நேத்துலேர்ந்து இந்த ப்ளூடூத்ல பற்குழி இருந்துச்சு Ganesh Gopalasubramanian -னுக்கும் அப்படித்தான் இருக்காம்..
அப்படியே நேசன் கொடுத்த குறிப்புக்களையும் படிச்சுக்கவும்.
1.காதலால் மெல்ல மெல்ல ஆட்கொள்ளப்பட்டு தவித்திருத்தல்
2.ஒரு அதிகாரத்தை கைக் கொண்டு நிறுவுதல்
இந்த ரெண்டு பார்வையும் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
அதுனால... நேசன் கொஞ்சம் மன்னிக்கணும். நேசமித்ரன் கவிதைகள்: ப்ளூடூத் வௌவால்கள்
//குளத்திற்கு கருவிழி வரைகிறது
ஒற்றை மர நிழல்//
அதாவது பாருங்க.... குளம் என்பது கண்ணாம், அதுக்கு பார்வையே இல்லையாம்.. வானம் எங்கும் வெண்மேகங்கள் சூழ்ந்து அதன் பிரதிபலிப்பு தண்ணீரில் விழுது. அப்போ தண்ணீரும் வெள்ளையா தெரியும் என்பது Rayleigh scattering. வெண்மேகங்கள் பளிச்சுன்னு தெரிஞ்சால் அது பகல் நேரமாய்த்தான் இருக்கணும். அதனால் சூரியனும் கண்டிப்பா இருக்கும். சூரியன் இருந்தாலே நிழல் இருக்கும் என்பதும் மெய்ஞானம். குளத்துக்கு ரொம்ப சமீபத்தில் ஒரு தென்னை/பனை மரம் இருந்தாத்தான் அதோட நிழல் ரவுண்டா கருவிழி மாதிரி விழும். so, லாஜிகலி இட்ஸ் ஒன்லி எ பால்ம் ட்ரீ, அதானே ஒத்தையா வளரும்..
///மீளா இமைகள் மேலேறுகின்றன
அரைவட்டமாய் கூடுதிரும்பும்
பறவைகள் பிம்பத்தில் ஒளி விலகலுடன்///
அதாவதுங்க... பொதுவா இயற்கையின் லாஜிக் பிரகாரம் சாயந்திரம் ஆனாத்தான் தென்றல் வீசும்.. நதியலைகள் காற்று பட்டு லேசா அசையுது. நிழலால் ஆன இமைகள் சிமிட்ட முடியுமா? முடியாதுல்ல... சாயந்திரம் என்றால் அந்தி சாயும் என்பதும் இயற்கை. அப்போ சூரியனும் மேற்கே மெல்லா செட்டில் ஆவாரு... சூரியனும் அதன் கிரணங்களும்... இமையும் இமையில் இருக்கும் lucky hairs போன்றதுமாக .... மீளா இமைகள்... WOW... அதான் அந்த அரைவட்டம்.. சூரியன் இப்படி ஆகிக் கொண்டிருக்க... அந்த நேரம் அந்த பனைமரத்து நிழல் என்னாகும்.. மேலேறும்... ஒளி விலகும்... இருள் கசியும்... பறவைகள் silhouette ஆகும்..
///தர்ப்பை மோதிர விரல்
கவிழ்க்கும் குடுவையிலிருந்து டில்டோவென
தரை தொடுகிறது எழும்புத் துண்டு ////
மோதிர விரலுக்கு digitus IV என்ற பெயரும் இருக்கு. அதே போல folk lore-களில் magic finger என்றும் குறிப்பிடுவதுண்டு. western culture-ரில் இடது மோதிரவிரலில் திருமண மோதிரம் அணியும் பழக்கம் இருக்கிறது. ஆனால் இந்திய வழக்கத்தில் வலது கையில்தான் மோதிரம் அணிவது பழக்கத்தில் உள்ளது. ஆனால், அபர / அசுப கர்ம காரியங்கள் செய்யும் போது இந்த விரலில் தர்ப்பை மோதிரம் அணியும் வழக்கமும் இருக்கிறது. கர்மா செய்வதற்கு உரிய விரலாகப் பாவனை செய்யப்பட்டு க்ரியைகளில் தர்ப்பை தரிக்கும் விரலாகப் பயன்படுத்தால் 'பவித்திரம்' என்றும் சொன்னார்கள். 'பவித்திரம்' எனப்படும் தர்ப்பையை அணிவதன் மூலமே ஒருவர் கர்மா செய்யும் தகுதியைப் பெறுகிறார் என சைவ சமய கூறுகிறது. அதனால் இந்த கவிதையில் இருப்பவர் பெண் / ஆண் / அல்லது அர்த்தநாரியாகவும் இருக்கலாம், அவர் இயல்புக்கு மாறான ஒரு செயல் செய்கிறார். மோதிர விரலை ஆளுமை / அதிகாரத்துக்கும் ஒப்புமையாகவும் சில காவியங்களில் / புராணங்களில் கூறப்பட்டுள்ளது. நடு விரல், மோதிர விரல், சின்ன விரல் ஆகியன முறையே ஆணவம், வன்மம், மாயை ஆகியவற்றைக் குறிப்பதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது. அதே போல முத்திரை மோதிரங்கள் அரச இலச்சினையாக பயன்பட்டதும் உண்டு. அதனால் இந்த வரிகள் அதிகாரம் / ஆளுமையை / கர்வத்தைக் குறிக்கிறது.
தான், என், சுயம், என்னுது என்பதை நிலை நாட்ட வைக்கும் கர்வம்.. கடைவாய்ப் பல்லும், canine பல்லும் கடிபடும் வன்மம்.. என்று.. முதல் இரண்டு versesகளில் இருந்த அந்த அமைதியான பகல், திடீரென்று அப்பட்டமான சஞ்சலம் மிக்க இரவாக மாறும் காட்சி..
(உஸ்ஸ்.. இப்பிடியே யோசிச்சுகிட்டு இருங்க.. விளங்கிடும். இந்த வரிகளுக்குள் இன்னொரு சுருக்கு வழியும் இருக்கு.. இருந்தாலும் அதை விட இந்தக் கோணம் அற்புதமானது.)
/// நெற்றிக்கண் பசித்திருக்கிறது
ப்ளூடூத் குறியீடாய் வௌவால்
தொங்க ///
இப்பத்தான்யா ஒரு வழியா வரோம் ப்ளூடூத்துக்கு.. பற்குழி எப்படி வலிக்கும்னு அனுபவிச்சிருந்தா தெரியும்.. அது போன்றது ஆளுமையும்.. தீரும் வரை தீராது. தானே முதல், தானே எல்லாம், தனக்கும் பின் தான் மற்றவை எல்லாம் என்றதொரு மனசு.. வவ்வால்தனமாய் தலைகீழாய் செய்யும். வௌவால் என்பது vamp-பின் குறியீடாகவும் கொள்ளலாம். வவ்வாலையும் ப்ளூடூத்தையும் ஒப்பீடு செய்திருப்பது அருமையான கற்பனை.
///செயற்- கை கோள்களில் தலைகீழாய்
எரிகிறது தீ
மொட்டைப் போல் பற்றக்
கூடுவதில்லை கனிகளை
காம்புகள்///
மோதிர விரல் நரம்புகள் விரலில் ஆரம்பித்து கையின் பின்புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடியும். உடற்சூடு மற்றும் இந்த விரல் நரம்புகள் பயணிக்கும் உடற்பகுதிகள் தொடர்பான எல்லாமே நெற்றிப்பொட்டில் முடியும். கோபம் கொப்பளிக்கும் போதான காட்சி இது.
/////கில்கமேஷ் எனும்
ஆதி கல்காவியத்திலிருந்து இஸ்தாரின்
குரல் கேட்கிறது...
இன்னும் நசரேயளாயிருக்கும்
வனமொன்றில் இருந்து/////
கில்கமேஷ் என்பவன் பாபிலோனிய புராண நாயகர்களில் ஒருவன். இவனது வரலாறு ஒரே மர்ம-மயமாக இருக்கிறது. உருக்-கின் அரசன் என்று அறியப்படுகிறான். நினேவ் இடிபாடுகளில் கி.மு.2000 -ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும் 3000 வரிகள் கொண்ட பல்வேறு கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. என்கிடுவும் கில்கமேஷும் நண்பர்கள், இவர்களிருவரும் புரிந்த சாகசங்களை பற்றியது அக்கல்வெட்டுக்கள். இஸ்தார் என்று அறியப்பட்ட பெண் தெய்வம் இவனை திருமணம் செய்து கொள்ள ஆவலோடு இருக்கிறாள். இவன் இஸ்தாரை நிராகரிக்கிறான். இவனைக் கொள்ள இஸ்தார் ஏவும் தெய்வீக காளைமாட்டை தன் நண்பன் என்கிடுவோடு இணைந்து கொல்கிறான். திடீரென்று நோய்வாய்ப்பட்டு என்கிடு இறக்கிறான். கில்கமேஷுக்கு மரண பயம் வருகிறது. முன்பொரு சமயம் ஏற்பட்ட வெள்ளத்தில் தப்பித்த ஒரே ஒருவரான அவன் தாத்தா/மூதாதையர் ஒருவர் அவனுக்கு அமரத்துவம் கொடுக்கும் ஒரு செடி பற்றி தெரிவிக்கிறார். அதை அடைந்த கில்கமேஷ் அலட்சியமாய் இருப்பதால் பாம்பு ஒன்று எடுத்துச் சென்று விடுவதாக தெரிகிறது. கில்கமேஷ் என்கிடுவின் ஆவியாக மாறுகிறான். அவனுக்கு இறப்புக்கு பின்பான வாழ்வை பற்றியறியும் ஆவல் தோன்றுகிறது.
இங்கே நான் எனக்கு தெரிந்த லட்சணத்தில் என்பாட்டுக்கு யோக விளக்கங்கள் ஏதாவது சொன்னால், திட்டுவீர்கள்.. :))) அதனால் கொஞ்சம் நீங்களே கவிதை வரிகளோடு கதையை பொருத்தி பார்த்து கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இன்னொரு கோணமும் இருக்கிறது, தனித்திருப்பவரின் காமம் என்பதாக. அது சற்றே அடைபட்டுப் போய், கற்பனையை மிகவும் சுருக்கி சொல்வதற்கு ஏதுமில்லாமல் செய்து விடுகிறது. கடைசியில் இஸ்தாரையும், நசரேயள் என்றும் கவிஞர் சொல்வதனால், இக்கவிதை நிராகரிக்கப்பட்ட பெண்-ஒருத்தியின் வன்மம் நிறைந்த மனநிலை பற்றியதாக இருக்கலாம்.
எனவே, கடந்தகாலத்தில் மென்மையாக இருந்த ஒருவரின் வன்மத்தை பேசும் கவிதை இது என்பதாகவே என் புரிதல் இருக்கிறது.. அது நீங்களா, நானா... யாராகவும் இருக்கலாம்.. மனக்குகைகளில் ஒளிந்திருக்கும் வவ்வால்(கள்) எப்போது வெளிப்படும் என்று யாருக்கும் தெரியுமா?
ப்ளூடூத்தில் வந்த பற்குழி
Posted by
Vidhoosh
on Tuesday, November 23, 2010
Labels:
ஏதாச்சும் செய்யணும் பாஸ்,
கவிதை,
சக பதிவர்
4 comments:
ப்ளூடூத் வௌவால்கள்
-----------------------------
குளத்திற்கு கருவிழி வரைகிறது
ஒற்றை மர நிழல்
மீளா இமைகள் மேலேறுகின்றன
அரைவட்டமாய் கூடுதிரும்பும்
பறவைகள் பிம்பத்தில் ஒளி விலகலுடன்
தர்ப்பை மோதிர விரல்
கவிழ்க்கும் குடுவையிலிருந்து டில்டோவென
தரை தொடுகிறது எழும்புத் துண்டு
நெற்றிக்கண் பசித்திருக்கிறது
ப்ளூடூத் குறியீடாய் வௌவால்
தொங்க
செயற்- கை கோள்களில் தலைகீழாய்
எரிகிறது தீ
மொட்டைப் போல் பற்றக்
கூடுவதில்லை கனிகளை
காம்புகள்
கில்கமேஷ் எனும்
ஆதி கல்காவியத்திலிருந்து இஸ்தாரின்
குரல் கேட்கிறது...
இன்னும் நசரேயளாயிருக்கும்
வனமொன்றில் இருந்து
•
நினைவுப் பரப்புக்கு, தனிமைச் சாயலே காட்சி விழியாகிறது.
முழுமையுறாப் பயணத்திற்கு இடையில் கூடுதிரும்பலின் பிம்பத்தில் ஒளி விலகி, இமைகள் இனியொருபோதும் மூடமுடியா நிலை எய்துகின்றன
தீயன தன்னைத் தீண்டாமல் தற்காத்துக்கொண்டு பூமிப்பற்றைத் துண்டிக்கையில் எச்சம் தற்கிளர்ந்து பூமியையே தீண்டுகிறது.
தகவல் சேகரிப்பு மையக் குறியீடாய்ப் பறவைப்பாலூட்டி தலைகீழ் நிலைகொள்ள, (உடம்புக்கு அப்பான் அனுபவ) உண்ணாவிழி பசித்திருக்கிறது.
நில-ஈர்ப்பை உதர உந்தும் எரிதிறன் தழலும் தலைகீழ். மொட்டுக்குள் கனி உறுதிப்பாடு; காம்பில் ஆனால் உதிர்வின் முன்னை நிலை.
தலைவனைக் கலவக் கிட்டாமல் இன்னும் மகதலேனாவாய்த் தனிமைப்பட்டு இருக்கும் பர(த்தை)தேவதைக் குரல் கேட்கிறது.
விதூஷ் மிக்க நன்றி .
ரா.சு அண்ணா மிகவும் நன்றி
நெகிழ.. வேண்டி இருக்கிறதுதானே இது போன்ற தருணங்கள் அண்ணா .. விதூஷ் !...
ராஜசுந்தரராஜன் சார் எத்தனை சர்வ சாதாரணமாய் சொல்லிட்டு போயிட்டார் பாருங்க... :)) அய்யா, இப்போதுதான் explore செய்ய ஆரம்பிச்சுருக்கேன்.. பிழை பொறுக்கணும்.
நேசன் :)
விதூஷ்,
உங்கள் பார்வையும் ஏற்புடையதுதான். ஒரு கவிதையில் அறுவடை செய்ய நிறைய உண்டு என்பதை உணர்த்துவதற்காகவே மற்றபடி என் பின்னூட்டம்.
'ஸூப்பர்!', நல்லா இருக்கு!', 'ஆஹா!', 'அற்புதம்' என்றில்லாமல் இழைபிரித்துக் காட்ட முயன்றீர்களே, வாழ்க!
Post a Comment