேவர்கள், ரிஷிக்கள், ஏனைய பக்தர்களனைவரும் தத்தம் வேண்டுதல்களை பகவானிடமிருந்து பெற்று விடைபெற்றனர்.
மாணிக்க வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திyலும், மாடப்பிரகாரங்களிலும், ரம்மியமான நீரோடைகளிலும், மலைகளிலும்,
கங்கையினின்றும் வீசும் குளிர்காற்றிலும், பனிசூழ் மலையுச்சிகளிலும், வெளிகளிலும், இனிய நறுமண மலர்கள் மற்றும் சுவைகனிகளின் ஸுகந்தத்தைச் சுமந்து
வாசமுடன் வீசும் தென்றல் காற்று மனதிற்கும் இதமாகவும் களைத்திருந்த மாதா பார்வதிக்கும் பகவானும் சோர்வை நீக்கும் வண்ணமாகவும் அமைந்திருந்தது.

स्वकामतः स्वयं देवः प्रेयसीमभ्य्नन्दयत्॥
रतिरूपां शिवां देवीं सर्वसौभाग्यसुदरीम्।
कदाचिद्रहसि प्रीता निजाज्ञावशवर्त्तिनम्॥२३॥
रमणंजानतीमुग्धापश्चादभ्येत्यसादरम्।
कराभ्यांकमलाभाभ्यांत्रिनेत्राणिजगद्गुरोः पिदधे लीलया शम्भोः किमेतदिति कौतुकात्।
चन्द्रादित्याग्निरूपेण पिहितेष्वक्षिषु क्रमात्॥२५॥
अन्धकारोऽभवत्तत्र चिरकालं भयङ्करः।
निमिषार्द्धेन देवस्य जग्मुर्वत्सरकोटयः॥
देवीलीलासमुत्थेन तमसाऽभूज्जगत्क्षयः।
तमसा पूरितं विश्र्वमपारेण समन्ततः।२७।

ஸ்வகாமத: ஸ்வயம் தேவ: ப்ரேயஸீமப்ய்னன்தயத்||
ரதிரூபாம் ஸிவாம் தேவீம் ஸர்வஸௌபாக்யஸுதரீம்|
கதாசித்ரஹஸி ப்ரீதா நிஜாஜ்ஞாவஸவர்த்தினம்||23||
ரமணம்ஜானதீமுக்தாபஸ்சாதப்யேத்யஸாதரம்|
கராப்யாம்கமலாபாப்யாம்த்ரினேத்ராணிஜகத்குரோ: பிததே லீலயா ஸம்போ: கிமேததிதி கௌதுகாத்|
சந்த்ராதித்யாக்னிரூபேண பிஹிதேஷ்வக்ஷிஷு க்ரமாத்||25||
அன்தகாரோஅபவத்தத்ர சிரகாலம் பயங்கர:|
நிமிஷார்த்தேன தேவஸ்ய ஜக்முர்வத்ஸரகோடய:||
தேவீலீலாஸமுத்தேன தமஸாபூஜ்ஜகத்க்ஷய:|
தமஸா பூரிதம் விஸ்ருவமபாரேண ஸமந்தத:|27|

பகவானின் அன்பிற்குகந்த மாதா பார்வதி அற்புத அழகுடன் இருந்தார். பகவான் மாதாவை திருப்தி செய்தார்.
மாதா ரதிக்கு ஒப்பான அழகுடையவளாகவும் பாக்கியவதியாகவுமானாள்.
மாதா தீவிர சந்தோஷத்தாலும் குதூகலத்திலும், பகவான் தம் வசத்திலிருப்பதாலும்,
பகவானின் கவனமெல்லாம் தம்மையேக் குறித்திருப்பதாக எண்ணி, பிரியத்தால்
அவரறியாவண்ணம், விளையாட்டாக, தம் தாமரைமொக்குக்கு ஒப்பான மலர்கரங்களால், பகவானின் மூன்று விழிகளையும் அணைத்து மூடி, யார்? என்று வினவினாள்.
சூரியசந்திராக்னி ரூபமான திரிநேத்திரங்களும் மூடப்பட்டு,
ஜகமெங்கும் பயமூட்டும் இருள் சூழ்ந்து, லோகமெங்கும் நீண்டநெடுங்காலம் அந்தகாரம் சூழ்ந்தது.
மஹாதேவன் தன் விழி சிமிட்டும் அரைவினாடி நமக்கெல்லாம் யுகங்களாகும் அன்றோ?
மாதாவின் இப்படிப்பட்ட விளையாட்டான செயல், அகாலமான யுகாந்திரத்தை உண்டாக்கியது.
யுகங்களனைத்தும் அசைவற்றுப் போனது, உலகிலுள்ள அனைத்தும் அழிந்து போயின.


(THIRD CHAPTER TO CONTINUE)

3 comments:

THOPPITHOPPI said...

பயனுள்ள தகவல்
♫நன்றி ♫

எல் கே said...

ஹர ஹர மகாதேவா

sathishsangkavi.blogspot.com said...

இப்பதிவின் மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்...

Post a Comment