யாருங்க அங்க ஓடப்பாக்குறது

ஒருதரம் இப்படி ஆகிப்போனது
அப்படியும் ஆனது
ஆனால் அது ஏன் இப்படியும் ஆனது
இப்படியும் ஆனபின்பு
எப்படியோ ஆனது
ஆகாமல் அப்படி
இப்படியும் ஆகாமலே
இருந்திருக்கலாம்
என்று
இப்படியும் யோசிக்கும் போது
அப்படியே ஆனது
யோசிக்கிறேன் நான்
இப்படியே ஆகி இருக்கலாம் என்று
இப்படியே யோசித்து கொண்டிருந்தால் 
அப்படித்தான் ஆகும்
ஏனென்றால்
ப்படித்தான் இப்படி ஆனது
இது அப்படியாக
அது இப்படி ஆனது
எப்படி அப்படி
இப்படியா அப்படியா
என்றே யோசிக்கலாம்
இப்போதும் எப்போதும்
எப்போதுமே எப்படி இப்படி என்றால்
இப்போதுமே அப்படித்தான்
இப்படி என்பேன், எப்பூடி?

ஏய்... யாருங்க அங்க ஓடப்பாக்குறது? # ஹாப்பி பர்த்டே டு மீ


பர்த்டே பெசலா ஒரு கவுஜை சொல்லுங்க #நேயர் விருப்பம் கேட்ட விஜி ராமுக்கு... ஆட்டோவை அங்கயும் அனுபலாம் இங்கயும் அனுப்பலாம் எங்கேயும் அனுப்பலாம்.. ஆ.சி. புக்கோடு ஒரு வருஷத்துக்கான டீசல்லும் சேர்த்து அனுப்பவும். நன்றி.

17 comments:

எல் கே said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விதூஷ் அக்கா

Romeoboy said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Vidhya Chandrasekaran said...

பிறந்த நாள் அதுவுமா? ஏன்???

இன்னிக்கு ஒரு நாளாவது பயபுள்ளைங்க பொழச்சிக்கிடங்கன்னு கருணை காட்டப்பிடாதா?

ராமலக்ஷ்மி said...

ஓடாம நின்னு வாழ்த்துறோம்:))!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

//எப்போதுமே எப்படி இப்படி என்றால்
இப்போதுமே அப்படித்தான்
இப்படி என்பேன், எப்பூடி?//

சூப்பரப்பு... பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-))

VELU.G said...

happy birth day

Rekha raghavan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

ரேகா ராகவன்.

sakthi said...

ஹாப்பி பர்த்டே விதூஷ் அக்கா!!!

sakthi said...

ஒருதரம் இப்படி ஆகிப்போனது
அப்படியும் ஆனது

என்னது சமையலா???

Paleo God said...

ஹே
ப்
பி

ர்
த்
டே! :)

sakthi said...

இப்போதும் எப்போதும்
எப்போதுமே எப்படி இப்படி என்றால்
இப்போதுமே அப்படித்தான்
இப்படி என்பேன், எப்பூடி?

முடியலடா சாமீ!!!!!!!!!!!!

எறும்பு said...

திரு அவதாரத்திருநாள் வாழ்த்துக்கள்..

ங்கே..

நேசமித்ரன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

:))

Radhakrishnan said...

அருமை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விதூஷ்.

அன்னை இந்திராவின் பிறந்தநாள் கூட இதுதான்.

சரி நீங்கள் கேட்டதற்கிணங்க உங்களுக்கு ஒரு கவிதை.


வேதம் கற்று கொண்டு
உலக பாவம் தீர்த்திட
வந்த புதுமை பெண்ணோ

எளியோருக்கு உதவிட
வந்திட்ட அவதார பெண்ணோ

எப்போதுமே எப்படி இப்படி என்றால்
இப்போதுமே அப்படித்தான்
இப்படி என்பேன், எப்பூடி?

:)

Vidhoosh said...

நன்றி எல்.கே.

நன்றி ரோமியோ

நன்றி வித்யா : நோ மெர்சி :)

நன்றி ராமலக்ஷ்மி :)

நன்றி அமைதிச்சாரல் :)

நன்றி வேலுஜி:)

நன்றி ரேகா ராகவன் :)

நன்றி சக்தி :) எதை வேணா பொருத்திப் பார்க்கலாம் என்பதே இக்கவிதையின் சிறப்பு.. :))))) உங்களால முடியும்.. முயற்சித்து பாருங்க..

நன்றி ஷங்கர் :) கவிதை சூப்பர்

நன்றி எறும்பு :)) அது ஞே!!!

நன்றி நேசன் :)

நன்றி வெ.ர.கி.. அவ்வ்வ்வ்... இப்போ தெரிஞ்சு போச்சு யாரு ஓடாராங்கன்னு... நாந்தேன்.நாந்தேன்.. பிடி ஓட்டம்... :))))) நன்றிங்க.

நசரேயன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விதூஷ் அக்கா

அன்புடன் அருணா said...

அட!இன்னிக்குமா இப்படி!பூங்கொத்து!

Post a Comment