சென்னைக்கு ஒரு கூவம் போதும்

செம்பரம்பாக்கம் ஏரியை காப்பாற்ற வாங்க .... சென்னைக்கு ஒரு கூவம் போதும்....

குத்தம்பாக்கம் திருவள்ளூர் பூந்தமல்லி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். தற்போது நேர்மறையான முன்னேற்றங்கள் பலவற்றைவும் தாமே அடைந்துள்ள கிராம பஞ்சாயத்தாக நல்லதொரு முன்னோடியாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாக குத்தம்பாக்கம் மேய்ச்சல் நிலங்களை அரசாங்கமே கையகப்படுத்தி அங்கு திடப் பொருள் கழிவு மேலாண்மை (solid waste management project) திட்டத்தை அறிமுகம் செய்து, நவீனமயமான கழிவுகள் சுத்திகரிப்பு செய்யும் திட்டம் ஒன்று உருவாக்கியுள்ளது.

சென்னையில் ஏற்கனவே பள்ளிக்கரணை forest range-ஜுக்கு எதிரே அமைந்துள்ள ஏரி தற்போது எத்தனை மாசு அடைந்து அந்தப் பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது என்பதும் சென்னை வாசிகள் அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். அது மட்டும் இன்றி, பள்ளிக்கரணை சுற்றுவட்டாரத்திலும் அமைந்துள்ள மருத்துவமனைக் கழிவுகளும் இதிலேயே கொட்டப்படுகின்றன. பெருங்குடி பள்ளிக்கரணை போன்ற வளர்ந்து வரும் முக்கிய இடங்களில் அமைந்துள்ள குடியிருப்புகளில் பாதாள சாக்கடை இணைப்பு தரப்படாத இடங்களில் இருந்து கழிவுகளை அள்ளும் லாரிகள் பள்ளிக்கரணை ஏரியில்தான் கண்டைனர்களை சுத்தம் செய்கின்றனர்.

ஏற்கனவே சிறிது சிறிதாக சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கிய கூவம், அடையாறு போன்ற நீர் நிலைகளை முற்றிலும் விஷமாக்கிய பெருமை அந்தந்த காலகட்டத்தில் இருந்த அரசாங்களும் அதன் பின்னர் அரசாங்கப் பொறுப்பில் இருந்தவர்களின் அலட்சியமுமே காரணம். அதன் பலாபலன்களை நாம்தானே அனுபவிக்கிறோம். அடிப்படை தேவையான குடிநீர் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்துதான் வருகிறது. அதுவும் மாசடைந்து விட்டால் சென்னையில் தண்ணீர் வறட்சி ஏற்பட்டுவிடும்.

நம் சந்ததியினருக்கு அடிப்படை இயற்கை ஆதாரங்களை மீட்டு தரவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தனி கிராமமாக குத்தம்பாக்கம் அரசுக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களாகப் போராடி வருகிறது. அவர்களுக்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்.. இதில் பொதுநலம் மட்டும் அல்ல, தனி நபர் ஒவ்வொருவரின் நலமும் இருக்கிறது.

சமீபத்தில் சென்னை IIT வளாகத்தில் சமூக ஆர்வலர்களும், சுற்றுச் சூழல் நிபுணர்களும், விஞ்ஞானிகளும், திடப் பொருள் கழிவு மேலாண்மைக்கான சுப்ரீம் கோர்ட் கமிட்டியின் உறுப்பினரான திருமதி.அல்மித்ரா படேல் போன்றவர்களும் இணைந்து நடத்திய செமினார் ஒன்றில் இந்த திட்டம் பற்றிய அதிருப்தியையும் எதிர்பையும் அனைவருமே தெரிவிந்த்திருந்தனர்.

செம்பரம்பாக்கம் மட்டும் இல்லை, நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு நீர்நிலைகளையும் பேண வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. 

இந்த திட்டம் பற்றியும், அதனால் விளையக் கூடிய கேடுகள் பற்றியும் அறிய கீழ்கண்ட இணையதள பக்கங்களைப் பார்க்கவும்.
https://sites.google.com/site/kuthambakkam/

படத்தை பெரியதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.
source:
http://www.chennaimetrowater.tn.nic.in/ph%20on%20Operation/LAYOUT-CHEMBARAMBAKKAM-WEB%20copy.jpg

சம்பந்தப்பட்ட இணையங்கள்.
http://www.chennaimetrowater.tn.nic.in/engg/operationmaintenance/water_treatment_plantw.htm

உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க இங்கே சொடுக்கவும்.
https://artifice.securesites.com/cgi-bin/support_petitiononline.cgi

4 comments:

Vidhya Chandrasekaran said...

பள்ளிக்கரணை, வேளேச்சரி போன்ற மார்ஷல் லேண்ட் எரியாக்களை குப்பைக் கிடங்காக ஆக்குவதனால்தான் இங்கே மழைக்காலங்களில் வாட்டர் லாகிங் அதிகமாக இருக்கிறது.

இப்படியே போச்சுன்னா தண்ணிக்கு சமமா கேப்ஸ்யூல் எதையாவது முழுங்க வேண்டியதுதான்:((

Unknown said...

எதிர்கால தண்ணீரின் தன்மையை நினைத்தால் பயமாக இருக்கிறது. பெட்டிஷன்ல கையெழுத்து போட்டுட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப கொடுமை.. ஏன் இப்படி செய்யறாங்கன்னே புரியலை..

மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரியும் இன்னும் கொஞ்ச நாளில் இப்படித்தான் ஆகும்..

விரைவில் (?!!) படங்களுடன் கூடிய இடுகையை எதிர் பாருங்கள்.

உயிரோடை said...

வித்யா,

நல்ல பகிர்வு. வாக்களித்து விட்டேன்.

Post a Comment