பெயரற்றவள் பேரைச் சொல்லும் பள்ளத்தாக்கு

கவிஞர் திரு.ராஜா சந்திரசேகர் அவர்களின் பெயரற்ற பள்ளத்தாக்கு கவிதையை படித்து inspire ஆன கவிதை...

இந்தப் பள்ளத்தாக்கு
அவளாகவே இருக்கக் கூடும்
அவள்
எல்லா இரகசியங்களையும்
மௌனமாய் கொண்ட
கடல் போன்றவள்
அபிலாசைகள் தெறிக்கும்
விழிகள் உடையவள் என்பதால்
அலைகள் போன்றவளும் ஆகிறாள்

அலைகள் மோதி மோதி
நிறமாறிய பாறைகள்
கொண்ட பெயரற்ற பள்ளத்தாக்கிற்கு
அவள் பெயரையே சூட்டலாம்
பள்ளத்தாக்கு எதிரொலித்து
பெயரற்றவள் பேரைச்
சொல்லும் போது.

2 comments:

sakthi said...

நல்லாயிருக்குங்க விதூஷ்

"உழவன்" "Uzhavan" said...

நல்லாயிருக்குங்க

Post a Comment