நானழிந்த நான்



நான்
இறந்து, இருக்கிறேன்
சவமாக
இணக்கமெனும் வட்டத்தின் உள்ளே
எத்தனை சமரசங்கள்
மரணமும் என் தர்மம்

நான்
என்னால் ஈட்டப்பட்டச் சொத்துகள்,
என் வீடு என் குழந்தைகளால் ஆனவள்
இதுவே நிதர்சனம், மரணத்தின் தர்மம்

யாரை வேண்டுமானாலும்
எப்போதும் கொல்லலாம்
என் பக்கத்து வீட்டில்
கொள்ளையும் நடக்கலாம்
பொருட்களைத் திருடலாம்
அந்த வீட்டின் தலைவியை
மானபங்கம் செய்யலாம்
எந்தக் குரலும் யாருடைய அழைப்பும்
எனக்கு கேட்காது ஏனென்றால்

நான்
சலனமற்றவள்
பிரக்ஞையிலாதவள்

நான்
நடக்கிறேன் வாழும் நாளெல்லாம்
சம்பாதியங்களின் பொருட்டு
காரணங்கள் கொடுக்கிறேன்
என் ஒவ்வொரு காரியங்களையும்
எல்லோருமே செய்திருக்கலாம்

நான்
பேருந்துகளில் விமானங்களில்
மற்றும் வீட்டிலும் இருக்கிறேன்
இப்போது பாந்த்ரா மெட்ரோ இரயிலில்
என்னருகில் இருக்கும் ஒருவனின்
அழகான கண்களை
இரசிக்கிறேன், தன்னருகில்
இருக்கும் ஒருத்தியை அவன்
அவன் போலவே நானும்

நான்
என்னைப் போல இன்னும்
சில இருக்கின்றன
சவங்கள் இந்த இரயிலில்
ஏனென்றால் நானாக இருக்கும்
போலவே அவர்களுக்கும்
அவர்களாக இருக்கக் கூடும்
சில வீடுகளும் பல குழந்தைகளும்
மரணத்தின் தர்மம் போல

நான்
பயணிக்கும் இந்த இரயில்
சவங்களின் பாரம் தாங்காமல்
தடம் புரளப் போகிறது


மொழிகளின் நுணுக்கங்களை
மெத்தப் படித்த சவமாக இருக்கிறேன்
மரணத்தின் தர்மத்தில்
அங்கீகரிக்கப்படாதவொன்று
வாக்குவாதம், அதனாலே 
செய்வதில்லை, ஆனாலும்
தலைகளின் கனத்தை எத்தனை
தாங்கும் இந்த இரயில்?

நான்
எங்கும் நிறைந்திருக்கிறேன்
குற்றம் செய்வது
இருக்கிறது என் உரிமையாக
நான் ஞானமடைந்தவள்
வங்கிகளில், கடைத்தெருக்களில்
சாலைகளில், நடைபாதைகளில்
செருக்குடன் என்னைக் காணலாம்

நான்
சூதாடுகிறேன், சதி செய்கிறேன்
என்னையே வெல்ல
என்னைக் கொல்கிறேன்
என்னையே திருடுகிறேன்
மரணிக்கிறேன்
சிருஷ்டிக்கிறேன் அடுத்தடுத்து
இதுவே என் தர்மமாகும்
ஏனென்றால்
நான்
என்னால் ஈட்டப்பட்டச் சொத்துகள்,
என் வீடு என் குழந்தைகளால் ஆனவள்

நீ
சுதந்திரன்
என்னால் சூழப்பட்ட தனியன்
நீ விடுதலைப் பெற்றவன்
நீ நினைத்தால் என்னை
முழுதுமாக எரிக்கலாம்
மீண்டும் சிருஷ்டிக்க ஆணையிடலாம்
என் நெற்றியில் குங்குமம் சூட்டி
பலாத்காரிக்கலாம் - இரகசியமாய்
உன் கண்களால் மேலும் சில பெண்களையும்

நீ
அரசன்
போட்டியின்றி வென்ற
உன் இராஜ்ஜியத்தில் பறக்கும்
கொடியின் கீழ் எல்லாம் நானே
என் தலை பொருத்திய உன் ஈட்டியால்
என் பெயர் சொல்லி
உன் பெற்றோரைக் கூட கொல்லலாம்
என்னையும் கூட
இன்னும் பல வண்ணம் பூசி
கொண்டாடலாம் ரங்கோலிப் பண்டிகை
என் வெள்ளுடையில் சிந்தட்டும்
வெற்றிலை எச்சில்கள்

நான்
என் இளமையோடு இலவசமாய்
என் சொத்துகளைத் தருகிறேன்
குறைவாகத் தோன்றினால்
என் NRI சகோதரனின் பரம்பரைச்
சொத்திலும் பங்குதாரர் ஆகிறேன்

நான்
எனக்காக உன்னிடம் விழைந்து
விண்ணப்பிக்கிறேன்
நீயே தேர்தல்களில் வென்று கொள்
நீயே இராஜ்ஜியங்களைப் படை
எனக்கு இழப்பேதும் இல்லை
நீ செலுத்தும் ஈட்டிகளில்
நீ கொடுக்கும் மோதிரத்தில்
உன்
முகமே இருக்கட்டும்

நான்
அஹிம்சாவாதி அப்படியே இருக்கிறேன்
புரட்சிகளை விரும்பவில்லை
விரோதிக்கவும் மாட்டேன்
துரோகிக்க மாட்டேன்
கேள்வியும் கேட்கமாட்டேன்
இதுவென் தர்மம்
மரணத்தின் தர்மம்

நான்
எதையும்
பேசியதில்லை, இனியும் பேசமாட்டேன்
பார்த்ததில்லை, இனியும் பார்க்கமாட்டேன்
கேட்டதில்லை, இனியும் கேட்கமாட்டேன்
நீ மட்டும் பார்க்கும் நம் வீட்டுத்
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
இரைச்சலை மட்டும் குறைத்துக் கொள்
ஏனென்றால் இயற்கையாகவே

அமைதியை மட்டும் விரும்புகிறேன்
ஏனென்றால்
நான்
இறந்து, இருக்கிறேன், தெரியுமா உனக்கு?


.

13 comments:

நர்சிம் said...

தலைப்பு மிகப் பிடித்திருந்தது

கிருஷ்ண மூர்த்தி S said...

படிக்க வந்தவன் தலைமுடியைப்
பிய்த்துக் கொள்ளாத குறையாகக்
கேவினான் கேள்வி கேட்டான்
நானழிந்த நான் என்றால் என்ன?
மெய்யாகவே அவனுக்குப் புரியவில்லை!

பரோட்டாவைப் பிய்த்துப் போட்டு
அப்புறமும் துடுப்பால்குத்தி குதறினால்
அதன்பெயர் கொத்துப்பரோட்டா!
வார்த்தைகளைக் குத்திக் குதறி
வரிசையாய் அடுக்கினால் அதற்குப்பேர் கவிதையாம்!
இப்பவாச்சும் புரிஞ்சதா?

இல்லையென்று வேகமாகத் தலையை ஆட்டினால் பரோட்டா கொத்தும் துடுப்பு தலையையும்
கொத்திவிடும் ஆபத்து தெரிவதால்
நிற்காதே வுடு ஜூட்டு!

விக்னேஷ்வரி said...

என்னருகில் இருக்கும் ஒருவனின்
அழகான கண்களை
இரசிக்கிறேன், தன்னருகில்
இருக்கும் ஒருத்தியை அவன்
அவன் போலவே நானும் //

ரொம்ப அழகா இருக்கு.

மொத்தக் கவிதையும் கனமான வார்த்தைகளால் கவனத்துடன் கோர்க்கப்பட்டுள்ளது. ரொம்ப நல்லாருக்கு வித்யா.

யாத்ரா said...

என்னங்க ஆச்சு,

ஏன்

ஆனா நல்லா இருக்கு

R.Gopi said...

விதூஷ்....

தலைப்பில் நான் என்ற நான் அழிந்ததை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க...

படைப்பும் ரொம்ப பிரமாதமாகவும், பிரம்மாண்டமாவும் இருக்கு...

வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

//குற்றம் செய்வது
இருக்கிறது என் உரிமையாக//

ஜுனூன் தமிழ் மாதிரி இருக்குது!

தயவுசெய்து இனிமே இம்புட்டு பெரிய கவிதை எழுதாதிங்க, டரியலாவுது!

velji said...

இவ்வளவுக்கு பிறகும் எளிய கோரிக்கைதான்...இரைச்சலை குறைக்கச்சொல்லி.இறந்து கிடப்பது அப்போதாவது தெரியுமென்று!
மொத்தமும் அருமை!

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு ஆனா இவ்வளவு செலவு பண்ற ஆளு இல்லையே வார்த்தைகளை
என்ன ஆச்சு ?

இன்றைய கவிதை said...

விதூஷ்!
என்னாச்சு?!

'நீயாக நீயில்லையே?!'

"உழவன்" "Uzhavan" said...

உயிரோடு இருப்பவனெல்லாம் சொல்லாததை இறந்தவன் சொல்லிவிட்டான் போல :-)

சிவாஜி சங்கர் said...

Great..

Sundar சுந்தர் said...

நானறிந்த நீயா நீ?

rajasundararajan said...

முதல் கருத்தூட்டம், நர்சிம் said... என்றிருந்ததா, 'நானும் இறந்து இருக்கிறேனோ' என்று மருட்சியாக இருந்தது. கூடவே தோன்றிய மனநடுக்கம், 'அப்படி இல்லை' என்று தெளிவு தோற்றியது.

//என் தலை பொருத்திய உன் ஈட்டியால்
என் பெயர் சொல்லி
உன் பெற்றோரைக் கூட கொல்லலாம்//

இதில் இருக்கிறது இந்திய இல்லத்தரசர்கள் மீதான விமர்சனம்.

பேச்சு சுதந்திரம் இருக்குதானே? சவம் கூட இவ்ளோஓஓஓஒ....!

Post a Comment