எரிந்து கொண்டிருக்கிறது நூலகம் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்


கவிஞர் திரு.ராஜாசந்திரசேகரின் எரியும் நூலகம் இன்று படிக்க நேர்ந்தது. அவரிடம் பேச வாய்த்த போது, நல்ல வேளை சார், இப்படி எல்லாம் நிகழ்வதில்லை என்று சொல்லினேன். அப்போது தான் அவர், ஜாப்னா நூலகத்துக்கு நிகழ்ந்த சம்பவம் பற்றி கூறினார்.

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியே இது. இன்று அவர் சொல்லும் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது வெட்ககேடு ... :( # என் குறிப்புக்களுக்காக..


//எரிந்து கொண்டிருக்கிறது நூலகம் 

புத்தகத்தைத் திருப்பி தரவந்த சிறுமி 
அதைக் காப்பாற்றிவிட்ட பதட்டத்தில் 
கைநடுங்க இறுக்கமாகப் பிடித்தபடி 
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
////

புத்தக ஆசிரியர்கள் அழிந்தே போனாலும் புத்தக நூல்கள் பேசும் வரலாறுகள் மூலமே இன்றும் நாம் பலவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. இது இன அழிப்பு என்று மட்டுமே வருந்திக் கொண்டிருந்த நேரத்தில், வரலாற்றையே அழித்து விட்ட வெறி.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. :(





3 comments:

"உழவன்" "Uzhavan" said...

நல்ல பகிர்வு.

ராஜா சந்திரசேகர் said...

வித்யா ஒரு விஷயத்தைப் படிப்பதும் அதன் ஆழம் அறிய மேலும் மெனக்கெடுவதும் உங்களிடம் எனக்குப் பிடித்த அம்சங்கள்.அன்பும் நன்றியும்.

Vidhoosh said...

நன்றி உழவன் :)

நன்றி ராஜா சார். :)

Post a Comment