பத்து போட்டுக்கலாமா

அருமையான மழை. எனக்குப் பிடிச்ச சீசன் மழைக்காலம்தான். நல்ல மிளகு டீயும் பக்கோடாவும், சுக்கு பத்தும் போட்டுக்கிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கே.எல்.செய்கல் (ஹைதர் கால ஹிந்தி சினிமா பாடகர்), கிஷோர் குமார், நம்ம ஜென்சி ஆகியோர் பாடியதையும், முஹம்மத் ஹுசைன் அஹமத் ஹுசைன் கஜல்களையும் கேட்டுக் கொண்டே இருந்தால் இன்னும் பத்து நிமிஷத்தில் முதல் மாடி வரை தண்ணீர் நிரம்பி வெள்ளம் வந்தால் கூட ஏதும் தெரியாத மோனத்தில் இருக்கலாம்.

சுக்கு பத்து போட்ட நெற்றி எறிவது போல தமிழ் பதிவுலகமே பற்றிக் கொண்டு, பத்து நாளா பாத்து பாத்து பத்தை கொண்டாடும்போது விக்னேஷ்வரி இழைத்துக் கொடுத்ததை வச்சு நானும் ஒரு பத்து போட்டுக்கலாமுன்னு.

பத்தை இன்னும் தொடர நான் அழைப்பது

1. சிவாஜி ஷங்கர்,
2. நசரேயன் (மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதாயில்லை)

விதிகள்

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
5. நீங்கள் குறிப்பிடும் பிரபலம் உயிருடன் இருக்க வேண்டும்.

பிடித்தவர்கள்:

1.  அரசியல் தலைவர்: மாயாவதி, ஜெயலலிதா, அப்புறம் நம்ம வருங்கால பிரதமர் ஜே.கே.ரித்தீஷ் - களத்தை கலகலப்பாக்குவதில் கைதேர்ந்தவர்கள்.

2.எழுத்தாளர்: கிரேசி மோகன், சோ, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, லா.சா.ரா (யாரைங்க விடுறது) இல்லாமல் இருக்கிற எழுத்துலக மார்கண்டேயர்கள் கல்கி, ஸ்டெல்லா ப்ரூஸ், தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி

3.கவிஞர்: வைரமுத்துவால்தான் எனக்குத் தமிழ் கவிதைகளையே தெரியும், நேசமித்ரன் மற்றும் யாத்ரா

4.இயக்குனர் என்பதை விட சினிமா என்றிருந்தால் இங்கு தகும். மிஷ்கினின் "அஞ்சாதே". தமிழில் இதற்கு முன்னும், அப்புறமாகவும், இன்று வரையும் இதை மாதிரி ஒரு சினிமா வரவே இல்லை.

5.நடிகர்: பரிந்தா என்ற ஹிந்தி சினிமா first day first show -வில் பார்த்த நானா பாடேகர் (இவரும் தமிழில் நடிச்சிருக்கார்), ஃப்பௌஜி என்ற ஹிந்தி சீரியலில் நடித்த ஷாருக்கான் (தமிழிலும் நடிச்சிருக்கார்), ஆர்.மாதவன் நடிச்சது என்பதற்காக 2003-ல்தான் கமலை முதன் முதலாக அன்பே சிவத்தில் பார்த்தேன். இப்போது எல்லா கமல் சினிமாவும் தியேட்டரில்தான். இன்னும் உன்னைப் போல் ஒருவன் பார்க்கவில்லை. இன்னும் ஒரு மாசம் கழித்துத்தான் பார்க்கவேண்டும். என்னால் இன்னும் யெ வெட்னஸ்டே-வை மறக்க முடியலங்க. மனசு அதையும் இதையும் ஒப்பிடும்.

6.நடிகை - சரிதா, இப்போது ம்ம்... தமிழுக்கு ஹிந்தி திரையுலகம் அளித்த கஜோல் நம்ம ஓரகத்தி ஜோதிகா

7.இசையமைப்பாளர்: நல்ல பாடல்களை அளிக்கும் எல்லோரும் உதா: எளங்காத்து வீசுதே (பிதாமகன்), மதுரைக்கு போகாதடி (அழகிய தமிழ் மகன் -- டமுக்கு டப்பா பாட்டுன்னாலும் கூட), காற்றின் மொழி (மொழி), இரு பறவைகள் மலை முழுவதும் (நிறம் மாறாத பூக்கள்)

8. நகைச்சுவை நடிகர்: மனோரமா ஆச்சி, வடிவேலு, சந்தானம்

9. வில்லன் நடிகர்:  வாலி அஜீத் - கத்தாத வில்லன்

10. பதிவர்: இது கூட ரொம்ப பிடிச்ச என்று இருந்திருக்க வேண்டும். சமையலைக் கூட சுவையாய் எழுதும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

பிடிக்காதவர்கள்:


1. அரசியல் தலைவர்: பி.சிதம்பரம்

2. எழுத்தாளர்: அனுராதா ரமணன்

3. கவிஞர்: நல்ல மியூசிக்கிற்கு டாடி மம்மி வீட்டில் இல்ல போன்ற இத்தனை ஆபாசம் கலந்து எழுதிய ******@#$%******

4. இயக்குனர் - குடும்பப் படம் என்ற பெயரில் வீ.சேகர் எடுக்கும் நாராசங்கள், கதையே இல்லாமல் மரண மொக்கையான படங்கள் எடுக்கும் எல்லோரும்

5. நடிகர்:  சிம்பு, ஷக்தி, ரகுமான், ஷாம், ஜீவன்

6. நடிகை: த்ரிஷா, ஜெனிலியா போன்ற அழகாய் இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் நடிகைகள்

7. இசையமைப்பாளர்: இசையென்ற பெயரில் காதில் ஈயம் ஊற்றும் யாருமே உதா: யம்மாடி ஆத்தாடி போன்றவை

8. நகைச்சுவை நடிகர்: கருணாஸ், லாரன்ஸ்

9. வில்லன் நடிகர்: காட்டுக் கத்தல் கத்தி அலம்பல் செய்யும் எல்லா வில்லன்களும்

10. பதிவர்: vincy vincent என்ற பெயரில் தான் ஒரு பெண் என்று கூறிக் கொண்டு எழுதும் இவர் நிச்சயம் பெண்ணாக இருக்க முடியாது. தமிழிஷ் வழியா தப்பித் தவறி படிச்ச ஒரு பதிவிலேயே எரிச்சல் வந்துவிட்டது



.

23 comments:

சிவாஜி சங்கர் said...

அழைத்தமைக்கு நன்றி திவ்யா மேடம்..,
தற்போது வேலை இருப்பதால்,.......................

Vidhoosh said...

//நன்றி திவ்யா//

கொடுமை கொடுமை...இதைக் கேட்க ஆளே இல்லையா...?

-வித்யா

கல்யாணி சுரேஷ் said...

//வில்லன் நடிகர்: வாலி அஜீத் - கத்தாத வில்லன்//

இதை படிக்கும்போதே பிடிக்காத வில்லன் நடிகர் யார்னு தெரிஞ்சுபோச்சு. நல்ல பதிவு.

வால்பையன் said...

/பதிவர்: vincy vincent என்ற பெயரில் தான் ஒரு பெண் என்று கூறிக் கொண்டு எழுதும் இவர் நிச்சயம் பெண்ணாக இருக்க முடியாது. தமிழிஷ் வழியா தப்பித் தவறி படிச்ச ஒரு பதிவிலேயே எரிச்சல் வந்துவிட்டது
//


நீங்க இன்னும் பார்க்கலையோன்னு நினைச்சேன்!

இன்னோரு பதிவர் கூட இருக்கார்!
வின்சியை தூக்கி சாப்பிடும் பார்ட்டி அவர்!

அப்புறம் ஆண்கள் விடுதலை இயக்கம் கூட பதிவில் இருக்கு! பெண்களை மட்டம் தட்டுவதே அவர்களது வேலை!

S.A. நவாஸுதீன் said...

//கவிஞர்: வைரமுத்துவால்தான் எனக்குத் தமிழ் கவிதைகளையே தெரியும், நேசமித்ரன் மற்றும் யாத்ரா//

//பதிவர்: இது கூட ரொம்ப பிடிச்ச என்று இருந்திருக்க வேண்டும். சமையலைக் கூட சுவையாய் எழுதும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்//

அவங்க லின்க் கொடுத்திடுங்க வித்யா

***********************************

பிடிக்காதவர்கள்: பட்டியலில் அனைத்தும் நேர்மையாக இருக்கிறது.

அமுதா கிருஷ்ணா said...

விளக்கெண்ணெய் குடித்த மாதிரி ஜோக் படங்களில் மாதவன் வருவார்...அவரால் கமலைப் பார்த்தீர்களா...சரி...சரி...த்ரிஷாக்கு அழகும் கிடையாது, சின்ன வயசு.அதான் ஓடுது...

விக்னேஷ்வரி said...

பாசாங்கில்லாத பளிச் பதில்கள். அனைத்தும் அருமை.

சிவாஜி சங்கர் said...

//நன்றி திவ்யா//

கொடுமை கொடுமை...இதைக் கேட்க ஆளே இல்லையா...?

-வித்யா

//நன்றி வித்யா மேடம்//
ஸாரி.,மேடம்...இப்போ என்னவோ தெரியல பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது..
ஸாரி.,வித்யா மேடம்...Ok vaa..

Sanjai Gandhi said...

//3.கவிஞர்: வைரமுத்துவால்தான் எனக்குத் தமிழ் கவிதைகளையே தெரியும், நேசமித்ரன் மற்றும் யாத்ரா//

க்ரேட்மா.. கவிஞர்கள்னா சினிமாவுக்கு எழுதற எழுத்து வியாபாரிகள் மட்டுமே நினைவுக்கு வராமல் தகுதியானவர்களை சொல்லி இருக்கிங்க.. குட் குட்.. பைதிவே.. வொய் மாயாவதி? பெண் என்பதாலா?

நேசமித்ரன் said...

நேயம் நெகிழ்த்துகிறது
ஈரம் அடர்த்திய யன்னல் கதவுகளை

நிலவறை மெழுகுவர்த்தியாய்
வலிந்து உறிஞ்சும் ஒளியுடன் நான்

பாதரச சொற்கள் பதிந்த
சகோதரி பிரியத்திற்கு
பிரியங்கள்

Vidhoosh said...

நன்றி கல்யாணி.

நன்றி வால்: யாருங்க அது... தமிழ்498 அப்புறம்...??

நவாஸ்: லிங்க் கொடுத்துட்டேன். நன்றிங்க

அமுதா: ஆஆஆஆஆஆ..... ஆர்.மாதவனை நான் ஒரு கப்பற்படை பற்றிய சீரியலில் இருந்து இரசித்து வருகிறேன். டான்ஸ் ஆடத் தெரியாத வெண்ணை என்று சொல்லி இருந்தால் கூட பரவால்லை, ஜோக் பட விளக்கெண்ணை என்று சொல்லி விளக்கெண்ணையை கேவலப் படுத்துட்டீங்களே. BTW, நல்ல நடிகனை உபயோகிக்க வில்லை தமிழ் கோலிவுட்

விக்னேஷ்வரி: ஸ்பெஷல் நன்றிங்க. உங்கள் அழைப்புக்கும் :)

சிவாஜி: மேடம் ஐசெல்லாம் வேணாம். அதென்ன பேர மாத்திச் சொல்றளவுக்கு வேலை .... தொடர் பதிவ எழுதும் வரை போய் முட்டி போட்டு நில்லுங்கள்.

சஞ்சய் காந்தி (டிரேட் மார்க்): :)) அதென்னங்க டி.எம். :))\

33 எல்லாம் வேணாம், இவங்க கிட்ட மோதச் சொல்லுங்க. டெர்ரர்னா என்னான்னு தெரியும். பெண் என்பதாலும், இவர்கள் இருவரையும் பிடிக்கும். ஆனால் சமீபத்திய சறுக்கல்கள் இவர்களைக் கேலிக்கூத்தாக்கியது நமக்கே தெரியும். பிடிக்கும் என்றாலும் மாயாவதி மேல் நிறையா வருத்தமும் உண்டு.

அடக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேலே வந்து, சாதனை பெண் என்று இவரை என் மனதுக்குள் போற்றிக் கொண்டிருந்த போதே (Untouchable and unstoppable என்று ஊடகங்கள் இவரைப் போற்றின) நந்தி கிராமின் மார்ச் 14 . எவ்வளோ கீழே கொண்டு போய் விட்டது.

யாருமே அரசியல் ஜோதியில் ஒளிர்வதில்லை, இந்திய உட்பட...
சும்மா சொல்லிக்கலாம்..

நேசா: :) ஒரு புன்னகை தவிர வேறேது வார்த்தை. சந்தர்ப்பம் வாய்த்தால் கை பிடித்து கட்டுவேன் என் அன்பு ராக்கி ஒன்றையும். :)

--வித்யா

Sanjai Gandhi said...

//33 எல்லாம் வேணாம், இவங்க கிட்ட மோதச் சொல்லுங்க. டெர்ரர்னா என்னான்னு தெரியும். //
அட போங்க.. அப்போ பூலான் தேவி உயிரோட இருந்திருந்தா அவங்கள சொல்லி இருப்பிங்களா? :)

//அடக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேலே வந்து, சாதனை பெண் என்று இவரை என் மனதுக்குள் போற்றிக் கொண்டிருந்த போதே//

வந்த வழி எதுவானாலும், வாய்பைப் பயன்படுத்தி மேலே வந்தார் என்பது பெருமைக்குரியது தான். ஆனால் வந்த பின்? :(

//(Untouchable and unstoppable என்று ஊடகங்கள் இவரைப் போற்றின) நந்தி கிராமின் மார்ச் 14 . எவ்வளோ கீழே கொண்டு போய் விட்டது.//

நந்திகிராமுக்கும் மாயாவதிக்கும் என்ன தொடர்பு? :(

நீங்கள் மம்தாபானர்ஜியை சொல்லி இருக்கலாம். நிஜமான உழைப்பாளி.. சரியான தலைவி.. பெண்ணுக்கே உரிய பிடிவாதம் தான் ரொம்பவே அதிகம். :)

யாத்ரா said...

:)

நல்ல பட்டியல், உங்கள் அன்பிற்கு எப்போதும் என் நன்றிகள்.

Vidhoosh said...

//நந்திகிராமுக்கும் மாயாவதிக்கும் என்ன தொடர்பு? :(//

வீட்டுக்குக் கிளம்பி விட்டேன். காலையில் வந்து சொல்றேன்..:)

-வித்யா

இன்றைய கவிதை said...

தங்களின் பதிவு என்னை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது.

//இயக்குனர் என்பதை விட சினிமா என்றிருந்தால் இங்கு தகும். மிஷ்கினின் "அஞ்சாதே". தமிழில் இதற்கு முன்னும், அப்புறமாகவும், இன்று வரையும் இதை மாதிரி ஒரு சினிமா வரவே இல்லை.//


தமிழ் சினிமாவை உன்னிப்பாக நோக்கியவர்களுக்கு தங்களது கூற்று
எத்தகைய 'உண்மைக்கு மாறானது' எனத் தெரியும்.


ஜெனிலியா போன்ற இயல்பான நடிகைகளை ஏன் பிடிக்கவில்லை
என்று எனக்குத் தெரியவில்லை?!

பிடிக்காத பதிவர் என 'அவர்' பெயரைப் போட்டு முக்கியத்துவம்
கொடுத்து 'ஏமாற்றி' விட்டீர்களே?!

எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
ஏனென்றால், இது தனியொருவரின் உணர்வுகள் தானே?!
என்ன நான் சொல்றது?!!

-கேயார்

தினேஷ் ராம் said...

:D

நசரேயன் said...

இந்த தடவை கண்டிப்பா எழுதுறேன்

Anonymous said...

இசையமைப்பாளர், கவிஞர்ல நல்லாவே ஒத்துப்போறோம்.

பா.ராஜாராம் said...

:-))

R.Gopi said...

பத்து போட்டுக்கலாமான்னு சொன்ன உடனே நான் கூட நெத்தியில நாமக்கட்டியால போடற‌ இந்த 10 ந்னு நெனச்சேன்...

ஓஹோ... இது வேற பத்தா??

பிடித்த 10ல், எழுத்தாளர்களை குறிப்பிடும்போது ஆசான் "சுஜாதா" பெயர் இல்லையே விதூஷ்!!

இயக்குனரில் மிஷ்கின் ஓகே... அதற்காக மணிரத்னம் போன்றோரையெல்லாம் ஓரம் கட்டியது எப்படி?

பிடிக்காத நகைச்சுவை நடிகர் : லாரன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்????????!!!!!

Dr.Rudhran said...

http://blog.thamizmanam.com/archives/187


this is the link you had asked for in vinavu.

CS. Mohan Kumar said...

தங்கள் blog-க்கு முதல் முறை வருகிறேன். நன்றாக உள்ளது.

ரவி ஷங்கர்ஜியின் வாழும் கலை பயிற்சி கற்க எனக்கும் ஆவல் உள்ளது. எப்போது நடக்குமோ?

கதை போட்டியில் "அடுத்த வீட்டு பெண்" என்ற எனது கதை படிக்க blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

நீங்கள் கதை போட்டியில் கலந்து கொள்ள வில்லையா?

நேசமுடன்

மோகன் குமார்

Prasanna said...

/ஆர்.மாதவனை நான் ஒரு கப்பற்படை பற்றிய சீரியலில் இருந்து இரசித்து வருகிறேன்.//
Sea Hawks சீரியலில் எனக்கு பிடித்தவரும் மாதவன் தான். மணி படத்தில் அவரை பார்த்த உடன்.. ஆஹா..!

Post a Comment