முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும்

வாயில் பல்லெல்லாம் போன பிறகும் ஓயாமல் தஸ்-புஸ்ஸென்றும்... பக்..பக்கென்றும் எனக்கு தலை சுற்றி, பித்தம் தலைக்கேறி, வாந்தி வரும் அளவுக்கு பேசியே கொல்லும் தாத்தாவிடமிருந்து பதுங்கி ஒளிந்தோடிய போது வராத உணர்வு,

"காலாட்டாதேடி. உறவு பிரிஞ்சிரும்" என்று பாட்டி சொல்லும் போது  "பேசிப் பேசி சும்மா தொளைக்காத பாட்டி" என்று சள்ளென்று விழுந்து போன போதும் ஏற்படாத உணர்வு,

"மை பொட்டு வச்சுகாதேடி, மாமனுக்கு ஆகாது" என்று வைய்யும் (திட்டும்) அத்தையிடம் "சரி சரி. போரும்" என்ற என் அகம்பாவம் தலைவிரித்து ஆடிய போது ஏற்படாத உணர்வு,

அம்மா "ஈரத் தலைய வாராத. சனியன் பிடிக்கும்" என்ற போது, "போம்மா. சும்மா அறுக்காத" என்ற என் திமிர் பேசியபோதும் ஏற்படாத இந்த உணர்வு,

காலையின் அலுவலக அவசரத்தில் நான் ஓடிக்கொண்டிருக்க, என் மாமியார் ஒவ்வொரு கீரையாக அரைக்கீரையைத் தட்டித் தட்டி ஆய்ந்து வைக்கும் போது "இவ்வளோ மெள்ளமா செஞ்சா லேட்டாயிடும். நைட் செஞ்சுக்கலாம்" என்ற போது "ஏன்? இருக்குற தரித்திரம் போதாதா? ராத்திரி கீரை செஞ்சு வேற கொண்டு வரணுமா?" என்ற போது அதில் இருந்த உள்குத்தான சொல்லம்பு மட்டும் புலப்பட்டு, உள்ளுக்குள் குமைந்த போது ஏற்படாத இந்த உணர்வு,

"அப்படிச் செய்யாதேடி மகாலக்ஷ்மி போயிடுவா" என்றெல்லாம்  மிரட்டிக் கொண்டே அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இன்னும் நிறையா தெரிஞ்சு கொண்டிருக்கலாமே என்ற உணர்வு வந்தன்று எங்கள் தாத்தா-பாட்டியின் பதினைந்தாவது நினைவு நாள்.

வரிசையாக ஏதேதோ பல அறிவியல் மற்றும் விஞ்ஞான புத்தக வாசிப்பின் போது, அவர்கள் கூறிய வசனங்களும் அறிவுரைகளும் தானாகவே "repeat telecast" ஆகி சுய ஒப்பீடு  செய்துகொண்டு, என்னைப் பார்த்து கெக்கலித்த அந்த வினாடி

என் புத்தியை மூடியிருந்த "எனக்கெல்லாம் தெரியும். நீ சும்மாயிரு பாட்டி" என்று அறைகூவிய கர்வத்திரை விலகி, "இந்த அம்மாவே இப்படித்தான்" என்ற ஆங்காரம் அழிந்து, "ம்ச்.. அறுவை" என்ற அலட்சியம் தொலைந்து, "இதுக்கு இருக்கும் திமிரப்பாரு" என்ற வெஞ்சினம் ஒழிந்து, "எனக்குத்தான் புரியவில்லை போலருக்கு" என்ற வெட்கம் தோன்றி அவர்களின் வார்த்தைகளை மனதும் என் கையேடும் குறிக்க ஆரம்பித்து, அதைப் பற்றிய தேடலும் துவங்கியது. இன்னும் கற்றது கைமண்ணின் துகள் அளவில் கூட இல்லை என்பதும் புலப்பட்டது.

நம் மூத்தோர்கள் சொன்னதெல்லாம் மூட நம்பிக்கைகளா? அதன் பின்னணியில் அப்படி என்னதான் காரணம் இருந்திருக்கும்? அதையெல்லாம் போய் ஏன் மகாலக்ஷ்மியுடனும், மாமனுடனும், மூடத்தனமாக இணைத்தார்கள்? இன்னும் நம்மில் சிலர் அதையே பின்பற்றுவதுடன், நம் குழந்தைகளுக்கும் சொல்ல விழைவதேன்?

புரியவில்லையே? சந்தன முல்லையின் இந்தப் பதிவையும் பாருங்கள்.

சில நம்பிக்கைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்து வராது என்பதால் அவற்றை ஒதுக்கலாமே தவிர, தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிகள் இல்லாத முன்பிருந்த சூழலுக்குப் பொருத்தமாயிருப்பதால் அவற்றை மூடநம்பிக்கை என்று தள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

இப்போது உடனடியாக நினைவிலிருக்கும் ஒன்றிரண்டு நம்பிக்கைகளில் மூடத்தனம் ஏதும் இல்லை என்பதைக் குறிக்கிறேன்.

1. இடக்கண் துடித்தால் நல்லதா கெட்டதா?

பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் அபசகுனம் என்றும் கூறுவார்கள். இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், அதீத உழைப்பு, தூக்கமின்மை, மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் போன்ற காரணங்கள் வலது கண்ணை துடிக்கச் செய்கின்றன.

மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி (pitutary) எண்டார்பின் (endorphins) என்ற compound சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.

2.  மாமிசத்தை வேறு இடத்துக்கு சமைத்து/அப்படியே உணவுக்காக கொண்டு போகும் போது கரித் துண்டு (charcoal) வைத்து எடுத்து போகவேண்டும். சுடுகாடு வழியாக போகக் கூடாது. 

கரி சயனைட் போன்ற கொடூரமான விஷ வாயுக்களைக் கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையது. மேலும் கரித்தூள் குழந்தைகளுக்கு ஏற்படும் colic மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உப்புசம், வாயு மற்றும் அஜீரணக் கோளாறுகளையும், அல்சர் போன்ற வயிற்று சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டது. சிறு வயதிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கரித்துண்டை உண்டு வந்தால் அவரை விஷம் தாக்காது என்று சித்த மருத்துவத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று மற்றும் இறந்தவர் உடலில் இருந்து கிளம்பும் நோய்க்கிருமிகள் போன்றவை மாமிசத்தை எளிதில் தாக்கக் கூடும்.

3. வெற்றிலை போட்டால் படிப்பு வராது / மாடு முட்டும் / நாய் கடிக்கும் இன்னும் பிற....

பன்னிரண்டு வயதுக்குள், நாக்கு (சுவை மொட்டுக்கள் / taste buds) இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடையாத நிலையில், வெற்றிலையின் காரம் மற்றும் வெற்றிலை நரம்புகளில் உள்ள சில இரசாயனங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை கொன்று விடும். இதனால் நாக்கு தடிக்கும். பேச்சும் சரியாக வராது. அதனாலேயே படிப்பு வராது என்று சொல்லி இருக்கலாம்.

4. உப்பில் கால் பட்டால் தரித்திரம் வரும் (and so on....) உப்பைக் கொட்டினா சண்டை வரும், பிறகு இன்னொருவருக்கு உப்பு தரும் போது கையால் தரக்கூடாது. உப்பிருக்கும் பாத்திரத்தைத்தான் தரவேண்டும்.

உப்புக்கு வரி விதித்த காலங்களில் இது தோன்றி இருக்கலாம். இருந்தாலும், உணவுப் பொருட்கள் எதையுமே காலால் இடறுவதோ, உதைப்பதோ, மிதிப்பதோ அவ்வளவு நாகரீகம் இல்லை மேலும் சுகாதாரமானதும் இல்லை. விலை அதிகம் என்பதால் உப்பு கீழே சிந்தக் கூடாது, வீணாகக் கூடாது என்ற காரணத்தால் கூறப்பட்டிருக்கலாம்.

மேலும் உப்பை கையால் எடுத்தால் உப்பு நீர் விட்டுக்கொள்ளும். பிசுபிசுத்து மறுநாளே உபயோகிக்க முடியாமல் ஆகி விடும். வேண்டுமானால் ஒரு முறை செய்து பாருங்களேன்.

5. வீட்டில் யாராவது வெளியே போயிருந்தால், வீடு துடைக்கக் கூடாது / தலைக்கு குளிக்கக் கூடாது and so on...

இது முற்றிலும் sentimental தான். யாராவது வீட்டில் இறந்து விட்டால் அவரை தூக்கி இடுகாட்டுக்கு போய், தீ வைத்த பின், ஒருவர் வீட்டுக்குச் செய்தி அனுப்புவார். அப்போது வீடு முழுதும் அலம்பித் துடைத்து, வீட்டில் இருக்கும் அனைவரும் தலை முழுகுவார்கள். அதாவது அவருடனான பந்தத்தை அன்றோடு விடுவித்ததாக ஆகும். இதனால்தான் யாராவது வீட்டை விட்டு கிளம்பியதும் துடைப்பதோ தலை குளிப்பதோ கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.


ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது! 

முன்னெல்லாம் எண்ணெய் வைத்து தலை குளிப்பார்கள். உடல் அசதி ஏற்படும். எண்ணைக் குளியலுக்குப் பின் பயணம் செய்தால் உடல்நலக் குறைவு ஏற்படும். அதிக வேலைகள் / நடை பயணம் போன்றவற்றால் ஏற்படும் வியர்வையால் ஜலதோஷமும் உண்டாகும். இப்போதும் ஷாம்பூ போட்டுக் குளித்தாலும், பயணம் செய்தால் எனக்கெல்லாம் தலை வியர்த்து மதியத்திற்கு மேல் தலை வலிக்க ஆரம்பித்து விடுகிறது :(

===============================================

மூடநம்பிக்கைகளும் அதன் பின்னணியில் உள்ள உண்மைகளையும் நம்மிடம் திரித்துப் பேசிய அந்த முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும் பற்றி இன்னும் பேசுவேன் தொடரும்  பதிவுகளில்.


--விதூஷ்.






.

23 comments:

கல்யாணி சுரேஷ் said...

நல்ல பகிர்வு விதூஷ். தொடருங்கள்.

கல்யாணி சுரேஷ் said...

Me the first. :)

நட்புடன் ஜமால் said...

நல்ல விளக்கங்கள்

தொடரட்டும் ...


-------

இழந்த பின் தான் மகத்துவம் புரியும் பல நிலைகளில் இதுவே ...

தேவன் said...

அட படிக்கிறதுக்குள்ள முந்திட்டாங்களே ?

அர்த்தங்கள் ஆயிரம் தான் அதை விளக்கும் பக்குவம் சிலருக்கு இல்லை!

நல்ல விளக்கம் நன்றி !!

தேவன் said...

தலைப்பை கொஞ்சம் மாத்திடுங்களேன்.

Rajasurian said...

nice reply

Ashok D said...

நல்லாதான்யிருக்கு, தொடருங்கள்.

ஆணுக்கு இடதும் பெண்ணுக்கு வலதும் (நினைக்கறன்) துடிக்ககூடாதென்று சிறு வயதில் இராமாயனத்தில் படித்துயிருக்கிறேன்.

//தளர்ச்சி, ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் போன்ற காரணங்கள் வலது கண்ணை துடிக்கச் செய்கின்றன.

மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி (pitutary) எண்டார்பின் (endorphins) என்ற compound சுரக்கும்போதும் வலக்கண் துடிக்கிறது.//

இரண்டுமே வலக்கண்ணைதான் குறிக்கிறது அல்லது typing mistakea?

Vidhoosh said...

நன்றி கல்யாணி: என் பதிவுகளிலேயே 'me the first' போட்ட முதல் நபரும் நீங்கதானுங்கோ.. :))

ஜமால்: நன்றிங்க... இழந்த பின்தான்...என்ன செய்வது..இளரத்தம் அப்போது..


கேசவன்: வடை போனதற்கு வருத்தம் வேண்டாம். தலைப்பு ஏன் இப்படி? நான் அப்படித்தான் அவர்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன்.. :( அதனால்தான் இப்படி ஒரு தலைப்பு..

ராஜசூரியன்: எதிர்வினை எல்லாம் இல்லீங்க. தோணரதைச் சொல்றேன். அவ்வளோதான். இந்தப் பதிவை எழுத தூண்டிய சந்தனமுல்லைக்கு நன்றிகள் பல.

அஷோக்:வாங்க... ரொம்ப நன்றி. அது typing mistake-தான். சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. :)

--விதூஷ்

பெசொவி said...

சில வழக்கங்கள், சில விளக்கங்கள்!

நன்றி, வாழ்த்துகள்! தொடருங்கள்!

மர தமிழன் said...

இந்த பழக்க வழக்கங்கள் எல்லாமே ஒரு பகிர்தலின் அடிப்படைதானோ என்று தோன்றுகிறது.

இன்றைக்கு ஒழுங்காக எப்படி மூச்சு விடுவது என்பதற்கு கூட காசு கொடுத்து வகுப்புகளுக்கு போகின்ற சூழ்நிலையில், உடம்பிற்கு எதாவது வந்தால் முற்றிய பின்பே தெரிந்து கொள்ளும் நிலையில் (விஞ்ஜானம் முன்னேறியும் கூட) அன்றைக்கு சின்ன சின்ன விஷயங்கள் எல்லாமே இந்த மாதிரி பழக்க வழக்கங்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டதால் ஒருவருக்கொருவரின் தொடர்பு இன்றைக்கு விட நன்றாகவே அன்றைக்கு இருந்திருக்கிறது. வாழ்ந்து அனுபவித்தவர்கள் கூடவே நின்று வழி காட்டுபவர்களாகவே அவர்கள் எனக்கு தெரிகிறார்கள். (இன்றைக்கு முழு பந்த் அன்றைக்கு நன்றாக மழையும் பெய்து கரண்ட்டும் இல்லையென்றால் - அநேகமா முக்கால்வாசி பேர்களுக்கு பைத்தியம் பிடித்தாலும் பிடிக்கும்)

நாடு ராத்திரியில் வீல் என்று கைக்குழந்தை வீரிடும்போது என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் தருணத்தில் பக்கத்தில் பாட்டி இருந்தால் ஒரு கிண்ணம் நல்லென்னையில் குழந்தையை சிரிக்க வைக்கும் பாக்கியம் இன்று எத்தனை பேர்களுக்கு இருக்கிறது? மனித அனுபவங்களின் மதிப்பு மிகப் பெரியது.

அவர்கள் போலேதான் நாமும் ஒருநாள் ஆவோம் என்ற நினைப்பு நம்மில் இருந்தால் மூடமும் இருக்காது முட்டாளும் இருக்காது.

Jaleela Kamal said...

ம்ம் அனைத்து பகோடா சுவையும் சூப்பர் எல்லாம் சரியாக சொல்லி இருக்கீஙக்

பழமைபேசி said...

தொடருங்கள்...வாழ்த்துகள்...

இன்றைய கவிதை said...

//சில நம்பிக்கைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்து வராது என்பதால் அவற்றை ஒதுக்கலாமே தவிர, தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிகள் இல்லாத முன்பிருந்த சூழலுக்குப் பொருத்தமாயிருப்பதால் அவற்றை மூடநம்பிக்கை என்று தள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.//

இயல்பான பதிவு!
தாத்தா/பாட்டி வளரட்டும்!

-கேயார்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல தேடல்..

தொடருங்கள் வித்யா..

நிகழ்காலத்தில்... said...

தொடர்ந்து இதுபோன்ற இடுகைகளை படையுங்கள்

நமக்கு தெரிந்ததை பொதுவில் வைப்போம்

பலருக்கும் பயனாகட்டும்

வாழ்த்துக்கள்

மணிப்பயல் said...

விதவைகள் குறுக்கே வந்தால் போகும் காரியம் கெட்டுவிடும் என்று பெண்களை இழிவுபடுத்திடும் மூடநம்பிக்கை பற்றி ஏதாவது விளக்கம் இருக்கிறதா வித்யா?

R.Gopi said...

அந்த காலத்தில் நாம் எப்படி சொன்னால் கேட்போமோ, அது மாதிரி அவர்கள் சொன்னார்கள் என்றே நான் நினைக்கிறேன்...

டைட்டில் "அப்புசாமியும், சீதாபாட்டியும்" மாதிரி ஜோரா இருக்கு...‌

இருப்பினும், வ‌ய‌தில் மிக‌ மிக‌ பெரிய‌வ‌ர்க‌ளான‌ அவ‌ர்க‌ளை இப்ப‌டி விளிக்க‌ வேண்டுமா வித்யா??

Vidhoosh said...

நன்றி பெயர்சொல்லவிருப்பமில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் COMMENT-டையே தலைப்பாக மாற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்.

மறத்தமிழன், நன்றி

ஜலீலா: நன்றி

பழமைபேசி/மணிவாசகம்: நன்றிங்க.

கேயார்:நன்றிங்க

நன்றி வசந்த்

நிகழ்காலத்தில் (அறிவே தெய்வம்) - உங்கள் பெயர் நன்றாக இருக்குங்க.
நன்றிங்க.

மணிப்பயல்: என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம். இருக்கீங்களா? //இந்தப்பய எங்க போய்த்தொலைஞ்சான்னு யாரும் கவலைப்படறது இல்ல./// நான் நினைக்கிறது உண்டுங்க...:))
இதில் எல்லாமே பேசப்படும்..

கோபி: பொதுவில் நான் அப்படிச் சொன்னதில்லையே தவிர, சின்ன வயதில் நான் நிறையா மனசுக்குள் அவங்கள வெறுத்திருக்கேன். ஏன் சும்மா தொண தொணன்னு நச்சரிக்கிறாங்கன்னு... உண்மையாகவே, ஒரு நிமிஷம் கூட அசந்து உட்கார்ந்து விட்டால், எங்க பாட்டி விரட்டிக் கொண்டே வந்து விடுவார். :)) அவங்கள பத்தி நான் நினைச்சது எவ்வளோ தவறுன்னு உணர்வதற்கு முன் அவங்கள என்னன்னு நினைச்சேனோ அதையே பெயராக போட்டு விட்டேன். மாற்றி விடுகிறேன். :)



--வித்யா

ஹுஸைனம்மா said...

வித்யா,

நல்ல பதிவு. பல விஷயங்கள் “அட, ஆமால்ல..” என்று சொல்ல வைக்கின்றன.

அந்த தலைப்புதான் எனக்கும்...

Sundar சுந்தர் said...
This comment has been removed by the author.
Sundar சுந்தர் said...

>>எனக்குத்தான் புரியவில்லை போலருக்கு" என்ற வெட்கம் தோன்றி அவர்களின் வார்த்தைகளை மனதும் என் கையேடும் குறிக்க ஆரம்பித்து, அதைப் பற்றிய தேடலும் துவங்கியது
>>

அருமையான முன்னுரை!

நசரேயன் said...

//தாத்தாவும் மூடப் பாட்டியும் பற்றி இன்னும் பேசுவேன் தொடரும் பதிவுகளில்//
ஒ.. தாராளமா கேட்க நான் இருக்கேன்

arul said...

thanks for sharing useful information

Post a Comment